திங்கள், 21 மே, 2018

சமஸ்கிருதம் தமிழ்மொழி க்கு மூத்தது என்றவருக்கு விருது ஹிந்தியா

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 31
பெறுநர்: எனக்கு
இந்திய அரசால் “பத்ம பூசண்” விருதளிக்கப்பட்டுள்ள  தொல்லியலாரும் பார்ப்பனருமான இரா நாகசாமி, தன்  The Mirror of Tamil and Sanskrit”  என்னும் நூலில் முன்வைத்துள்ள முடிவுரைகள்

1. தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகிறது.
2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.
3.  சிலப்பதிகாரம் வரலாற்றுக் காபியமன்று; அது முழுவதும் புனைந்து கட்டப்பட்ட ஒரு புனை கதை இலக்கியம். அது முழுவதும் நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.
4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடிவமைக்கப்பட்டன.
5. தமிழர் பாவும் பரத முனிவரின் ‘யமகம்’ என்ற மடக்கணியைக் கொண்டே வளர்ந்துள்ளன.
6. தமிழர்கள் வேதக் கடவுளர்களையே வணங்குகின்றனர்.
7. தமிழர்க்கெனத் தனி வாழ்வுநெறி இல்லை. வடமொழி, வேதநெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனர்.
8. தமிழரின் கலை , இசை, நடனம், இலக்கியம், எல்லாம் கடன் பெற்றவையே
9. காலந்தோறும் தமிழ் சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிலிருந்தே கடன் பெற்று வளர்ந்துள்ளது. அதிலிலுள்ள ஐந்நிலம் என்பது உண்மையான நிலப்பாகுபாடன்று. அது  நாடகத்தின் சுவையை மிகுவிக்கப் போடும் பின்னணித்திரை போன்றது..
தமிழ் அகம் , புறம் பற்றிய பாடல்கள் அனைத்துமே நாட்டியமாடப் பின்னணியாகப் பாட எழுதப்பட்ட பாடல்களைப் போன்றனவே ஆகும். எதுவும் உண்மையான வாழ்வு நெறியினின்று கிளைத்தது அன்று.
10. பொதுவாக நாம் இன்று சிறப்புடன் போற்றும் தமிழ்சார்ந்த அனைத்துமே கற்பனைகளே. இவற்றை உணமை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு.
நன்றி: மூதறிஞர் தமிழண்ணல் எழுதி, திரு இராமசாமி நினைவுப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராயம் வெளியிட்ட,  தொல்லியல் துறைஞர் இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும் என்னும் நூலுக்கு முனைவர் மு.பொன்னவைக்கோ எழுதிய அணிந்துரை.
இப்போது புரிகிறதா? நாகசாமிக்கு அளிக்கப்பட்ட பத்ம  பூசண் விருது தமிழுக்கும் தமிழினத்துக்கும் எதிராக விதைக்கப்பட்ட பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களுக்காக என்பது புரிகிறதா? பிஜேபீ தமிழுக்கு எதிரான அமைப்பே என்பதைத் தமிழ்நாடு உணருமா? அந்தக் கட்சியில் தமிழ்க்குருதி ஓடுவோர் எவராவது இருப்பின் (??!!) விளக்கம் அளியுங்களேன்.
தமிழரின் உணர்வுகளுடன் பிஜேபீ மீண்டும் விளையாடியுள்ளது. தமிழுலகம் என்ன செய்யப்போகிறது?

search நாகசாமியின் நாசவேலை வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக