வியாழன், 1 நவம்பர், 2018

பார்ப்பனர் வர்ணாசிரமம் தொடர்பில்லை கணியன் பாலன் தென்மொழி கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 18, புத., பிற்பகல் 4:38
பெறுநர்: நான்
Palani Deepan
ஆரியப் பற்று-எவனுக்கு?
தமிழர்களின் மெய்யியல் கி.மு.1000-க்கு முன்பே தோன்றிவிட்டது.
அதன் காரணமாக, கி.மு.750 வாக்கில் எண்ணியம் என்னும் சாங்கியத்தை தோற்றுவித்த தொல்கபிலர் போன்ற மாமேதை இங்கு தோன்ற முடிந்தது.
இதன் மரபு அடிப்படையில் தோன்றியதுதான் தமிழகத்தில் தோன்றிய ஆகமங்கள்.
ஆகமங்கள் வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை.
ஆகமங்களில் வைதீகமோ, வருணங்களோ, சாதிகளோ இல்லை.
இந்த வைதீகம் வேதம் சார்ந்த நடைமுறைகள் தமிழகத்தில் வடுக தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில்தான் இடைச்செருகலாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டன.
வடுக தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன்புவரை பழநி போன்ற முருகன் கோயில்களில் தமிழ்ப் பூசாரிகள் ஆகம நெறிமுறை அடிப்படையிலான முழுக்க தமிழ் வழிபாடுதான் இருந்து வந்துள்ளது.
வடுக தெலுங்கு நாயக்கர்கள் இந்தத் தமிழ்ப் பூசாரிகளை அகற்றிவிட்டு அவ்விடத்தில் தெலுங்கு பிராமணர்களைக் கொண்டு வந்து வைதீகம் சார்ந்த நெறிமுறைகளை புகுத்தியதோடு, தமிழுக்கு மாற்றாக சமற்கிருத மொழியையும் வலிய புகுத்தினர்.
தமிழர் வகுத்த ஆகமங்களில் வைதீகமோ, வருணமோ, சாதியோ இல்லை என்பதால் அனைவரும் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என்பதே ஆகம வழிபாட்டு நெறிமுறை. இந்த ஆகம நெறிமுறைப்படிதான் அன்று தமிழக கோயில்களில் வருண வேறுபாடு அற்று பூசாரிகள் இருந்து வந்தனர்.
சேயோன் எனப்படும் முருகன் தமிழ்க் கடவுள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் மாயோன் எனப்படும் திருமால் ஆரியத் தெய்வமான கிருட்டிணன் எனப்பலர் தவறாகக் கருதுகின்றனர்.
மால் என்பது தூய தமிழ்ச் சொல். அதன் பொருள் கருப்பு என்பதாகும்.
தமிழர்களின் தமிழ்த் தெய்வங்கள் கருப்பாகவும், தமிழ்ப் பேய்கள் வெண்மையாகவும் இருக்கும். (கவனிக்க)
ஆரிய பிராமணத் தெய்வங்கள் வெண்மையாகவும், அதன் பேய்கள் கருப்பாகவும் இருக்கும்.
ஆகவே தமிழ்ச் சமய வழிபாடுகள் இந்திய நாட்டிலேயே தொன்மையும், தனித்தன்மையும் கொண்டவை. இங்கு வேத வைதீகத்திற்கோ, பார்ப்பனர்களுககோ, வருண பேதத்திற்கோ துளியும் இடமில்லை.
இவற்றை இங்கு தலைகீழாக மாற்றி கோவில்களில் வடுக பிராமணர்களையும், சமற்கிருத மொழியையும் வல்லடியாகத் திணித்தவர்கள் வடுக தெலுங்கு நாயக்கர்களே ஆவார்கள்.
யாருக்கடா பார்ப்பனப் பற்று....?
பார்வை: ”இந்துக்களும், இலிங்காயத்துக்களும், தமிழர்களும்” கணியன் பாலன். தென்மொழி ஏப்ரல் 2018.

வர்ணம் சாதி நால்வர்ணம் மனுதர்மம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக