aathi1956 <aathi1956@gmail.com> ஏப். 17, செவ்., பிற்பகல் 7:17 ![]() ![]() பெறுநர்: நான் ![]() Posted Date : 18:31 (17/04/2018) Last updated : 18:35 (17/04/2018) "ஆதாரங்களை அழித்து வா..!" களமிறங்கிய மூன்று படை... நிர்மலா தேவி சர்ச்சையின் மொத்த பின்னணி! BALAKRISHNAN R ``ஆதாரங்களை அழித்து வா..." என்கிற அசைன்மென்ட்டுடன் மூன்று படைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதுரையில் கலந்துகொண்ட விழாவில் தேவாங்கர் கல்லூரியின் கணிதத் துறையின் உதவி பேராசிரியை நிர்மலா தேவி சர்வசாதாரணமாக நடமாடியிருக்கிறார். கவர்னர் அருகில் போய் போட்டோ எடுப்பது, குரூப் போட்டோவில் போஸ் கொடுப்பது...என்று கவர்னருக்கு அறிமுகமானவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் நடந்திருக்கிறார். குறிப்பாக, அவரது ஆடியோ பேச்சில், "....கவர்னர், தாத்தா இல்லை..." என்கிற டயலாக் வருகிறது. இதன் உள் அர்த்தம் என்ன? என்பது பற்றி சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுபற்றி விரிவான பதில் அளிக்க கவர்னர் இன்று மீடியாக்களைச் சந்திக்கவிருக்கிறார். அருப்புக்கோட்டை கல்லூரியின் கணிதத்துறை மாணவிகளை கேன்வாஸ் செய்யும் வகையில், பலமுறை முயன்றிருக்கிறார் நிர்மலா. இவரின் டார்ச்சர் தாங்கமுடியாமல், மாணவிகள் வேறு யாரிடமோ முறையிட...அப்படித்தான் ஆடியோ பதிவு திட்டம் அரங்கேறியிருக்கிறது. இது தெரியாமல், நிர்மலா உளறிக்கொட்ட...தற்போது கைதாகிவிட்டார். 12 விகடன் இதழ்களிலிருந்து இலவசமாக நீங்கள் நேசித்து வாசிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ! வாசிக்க > ஆதாரங்களை அழிக்க முதல் படை.? முதல்வர் எடப்பாடியின் போலீஸ் துறை. அருப்புக்கோட்டை லோக்கல் போலீஸார் நிர்மலாவை ஏப்ரல் 16ம் தேதி மாலை முதல் 17ம் தேதி மாலை வரை துருவித் துருவி விசாரித்தனர். உதவி பேராசிரியர் உள்ளிட்ட சிலரை அடுத்தகட்ட விசாரணைக்காக அழைக்கத் தயாரானார்கள. அடுத்தகட்ட ஆதாரம் சேகரிப்பு நடவடிக்கையில் இறங்கப்போக...திடீரென வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றிவிட்டார் டி.ஜி.பியான ராஜேந்திரன். பொதுவாக ஒரு பிரச்னையை நீர்த்துப்போக வைக்க நினைத்தால், அதை சி.பி.சி.ஐ.டி. போலீஸிடம் ஒப்படைப்பார்கள். அதுதான் நிர்மலா விவகாரத்திலும் நடந்திருக்கிறது. உள்ளூர் போலீஸ் விசாரணைப் பற்றி கேட்டபோது, ``எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், நடந்ததைத் தெளிவாகப் பேசினார் நிர்மலா. `அந்த ஆடியோ வெளியானதன் பின்னணியில் உள்ளவர்களை விடமாட்டேன்' என்றார். பல்கலைக்கழகத்தில் செல்வாக்குள்ள சிலரைப்பற்றி சொல்லியிருக்கிறார். இவர் சொல்வதில் எது உண்மை? எது பொய்? என்று அறிய மேலும் சிலரை அழைத்து விசாரிக்கவேண்டியுள்ளது. அதற்காக உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டோம். அதற்குள் சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு விசாரணையை மாற்றிவிட்டார்கள்", என்றார்கள். இரண்டாவது படை? காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்திருக்கிறார். இவர்கள் அருப்புக்கோட்டையில் முகாமிட்டிருக்கிறார்கள். நிர்மலாவின் ஆடியோ பேச்சில், துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக முக்கிய பிரமுகர்களிடம் செல்வாக்கு உள்ளதாகக் கூறுகிறார். இப்படியிருக்கும்போது, குற்றத்தில் தொடர்பு இருக்கிறவர்கள் என்கிற சந்தேக பேனரில் வருகிற பல்கலைக்கழக பிரமுகர்கள் ஒருபுறமிருக்க...அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஐவரை விசாரணைக் குழுவாக அமைத்திருக்கிறார்கள். மூன்றாவது படை? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். கிண்டி ராஜ்பவனில் பணிபுரியும் உயர் அதிகாரியின் சிபாரிசில்தான் சந்தானம் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லுகிறார்கள். கவர்னர் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடுவதால், நிர்மலா தேவி போலீஸிடம் என்ன பேசினார்? என்ன ஆதாரங்களை கொடுத்தார்? என்பதை அறிந்துகொள்வதில் பல்கலைக்கழக குழுவினரும், உயர்மட்ட விசாரணை அதிகாரி சந்தானமும் தீவிரம் காட்டப்போகிறார் பல்கலைக்கழக கீழ் மட்டத்தில் பணிபுரியும் யாரையோ பலிகொடுத்து மேல்மட்ட பிரமுகர்களைக் காப்பாற்றும் முயற்சி அரங்கேறி வருவதாகவே மதுரையிலுள்ள கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதேநேரம், `சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளும், `கவர்னரை மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்' என்று இன்னொரு தரப்பினரும் குரல்கொடுத்து வருகிறார்கள். மதுரையில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ``கவர்னர் செய்தது தவறு. போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதை குழப்பிவிடும் நோக்கில் இவராக ஒரு அதிகாரியை நியமிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. பல்கலைக்கழகம் தரப்பில் நியமிக்கப்பட்டிருப்பவர்கள், எப்படி உண்மையை வெளியிடுவார்கள்? எல்லாமே கண்துடைப்பு விஷயமாகத்தான் தெரிகிறது" என்கிறார். ஆடியோ எப்படி லீக் ஆனது? தமிழக அரசு - மத்திய அரசு இடையே அடிக்கடி நடந்து வரும் மிரட்டல் பாலிடிக்ஸ் காட்சிகளை ஆடியோவுக்கு முன்பு - ஆடியோவுக்குப் பின்பு.... என்று வரிசைப்படுத்தலாம். ஆடியோவுக்கு முன்பு...நடந்த காட்சிகள்.. `தமிழகத்தில் நடப்பது எடப்பாடி அரசு அல்ல! மோடியின் எடுபிடி அரசு' என்று டி.டி.வி. தினகரன் அடிக்கடி மேடையில் கமென்ட் அடித்து வருகிறார். தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தபோது, மோடியின் அட்வைஸ் படி, தமிழக அரசு அந்தக் கூட்டத்துக்குப் போகாமல் புறக்கணித்தது. காவிரி பிரச்னையை கர்நாடகா தேர்தல் முடியும் வரை ஒரு லெவலுக்கு மேல் போகாமல் தமிழகத்தில் பார்த்துக்கொள்ளும்படி டெல்லி மேலிடத்திடமிருந்து வந்த சிக்னலை அடுத்து கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது தமிழக அரசு. மத்திய அரசின் திட்டங்களான நியூட்டிரினோ, ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம்.. போன்றவற்றை அசுர வேகத்தில் மத்திய அரசு நிறைவேற்ற மறைமுக ஆதரவை தமிழக அரசு வழங்கி வந்தது. இருந்தாலும், தமிழக அரசுக்குத் தரவேண்டிய மத்திய நிதியைச் சரிவர ஒதுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து பலவித கோபங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசை அதிரவைக்கும் ஒரு தகவலை தமிழக உளவுத்துறை சொன்னது. எப்படியும் எடப்பாடி அரசைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அடுத்த சில மாதங்களில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பதுதான் அந்தத் தகவல். இதைக்கேட்ட எடப்பாடி கடுப்பானார். தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு முழம்போனால் என்ன?.. முழுக்கப் போனால் என்ன? என்று கேட்டிருக்கிறார் சீனியர் அமைச்சர்களிடம்! தமிழக முதல்வராக ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசின் கைப்பிடிக்குள் இருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு, கைப்பிடியை விட்டு விலகினார் கவர்னர். மத்திய அரசின் ரிமோட் கன்ட்ரோலாக வெளிப்படையாகச் செயல்பட ஆரம்பித்தார். தமிழக அரசுக்குப் பல விஷயங்களில் டார்ச்சர் கொடுத்தார். இடையில், வித்தியாசாகர் ராவ் திடீனெ மாற்றப்பட்டு புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித். இவர் மத்திய அரசின் டார்ச்சர் ஏஜென்ட்டாக சாட்டையைச் சுழற்றினார். தமிழகத்தின் ஊர் ஊராக விசிட் போய் மாவட்ட லெவலில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதை முதல்வர் எடப்பாடி விரும்பவில்லை என்றாலும், மத்திய அரசின் பிடியில் சிக்கியுள்ள எடப்பாடி.. ரெய்டு அஸ்திரங்களை நினைத்துப் பார்த்து மிரண்டு போய் `ஏன் கவர்னர் விசிட் போகலாமே?' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி சமாளித்தார். இடையில், தமிழகத்தின் முன்னணி மீடியா அதிபர்களை அழைத்து ராஜ்பவனில் டீ & பார்ட்டி கொடுத்தார் கவர்னர். அப்போது அவர் பேசிய பேச்சிலிருந்து எடப்பாடி ஒன்றைப் புரிந்துகொண்டார். விரைவில் கவர்னர் ஆட்சி வரப்போகிறது. அதற்கான லாபியைச் செய்து வருகிறார் என்பதுதான் அது! இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க வருகிறவர்களிடம் எடப்பாடியும் அவரது சக அமைச்சர்களும் கமிஷன் கேட்டு அலைய விடுவதாகப் புகார் வந்ததை மனதில் வைத்துக்கொண்டிருந்த கவர்னர், தொழில் அதிபர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, `ஏதாவது சங்கடம் என்றால், இனி தொழிலதிபர்கள் என்னை நாடலாம். நான் உங்களுக்கு உதவுகிறேன்' என்கிற உத்தரவாதத்தைப் பகிரங்கமாக அறிவித்தார். இது எடப்பாடியை தூக்கிவாரிப்போட்டது. இப்படி நாளுக்கு நாள் `ஷாக்'குகளை கவர்னர் கொடுத்துவந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான், டெல்லி மீடியாக்களில் தென் மாநில கவர்னர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளதாகவும், இதுபற்றி மத்திய உள்துறை விசாரிப்பதாகவும் செய்தி வெளியானது. இவரா..அவரா? என்கிற விவாதங்கள் நடந்தன. திடீரென அந்தப் பேச்சு அமுங்கிப்போனது. இடையில் என்ன நடந்தது என்பது சஸ்பென்ஸாக இருந்தது. இந்த நிலையில்தான், அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர் நிர்மலாவின் ஆடியோ பேச்சு வெளியாகியுள்ளது. ஆடியோவுக்குப் பின்பு...நடக்கும் காட்சிகள்... `இங்கே, அடிச்சா..அங்கே, வலிக்கும்' என்கிற பாணியில் இரண்டு முக்கிய முடிவுகளை எடப்பாடி கையில் எடுத்தார் என்கிறார்கள் அ.தி.மு.க முக்கியத் தலைவர்கள். ஒன்று, இப்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியைக் கலைத்தால்... ``காவிரிப் பிரச்னையில் குரல்கொடுத்ததால், கலைத்தனர்" என்கிற அவச்சொல்லுக்கு மோடி அரசு ஆளாகட்டும். இரண்டு... பாலியல் புகாரில் கவர்னர் சிக்கியுள்ளார். இந்த விஷயம் பெரிதாகும். கிண்டி ராஜ்பவனில் முடங்கிக்கிடக்க வேண்டும். இதை எதிர்பார்த்து, கவர்னரை மிரட்டும் விதமாக, சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. விசாரணையையும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. காவிரிப் பிரச்னையில் கிராம லெவலில் விவசாய சங்கத்தினர், லெட்டர்பேடு கட்சிகள், அரசியல் கட்சிகள்... போர்வையில் வெளி இயக்கங்களில் பயிற்சி பெற்ற சிலர் ஊடுருவியுள்ளனர். இவர்கள் போராட்டங்கள் எனும் தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றி எரிய விடுவார்கள். அவர்களின் பெயர் லிஸ்ட் உள்ளது. `முன்னெச்சரிக்கையாக கைது செய்யுங்கள்' என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான பிரஷர் தரப்பட்டது. ஆனால், எடப்பாடி அரசு, `அதெல்லாம் வதந்தி' என்று சொல்லி புறந்தள்ளியது. எடப்பாடி அரசின் `புரட்சித் தலைவி அம்மா' என்கிற அதிகாரபூர்வ நாளேட்டில் மத்திய அரசைக் கடுமையாக தாக்கி `சித்ரகுப்தன்' கவிதை எழுதினார். இதை பார்த்து ஓ.கே. செய்தவர் எடப்பாடி என்கிறார்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள். தமிழகத்தில் காலியாக இருந்த சில பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை கவர்னர் நியமித்தார். குறிப்பாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை கவர்னர் நியமித்தபோது, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டித்தார். `காவிரி பிரச்னை பற்றி எரியும் போது இந்த நியமனம் தொடர்பாக எங்களுடன் கவர்னர் பேசவில்லை. அவராகத்தான் நியமித்தார்' என்று குட்டை போட்டு உடைத்தார். இதே கோணத்தில் இன்னொரு அமைச்சர் பாண்டியராஜனும் பேசினார். அதேபோல், இதுவரை மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துணிச்சலாக எதிர்த்து பேசினார்..." `ஸ்கீம்' என்கிற வார்த்தைக்கு அர்த்தம் மத்திய அரசுக்குத் தெரியவில்லை என்றால், போய் டிக்ஸனரியைப் பார்க்க வேண்டியதுதானே?" என்றார். இப்படியாக...தமிழக அரசியல் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது. மோடி என்ன செய்வார்? எடப்பாடி அடுத்து என்ன செய்வார்? என்பதுதான் அடுத்தகட்ட கேள்வி |
வியாழன், 1 நவம்பர், 2018
நிர்மலாதேவி ஆளுநர் எடப்பாடி மோதல் பின்னணி விகடன்
பாகிஸ்தான் வென்றதும் கைதட்டிய தமிழர்கள் 1999 கிரிக்கெட்
|
ஏப். 16, திங்., பிற்பகல் 12:25
| ![]() ![]() | ||
| ||||
Yuvaraj Amirthapandian
# தமிழன் என்றோர் இனமுண்டு அவனுக்கென்று தனியே குணமுண்டு:
# சென்னை சேப்பாக்கத்தில் # ஐபிஎல்
# கிரிக்கெட் நடைபெற இருந்ததை பெரும்பான்மை # தமிழர்கள் எதிர்த்ததும், தமிழ்த் தேசியக் காட்சிகள் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களில் ஈடுபட்ட போது கிரிக்கெட் ஆர்வலர்கள் முதற்கொண்டு அனைவரும் தமிழர்களின் இக்குணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வந்தனர்.
இந்தளவிற்கு தமிழர்கள் கொந்தளித்துப் போய் உள்ளதற்கு உண்மையில் உயிர் நாடித்துடிப்பை உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயரெடுத்த விருந்தோம்பல் பண்பில் உலகின் முன்னோடியானவர்கள் இதே தமிழர்கள் தாம். இன்று அப்பண்பு தேவையா என்று அதன் ஆணி வேர் ஆடடங் காணுமளவு இங்குள்ள சமூக-அரசியல் நிலைப்பாடுகள் வந்துவிட்டன.
எங்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள
்ளது; உலகின் அனைத்து கேடுகெட்ட அரசியல் நிலையையும் மத்தியில் ஆளும் பாசக-வும் ஆட் சியை தக்கவைக்க கர்நாடகத்தையாளும் காங்கிரசு அரசும் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு தமிழக உரிமையை அடைத்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் இப்படியொரு சூதாட்டப் போட்டி, அதனை ரசிக்க ஒரு கும்பல் என்று நாட்டு நடப்பு சென்று கொண்டுள்ளது. வீதிக்கு இறங்கி போராடினால் சாத்தியமே என்று காட்டியது சல்லிக்கட்டு போராட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதே # சேப்பாக்கம் மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு # இந்தியா - # பாகிஸ்தான் போட்டியில் ஒரு விக்கெட் மீதமுள்ள நிலையில் 13 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா பாக்கிச்தானிடம் தோல்வியுற்றது. குதூகலமும் கொண்டாடடமுமாக பாக்கிச்தான் வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்தபோது உலகமே ஆச்சரியப்படும் வகையிலான அச்சம்பவம் நடைபெற்றது. ஆம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டிருந்த தமிழக ரசிகர்கள் அனைவரும் எழுந்து தங்களின் கரகோசங்களை எழுப்பி இந்தியாவின் முதல் எதிரியாகக் கருதப்படும் பாக்கிச்தான் வீரர்களை வாழ்த்த ஆரம்பித்துவிட்டனர். அவர்களாலேயே இதனை நம்ப இயலவில்லை என்பது ஒரு புறம், இந்தியாவின் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பெங்காலிய ரசிகர்கள் இந்தியா தோல்வியுறப் போகின்றது என்று தெரிந்த பின் காலி நெகிழி புட்டிகளை வீசியது பெரும் கேடாக இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்தது. சென்னை சம்பவத்திற்குப் பின் பாக்கிச்தான் வீரர்களுக்கு சென்னை மிகப் பிடித்தமான நகரமாகவும் தமிழர்கள் மீது தனிப் பற்றும் காட்ட ஆரம்பித்தனர்.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழர்களின் கரகோச அலைகளையும் வீரர்களின் திறமையை அவர் எவரேனுமாயிருப்பினும் பாராட்டும் தலைச்சிறந்த பண்பினையும் கீழ்க்கண்ட விழியை உரலியில் 01:36 நேரத்திலிருந்து பாருங்கள். இந்த விழியத்தினைப் பதிவேற்றம் செய்துள்ளது ஒரு பாக்கிச்தான் ரசிகர். அவர் மற்றும் கருத்தூட்டங்களில் கருத்திட்ட பல்வேறு ரசிகர்களின் ஆச்சரியங்களையும் பாருங்கள்.
Chennai Crowd standing Ovation on Pakistani win 1999 !!
https://www.youtube.com/watch? v=J3j7h0nx
o28
myjkyz87a
Published on Mar 8, 2016
What a great gesture by the ever green positive crowd of Chennai . Magnificent Moment in Indo-Pakistan sporting history. As a Pakistani, i can just say THANK YOU Chennai !!
brilliant gesture by crowd..marvelous.. Chennai..I am from Pakistan... and I must say I have never seen such a great respect for a rival team...superrrbb...
Gokul S
8 months ago
Asif Bhai,Chennai fans always appreciate good cricket.You must watch Independence cup finals where Syed Anwar who scored 195 received ovation when he broke world record runs surpassing Viv Richards 189 then.Infact our crowd were cheering for him to break the record.I was in stadium then too.Also Chennai city is known for medical tourism where we have had many Pakistanis visiting the city hospitals for treatment and we host them with love.Akrams late wife unfortunately lost her life after she had to undergo treatment here on the way to Singapore.
gulam mohamed
6 months ago
Asif Butt. This is tamil people,chennai,nice people
Abeed Ahmed
2 months ago
Thanks brother I am from Chennai Tamil nadu India
Shivaram Krishnan
1 month ago
We play sport ..,credits for the victory, whoever it would be... appreciation for work whoever it may be..We see no religion here in Chennai.I am damn sure that Tamilnadu is isolated from India in Religious views.
Nikhil Kelkar
2 weeks ago
The reception in Pakistan in 2004 was pretty good too. But yes this behaviour was unheard of.
Cyrus Muhammad Xerxes
2 years ago
Chennaiites are certainly more civilized and cultivated than Kolkatans who threw childish tantrums when Shoaib Akhtar cleaned up Dravid and Tendulkar in consecutive deliveries.
Arkabrata Datta
1 year ago
Cyrus Muhammad Xerxes They're just more emotional. Happens mate, part of sports as well.
Aman
5 months ago
Exactly. I know the feeling fans go through. I know throwing of bottles is wrong but it is easier saying it in a room than facing the sheer disappointment and frustration live in a stadium of your home team in front of your eyes.
Aby John Mathew
9 months ago
if this happened now, the entire crowd would have tagged as anti nationals by some people....this is real sportsmanship....proud of being a south indian...a very relevant video in today's context

https://www.youtube.com/watch?

மட்டைப்பந்து சேப்பாக்கம் பெருமை
மலர் பூக்கும் காலம் பொறுத்து நாட்காட்டி வேங்கை மலர் தமிழர் புத்தாண்டு
|
ஏப். 13, வெள்., பிற்பகல் 4:04
| ![]() ![]() | ||
| ||||
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்,
4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் —
சீனி. மாணிக்கவாசகம் மற்றும் 16 பேர் உடன்.
தேசிய இனங்களும் புத்தாண்டு பூக்களும்!!!
============================== ==========
தெலுங்கர்கள் வேப்பம்பூ பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
மலையாளிகள் கணி கொன்றைப்பூ பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
சிங்களவர் முள்முருக்கு பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
அசாமியர் ஆர்க்கிட் மலர் பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
தமிழர்களின் புத்தாண்டு மலர் தெரியுமா??? எப்படி தெரியும்? அதான் எல்லாம் ஆரியருடையது என்று எல்லாவற்றையும் திராவிடன் அழித்துவிட்டானே!!!
தமிழரின் புத்தாண்டு மலர் வேங்கை மலர்!!!
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை - மலைபடுகடாம்.
முதல் நாளில் பூத்த பொன்னை போன்ற வேங்கை மலர் என்று பத்துப்பாட்டு நூல் இயம்புகிறது.
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை நல் நாளே நாடி மலர்தலால் - பழமொழி நானூறு.
அனைத்து நாட்களும் வேங்கை மரம் இருந்தாலும், புத்தாண்டு காலத்தில் மட்டும் தான் கணி வேங்கை பூக்கும். அதனால் தான், இதற்கு ‘கணி’ வேங்கை என்று பெயர் வந்தது!!!!
மீட்டெடுப்போம் நமது மரபை!!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
26 நிமிடங்கள் · பொது
4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் —
சீனி. மாணிக்கவாசகம் மற்றும் 16 பேர் உடன்.
தேசிய இனங்களும் புத்தாண்டு பூக்களும்!!!
==============================
தெலுங்கர்கள் வேப்பம்பூ பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
மலையாளிகள் கணி கொன்றைப்பூ பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
சிங்களவர் முள்முருக்கு பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
அசாமியர் ஆர்க்கிட் மலர் பூப்பதை வைத்து புத்தாண்டு கொண்டாடுவர்.
தமிழர்களின் புத்தாண்டு மலர் தெரியுமா??? எப்படி தெரியும்? அதான் எல்லாம் ஆரியருடையது என்று எல்லாவற்றையும் திராவிடன் அழித்துவிட்டானே!!!
தமிழரின் புத்தாண்டு மலர் வேங்கை மலர்!!!
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை - மலைபடுகடாம்.
முதல் நாளில் பூத்த பொன்னை போன்ற வேங்கை மலர் என்று பத்துப்பாட்டு நூல் இயம்புகிறது.
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை நல் நாளே நாடி மலர்தலால் - பழமொழி நானூறு.
அனைத்து நாட்களும் வேங்கை மரம் இருந்தாலும், புத்தாண்டு காலத்தில் மட்டும் தான் கணி வேங்கை பூக்கும். அதனால் தான், இதற்கு ‘கணி’ வேங்கை என்று பெயர் வந்தது!!!!
மீட்டெடுப்போம் நமது மரபை!!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
26 நிமிடங்கள் · பொது
காலக்கணக்கீடு
gobackmodi உலக அளவில் இடம்பிடித்தது
|
ஏப். 12, வியா., பிற்பகல் 8:45
| ![]() ![]() | ||
| ||||
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
தமிழகம்
இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi
Updated: Thu, Apr 12, 2018, 13:03 [IST]
உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ
சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது.
சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் ராணுவம் தொடர்பான பல முக்கிய கையெழுத்துகள் இடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிரெண்ட்
இந்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi) டேக் காலையில் தேசிய அளவில் மட்டுமே டிரெண்ட் ஆனது. காவிரிக்கு தமிழக மக்கள் மட்டுமே போராடுவதால் உலக அளவில் இது இடம் பிடிக்கவில்லை. ஆனால் தமிழக மக்கள் தொடர்ந்து டிவிட் செய்து வந்ததால் இந்திய அளவில் சில நிமிடத்தில் முதல் பிடித்தது.
உலக அளவில்
ஆனால் இந்த டேக்கில் கொஞ்ச நேரத்தில் மற்ற மாநில மக்களும் டிவிட் செய்ய தொடங்கினார்கள். தமிழக மக்கள் நேரமாக நேரமாக அதிகமாக டிவிட் செய்தார்கள். இதனால் உலக அளவில் 4ம் இடம்பிடித்தது. இப்படி திடீர் என்று மோடிக்கு எதிராக உலக அளவில் ஒரு டேக் வைரல் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
இப்போது எப்படி
இப்போது இந்த ஹேஷ்டேக் உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் இதை பற்றி டிவிட் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் இதை பற்றி டிவிட் செய்து கொண்டுள்ளனர்.
பெரிய அவமானம்
ஆனால் அடுத்த சில நிமிடத்தில் இந்த டிவிட் உலக டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இது பாஜக கட்சிக்கும், பிரதமருக்கு பெரிய அவமானமாக மாறியுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் இதுபோன்ற டேக்குகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பின் இப்படி தமிழ் மக்கள் போராட்டம் உலக கவனம் ஈர்த்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
English Summary
Go back Modi hashtag becomes viral on social media amidst Modi visit to Tamilnadu. He is visiting Tamilnadu for Defence expo.

ட்விட்டர் சமூகவலை பாஜக எதிர்ப்பு மோடி twitter ராணுவமயமாக்கல்
திருநெல்வேலி உற்பத்தி தொழில் வேலைவாய்ப்பு கள் பருத்தி உப்பு 1916
|
ஏப். 12, வியா., பிற்பகல் 12:20
| ![]() ![]() | ||
| ||||
Gabriel Raja
திருநெல்வேலி (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்) மாவட்ட வருவாய்:
திருநெல்வெலி மாவட்டத்தின் வருவாயில் 35% கருப்பட்டி, வெல்லம், பதநீர் ஆகியவையே இருந்தது.
கள் இறக்க வரி என்பதால் யாரும் கள் இறக்கவில்லை.
வருவாயில் அடுத்த இடத்தில் வருவது உப்பு (30%) ஆகும். தூத்துக்குடி ஊர் மட்டுமே பிரிட்டிஷ் பேரரசின் மொத்த உப்பும் விளைவித்து ஏற்றுமதி செய்து வந்தது.
உப்பை பூர்வீக மக்கள் உற்பத்தி செய்யும் தனியாக விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட முகமதியர்கள், ஈழவர்கள், கைகோளர் ஆகியோர் பருத்தி மூலம் பெரும் நெசவாளர்களாக இருந்தனர்.
கோவில்பட்டி தாலுகா மற்றும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் பருத்தி மிகுதியாக விளைந்தது. இவை முழுவதும் சிலோன் மற்றும் திருவிதாங்கூருக்கு ஆடையாக மாற்றி ஏற்றுமதி செய்தனர். கோவில்பட்டியில் நூற்பாலைகள் சில நாயுடுகளும் வைத்து இருந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உடன்குடி, திசையன்விளை ஆகிய ஊர்கள் கருப்பட்டிக்கும்.
கடையநல்லூர், பேட்டை ஆகிய இடங்கள் நெசவாளர்களுக்கும் வர்த்தக நகரமாக விளங்கியது.
ஆக திருநெல்வேலி மாவட்டத்தில் 70% மக்களுக்கு வேலை வாய்ப்பு இருந்தது.
.
சான்றுகள்:
Madras presidency gazetteers of the Tinnevelly district 1916.
12 ஏப்ரல் 2017

ஆவணம் புள்ளிவிபரம் வளங்கள்
கிரிக்கெட் எதிரான போராட்டம் சிவசேனா ஆறுமுறை
|
11 ஏப்., 2018, பிற்பகல் 1:03
| ![]() ![]() | ||
| ||||
கதிர் நிலவன்
ஒரு செருப்பை காட்டி விருந்தாளியை அவமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு....
1991 : மும்பை வாங்கடே மைதானத்தின் ஆடுகளத்தை சேதப்படுத்தி, பின் தொடர்ந்து கலவரங்கள் செய்து அந்த டெஸ்ட் போட்டி மட்டுமல்ல முழு தொடரையும் ரத்து செய்ய வைத்தது RSSஇன் ஒரு அமைப்பான சிவசேனா.
1998: மஹாராஷ்ட்ராவில் பாஜக-சிவசேனா கூட்டாட்சி. அப்பொழுது மும்பை மைதானத்தில் நடக்கவிருந்த டெஸ்டையும் தனது கலவரங்களால் ரத்து செய்யவைத்தது.
1999: டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இந்திய-பாக்கிஸ்தான் அனியின் டெஸ்ட்டை நடத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தது RSSஇன் அங்கமான சிவசேனா. மீறி நடத்தினால் மைதானத்தில் விஷப்பாம்புகளை விடுவோம் என்றது. அந்த மிரட்டலுக்கு படியாத அரசு பலத்த பாதுகாப்புடன் டெஸ்டை நடத்தியது. இதற்கு எதிர்வினையாக மும்பை BCCI அலுவலகத்தை சூரையாடிய சிவசேனா, 1983ல் வாங்கிய உலகக்கோப்பையை சேதப்படுத்தியது.
மேலும் 2003, 2005, 2006 சாம்பியன்ஸ் ட்ராஃபி இப்படி RSSஇன் அங்கமான சிவசேனா எதிர்க்காத போட்டிகளே இல்லை.
இந்த வரலாறு கொண்ட RSSஇன் சங்கி கும்பல் இங்கே IPL தடைகோருவதை எள்ளி நகையாடுகிறது.
மராட்டியன் செய்தால் உரிமை போர் !! தமிழர்கள் செய்தால் தேவை இல்லாத போராட்டம் !! இனி உங்களிடம் கெஞ்ச போவதில்லை எங்கள் உரிமைகளை நாங்களே மீட்டெடுப்போம்.
# கொற்கைவேந்தன் ( # தமிழர்களம் )

ஐபிஎல் IPL
ஆதிச்சநல்லூர் கடையர் நகரம் பழமை குறைப்பு
|
ஏப். 10, செவ்., பிற்பகல் 3:21
| ![]() ![]() | ||
| ||||
கூர்ங்கோட்டவர்
ஆதிச்சநல்லூர் கோட்டை:
ஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் 2005 ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்ப
ட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.
ஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.
கோட்டைச்சுவரின் பரப்பளவை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.
நான் அனுமானித்த வரையில் ஆதிச்சநல்லூர் என்பது கடையர் வாழ்ந்த நகரமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தான் நெய்தல் மருதம் இரண்டையும் கையாளத்தெரிந்தவராக இருந்தனர். இங்கு கிடைத்த பானையோடுகள் கருவாடு வைக்கும் பானையோடுகளாக இருந்திருக்க வேண்டும். தாழிகளுக்குள் நெல் கிடைத்துள்ளதால் வேளாண்மையும் அறிந்த மக்களாக இவர்கள் இருந்துள்ளனர். செப்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் உள்ளதால் இது கி.மு. 5000 தொட்டே செப்புக்காலம் நிறைந்த நகரமாக இருந்திருக்க வேண்டும். கோட்டைச்சுவர் பாசிமணி உருக்காலையையும் மக்கள் வாழிடத்தையும் பிரிப்பது போல் உள்ளதால் பெரிய பரப்பளவில் இருந்திருக்க வேண்டும். சிறிய நகரத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க தேவை இருந்திருக்காது. கோட்டையினுள் மக்கள் வாழிடம், கோட்டையை ஒட்டி பாசிமணி உருக்காலை, இடுகாடு இப்படி மூன்றாக பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்தால் கோட்டைநகரம் பெரிதாகவே இருந்திருக்க வேண்டும்.
ஆனால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு மண்ணடுக்குக்கு கீழ் ஆற்றுமணல் இருக்கும் கீழடியை பிடித்துக்கொண்டு அமர்நாத்து என்ற பௌத்த ஆதரவு ஆய்வாளரை புரட்சியாளர் போல் அடையாளப்படுத்தி வருகின்றனர் தமிழினத்துரோகிகள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னரே தமிழருக்கு எழுத்து வந்தது என்ற ஐராவதம் மகாதேவனின் அண்டப்புழுகு அடிபட்டு போனதால் அடுத்து பௌத்த சைன காலமே தமிழருக்கு நாகரிகம் வந்தது என்ற புதிய அண்டப்புழுகை உருவாக்க தான் அமர்நாத்துகள் பயன்படுத்தப்படு
கின்றனர். தமிழின வரலாற்று அழிப்பு வேலையில் முதலாளித்துவமும் அதன் ஃபேக்கு ஐடிகளான பொதுவுடமை, கிண்டியம், திராவிடம், தலித்தியம் போன்ரவையும் கூட்டுக்களவாணிக
ளாய் செயல்படுவதை ஆராய்ந்து பார்த்தால் உணரலாம். - தென்காசி சுப்பிரமணியன் ( Rajasubramanian Sundaram Muthiah )
36 நிமிடங்கள் ·

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)