ஞாயிறு, 17 நவம்பர், 2019

இராசேந்திர சோழன் நிலம் வழங்கிய பிராமணர் குடியேற்றம் பொய் தமிழக பார்ப்பனரே ஊர்ப்பெயர்

aathi1956 aathi1956@gmail.com

புத., 25 ஜூலை, 2018, பிற்பகல் 1:57
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது…...
# இது உண்மை தானா? என்று அறிய வேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…
# அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ளன...
#அதில் 1080 பார்ப்பனர்கள் (எட்டு பேர் தவிர அனைவரும் வைணவர்கள்)... எவரும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை... ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்ட
ுள்ளது... அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன... அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது...
# அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன) அதிலுள்ள ஊர் பிறகு கிராமம் பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன் ( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது) இயற்கைப் பெயர் பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்... அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள் தான்... அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்... இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை….
அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)...
1.”ராஜேந்திரசிம்ம வளநாட்டு தனியூர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து பரத்வாஜ கோத்திரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து இறையானரை சூர் மதிசூதன் யக்ஞப் பிரிய பட்டனுக்குப் பங்கொன்று” என்று ஒரு அந்தனனுக்கு வழங்கப்பட்ட விபரங்களுடன் தொடங்குகிறது... அதாவது……ராஜேந்திரசிம்ம என்ற வளநாட்டின் தனியூரில் உள்ள வீரநாராயண சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்த இறையானரை சூர் மதிசூதன் என்ற இயற்பெயரையும் யக்ஞப் பிரியப் பட்டன் எனும் பட்டப் பெயரைக் கொண்டவனுக்கு ஒரு பங்கு நிலமும் என்று கூறப்பட்டுள்ளது...
# இவ்வாறு ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த 7 முதல் 10 நபர்களின் பெயர்கள் என 1080 பார்ப்பனர்கள் பெயர்கள் உள்ளன…
அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில….
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…
இது போல 1080 பேர்கள் வாழ்ந்த ஊர்களும் தமிழக ஊர்களே….
இவ்வாறிருக்க இவர்கள் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமணர்கள் என திராவிட இயக்க தத்துவவாதிகள் கூறுவது ஏன்? இங்குள்ள பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல வடவர் என்று பொய் பரப்புரை செய்வதற்காகத் தானே…
# திராவிடப் பொய்களைத் தோலுரிப்போம்

கல்வெட்டு பட்டயம் சாசனம் செப்பேடு கரந்தை பார்ப்பனர் வைணவம் நிலவுடைமை குடியேற்றம் நடக்கவில்லை சோழர் வடமா

SEARCH கரந்தை செப்பேடு படங்கள் fbtamildata

இருளர் பற்றி உரையாடல் நரிக்குறவர் பற்றியும்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்புத., 25 ஜூலை, 2018, பிற்பகல் 1:34
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
இருளர்.
முந்தைய குறவர் பதிவில் இருளர் ஏன் குறவராக கூறப்படுவதில்லை போன்ற கேள்விகள் முன்வைக்கபட்டது. இருளர்கள் காடுகளை சார்ந்து வாழ்ந்த குழு என்றே கூறப்படுகிறது. குறிப்பாக கோயம்புத்தூர் என்றழைக்கபடும் ஊரின் பெயர் கோவன்புத்தூர் என்று கூறப்படுவதுண்டு. கோவன் என்ற மன்னன் ஆண்ட நிலம் என்பதால் இந்த பெயர் வந்தது. கோவன் இருளர்களின் தலைவன்.
இருளர் காட்டின் காவல்தெய்வம் தான் கோவை கோணியம்மன். காட்டை ஆண்டு வந்த கோவனின் மக்களான இருளர்கள் கண்ணில் கண்ட விலங்குகளை எல்லாம் வேட்டையாடுபவர்களாக இருக்கவில்லை. தங்களின் தேவைக்கு மட்டும் குறிப்பிட்ட விலங்குகளை மட்டும் வேட்டையாடுபவர்கள் என வரலாறு கூறுகிறது.
இந்த காலத்தில் தான் சோழர்கள் அங்கு வந்து இந்த காட்டை அழித்து வேளாண்மை செய்ய போகிறோம் என அறிவிக்கிறார்கள். காலங்காலமாக உணவளித்து கொண்டிருந்த கோணியம்மனுக்கு சொந்தமான காட்டை அழித்து வேளாண் நிலங்களாக மாற்ற இருளர்கள் சம்மதிக்கவில்லை என்றாலும். சோழர்களின் வலிமையால் இருளர்களின் காடு கைபற்றபட்டு வேளாண்மைக்கு உட்படுத்தபட்ட ஊர் கோயம்புத்தூர். சோழநாட்டு மக்களும் குடியமர்த்தபட்டனர். பின்னர் பாண்டியர் ஆட்சியில் பாண்டிய நாட்டு மக்களும் குடியமர்த்தபட்டனர் டெல்லி சுல்தான்கள் ஆட்சியில் இசுலாமியர்கள் குடியமர்த்தவும் பட்டனர் மதமாற்றிய கலப்பின இசுலாமியர்களும் உருவாயினர்.இறுதியாக விஜயநகர அரசால் தெலுங்கு கன்னட மக்களும் குடியேறி இருளர்களின் பூர்விக நிலமான கோவையில் இருளர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஓரங்கட்டபட்டார்கள்.
வெள்ளியமலை சிறுவானி மருதமலை அட்டப்பாடி போன்ற மலைசார்ந்த பகுதியில் கணிசமான அளவில் இருளர்கள் காணப்படுகின்றனர். மிகவும் சுறுசுறுப்பான மக்கள் கூட்டம். வெள்ளியமலை சென்றவர்கள் அறிவார்கள் இருளர்களின் வலிமையும் உழைப்பையும். எல்லா விலங்குகளையும் வேட்டையாடத இவர்கள் பாம்புகள் எலி முயல் ஆமை உடும்பு போன்ற உயிரினங்களை வேட்டையாடுவதில் தேர்ந்தவர்கள்.
இருளர் காடும் காடுசார்ந்த முல்லைநில வேட்டை குடிமக்கள். தமிழ்நாட்டின் இரண்டாவது முண்ணனி நகரமான கோவை இருளரின் பூர்விக நிலம் கோணி மாகாளி இருளச்சி.
14 மணி நேரம்

Sathis Kumar
ப(வ)டுகர்களின் ஆதிகத்தால் தான் இருளரின் வாழ்வாதாரம் பெரிதும் சிக்கலானது.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு

வெ.பார்கவன் தமிழன்
ஆம் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.@

Arul Raja Pillai
ஆக சொல்லவந்தது குறவர் குறிஞ்சி நில மக்கள் இருளர் முல்லை நில மக்கள் சரியா
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு
வெ.பார்கவன் தமிழன்
ஆமா

Mani Vedan Kurinjiyan
அருமை நன்பரே.. வெகுநாள்கலான அவர்கள் பற்றியான சந்தேகம் தீர்ந்தது ... நன்றி.
அது போல் மாராட்டிய வாக்ரிவாலா நரிகாரனுக்கு தமிழக பூர்வகுடி குறவரின் பெயரை இனைத்த சூச்மத்தையும் கண்டரிந்து விளக்குமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்..
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு

வெ.பார்கவன் தமிழன்
வாக்ரி மொழி பேசும் நரிக்காரர்கள் அல்லது குருவிகாரர்கள் எப்போதிருந்து நரிக்குறவர் ஆனார்கள் என்பதிற்கு சரியான தரவுகள் கிடைக்கபடவில்லை.
ஆனால் அவர்கள் வாக்ரி மொழி பேசுவோர்கள் குஜராத்தி மராட்டி வழியினர் என்றும் அவர்களின் மொழியும் ஆய்வு செய்யபட்டு ஆவணபடுத்தபட்டு விட்டது. பழங்குடி பட்டியலில் சேர்க்கபடவில்லை.
கருணாநிதி அவர்களை பழங்குடியில் சேர்க்க முயற்சிகள் எடுத்தார் எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு சின்னமேளம் இசைவேளாளர் ஆனாது போல் தெலுங்கு அருந்ததியர் ஆதிதமிழர் என்ற அடைமொழியோடு திரிவதுபோல் நரிகுருவிகாரர்கள் நரிகுறவர் என்ற அடையாளத்தில் வருகின்றனர்.
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் நரிக்குறவர்கள் , ஐரோப்பிய நாடோடிகள்
போயர் இனவழியில் வந்தனர் , எங்கு நீண்ட நாள் தங்கினார்களோ அம்மொழியை பேசுகிறார் கள் .
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 32 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்த வழி ஈரான் என்பதை அறிவோம் அவ்வாறு வந்தவர்கள் , ராஜஸ்த்தான் குஜராத் தங்கி விட்டனர்
குஜ்ஜர் , ராஜ்புத் இவர்கள் வெளிநாட்டினரே !
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 20 நிமிடங்களுக்கு முன்பு

வெ.பார்கவன் தமிழன்
எப்படியும் தமிழ்நாட்டிற்கு அந்நியம் என்பது மட்டுமே வாதம் ஐயா.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 17 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் இருளர் , காடர் , பளியர் , கோத்தர் , குரும்பர் , தோடர் , மேலும் சில இவைகள் மட்டுமே தமிழ்க்கு டி
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 14 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் படகர்களை படிங்குடிப் பட்டியில் சேர்க்க எடுத்த முயற்சியை நான் தடுத்த முயற்சி 4 மணிக்கு ஆதாரத்துடன் பதிவிடுகிறேன் ,
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 12 நிமிடங்களுக்கு முன்பு

வெ.பார்கவன் தமிழன்
குரும்பரில் சில ஐயம் உண்டு
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 11 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் தெலுங்கு பேசுவோர் குருமன் ஸ் என்பர்
தமிழ்ப் பேசுவோர்
குரும்பக் கவுண்டர்

Muniraj Vanathirayar
கோயமுத்தூர் பெயர்க்காரணம் கோசரால் வந்தது என கருதுகோள் உள்ளது. இருளர்கள் மலைவாழ் மக்களில் பட்டியலிடப்படுகிறார்கள். அவர்கள் பழங்குடியின திருமணமுறையைப் பின் பற்றுகிறார்கள். அவர்களிடையே தாலிகட்டும் வழக்கம் இல்லை. தனக்கு பிடித்த ஆடவனை தன் குழுவிலிருந்து ஒரு இருளர் பெண் தேர்வு செய்து கொள்ளலாம். பிடித்தால் வாழலாம், பிடிக்காவிட்டால் விலகலாம். ஏலகிரி -ஜவ்வாது மலைத்தொடர்களில் இவர்கள் செறிவாக காணப்படுகிறார்கள். இவர்கள் நடத்தும் திருவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். நல்ல விருந்தோம்பலை பின்பற்றுவார்கள். மலைத் திரவியங்களான தேன்-மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்கள் - பாம்பு விஷம் போன்றவை இவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை ஓரளவுக்கு தீர்க்கின்றன. இருளர் பற்றி ஓரிரு வரிகளில் சொல்லிட முடியாது.

சிவராசன் வெங்கடேசன்
என்ன மொழி பேசுறாங்க?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 11:24 மணிக்கு

வெ.பார்கவன் தமிழன்
தமிழர்கள் தான்.

Aathimoola Perumal Prakash
இல்லை. தமிழுடன் ஒத்துப்போகும் தனி மொழி. இவர்களின் இன்னொரு தொகுதி காஞ்சிபுரத்திற்கு தெற்கே வாழ்கிறார்கள். அவர்கள் தமிழ்தான் பேசுகிறார்கள்.

பழங்குடி வரைபடம் பரவல் இருளா irula 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்புத., 25 ஜூலை, 2018, பிற்பகல் 1:39
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
வீரப்பனாருக்கு முழு ஆதரவையும் வழங்கியவர்கள் என்பது இவர்களின் இனப்பற்று
க்கான சான்று.
தங்கை செங்கொடி இருளர் ஆவார்.
http://vaettoli.blogspot.com/2017/11/blog-post_9.html?m=0
இருளர் குலச் செங்கொடி


வடுகர்நாடு இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 24 ஜூலை, 2018, பிற்பகல் 6:35
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# திராவிட தேசியத்திற்கு மூத்தது சங்ககாலத்தின் தமிழ்த் தேசியம்….
#திராவிட இயக்கம் வருவதற்கு முன்னர் தமிழ் தேசியம் என்று ஒன்று இல்லை..யாரும் தமிழ்த் தேசியம் பேசியதே இல்லை என்று சொல்பவர்களின் கவனத்திற்கு….
சங்க காலத்திலேயே தமிழகத்தில் தமிழ்த் தேசியம் குறித்து பேசப்பட்டதற்கான சான்றுகள்..
# குறுந்தொகை - மாமூலனார் (காலம் - கிட்டத்தட்ட கி.மு.4ம் நூற்றாண்டு)
“குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.”
பொருள் :
கட்டி எனும் அரசன் ஆளும் வடுகர் வேற்றுமொழி பேசும் நாடாயினும் செல்வோம்.
# அகநானூறு :31 -
“தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே”
பொருள் :
தமிழ் மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்கள் தமிழ்
பேசப்படாத அந்த மொழி தெரியாத நாட்டிற்குச்
சென்றிருக்கி்ன்றனர்.
-
இதேபோல், ஐங்குறுநூறிலும், அகநானூறின் மற்றுமொரு பாடலிலும் 'மொழிபெயர்
தேயம்' என்ற சொல் குறிக்கப்பட்டுள
்ளது.
'மொழி பெயர் தேயம்' வேற்று மொழியுடைய தேசம் என்பதைக் குறிக்கும். தமிழகம்
தவிர்த்த மற்ற பகுதிகளை வேற்று மொழியினர் என்று குறிப்பிட்டு
வந்துள்ளனர்.
“'வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்' என்றது வடுகநாட்டையே ( ஆந்திரா கர்நாடகா) என்பது தான் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்

# உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்போம்...

18 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
கதிர் நிலவன் மற்றும் 44 பேர்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/06/blog-post_7.html?m=0
இலக்கியத்தில் தமிழர்நாடு
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 6 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_20.html
இமயமே தமிழரின் எல்லை
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/10/blog-post_4.html?m=0
குமரிக்கண்டக் கருத்தியல்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · சற்றுமுன்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு

வடுகர் 

பிறமலை கல்லகநாடு கள்ளர் கல்லர் ஒன்றாகுமா கல்வெட்டு




aathi1956 <aathi1956@gmail.com>

திங்., 12 மார்., 2018, பிற்பகல் 12:04




பெறுநர்: எனக்கு




சியாம் சுந்தர் சம்பட்டியார்
புரமலை கல்லகநாடு கள்ளர்கள்
--------------------------------------------------------------
கல்லகநாடு என கல்வெட்டுகளில் குறிக்கபடும் பகுதியானது மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை வட்டங்களின் நிலப்பரப்பினை உள்ளடக்கியதாக இதன் எல்லைகளை கொண்டுள்ளது.இன்றைய பிறமலை கள்ள நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதி தென்கல்லகநாடு கல்லநாடு, கல்லகநாடு என கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.
கல்லநாடு கள்ளர் நாட்டை குறிக்குமா?
---------------------------------------------------------------
* கிபி 1488 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ( SII vol 25, no 44)
" மகாபலி வாணாதிராஜா நாயக்கத்தனமாகப் புரமலைக் கல்லகநாட்டில் மேற்படி தொண்டைமண்டலத்து திம்மச்சி நாயக்கர் " என குறிக்கிறது. திம்மச்சி நாயக்கன் என்பவன் அளித்த நிலக்கொடை பற்றி கூறுகிறது.அச்சமயத்தில் இப்பகுதி விஜய நகர அரசர் மேலாண்மையை ஏற்ற வாணாதிராயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. புரமலை கல்லகநாடு என குறிக்கப்படும் இப்பகுதி இன்றைய பிறமலை கள்ளர் நாட்டு பகுதியாகும். இப்பகுதியில் கள்ளர்களே தன்னரசு நாடுகளை உருவாக்கி வாழ்ந்தனர். இப்பகுதியில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்விடத்தை குறிக்கவே கல்லகநாடு என குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலவியல் அமைப்பில் இன்றும் 80% க்கும் மேல் வாழ்பவர்கள் கள்ளர்கள் மட்டுமே.
* புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டு 674, இதே காலத்தை சேர்ந்ததாகும். இந்த கல்வெட்டு வாணாதிராய மன்னரை பற்றிய புகழ் மொழிகளை கொண்டுள்ளது. " வாணர் குலத்தவன் , மதுராபுரி காவலன் போன்ற புகழ் மொழிகள் வாணாதிராயர் மதுரையை ஆட்சி செய்ததை குறிப்பிடுகின்றது. இந்த கல்வெட்டில்" வார்கழற் கல்லமலை என வருகிறது. அதாவது வீரமிக்க கழல் அணிந்த பாதம் கொண்ட கல்லர்கள் வாழும் மலை எனவும், கழற் கல்ல அசுரர், அதாவது வீரக்கழல் அணிந்த கல்ல அசுரர்கள் எனவும் குறிப்பிடுகிறது. இதே கால கல்வெட்டு புரமலை கல்லகநாடு என குறிப்பிடுவது மேற்குறிப்பிடப்பட்ட கல்ல மலை மற்றும் கல்ல அசுரர் எனும் கள்ளர்களைத்தான். பாண்டியர் மேலாண்மையை தூக்கி எறிந்த வாணர்கள் பாண்டியர் படைபற்றுகளான புறமலை கள்ள நாடுகளின் மேல் போரிட்டு அடக்கி தன் ஆதிக்கத்தை நிறுவியதை தெரிவிக்கும் கல்வெட்டாக இது இருக்கலாம். வார் கழற் கல்லமலை , கழற் கல்ல அசுரர் போன்றவற்றில் வரும் கல்லர் என்பது மனிதர்களையே குறிக்கிறது. " கழற் திருந்தடிக் கள்வர் கோமான் " என மாமன்னர் புல்லியை அகநானூறு பாடல் 61 குறிப்பிடுகிறது.வாணர் தன்னை மதுராபுரி காவலன் என குறித்திருப்பது மூலம், அவர்கள் மதுரை ஆட்சி செய்ததும், புறமலை கல்லகநாடு என வழங்கப்பட்ட கல்வெட்டுகள் பிறமலை கள்ளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கள்ள நாட்டையே குறிப்பவையாகும்.
* வார் கழல் அணிந்த கல்லர் மலை என குறிப்பிடுவதால், கல்லகநாடு என்பது கல் பாறைகளை கொண்ட பகுதி என சிலர் வரலாற்றாசிரியர்
களின் யூகம் பொய்யாகிறது.
* கள்ளர்களை கல்லர் எனவும் மறவரை மரவர் எனவும், பறையரை பரயர் எனவும் பல்வேறு கல்வெட்டுகளில் குறித்துள்ளதை காணலாம்.
* கள்ளரை கல்லர் என குறிக்கும் கல்வெட்டுகளில் சில:
" மேற்படி கானவன் சேந்தன் கல்லன் " ( புதுக்கோட்டை கல்வெட்டு 50)
" கொனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கல்லன் ஆதித்தபடாரி " ( SII vol 7 :975)
" பாண்டி நாட்டு முத்தூர் கூற்றத்து கல்லஅம்பலவன் " (IPS 60)
" முருக்குடையான் காணி இந்த கல்லன் " ( IPS 281)
தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட " தென்கல்லகநாடு " எனும் புத்தகத்தில் முனைவர் ஜெயக்குமார், கல்லகநாடு என்பது அங்கு வாழும் கள்ளர்களோடு நேரடி தொடர்பை கொண்டது என விளக்கியுள்ளார்.
பிறமலை நாடு கள்ளர் படைபற்றுகள்
---------------------------------------------------------------
பிறமலை பகுதி கள்ளர் நாடுகள், தன்னரசு நாடுகளாக உருவாவதற்கு முன் சோழ /பாண்டியர்களின் முக்கிய படைபற்றாக இருந்துள்ளது.முடி மன்னர் ஆட்சி முடிவுற்றபின் தன்னரசு நாடுகளாக உருவான கள்ளர் பற்றுகள் திருமலை நாயக்கர் காலம் முதல் வெள்ளையர் காலம் வரை பல போர்களில் ஈடுபட்டு வீரதீரம் காட்டியுள்ளனர். பல வெளிநாட்டு ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்களமாக இன்று வரையும் விளங்குவது பிறமலை கள்ள நாட்டு பகுதிகளாகும்.கள்ளர் படைபற்றுகள் பற்றிய ஆனையூர் ஐராவதேசுவரர் கோயில் கல்வெட்டுகளை காண்போம்.
ராசராசசோழன் கால தென்கல்லநாட்டு படைத்தலைவன்:-
கிபி 996 ஆம் ஆண்டு ராசராசன் கால ஆனையூர் நாட்டு ஐராவதேசுவரர் கோயில் கல்வெட்டில் (500/1962-63)
" இராசராசவளநாட்டு தென்கல்லநாட்டு திருக்குருமுள்ளூர் படைத்தலைவன் வேளான் சேந்தன் மற்றும் படைத்தலைவன் அரையன் பல்லவன் " என கள்ளர் படைத்தலைவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இராசராச கால கல்ல நாட்டு படைத்தளபதிகள்:-
கிபி 1150 ஆம் ஆண்டு ஆனையூர் கோயில் கல்வெட்டு (503/1962-63)
"இராசராச மண்டலத்து தென்கல்லக நாட்டு....உலகன் மண்டகத்து எரிய படைத்தலைவன் காடன் ஊரனுக்கு "
தென்கல்ல நாட்டை சேர்ந்த எரிபடை தலைவன் குறிக்கப்படுகிறார்.
சுந்தர சோழ பாண்டிய தேவர் கால பிறமலை கள்ளர் படைத்தலைகள்:-
" ராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டு மிலாட்டுத்(506/1962-63) தென்கல்லக நாட்டு படைத்தலவனான மாறனாசகன் படைத்தலைவன் சேந்தன் சோலை இருநாளிக்கு கொடுத்த பசு எட்டு படைத்தலைவன் அட்டக் கடவால் னாநாழி படைத்தலைவன் சுரனாச்சன் "
'மதுராந்தக வளநாட்டு தென்கல்லக நாட்டு படைத்தலைவன் சோமன் எழுநூற்றுவனும் "(505/1962-63)
கல்லநாட்டு படைத்தலைவர்கள் மாறனாசகன், சேந்தன் சோலை, சுரனாச்சன் முதலியவர்கள் அளித்த கொடை பற்றி குறித்துள்ள கல்வெட்டு.
" மதுரை மண்டலத்தில் உதய வளநாட்டு பிறமலை பற்றில் திடியன் சீமைக்கு உட்பட்ட தங்களாச்சேரி" ( கிபி 1570) ( விஜயவேணுகோபால் மற்றும் வெங்கடராமன் 1996 பக் 68-70)
கல்லநாட்டில் படைத்தலைவர்களை குறித்த கல்வெட்டுகளை கண்டோம், பிற்காலத்தில் பிறமலை கள்ளர் பற்றாகவே குறிக்கப்பட்டுள்ளது.
கிபி 10 ஆம் நூற்றாண்டு முதல் கள்ளர் நாடுகளாக சோழர் பாண்டியர் மன்னர்களின் படைபற்றுகளாக விளங்கிய பிறமலை கள்ளர் நாடுகள் மூவேந்தர் ஆட்சியின் முடிவுக்கு பின் தன்னரசு கள்ள நாடுகளாக அந்நியர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி உள்ளனர்.
கல்வெட்டு ஆதாரங்கள் : தென்கல்லக நாடு ( முனைவர் ஜெயக்குமார்)/
புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்


முக்குலம் சாதி


எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.








aathi tamil <aathi1956@gmail.com>

செவ்., 13 மார்., 2018, பிற்பகல் 1:57





பெறுநர்: எனக்கு








ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
புரமலை # கல்நாடு_கல்லகநாடு ...
# கள்ளர் .. விளக்கம்...
9ஆம் நூற்றாண்டு சீவகசிந்தாமனி உழவரை மள்ளர் எனப்பாடுவதால் சங்கபாடலில்
மள்ளர் மள்ள எனும்
# சோழன் தொண்டைமான் இளந்திரையன் பள்ளர் அல்ல, அதாவது இளந்திரையன்
உழவன்(காராளன்_களமர்) என்பது நேரடி பொருள் அல்ல...
அதே போலதான்,
மொழியில் ஒவ்வொரு # உயிர்மெய் மாற்றத்திற்கும் அடிப்படை பொருளே மாறிவிடும்...
# கல்நாடு ,# கல்லகநாடு எனில் கற்கள் நிறைந்த நிலம்,மலை பகுதி என்பதே
நேரடி பொருள்...
மாறாக கள்ளரையோ,கள்ளர் வாழ்ந்த பகுதி என்பதாலோ அப்பெயர் பெற்றது என்பது
கிடையாது... அது தவறு...
கள்ளர்களை கல்லர் என எதும் கல்வெட்டுகள் குறிப்பின் அவை எழுத்துப்பிழை...
அங்கனம் பிழை உள்ளதை மேற்கோள் காட்டி புரமலை #கல்நாடு_கல்லகநாடு என்பதை
கள்ளரால் அப்பெயர் பெற்றது என்பது தவறான மேற்கோள்...








aathi tamil <aathi1956@gmail.com>

திங்., 23 ஜூலை, 2018, பிற்பகல் 4:40





பெறுநர்: எனக்கு









ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
புரமலை # கல்நாடு_கல்லகநாடு ...
# கள்ளர் .. விளக்கம்...
9ஆம் நூற்றாண்டு சீவகசிந்தாமனி உழவரை மள்ளர் எனப்பாடுவதால் சங்கபாடலில்
மள்ளர் மள்ள எனும்
# சோழன் தொண்டைமான் இளந்திரையன் பள்ளர் அல்ல, அதாவது இளந்திரையன்
உழவன்(காராளன்_களமர்) என்பது நேரடி பொருள் அல்ல...
அதே போலதான்,
மொழியில் ஒவ்வொரு # உயிர்மெய் மாற்றத்திற்கும் அடிப்படை பொருளே மாறிவிடும்...
# கல்நாடு ,# கல்லகநாடு எனில் கற்கள் நிறைந்த நிலம்,மலை பகுதி என்பதே
நேரடி பொருள்...
மாறாக கள்ளரையோ,கள்ளர் வாழ்ந்த பகுதி என்பதாலோ அப்பெயர் பெற்றது என்பது
கிடையாது... அது தவறு...
கள்ளர்களை கல்லர் என எதும் கல்வெட்டுகள் குறிப்பின் அவை எழுத்துப்பிழை...
அங்கனம் பிழை உள்ளதை மேற்கோள் காட்டி புரமலை #கல்நாடு_கல்லகநாடு என்பதை
கள்ளரால் அப்பெயர் பெற்றது என்பது தவறான மேற்கோள்...

விநாயகர் வழிபாடு பழமை பிள்ளையார்பட்டி சிந்துசமவெளி சான்று அகழ்வாராய்ச்சி கல்வெட்டு எழுத்துரு




aathi tamil <aathi1956@gmail.com>

திங்., 23 ஜூலை, 2018, பிற்பகல் 4:17





பெறுநர்: எனக்கு



தமிழகத்தில் பிள்ளையார், விநாயகர், கணபதி வழிபாடு: இலக்கிய-அகழ்வாய்வு-சரித்திர ஆதாரங்கள்.


தமிழகத்தில் பிள்ளையார், விநாயகர், கணபதி வழிபாடு: இலக்கிய–அகழ்வாய்வு–சரித்திர ஆதாரங்கள்.



பெரியாரிஸ, திராவிட கழக வாதம்[1]: “641 CE க்கு முன்தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி என்பதோ, பிள்ளையார்வழிபாடோ கிடையாது. இதற்கான ஆதாரம் கேட்கப்புகின்தொல்காப்பியத்தில்கூட மாயோன், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை குறித்து பேசப்படுகிறதே தவிர பிள்ளையார் இல்லை. சங்க நூல்களிளேகூட கதிரவன், காளி, கூளி, காற்று, காடுகாத்தாள், நம்பின்னை, பலராமன் போன்றோர்பேசப்படுகின்றதே தவிர தும்பிக்கை கடவுள் இல்லை”, என்று திகவினர் வாதிடும் போது, மற்ற சங்க இலக்கிய ஆதாரங்களை மறைப்பதை கவனிக்கலாம். “641 CEல் நரசிம்மவர்மன்வாதாபியின் மீது போர் தொடுத்து இரண்டாம் புலிகேசியைவென்றபோது அவன் படைத்தலைவனான பரஞ்சோதிதான்அங்கிருந்த யானைத்தலை மனித உடலுடன் கூடிய பொம்மையைஎடுத்துவந்து காட்சிப் பொருளாக வைத்தான். அதன் பிறகு புராணக்கதை எழுதி பார்வதிக்கு மகனாக்கினர், முருகனுக்குஅண்ணனாக்கினர்”, என்று வழக்கம் போல தூஷண படலத்தைக் காணலாம். இக்காலத்திலும், இப்படி 1960-70 வாதங்களை வைத்து விதண்டாவாதம் செய்வதால், உண்மையினை அறிய வேண்டாம் என்றுள்ள போக்குதான் வெளிப்படுகின்றது.



பரஞ்சோதிக்குப் பிறகு தான் பிள்ளையார் வழிபாடு ஏற்பட்டது: “சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப்பல்லவனின் படைத் தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கியமன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம்வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்,”[2] என்று விகிபீடியா போன்றவையும் பாட்டு பாடுகின்றன. 2007-ஆம் ஆண்டில், கருணாநிதி, “பிள்ளையார் கர்நாடகத்தைச் சேர்ந்த வாதாபியில்பிறந்தவர். அவர் பல்லவர் காலத்தில்தான் தமிழகத்திற்குக்கொண்டு வரப்பட்டார். எனவே அவர் தமிழ் கடவுள் அல்ல,” என்று பேசினார். படித்தாலும், பண்பில்லாததால், அவர் அவ்வாறு பொய் சொல்லியே காலத்தை கழித்தார். “17 ஆம் நூற்றாண்டின் போதுதமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மன்னர் வட மாநிலத்தில் போர் புரிந்துவெற்றிபெற்றார் அதன் நினைவாக அங்கிருந்த விநாயகர்சிலையை கொண்டு வந்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும்விநாயகர் வழிபாடுகள் தொடங்கின. தமிழகத்தில் இவ்விழாபெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டுகொண்டாடப்பட்டது,” என்று விகிபீடியா இன்னொரு கதையினையும் சொல்கிறாது[3].



4-6 நூற்றாண்டுகளில் CE பிள்ளையார் வழிபாடு இருந்தது: தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, 6-ம் நூற்றாண்டுக்கு CE உட்பட்டதாகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூக்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது. இது 6-ம் நூற்றாண்டில் CE காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது[4]. மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து பொறிக்கப்படாத இரண்டு சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். 2015ல் போது திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண் டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளையார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பீடத்தில் 3 வரி களில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடி வம் பூளாங்குறிச்சி எழுத்து வடி வத்துக்கு பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல் லெழுத்து வடிவத்துக்கு முந்தை யதும் ஆகும். அதாவது 4-ம் நூற்றாண்டுக்கும், 6-ம் நூற்றாண்டுக்கும் CE இடைப்பட்ட தாகும்.



தமிழகத்தில் 4ம் நூற்றாண்டிலிருந்து, பிள்ளையார் வழிபாடுஇருந்தது: சங்க இலக்கியங்களில் வரும் சதுக்கப் பூதம், விநாயகர் என்றும் விளக்கம் கொடுப்பதுண்டு. யானையை சங்க காலம் நன்றாக அறிந்திருந்ததால், அதன் தன்மை, மேன்மை முதலியவற்றை தெய்வத் தன்மையுடன் இணைத்த இலக்கிய ஆதாரங்கள் இல்லாமல் இருந்தாலும், அவற்றை அறிந்திருக்கவில்லை என்றூ சொல்லமுடியாது. முல்லைப்பாட்டில் வரும் யானைகளை வளர்ப்போர், புரியாத மொழியில் பேசியதால், அவரை ஆரியர் என்றால், தமிழருக்கு, யானையைப் பற்றிய உரிமை போய் விடுகிறதா அல்லது தைப் பற்றிய ஞானமே அறியாமையாகி விடுகிறதா என்பது பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர்[5]. சிந்துசமவெளி நாகரிக அத்தாட்சிகளில் தெரிந்து விடுகிறது. திருமுருகாற்றுப்படையில் ஒருகை தம்பி என்று வரும்சொற்றொடர், பிள்ளையாரைக்குறிக்கும் என்றுவிளக்கப்படுகிறது. ஔவையார் காலம், உறுதியாகக்கணக்கிட முடியவில்லை. மேலும் அப்பெயரில், பலகாலங்களில் ஒன்றிற்கும் மேலான புலவர்கள்இருந்திருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவருகிறது. ஆகவே, இலக்கிய சான்றுகள் மற்றும் இதுவரை கிடைத்துள்ளஅகழ்வாய்வு ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், நிச்சயமாக4ம் நூற்றாண்டிலிருந்து, பிள்ளையார் வழிபாடு இருந்தது என்பது உறுதியாகிறது.



சிந்து சமவெளியில் பிள்ளையார்: பிள்ளையார் சிந்துசமவெளியில், அதிலும் நௌஸோர் (இப்பொழுது பாகிஸ்தான்) என்ற இடத்தில் 9000 BCE வர செல்லும் அகழ்வாய்வு படிவுகளில் காணப்பட்டுள்ளது முக்கியமாக உள்ளது. சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மூன்று தலைகள் கொண்ட (உயரம் – 6.76, நீளம் – 6.97, அகலம் – 4,42; அளவுகள் செ.மீரில்) இந்த ஒரு உருவம் 1992ல் கிடைத்ததாகும். பாகிஸ்தான் மியூஸியத்தில் EBK 7712 என்ற எண்ணுடன் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெருமளவில் இழுத்துள்ளது. காத்தரைன் ஜேரிஜ் (Catherine Jarrige) என்பவர் தன்னுடைய கட்டுரையில் படங்களுடன் விவரித்துள்ளார். ஜொனாதன் மார்க் கெனோயர் (Jonatham Mark Keynoyer) புத்தகத்தில் 117வது பக்கத்தில், இதன் இரு படங்களைக் காணலாம். யானை, சிங்கம் / புலி, காளை என மூன்று தலைகள் உள்ளன. அவற்றில் யானை மற்றும் சிங்க / புலித் தலைகள் தெளிவாகவே உள்ளன. குறிப்பாக யானையின் காது, தும்பிக்கை விநாயகரைக் குறிப்பதாக உள்ளது. இத்தகைய மூன்று தலைகள் கொண்ட சிற்பங்கள், இந்தியக்கலைப் பொருட்களில் அதிகமாகவே காணப்படுகின்றன. யானை சிந்து சமவெளி முத்திரைகளில் பலவற்றில் காணப்படுகின்றன. மேலேயுள்ளது விளையாடும் பொம்மைகளில் காணப்படுகிறது. ஆகவே, கணேசன் / விநாயகன் / பிள்ளையாரை யார் அங்கு உருவாக்கினர் என்று கவனிக்க வேண்டும்.



சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், திராவிடர்கள் உருவாக்கினரா?: லிங்கம் என்பதற்கான தனித்தனியான பகுதிகளும் கிடைத்துள்ளன. நந்தியின் பொம்மைகள் நிறையவே கிடைத்துள்ளன. இன்றைக்கு, திராவிட சித்தாந்திகள் இப்படியுள்ள ஆதாரங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஏதேதோ பேசி-எழுதி வருகின்றனர். அரைத்த மாவை அரைத்துக் கொண்டு வருகின்றனர். 9000-6000 BCE முன்பாகவே, ஏற்பட்டுள்ள கலைவடிவம் இந்தியாவில் பரவ 1300-1500 வருடங்களில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த மண் சிற்பத்தில் காணப்படும் வளைவுகள், நெளிவுகள் முதலியவை சிற்பியின் கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய கலைத்திறன் 7000 வருடங்களாக சும்மா இருந்து, திடீரென்று 2300 வருடங்களுக்கு முன்புதான் திடீரென்று மௌரிய காலத்தில் மறுபடியும் தோன்றியது என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுவதையும் மற்றவர்கள் கூர்மையாக கவனிக்க வேண்டும். கலை, கலைத்தோற்றம், உருவமைப்பு, சிற்பக்கலை முதலியன, மனிதர்களிடம் தொடர்ந்து நடப்பவையாகும். காலந்தோறும், சில மாறுதல்கள் இருந்தாலும், அடிப்படயில் உள்ள பழமையின் ஆதாரம் மாறாமல் இருக்கும். உலகத்த்தில் பற்பல இடங்களில் உள்ள விநாயகர்-கணபதி-பிள்ளையார் உருவங்கள் அத்தகைய ஒற்றுமையைக் காட்டுகின்றன. இடம், பொருள், காலம் முதலியவை மாறினாலும் யானை உருவம், தும்பிக்கை, காதுகள் முதலியன மாறுவதில்லை ஆக, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், காணபத்திய இந்துமதத்தை திராவிடர்கள் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது.



தமிழர் திராவிடர் போர்வையில் இரட்டைவேடம் போட்டால்சரித்திரத்தை மறந்து விட வேண்டியது தான்; தனித்தமிழ் இயக்கம், ஆரிய-திராவிட போர்வையில் 19 நூற்றாண்டில் உண்டாக்கப்பட்ட இனவாத சித்தாந்தத்தின் படி, திராவிடர்கள், சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்றால், பிள்ளையாரை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிவன், ருத்திரன் போன்றோர் ஆரியர், ஆகையால், அவரது பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் விட்டுவிட வேண்டும். அதாவது, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களுடையது என்ற வாதம் முரண்பட்டதாகி விடும். சிந்து சமவெளி நாகரிகத்தில் பிள்ளையார் இருந்தது, ஆனால், சங்கப் புலவர்கள் மறந்து விட்டனர், தொல்காப்பியரும் மறந்து விட்டார் என்றெல்லாம் வாதிட முடியாது. இத்தகைய குழப்பவாதங்களை வைத்துக் கொண்டு, இந்துவிரோதத்துடன் செயல்படுவதால், சரித்திரமே அவர்களது புரட்டுத்தனத்தை வெளிப்படுத்துகிறது. போலித்தனத்தை தோலுரித்து, முகமூடியைக் கிழித்தெறிகிறது. பிள்ளையாரை உடைத்தாலும், வழக்கிலிருந்து ஓடி ஒளிந்தாலும்[6], சரித்திரத்தை மறைக்கமுடியாது.

வேதபிரகாஷ்

24-08-2017



[1] http://www.unmaionline.com/4044-will-the-anniversary-celebrate-the-dirty-boy.html

[2]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

[4] Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675.

[5] இரா. கலைக்கோவன், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் , வரலாறு.காம்; http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=575

[6]https://rationalisterrorism.wordpress.com/2010/09/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

ராசராச சோழர் சிலை போலி மீட்பு பற்றி விரிவாக

← ராஜராஜன் – உலகமாதேவி செப்பு மேனிகள் திரும்ப வந்தததை தமிநாட்டு மக்கள் போற்றுகின்றனர், ஆனால், ராஜராஜனை –ராஜேந்திரனைத் தூற்றுகின்றனரே ஏன்? (2)
ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், திருடியது, கடத்தியது யார், போலிகளைத் தயாரித்தது யார்? →

ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், போலிகள், செம்மொழி மாநாட்டுப் போர்வையில் கருணாநிதியின் மீட்பு முயற்சி!
Posted on ஜூன் 4, 2018by vedaprakash


ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், போலிகள், செம்மொழி மாநாட்டுப் போர்வையில் கருணாநிதியின் மீட்பு முயற்சி!



கல்வெட்டுகளின் படி ராஜராஜ சோழன் பதுமையின் உயரம்: கல்வெட்டு ஆதாரமாக, உலோக சிலைகள் செய்யப்பட்ட விவரங்கள் இவ்வாறுள்ளன: ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ஶ்ரீகார்யமாக பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் இருந்தார். இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கும் முறையே 74 செ.மீ [2,43 அடி], மற்றும் 53 செ.மீ. [1.74 அடி] உயரத்தில் செப்புச் சிலைகளை செய்கிறார். ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம். ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார் ஶ்ரீகார்யம். இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. ஆனால், இப்பொழுதுள்ள பதுமைகளின் உயரம் மாறுபடுகிறது. சோழர்கால அத்தாட்சிகள், ஆதாரங்களை திட்டம் போட்டுத்தான், மேனாட்டவர் அழித்து, மறைத்து வருகின்றனர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வரலாற்று-வரைவியல் எனும் போது, சோழர்களின் மேன்மை, உயர்வு, சிறப்பு என்று விவரங்கள் வரும்போது, எதிர்மறையான திரிபுவாதங்களினால், திசைத் திருப்பி வருவதால், உண்மை சரித்திரம் முழுவதும் வெளிவராமல், ஆவணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.


உண்மையான பதுமைகள் காணாமல் போனது: ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றன என்று சண்முகசுந்தரம்[1] சொன்னாலும் விவரங்களைக் கொடுக்கவில்லை. அதன்பிறகு அங்கிருந்து எப்படியோ கடத்தப்பட்டு விட்டதால் புதிய சிலைகளை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள், என்கிறார். 1940களில் சென்னையில் அது சாராபாயுக்கு விற்கப்பட்டது. கடத்தப்பட்டது ராஜராஜன் சிலை என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள். ஒரிஜினல் ராஜராஜன் சிலையானது இப்போது அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் மியூசியத்தில் ராஜராஜன் – லோகமாதேவி சிலைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜ ராஜன் சிலைக்கு காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காக பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு 1984ல் அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையை கிளப்பினார்.



குஜராத் சென்ற தமிழகக் குழு [செப்டம்பர் 2010]: இதுவே பெரும் சர்ச்சையாகிப் போகவே, ராஜராஜனை மீட்டுவர இந்திராவும் எம்.ஜி.ஆரும் முயற்சி எடுத்தார்கள். அத்தனையும் தோற்றுப்போன நிலையில், 2010-ல் தஞ்சை பெரியகோயில் எழுப்பப் பட்டு, ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவின்போது ஆட்சியில் இருந்த திமுக, ராஜராஜன் சிலையை மீட்கும் முயற்சிகளில் இறங்கியது. கருணாநிதி மோடிக்கு சிலைகளை பரிசாகக் கொடுக்கும் படி வேண்டுக் கொண்டார்[2]. அவரும் ஆவண செய்ய உறுதி அளித்தார். காலிகோ அருங்காட்சியக இயக்குனர் மெஹ்தா [Calico Museum director D S Mehta] ஆதாரங்கள் காட்டினால் கொடுத்து விடுவதாக வாக்களித்தார்[3]. இதற்காக, அப்போதைய சுற்றுலாத்துறைச் செயலாளர் வெ.இறையன்பு, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி, குடவாயில் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்று குஜராத் சென்றது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியயை 25-09-2010 மற்றும் 26-09-2010 தேதிகளில் சந்தித்துப் பேசியது[4]. ராஜராஜன் சிலையை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார்[5]. குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் அப்போது இவ் விஷயத்தில் ஆர்வம் காட்டினார்கள். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா?


ராஜராஜன் சிலைதான்: டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், தான் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள் குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள் பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் – லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தெள்ளத்தெளிவாக குறிப் பிட்டிருக்கிறார் முனைவர் நாக ஸ்வாமி. ஆனால் பிற்பாடு, காலிக்கோ மியூசியத்தில் உள்ள சோழர் காலத்து செப்புச் சிலைகள் குறித்து அந்த மியூசியத்திற்கு ‘கேட்லாக்’ எழுதிக் கொடுத்த நாகஸ்வாமி, முன்பு ராஜராஜன் என்று தான் தெரிவித்த அதே சிலையை, ‘கிங்க் ஆஃப் கிங்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் பேசிய காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்று நாகஸ்வாமி கூறினால், இப்போதே சிலையை உங்களிடம் ஒப்படைக்கத் தயார்’ என்று கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழக குழுவினர் அதீத ஆர்வத்துடன் நாகஸ்வாமியின் முகத்தைப் பார்த்தார்கள். பிறகு என்ன நடந்தது?



நாகசாமியின் சங்கடமான நிலை: ராஜராஜன் சிலை தஞ்சை பெரிய கோயிலில் இருந்ததுதான் என நாகஸ்வாமி நிச்சயம் உறுதிப் படுத்துவார் என்று தமிழகக் குழுவினர் ஆவலோடு எதிர் பார்த்திருந்த நிலையில், ‘இது ராஜராஜன் சிலை இல்லை’என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார் நாகஸ்வாமி[6]. அமைச்சர் தங்கம் தென்னரசு நாகஸ்வாமியிடம் தனியாகப் பேசிப் பார்த்தபோதும், ‘அது ராஜ ராஜன் சிலை’ என்று உறுதிப் படுத்த மறுத்துவிட்டார்[7]. அதற்கு மேல் எதுவும் பேசமுடி யாமல் போனதால், வெறும் கையுடன் வீடு திரும்பியது தமிழகக் குழு. ‘இந்த முரண்பாடு ஏற்பட்டது ஏன்?’ என நாகஸ்வாமியிடம் கேட்ட தற்கு, ‘‘டெல்லி மியூசியத்துக்கு நான் நூல் எழுதியபோது, சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என ஒரு ஊகத்தின் அடிப்படையில்தான் எழுதிக்கொடுத்தேன். ஆனால், சிலையை நேரில் பார்த்த பிறகு மாற்றுக் கருத்து வந்துவிட்டது[8]. மியூசியத்தில் இருப்பது சோழர் காலத்துச் செப்புச் சிலைதான். ஆனால், அது ராஜராஜன் சிலை என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை. அந்தக் காலத்தில் சண்டிகேஸ்வரர் சிலைகளைக் கூட இதே தோற்றத்தில் செய்திருக்கிறார்கள்[9]. அப்படி இருக் கும்போது, அது ராஜராஜன் சிலை என்பதை எப்படி உறுதிப் படுத்த முடியும்? அந்தச் சிலை தஞ்சையில் இருந்தது என்பதற் கான அடையாளமோ, அது அங்கிருந்து காணாமல்போனது குறித்து புகார் செய்யப்பட்டதற் கான ஆதாரமோ இல் லாதபோது, எந்த அடிப் படையில் அது ராஜராஜன் சிலைதான் என நாம் உரிமை கொண்டாட முடியும்?’’ என்றார்.

© வேதபிரகாஷ்

04-06-2018



[1] தி.இந்துவில் இதைப் பற்றி எழுதியவர். முன்பு ஆங்கில இந்துவில் வந்ததைத் தொகுத்து தமிழில் எழுதியது.

[2] Times of India, TN team meets Modi to get back Rajaraja statue, Ajitha Karthikeyan | TNN | Sep 7, 2010, 23:24 IST.

A day after calling on Modi and apprising him of the significance and sensitivities attached to the Chola statue, the team visited the Calico Museum of Textiles on Tuesday and handed over a letter written by chief minister M Karunanidhi, requesting the museum authorities to “gift” the statue to the state.

[3] https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/TN-team-meets-Modi-to-get-back-Rajaraja-statu/articleshow/6515415.cms

[4] DeshGujarat, Tamil Nadu minister meets Modi, seeks Rajaraja, Lokamadevi statues, September, 06, 2010.

[5] http://deshgujarat.com/2010/09/06/tamilnadu-minister-meets-modiseeks-rajarajalokamadevi-statues/

[6] தி.இந்து, சிலை சிலையாம் காரணமாம் – 23: செப்பேடுகளின் நிலை!, குள.சண்முகசுந்தரம், Published : 06 Aug 2016 10:06 IST; Updated : 14 Jun 2017 17:11 IST.

[7]http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article8952097.ece

[8] தி.இந்து, சிலை சிலையாம் காரணமாம் – 22: தஞ்சை ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்!, குள.சண்முகசுந்தரம், Published : 05 Aug 2016 10:13 IST; Updated : 14 Jun 2017 17:08 IST.

[9] http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-22-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8946944.ece?widget-art=four-rel

Advertisements





← ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், திருடியது, கடத்தியது யார், போலிகளைத் தயாரித்தது யார்?
“ராஜராஜ சோழன் – லோகமாதேவி பதுமைகள் மீட்பு”: திருட்டு, கடத்தல், துறை ஊழியர்கள்-அதிகாரிகளின் குற்றங்கள் மறைப்பு முதலியவற்றை வெளிப்படுத்துகின்றன – தடுக்க செய்ய வேண்டியது என்ன? →

“ராஜராஜ சோழன் பதுமை மீட்பு” நாடகம், திராவிட அரசியல்வாதிகளும்,மோடியும்: மோடிக்கு திமுக-வகையறாக்கள் கருப்புக் கொடி காட்டினர் ஆனால், மோடி பதுமைகளை தமிழகத்திற்கு அளித்தார்!
Posted on ஜூன் 4, 2018by vedaprakash


“ராஜராஜ சோழன் பதுமை மீட்பு” நாடகம், திராவிடஅரசியல்வாதிகளும்,மோடியும்: மோடிக்கு திமுக-வகையறாக்கள் கருப்புக் கொடி காட்டினர் ஆனால், மோடி பதுமைகளை தமிழகத்திற்கு அளித்தார்!



செப்பேடுகளையும் ஐரோப்பியர் எடுத்துச் சென்றது: இந்தச் செப்பேடுகளில் வெறும் அரசாணைகள் மட்டுமின்றி வேறு சில வரலாற்றுப் பதிவுகளும் உள்ளன. சோழர்கள் அண்டை நாடுகளுடனும் சுமூக உறவை வைத்திருந்து தங்களது வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தினார்கள் என்பதற்குச் சான்று இந்த செப்பேடுகள். ராஜராஜன் காலத்தில் தான் தமிழ் மொழியானது அழகுபெற்று எளிய நடைக்கு வந்தது. இதற்கான ஆதாரங்களும் இந்தச் செப்பேடுகளில் உள்ளன. இதேபோல்தான் வேள்விக் குடி செப்பேடும் 770-ல் பராந்தகன் நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனால் வெளியிடப்பட்டது இந்தச் செப்பேடு. களப்பிரர்களிடம் இருந்து தமிழகத்தை பாண்டியர்கள் எப்படி மீட்டெடுத்தார்கள் என்பதை தெளிவாக விவரிக்கிறது இந்தச் செப்பேடு. இது மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பாண்டிய மன்னர்களின் பரம்பரை வரலாறே கூட நமக்குத் தெரியாமல் போயிருக்கலாம். பத்து ஏடுகளைக் கொண்ட இந்தச் செப்பேடானது தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது. செப்பேடுகள் மாத்திரமல்ல; நாகப்பட்டினம் புத்த விகாரையில் இருந்த புத்தர் சிலை ஜப்பான் வரைக்கும் போனதும் இப்படித் தான்.



மெழுகு வார்ப்பு முறையையில் தயாரிக்கப் பட்ட பதுமைகள்: செப்புப் பதுமைகள் செய்வதில் சோழர்காலத்தில் உலகத்திலேயே மிகச் சிறந்த வார்ப்பு முறை கடைபிடித்து வரப்பட்டது. இடைக்காலத்தில், பெரும்பாலான உலோக பொருட்கள் இந்தியாவில், சோழர்கள் மூலம் தயாரிக்கப் பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. நுண்ணிய வேலைப்பாடுகள் வரவேண்டும் என்பதற்காக மெழுகு வார்ப்பு முறையை [Lost wax technique] உபயோகித்தனர். “மழையே மழையே மண்புறம் பூசி…மெழுகு ஊற்றினார் போல்’ (பா. 604) ஏன்று நாச்சியார் திருமொழியில் வருகிறது. வார்ப்பு உருவ வெண்கலச் சிலைகள் செய்யப்படும்போது, அவ்வுருவங்களின் புறத்தே மண்பூச்சும், உள்ளே மெழுகுப் பூச்சும் பூசப்படும். மெழுகிற்கும் மண்பூச்சிற்கும் இடையே உருக்கப்பட்ட வெண்கலம் (திரவ வடிவில்) ஊற்றப்படும். பின் ஓர் ஊசித் துவாரத்தின் மூலம், உள்ளேயிருக்கும் மெழுகை வெளியேற்றுவர். இதனால் இக்கலை தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்டது தெரிகிறது. ஆகவே, சோழர்கால பதுமைகள் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தினால், அவற்றின் உலோகக் கலவை, அவற்றின் சதவீதம், முதலியவை தெஇந்து விட்டும். அதேபோல, போலிகள் எனும்போது, அதன் கலவை முதலிய விவரங்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆகவே, போலி பதுமைகளை எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.. ஆனால், உண்மையினை மறைக்க விரும்பினால், ஒன்றும் செய்ய முடியாது.



பிராமணர் அல்லாதோர் தான் அதிக அளவில் தென்கிழக்காசியதொடர்புகளில் ஈடுபட்டிருந்தனர்: சோழர் சரித்திரவரைவியலில் பாரபட்சம், திரிபுவாதம், மறைப்பு சித்தாந்தம்ம் முதலியன பலவிதங்களில் வெளிப்படுகிண்ரன. உண்மையில், சோழர் காலத்தில் தான் பிராமணர் அல்லாத மக்கள் கோடிக்கணக்கில் பணிகளில் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். பொருள் உற்பத்தி, சேவை போன்றவற்றில், சோழர் காலத்தில் 950-1250 காலகட்டத்தில், பெருளவில், கடல் கடந்த வியாபாரங்களில் லாபங்கள் பெறப்பட்டன. அவற்றில், வணிகர், வியாபாரிகள், முதலியோர் பெரும்பங்கு வகித்தனர். ஏற்றுமதி-இறக்குமதிகளில் லாபம் வந்தது. இதனால், பொருளாதாரம் சீராக இருந்தது. அனைவருக்கும் வேலை இருந்தது. இதனால், கோவில்கள் பெருகின, கோவில் சம்பந்தப் பட்ட தொழில்களும் பெருகின. இதில் எல்லாம், பார்ப்பனர் பங்கு வகித்தனர் என்பது திரிபுவாதமே. பிராமணர் கடல் கடக்கக் கூடாது என்றபோது, கடல்கடந்து சென்றவர் மற்றவர் என்றாகிறது. தென்கிழக்காசிய கல்வெட்டுகள் வணிகக் குழுமங்கள், வணிகர்களின் பெயகளைத் தான் அதிகம் பதிவு செய்துள்ளன.



திராவிட அரசியல்வாதிகளும்,மோடியும்: இந்திய அருங்காட்சியகங்களில் பொதுவாக சரித்திரகால பொருட்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், தாமிரப் பட்டயங்கள், கதவுகள், ஜன்னல்கள், என்று பல காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும்[1]. இந்தியாவில் மாநிலங்களில் உள்ள அருங்காட்சியகங்களிலும் அவ்வாறே இருக்கும். இதனால், தொடர்ந்து, எந்த மாநிலமும், இன்னொரு மாநிலத்திடம், “அங்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா பொருட்களையும் கொடுத்து விடு,” என்று கேட்க முடியாது. இவ்விசயத்தில், குறிப்பிட்ட பதுமைகள் போலியானவை என்று தெரிந்தாலும், தமிழக முதலமைச்சர்கள், அதிகாரிகள், தொல்பொருட் ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் ஏதோ ஒரு உந்துதலால் செயற்கையாக செயல்பட்டு வந்துள்ளனர் என்றே தெரிகிறது. இப்பொழுது, போராடி கடத்தப் பட்ட பதுமைகளைப் பெற்று விட்டோம், என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். உண்மையில், இவ்விசயத்தை உன்னிப்பாக ஆராய்ந்தால், பலரின் மோசடிகள் தான் வெளிப்படுகின்றன. சித்தாந்த ரீதிரில் ராஜராஜ சோழன் பார்ப்பனர்களின் அடிவருடி, பிராமணர்களை ஆதரித்தான், கோவில்களைக் கொள்ளையடித்து பெருங்கோவில் கட்டினான் என்றெல்லாம் பொய் சொல்லி அலைகின்றனர். அதில் திக-திமுக-கம்யூனிஸ்ட் இந்து விரோத வகையறாக்கள் அடங்கும். இருப்பினும் கருணாநிதி போன்றோர், இவ்விசயத்தில் இரட்டை வேடங்கள் போட்டிருக்கின்றனர்.



“ராஜராஜ ழோழன் பதுமை மீட்பு” நாடகம்: 2010ல் செம்மொழி மாநாட்டை வைத்து, அரசியல் ரீதியில் தன்னை “தமிழர் காவலன்” போன்று காட்டிக் கொள்ள செய்த முயற்சிகளில் ஒன்று தான் “ராஜராஜ ழோழன் பதுமை மீட்பு” நாடகம். அக்கோவிலில் நுழைய, பக்கசுவரில் துளைப் போட்டு, அதம் வழியாக உள்ளே நுழைந்தவர் என்பது கவனிக்கத் தக்கது. 1000 ஆண்டு புராதன கோவிலின் சுவரை அவ்வாறு இடித்ததே சட்டவிரோதம் ஆகும். மேலும், அக்கோவிலில் நுழைந்தால் பதவி போய் விடும், உயிர் போய் விடும், தீது நடக்கும் என்ற நம்பிக்கை இந்த திராவிட அரசியல்வாதிகளில் அதிகமாகவே உள்ளது. 30-09-1984ல் விழாவில் கலந்து கொண்ட இந்திரா காந்தி 31-10-1984ல் கொலை செய்யப் பட்டார். எம்.ஜி.ஆருக்கு ஸ்ட்ரோக் வந்து 1987ல் காலமானார் என்றெல்லாம் இவர்களை பயமுருத்திக் கொண்டிருக்கின்றது. ராஜராஜன் கொலை செய்யப் பட்டான் அல்லது தற்கொலை செய்து கொண்டான் போன்ற நம்பிக்கைகளும் உள்ளன. அதனால், அக்கோவிலே இறப்பினால் தாக்கப்பட்டுள்ளது, அமங்கலமானது என்ற எண்ணம் உள்ளது.



மோடிக்கு திமுக-வகையறாக்கள் கருப்புக் கொடி காட்டினர் ஆனால், மோடி பதுமைகளை தமிழகத்திற்கு அளித்தார்: ஆக, இவ்விசயத்தில் முதலமைச்சர் மற்றும் பிரதமராக இருந்த-இருக்கும் மோடி, சாதுர்யத்துடன் செயல்பட்டு, பதுமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளார். காவிரி நீர் விசயத்தில், நெருக்கமான ஒரு காங்கிரஸ் முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதே முதலமைச்சர், உடனே தமிழகத்தில் சாமி கும்பிட வந்தபோதும், எந்த போராளிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. “காவிரி நீரைக் கொடுக்காத குமாரசாமியே திரும்பிப் போ” என்று ஆர்பாட்டம் செய்யவில்லை. ஆனால், ராணுவ கண்காட்சியைத் திறக்க வந்த மோடியை எதிர்த்து, அத்தனை கேவலமாக திமுக முதல் தேசவிரோத கட்சிகள் வரை, விளம்பரத்திற்காக கலாட்டா செய்ததை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அந்த கருணாநிதிக்கே பொம்மைக்கு கருப்புச்சட்டை போட்டு போட்டோ போட்டுக் காட்டி தமது வக்கிரத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். இருப்பினும் மோடி கண்டுகொள்ளாமல், தனது கடமையை செய்து சென்று விட்டார். அன்று கருணாநிதி கெஞ்சியது போல, இன்றும் தமிழகம் கெஞ்சித்தான் போலி பதுமைகளை வாங்கி வந்துள்ளது. இப்பொழுது, “பத்ம விபூஷன்” பெற்ற நாகசாமி வாயைத் திறக்கவில்லை. பதுமைகளை வரவேற்று,கோவிலில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் திராவிடர்கள். ஆக கொத்தம், போலி சிலைகளை உண்மை சிலைகள் என்று நம்ப வைத்து விட்டார்கள்.



© வேதபிரகாஷ்

04-06-2018




[1] எந்த மியூசியம் / அருங்காட்சியகத்திற்கு சென்றாலும் அவற்றைப் பார்க்கலாம். அந்நிய நாட்டு அருங்காட்சியகங்களில் அதிகமாகவே இருக்கின்றன. அவைதான் கடத்தப் பட்டு, அங்கு எடுத்துச் செல்லப் பட்டவை.