வியாழன், 1 நவம்பர், 2018

குடகு தேசியவாதி நஞ்சப்பா தமிழர் ஆதரவு வேண்டினார் நாம்தமிழர் சந்திப்பு

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 8, ஞாயி., பிற்பகல் 2:40
பெறுநர்: நான்
Bhagyalakshmii Dhananjeyan
குடகு தேசிய கவுன்சிலின் தலைவர் நஞ்சப்பா, ' காவிரி ஆறு உற்பத்தியாவது எங்கள் குடகு மலை தலைக்காவிரியில்.. அதை தமிழகத்துக்கு தர மாட்டோம் என்று சொல்ல கர்நாடகாவுக்கு என்ன உரிமை இருக்கிறது. கர்நாடகாவில் இருந்து குடகு மாநிலத்தைத் தனியாக பிரித்துத் தந்தால் தமிழகத்துக்கு நாங்கள் தண்ணீர் தருவோம். கர்நாடகா எங்களை புறக்கணிக்கிறது. எந்த ஒரு வசதியும் அரசு உதவியும் எங்களுக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்கள். எல்லாவற்றையும் கன்னடர்கள் இருக்கும் பகுதிகளுக்கே செய்து தருகிறார்கள். மேலும் எங்கள் உரிமைகளையும் மறுக்கிறது கர்நாடகா . எங்கள் மொழியை மறுக்கிறார்கள் கன்னடர்கள். கன்னடர்களை அதிக அளவில் இங்கு குடியேற்றி எங்களை சிறுபான்மையாக்குகிறார்கள். அதனால் நாங்கள் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்ததது போல தனி மாநிலமாக பிரிய போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தமிழர்கள் எங்களுக்கு இந்த விஷயத்தில் உதவி புரியவேண்டும். அப்படி பிரியும்போது தமிழகத்துக்கு தேவையான அளவில் நாங்கள் எங்கள் காவேரியின் தண்ணீர் தருவோம். எங்களின் உரிமையான காவிரியை பறித்து வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு மட்டும் தரமாட்டோம் என்று சொல்ல, கர்நாடகாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கர்நாடகாவுக்கு காவிரி நீர் உண்டா இல்லையா என்பதையே நாங்கள் தான் சொல்லவேண்டும். "
தன்னை நேரில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் ஐயா. வியனரசுவிடம் நஞ்சப்பா உறுதி

மண்மீட்பு காவிரி காவேரி தலைக்காவிரி தலைக்காவேரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக