வியாழன், 1 நவம்பர், 2018

gobackmodi உலக அளவில் இடம்பிடித்தது

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 12, வியா., பிற்பகல் 8:45
பெறுநர்: நான்
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
தமிழகம்
இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi
Updated: Thu, Apr 12, 2018, 13:03 [IST]
உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ
சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது.
சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் ராணுவம் தொடர்பான பல முக்கிய கையெழுத்துகள் இடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிரெண்ட்
இந்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi) டேக் காலையில் தேசிய அளவில் மட்டுமே டிரெண்ட் ஆனது. காவிரிக்கு தமிழக மக்கள் மட்டுமே போராடுவதால் உலக அளவில் இது இடம் பிடிக்கவில்லை. ஆனால் தமிழக மக்கள் தொடர்ந்து டிவிட் செய்து வந்ததால் இந்திய அளவில் சில நிமிடத்தில் முதல் பிடித்தது.
உலக அளவில்
ஆனால் இந்த டேக்கில் கொஞ்ச நேரத்தில் மற்ற மாநில மக்களும் டிவிட் செய்ய தொடங்கினார்கள். தமிழக மக்கள் நேரமாக நேரமாக அதிகமாக டிவிட் செய்தார்கள். இதனால் உலக அளவில் 4ம் இடம்பிடித்தது. இப்படி திடீர் என்று மோடிக்கு எதிராக உலக அளவில் ஒரு டேக் வைரல் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
இப்போது எப்படி
இப்போது இந்த ஹேஷ்டேக் உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் இதை பற்றி டிவிட் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் இதை பற்றி டிவிட் செய்து கொண்டுள்ளனர்.
பெரிய அவமானம்
ஆனால் அடுத்த சில நிமிடத்தில் இந்த டிவிட் உலக டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இது பாஜக கட்சிக்கும், பிரதமருக்கு பெரிய அவமானமாக மாறியுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் இதுபோன்ற டேக்குகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பின் இப்படி தமிழ் மக்கள் போராட்டம் உலக கவனம் ஈர்த்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
English Summary
Go back Modi hashtag becomes viral on social media amidst Modi visit to Tamilnadu. He is visiting Tamilnadu for Defence expo.

ட்விட்டர் சமூகவலை பாஜக எதிர்ப்பு மோடி twitter ராணுவமயமாக்கல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக