செவ்வாய், 5 நவம்பர், 2019

முதல் கற்கோவில் பல்லவர் கல்வெட்டு கிபி 700 திருவள்ளூர்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 21 ஜூலை, 2018, முற்பகல் 9:59
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழகத்தில் கோவில் கட்டியதற்கான முதல் கல்வெட்டு, திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்தில் தான், மண், மரம், சுதை இல்லாமல், கல்லால், குடைவரை கோவில்கள் அமைக்கும் பழக்கம் துவங்கியது. பின், கற்கோவில்கள் எழுப்பப்பட்டாலும், தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் கோவிலுக்கான சான்றுகள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில், தற்போது, கி.பி., 7ம் நுாற்றாண்டை சேர்ந்த கோவில் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது.
தென்கரணை என, அழைக்கப்பட்ட சிற்றம்பாக்கத்தில் உள்ள, பல்லவர் கால கும்பேஸ்வரர் கோவில், சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட
்டது. அதன் அருகில் தான், சிறிய செல்லியம்மன் கோவில் உள்ளது. அங்கு, மிக பழமையான, பல்லவர் கால தமிழ் கல்வெட்டு, கவனிப்பாரின்றி, கோவிலின் படிக்கல்லாக பயன்படுத்தப்படுகிறது.
பல்லவர் காலத்தில், பல்லவர் கிரந்தம், சமஸ்கிருத எழுத்துகள் தான் அதிகம் வெட்டப்பட்டன.
ஆனால், வல்லம் குகையில் உள்ள, முதலாம் மகேந்திர வர்மன் கல்வெட்டு, திருக்கழுக்குன்றத்தில் உள்ள, முதலாம் நரசிம்மவர்மன் கல்வெட்டுகள், தமிழில் உள்ளன. சிற்றம்பாக்கம் செல்லியம்மன் கோவில் கல்வெட்டும், தமிழில் உள்ளது சிறப்பு.
முதல் குடைவரை கோவிலுக்கான சான்றாக, கி.பி., 630ம் ஆண்டை சேர்ந்த, மகேந்திரவர்மன் கல்வெட்டு உள்ளது. நற்றம்பள்ளி கல்வெட்டின் காலம், முதலாம் பரமேஸ்வர வர்மனின், முதலாம் ஆட்சி ஆண்டான, கி.பி.,670. இக்கல்வெட்டு, 29 அங்குல நீளமும், 28.5 அங்குல அகலமும் உடையது.
கல்வெட்டில், இரண்டு வட்டங்கள் உள்ளன. அவற்றின் இடையே, மலரின் இதழ்கள் போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதைச்சுற்றி, ஆறு வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. செல்லியம்மன் கோவில் பெரிதாக இருந்த காலத்தில், அதன் சுவரில், இக்கல்வெட்டு இருந்திருக்கலாம்.
கல்வெட்டு வரிகளில் இருந்து, ஆலவாயிலை சேர்ந்த, சோமாசியார் மருமகன் குமரன் என்பவர் உருவாக்கிய கோவில் என, அறிய முடிகிறது.
காளிங்கன் Aathimoola Perumal Prakash
20 மணி நேரம்

கோவில் கோயில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக