ஞாயிறு, 17 நவம்பர், 2019

ராசராச சோழர் சிலை போலி மீட்பு பற்றி விரிவாக

← ராஜராஜன் – உலகமாதேவி செப்பு மேனிகள் திரும்ப வந்தததை தமிநாட்டு மக்கள் போற்றுகின்றனர், ஆனால், ராஜராஜனை –ராஜேந்திரனைத் தூற்றுகின்றனரே ஏன்? (2)
ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், திருடியது, கடத்தியது யார், போலிகளைத் தயாரித்தது யார்? →

ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், போலிகள், செம்மொழி மாநாட்டுப் போர்வையில் கருணாநிதியின் மீட்பு முயற்சி!
Posted on ஜூன் 4, 2018by vedaprakash


ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், போலிகள், செம்மொழி மாநாட்டுப் போர்வையில் கருணாநிதியின் மீட்பு முயற்சி!



கல்வெட்டுகளின் படி ராஜராஜ சோழன் பதுமையின் உயரம்: கல்வெட்டு ஆதாரமாக, உலோக சிலைகள் செய்யப்பட்ட விவரங்கள் இவ்வாறுள்ளன: ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ஶ்ரீகார்யமாக பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் இருந்தார். இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கும் முறையே 74 செ.மீ [2,43 அடி], மற்றும் 53 செ.மீ. [1.74 அடி] உயரத்தில் செப்புச் சிலைகளை செய்கிறார். ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம். ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார் ஶ்ரீகார்யம். இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. ஆனால், இப்பொழுதுள்ள பதுமைகளின் உயரம் மாறுபடுகிறது. சோழர்கால அத்தாட்சிகள், ஆதாரங்களை திட்டம் போட்டுத்தான், மேனாட்டவர் அழித்து, மறைத்து வருகின்றனர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வரலாற்று-வரைவியல் எனும் போது, சோழர்களின் மேன்மை, உயர்வு, சிறப்பு என்று விவரங்கள் வரும்போது, எதிர்மறையான திரிபுவாதங்களினால், திசைத் திருப்பி வருவதால், உண்மை சரித்திரம் முழுவதும் வெளிவராமல், ஆவணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.


உண்மையான பதுமைகள் காணாமல் போனது: ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றன என்று சண்முகசுந்தரம்[1] சொன்னாலும் விவரங்களைக் கொடுக்கவில்லை. அதன்பிறகு அங்கிருந்து எப்படியோ கடத்தப்பட்டு விட்டதால் புதிய சிலைகளை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள், என்கிறார். 1940களில் சென்னையில் அது சாராபாயுக்கு விற்கப்பட்டது. கடத்தப்பட்டது ராஜராஜன் சிலை என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள். ஒரிஜினல் ராஜராஜன் சிலையானது இப்போது அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் மியூசியத்தில் ராஜராஜன் – லோகமாதேவி சிலைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜ ராஜன் சிலைக்கு காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காக பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு 1984ல் அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையை கிளப்பினார்.



குஜராத் சென்ற தமிழகக் குழு [செப்டம்பர் 2010]: இதுவே பெரும் சர்ச்சையாகிப் போகவே, ராஜராஜனை மீட்டுவர இந்திராவும் எம்.ஜி.ஆரும் முயற்சி எடுத்தார்கள். அத்தனையும் தோற்றுப்போன நிலையில், 2010-ல் தஞ்சை பெரியகோயில் எழுப்பப் பட்டு, ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவின்போது ஆட்சியில் இருந்த திமுக, ராஜராஜன் சிலையை மீட்கும் முயற்சிகளில் இறங்கியது. கருணாநிதி மோடிக்கு சிலைகளை பரிசாகக் கொடுக்கும் படி வேண்டுக் கொண்டார்[2]. அவரும் ஆவண செய்ய உறுதி அளித்தார். காலிகோ அருங்காட்சியக இயக்குனர் மெஹ்தா [Calico Museum director D S Mehta] ஆதாரங்கள் காட்டினால் கொடுத்து விடுவதாக வாக்களித்தார்[3]. இதற்காக, அப்போதைய சுற்றுலாத்துறைச் செயலாளர் வெ.இறையன்பு, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி, குடவாயில் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்று குஜராத் சென்றது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியயை 25-09-2010 மற்றும் 26-09-2010 தேதிகளில் சந்தித்துப் பேசியது[4]. ராஜராஜன் சிலையை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார்[5]. குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் அப்போது இவ் விஷயத்தில் ஆர்வம் காட்டினார்கள். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா?


ராஜராஜன் சிலைதான்: டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், தான் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள் குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள் பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் – லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தெள்ளத்தெளிவாக குறிப் பிட்டிருக்கிறார் முனைவர் நாக ஸ்வாமி. ஆனால் பிற்பாடு, காலிக்கோ மியூசியத்தில் உள்ள சோழர் காலத்து செப்புச் சிலைகள் குறித்து அந்த மியூசியத்திற்கு ‘கேட்லாக்’ எழுதிக் கொடுத்த நாகஸ்வாமி, முன்பு ராஜராஜன் என்று தான் தெரிவித்த அதே சிலையை, ‘கிங்க் ஆஃப் கிங்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் பேசிய காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்று நாகஸ்வாமி கூறினால், இப்போதே சிலையை உங்களிடம் ஒப்படைக்கத் தயார்’ என்று கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழக குழுவினர் அதீத ஆர்வத்துடன் நாகஸ்வாமியின் முகத்தைப் பார்த்தார்கள். பிறகு என்ன நடந்தது?



நாகசாமியின் சங்கடமான நிலை: ராஜராஜன் சிலை தஞ்சை பெரிய கோயிலில் இருந்ததுதான் என நாகஸ்வாமி நிச்சயம் உறுதிப் படுத்துவார் என்று தமிழகக் குழுவினர் ஆவலோடு எதிர் பார்த்திருந்த நிலையில், ‘இது ராஜராஜன் சிலை இல்லை’என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார் நாகஸ்வாமி[6]. அமைச்சர் தங்கம் தென்னரசு நாகஸ்வாமியிடம் தனியாகப் பேசிப் பார்த்தபோதும், ‘அது ராஜ ராஜன் சிலை’ என்று உறுதிப் படுத்த மறுத்துவிட்டார்[7]. அதற்கு மேல் எதுவும் பேசமுடி யாமல் போனதால், வெறும் கையுடன் வீடு திரும்பியது தமிழகக் குழு. ‘இந்த முரண்பாடு ஏற்பட்டது ஏன்?’ என நாகஸ்வாமியிடம் கேட்ட தற்கு, ‘‘டெல்லி மியூசியத்துக்கு நான் நூல் எழுதியபோது, சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என ஒரு ஊகத்தின் அடிப்படையில்தான் எழுதிக்கொடுத்தேன். ஆனால், சிலையை நேரில் பார்த்த பிறகு மாற்றுக் கருத்து வந்துவிட்டது[8]. மியூசியத்தில் இருப்பது சோழர் காலத்துச் செப்புச் சிலைதான். ஆனால், அது ராஜராஜன் சிலை என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை. அந்தக் காலத்தில் சண்டிகேஸ்வரர் சிலைகளைக் கூட இதே தோற்றத்தில் செய்திருக்கிறார்கள்[9]. அப்படி இருக் கும்போது, அது ராஜராஜன் சிலை என்பதை எப்படி உறுதிப் படுத்த முடியும்? அந்தச் சிலை தஞ்சையில் இருந்தது என்பதற் கான அடையாளமோ, அது அங்கிருந்து காணாமல்போனது குறித்து புகார் செய்யப்பட்டதற் கான ஆதாரமோ இல் லாதபோது, எந்த அடிப் படையில் அது ராஜராஜன் சிலைதான் என நாம் உரிமை கொண்டாட முடியும்?’’ என்றார்.

© வேதபிரகாஷ்

04-06-2018



[1] தி.இந்துவில் இதைப் பற்றி எழுதியவர். முன்பு ஆங்கில இந்துவில் வந்ததைத் தொகுத்து தமிழில் எழுதியது.

[2] Times of India, TN team meets Modi to get back Rajaraja statue, Ajitha Karthikeyan | TNN | Sep 7, 2010, 23:24 IST.

A day after calling on Modi and apprising him of the significance and sensitivities attached to the Chola statue, the team visited the Calico Museum of Textiles on Tuesday and handed over a letter written by chief minister M Karunanidhi, requesting the museum authorities to “gift” the statue to the state.

[3] https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/TN-team-meets-Modi-to-get-back-Rajaraja-statu/articleshow/6515415.cms

[4] DeshGujarat, Tamil Nadu minister meets Modi, seeks Rajaraja, Lokamadevi statues, September, 06, 2010.

[5] http://deshgujarat.com/2010/09/06/tamilnadu-minister-meets-modiseeks-rajarajalokamadevi-statues/

[6] தி.இந்து, சிலை சிலையாம் காரணமாம் – 23: செப்பேடுகளின் நிலை!, குள.சண்முகசுந்தரம், Published : 06 Aug 2016 10:06 IST; Updated : 14 Jun 2017 17:11 IST.

[7]http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article8952097.ece

[8] தி.இந்து, சிலை சிலையாம் காரணமாம் – 22: தஞ்சை ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்!, குள.சண்முகசுந்தரம், Published : 05 Aug 2016 10:13 IST; Updated : 14 Jun 2017 17:08 IST.

[9] http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-22-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8946944.ece?widget-art=four-rel

Advertisements





← ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், திருடியது, கடத்தியது யார், போலிகளைத் தயாரித்தது யார்?
“ராஜராஜ சோழன் – லோகமாதேவி பதுமைகள் மீட்பு”: திருட்டு, கடத்தல், துறை ஊழியர்கள்-அதிகாரிகளின் குற்றங்கள் மறைப்பு முதலியவற்றை வெளிப்படுத்துகின்றன – தடுக்க செய்ய வேண்டியது என்ன? →

“ராஜராஜ சோழன் பதுமை மீட்பு” நாடகம், திராவிட அரசியல்வாதிகளும்,மோடியும்: மோடிக்கு திமுக-வகையறாக்கள் கருப்புக் கொடி காட்டினர் ஆனால், மோடி பதுமைகளை தமிழகத்திற்கு அளித்தார்!
Posted on ஜூன் 4, 2018by vedaprakash


“ராஜராஜ சோழன் பதுமை மீட்பு” நாடகம், திராவிடஅரசியல்வாதிகளும்,மோடியும்: மோடிக்கு திமுக-வகையறாக்கள் கருப்புக் கொடி காட்டினர் ஆனால், மோடி பதுமைகளை தமிழகத்திற்கு அளித்தார்!



செப்பேடுகளையும் ஐரோப்பியர் எடுத்துச் சென்றது: இந்தச் செப்பேடுகளில் வெறும் அரசாணைகள் மட்டுமின்றி வேறு சில வரலாற்றுப் பதிவுகளும் உள்ளன. சோழர்கள் அண்டை நாடுகளுடனும் சுமூக உறவை வைத்திருந்து தங்களது வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தினார்கள் என்பதற்குச் சான்று இந்த செப்பேடுகள். ராஜராஜன் காலத்தில் தான் தமிழ் மொழியானது அழகுபெற்று எளிய நடைக்கு வந்தது. இதற்கான ஆதாரங்களும் இந்தச் செப்பேடுகளில் உள்ளன. இதேபோல்தான் வேள்விக் குடி செப்பேடும் 770-ல் பராந்தகன் நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனால் வெளியிடப்பட்டது இந்தச் செப்பேடு. களப்பிரர்களிடம் இருந்து தமிழகத்தை பாண்டியர்கள் எப்படி மீட்டெடுத்தார்கள் என்பதை தெளிவாக விவரிக்கிறது இந்தச் செப்பேடு. இது மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பாண்டிய மன்னர்களின் பரம்பரை வரலாறே கூட நமக்குத் தெரியாமல் போயிருக்கலாம். பத்து ஏடுகளைக் கொண்ட இந்தச் செப்பேடானது தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது. செப்பேடுகள் மாத்திரமல்ல; நாகப்பட்டினம் புத்த விகாரையில் இருந்த புத்தர் சிலை ஜப்பான் வரைக்கும் போனதும் இப்படித் தான்.



மெழுகு வார்ப்பு முறையையில் தயாரிக்கப் பட்ட பதுமைகள்: செப்புப் பதுமைகள் செய்வதில் சோழர்காலத்தில் உலகத்திலேயே மிகச் சிறந்த வார்ப்பு முறை கடைபிடித்து வரப்பட்டது. இடைக்காலத்தில், பெரும்பாலான உலோக பொருட்கள் இந்தியாவில், சோழர்கள் மூலம் தயாரிக்கப் பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. நுண்ணிய வேலைப்பாடுகள் வரவேண்டும் என்பதற்காக மெழுகு வார்ப்பு முறையை [Lost wax technique] உபயோகித்தனர். “மழையே மழையே மண்புறம் பூசி…மெழுகு ஊற்றினார் போல்’ (பா. 604) ஏன்று நாச்சியார் திருமொழியில் வருகிறது. வார்ப்பு உருவ வெண்கலச் சிலைகள் செய்யப்படும்போது, அவ்வுருவங்களின் புறத்தே மண்பூச்சும், உள்ளே மெழுகுப் பூச்சும் பூசப்படும். மெழுகிற்கும் மண்பூச்சிற்கும் இடையே உருக்கப்பட்ட வெண்கலம் (திரவ வடிவில்) ஊற்றப்படும். பின் ஓர் ஊசித் துவாரத்தின் மூலம், உள்ளேயிருக்கும் மெழுகை வெளியேற்றுவர். இதனால் இக்கலை தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்டது தெரிகிறது. ஆகவே, சோழர்கால பதுமைகள் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தினால், அவற்றின் உலோகக் கலவை, அவற்றின் சதவீதம், முதலியவை தெஇந்து விட்டும். அதேபோல, போலிகள் எனும்போது, அதன் கலவை முதலிய விவரங்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆகவே, போலி பதுமைகளை எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.. ஆனால், உண்மையினை மறைக்க விரும்பினால், ஒன்றும் செய்ய முடியாது.



பிராமணர் அல்லாதோர் தான் அதிக அளவில் தென்கிழக்காசியதொடர்புகளில் ஈடுபட்டிருந்தனர்: சோழர் சரித்திரவரைவியலில் பாரபட்சம், திரிபுவாதம், மறைப்பு சித்தாந்தம்ம் முதலியன பலவிதங்களில் வெளிப்படுகிண்ரன. உண்மையில், சோழர் காலத்தில் தான் பிராமணர் அல்லாத மக்கள் கோடிக்கணக்கில் பணிகளில் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். பொருள் உற்பத்தி, சேவை போன்றவற்றில், சோழர் காலத்தில் 950-1250 காலகட்டத்தில், பெருளவில், கடல் கடந்த வியாபாரங்களில் லாபங்கள் பெறப்பட்டன. அவற்றில், வணிகர், வியாபாரிகள், முதலியோர் பெரும்பங்கு வகித்தனர். ஏற்றுமதி-இறக்குமதிகளில் லாபம் வந்தது. இதனால், பொருளாதாரம் சீராக இருந்தது. அனைவருக்கும் வேலை இருந்தது. இதனால், கோவில்கள் பெருகின, கோவில் சம்பந்தப் பட்ட தொழில்களும் பெருகின. இதில் எல்லாம், பார்ப்பனர் பங்கு வகித்தனர் என்பது திரிபுவாதமே. பிராமணர் கடல் கடக்கக் கூடாது என்றபோது, கடல்கடந்து சென்றவர் மற்றவர் என்றாகிறது. தென்கிழக்காசிய கல்வெட்டுகள் வணிகக் குழுமங்கள், வணிகர்களின் பெயகளைத் தான் அதிகம் பதிவு செய்துள்ளன.



திராவிட அரசியல்வாதிகளும்,மோடியும்: இந்திய அருங்காட்சியகங்களில் பொதுவாக சரித்திரகால பொருட்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், தாமிரப் பட்டயங்கள், கதவுகள், ஜன்னல்கள், என்று பல காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும்[1]. இந்தியாவில் மாநிலங்களில் உள்ள அருங்காட்சியகங்களிலும் அவ்வாறே இருக்கும். இதனால், தொடர்ந்து, எந்த மாநிலமும், இன்னொரு மாநிலத்திடம், “அங்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா பொருட்களையும் கொடுத்து விடு,” என்று கேட்க முடியாது. இவ்விசயத்தில், குறிப்பிட்ட பதுமைகள் போலியானவை என்று தெரிந்தாலும், தமிழக முதலமைச்சர்கள், அதிகாரிகள், தொல்பொருட் ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் ஏதோ ஒரு உந்துதலால் செயற்கையாக செயல்பட்டு வந்துள்ளனர் என்றே தெரிகிறது. இப்பொழுது, போராடி கடத்தப் பட்ட பதுமைகளைப் பெற்று விட்டோம், என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். உண்மையில், இவ்விசயத்தை உன்னிப்பாக ஆராய்ந்தால், பலரின் மோசடிகள் தான் வெளிப்படுகின்றன. சித்தாந்த ரீதிரில் ராஜராஜ சோழன் பார்ப்பனர்களின் அடிவருடி, பிராமணர்களை ஆதரித்தான், கோவில்களைக் கொள்ளையடித்து பெருங்கோவில் கட்டினான் என்றெல்லாம் பொய் சொல்லி அலைகின்றனர். அதில் திக-திமுக-கம்யூனிஸ்ட் இந்து விரோத வகையறாக்கள் அடங்கும். இருப்பினும் கருணாநிதி போன்றோர், இவ்விசயத்தில் இரட்டை வேடங்கள் போட்டிருக்கின்றனர்.



“ராஜராஜ ழோழன் பதுமை மீட்பு” நாடகம்: 2010ல் செம்மொழி மாநாட்டை வைத்து, அரசியல் ரீதியில் தன்னை “தமிழர் காவலன்” போன்று காட்டிக் கொள்ள செய்த முயற்சிகளில் ஒன்று தான் “ராஜராஜ ழோழன் பதுமை மீட்பு” நாடகம். அக்கோவிலில் நுழைய, பக்கசுவரில் துளைப் போட்டு, அதம் வழியாக உள்ளே நுழைந்தவர் என்பது கவனிக்கத் தக்கது. 1000 ஆண்டு புராதன கோவிலின் சுவரை அவ்வாறு இடித்ததே சட்டவிரோதம் ஆகும். மேலும், அக்கோவிலில் நுழைந்தால் பதவி போய் விடும், உயிர் போய் விடும், தீது நடக்கும் என்ற நம்பிக்கை இந்த திராவிட அரசியல்வாதிகளில் அதிகமாகவே உள்ளது. 30-09-1984ல் விழாவில் கலந்து கொண்ட இந்திரா காந்தி 31-10-1984ல் கொலை செய்யப் பட்டார். எம்.ஜி.ஆருக்கு ஸ்ட்ரோக் வந்து 1987ல் காலமானார் என்றெல்லாம் இவர்களை பயமுருத்திக் கொண்டிருக்கின்றது. ராஜராஜன் கொலை செய்யப் பட்டான் அல்லது தற்கொலை செய்து கொண்டான் போன்ற நம்பிக்கைகளும் உள்ளன. அதனால், அக்கோவிலே இறப்பினால் தாக்கப்பட்டுள்ளது, அமங்கலமானது என்ற எண்ணம் உள்ளது.



மோடிக்கு திமுக-வகையறாக்கள் கருப்புக் கொடி காட்டினர் ஆனால், மோடி பதுமைகளை தமிழகத்திற்கு அளித்தார்: ஆக, இவ்விசயத்தில் முதலமைச்சர் மற்றும் பிரதமராக இருந்த-இருக்கும் மோடி, சாதுர்யத்துடன் செயல்பட்டு, பதுமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளார். காவிரி நீர் விசயத்தில், நெருக்கமான ஒரு காங்கிரஸ் முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதே முதலமைச்சர், உடனே தமிழகத்தில் சாமி கும்பிட வந்தபோதும், எந்த போராளிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. “காவிரி நீரைக் கொடுக்காத குமாரசாமியே திரும்பிப் போ” என்று ஆர்பாட்டம் செய்யவில்லை. ஆனால், ராணுவ கண்காட்சியைத் திறக்க வந்த மோடியை எதிர்த்து, அத்தனை கேவலமாக திமுக முதல் தேசவிரோத கட்சிகள் வரை, விளம்பரத்திற்காக கலாட்டா செய்ததை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அந்த கருணாநிதிக்கே பொம்மைக்கு கருப்புச்சட்டை போட்டு போட்டோ போட்டுக் காட்டி தமது வக்கிரத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். இருப்பினும் மோடி கண்டுகொள்ளாமல், தனது கடமையை செய்து சென்று விட்டார். அன்று கருணாநிதி கெஞ்சியது போல, இன்றும் தமிழகம் கெஞ்சித்தான் போலி பதுமைகளை வாங்கி வந்துள்ளது. இப்பொழுது, “பத்ம விபூஷன்” பெற்ற நாகசாமி வாயைத் திறக்கவில்லை. பதுமைகளை வரவேற்று,கோவிலில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் திராவிடர்கள். ஆக கொத்தம், போலி சிலைகளை உண்மை சிலைகள் என்று நம்ப வைத்து விட்டார்கள்.



© வேதபிரகாஷ்

04-06-2018




[1] எந்த மியூசியம் / அருங்காட்சியகத்திற்கு சென்றாலும் அவற்றைப் பார்க்கலாம். அந்நிய நாட்டு அருங்காட்சியகங்களில் அதிகமாகவே இருக்கின்றன. அவைதான் கடத்தப் பட்டு, அங்கு எடுத்துச் செல்லப் பட்டவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக