திங்கள், 30 ஜூலை, 2018

HELP கார்ப்பரேட் சாதகமான திட்டம் மண்ணழிப்பு

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
*மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி.*

நாடு முழுவதும் இமயமலை, கங்கை, காவிரி உள்ளிட்ட 10 இடங்களில், அடையாளம் செய்யப்பட்டுள்ள புதிய பெட்ரோலிய வள வட்டாரங்கள் குறித்த வரைபடம்.

தமிழகம், புதுச்சேரியின் கிழக்கு கடலோரமான மரக்காணம் முதல் குமரி வரை பெட்ரோலிய வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ள பகுதியும் (மஞ்சள் நிறம்), ‘ஹெல்ப்’ திட்டத்தின்படி காவிரி வடிநிலத்தில் நிலம் மற்றும் கடலில் ஏலம் விடப்பட உள்ள 3 புதிய பெட்ரோலிய வட்டாரங்களும் (பச்சை நிறம்) காட்டப்பட்டுள்ளன.

மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்தின் 2015-16 செயல்திட்ட அறிக்கையில் (பக்கம்-119), ஆந்திராவின் ராஜமுந்திரி, தமிழ்நாட்டின் காவிரி வடிநிலம் உள்ளிட்ட 3 இடங்களில் நீரியல் விரிசல் (ஹைட்ராலிக் ஃபிராக்சர்) சோதனை நடத்தப்பட்டது தொடர்பான வரைபடம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி வ.சேதுராமன்.

நாடு முழுவதும் இமயமலை, கங்கை, காவிரி உள்ளிட்ட 10 இடங்களில், அடையாளம் செய்யப்பட்டுள்ள புதிய பெட்ரோலிய வள வட்டாரங்கள் குறித்த வரைபடம்.

Published :  10 Mar 2018  10:19 IST

Updated :  10 Mar 2018  13:46 IST

‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், காவிரி வடிநிலம், கங்கை வடிநிலம், இமயமலை முன்நிலம் உட்பட நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில், 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டில் உலகளாவிய நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முதல் அனுமதி வரும் ஜூன் மாதம் வழங்கப்பட உள்ளது. இதற் கான ஏல நடைமுறை சந்தடியின்றி கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அண்மையில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்த இடத்திலும் மீத்தேன், ஷேல் காஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

அவர் தெரிவித்தபடி, இதுவரை எடுக்கப்படவில்லை என்பது உண்மை என்றாலும், ‘ஹெல்ப்’ (HELP- Hydrocarbon Exploration and Licensing Policy) எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், இனி ஹைட்ரோ கார்பன்களில் மேற்கூறிய எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான திறந்தவெளி அனுமதி அளிப்பதற்கான ஏல நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே காவிரி டெல்டாவில் ஆபத்தான நீரியல் விரிசல் (ஹைட்ராலிக் ஃபிராக்சர்) சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட விவரமும் அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்துள்ளன.

உலக அளவில் பெட்ரோலியம், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் நுகர்வில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக, 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் இந்தியா, இவற்றில் 80 முதல் 85 சதவீதம் வரை இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இதனால், நாட்டின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன் மரபு சார்ந்த கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி உற்பத்தியோடு, மிக ஆபத்தான நீரி யல் விரிசல் நடைமுறைகளை உள்ளடக்கிய நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் காஸ், ஷேல் ஆயில் ஆகியவற்றை எடுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்காக, முந்தைய ‘நெல்ப்’ (NELP- New Exploration Licensing Policy) கொள்கையின்படி, தனியார் நிறுவனங்களும் எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கண்டறிந்து எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அந்த அடிப்படையிலேயே ரிலையன்ஸ், எஸ் ஸார் போன்ற இந்திய பெரு நிறுவனங் கள் நிலத்திலும் கடலிலும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, 2022-க்குள் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் திட்டத்தோடு, எரிசக்தி துறையில் தனியார் அதிக அளவில் ஈடுபடும் வகையில், நாடு முழுவதும் 65 இடங்களில், ‘கண்டறியப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வயல்களை’ (Discovered small and marginal fields), கடந்த 2017 பிப்ரவரியில் ஏலம் விட்டது. அதில் ஒன்றுதான், நெடுவாசல். காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல எண்ணெய் வயல்கள் இதன்படியே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நெல்ப் (NELP) முறையை மாற்றி, ஹெல்ப் (HELP) என்ற ஒற்றை உரிமம் அனுமதியை மத்திய அரசு கொண்டுவந்தது. தற்போது, மேலும் தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டம் (Open Acreage Licensing Policy- OALP) என்ற புதிய கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, அர சால் கண்டறியப்பட்ட மிகப்பெரும் புதிய வட்டாரங்களை, வருவாய் பங் கீடு அடிப்படையில் தனியாரிடம் விற் கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017 ஜூலையில் தொடங்கியுள்ளது.

இதற்கேற்ப, எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகமே அடையாளம் செய்து, அதை அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் வழக்கத்தை மாற்றியுள்ளது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எரிபொருள் வளங்கள் குறித்த மிகத் துல்லியமான இருபரிமாண (2டி), முப்பரிமாண (3டி) வரைபடங் கள் கொண்ட தேசிய தகவல் தொகுப்பகத்தை (National Data Repository), நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தேவைப்படும் இடங்களை நிறுவனங்களே தேர்ந்தெடுக்கவும் அரசு அனுமதி அளித் துள்ளது.

இதற்கேற்ப, முன்னர் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் காஸ், ஹைட்ரேட்கள் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்களை எடுக்க தனித்தனி உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ‘ஹெச்இஎல்பி- ஓஏஎல்பி’ கொள்கைப்படி ஒரே உரிமம் பெற்றாலே போதும். எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்கலாம் என தற் போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச டெண்டர்

அதன்படி, நாடு முழுவதும் புதிய எண்ணெய் வளப் பகுதிகளை அடையாளமிட்டு, அங்கு ஆய்வு மற்றும் துரப்பண பணிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச டெண்டர், ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (DGH) மூலமாக கடந்த ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்பட்டது. 100 சதவீதம் அந் நிய முதலீட்டு நிறுவனங்கள் உட்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு, வருவாய் பங்கீடு அடிப்படையில் ஆய்வு மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்தி பணிகளைத் தொடங்க வரும் ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்படும்.

இதில், மிகவும் கவலை கொள்ளச் செய்வது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 வட்டாரங்களில் இமயமலை, கங்கை, காவிரி, கோதாவரி, தாமோதர், காம்பே, கட்ச் வடிநிலப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதே.

இங்கு ஏற்படும் எந்த சிறிய சூழலியல் மாறுபாடும், ஒட்டுமொத்த சமூக, பொருளாதார கட்டமைப்பிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆபத்தான நடைமுறைகளை பயன்படுத்தி வரும் பன்னாட்டு தனியார் பெரு நிறுவனங்களின் வருகையால் என்னவெல்லாம் நிகழுமோ என்ற அச்சம், விவசாயிகளையும் சமூக ஆர்வலர்களையும் கவ்வியுள்ளது.

அரசின் கொள்கை ஆபத்தானது

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகியும், மீத்தேன், ஷேல், ஹெல்ப் திட்டங்களின் பாதிப்புகள் பற்றி பேசி வருபவருமான மன்னார்குடி வ.சேதுராமன் கூறியதாவது:

நாட்டின் எரிபொருள் வளத்தைப் பயன்படுத்துவது தவறல்ல. ஆனால், எந்த இடங்களில் இருந்து இவற்றை எடுப்பது என்பது முக்கியம். காவிரி டெல்டாவை, மற்ற பகுதிகளுடன் ஒப்பிட முடியாது. முழுவதும் விவசாயத்தையும் மீன்பிடியையும் சார்ந்த பகுதி இது. இதன், அடிப்படையில் தான் ஜெயலலிதா தலைமையிலான அன்றைய தமிழக அரசு, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி, மீத்தேன் திட்டத்துக்கு நிரந்தரத் தடை விதித்தது. பிரச்சினைகள், எதிர்ப்புகள் எழும்போதெல்லாம், இங்கு மீத்தேன், ஷேல் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்று ஓஎன்ஜிசி நிறுவனம் சொல்லி வந்தது. ஆனால், கட லூர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஓஎன்ஜிசி கைவிட்ட எண்ணெய்க் கிணறுகளில் இருந்துதான், ஹெச்ஓஇஎல் என்ற தனியார் நிறுவனம் தற்போது எண்ணெய், எரிவாயு எடுக்கிறது.

இதேபோல, வரும் காலத்தில் ஓஎன் ஜிசி போன்ற அரசுத் துறை நிறுவனங் கள் தங்களது பணிகளை குறைத்துக்கொண்டு, நாட்டின் வளத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலை ஏற்படும். அதற்கேற்பவே, ‘ஹெல்ப்’ என்ற திறந்தவெளி அனுமதி மூலம் ஒரே உரிமம் கொண்டு, மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் காஸ், நிலக்கரி உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்களில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற் காக நீரியல் விரிசல் போன்ற எந்த நடைமுறையையும் பயன்படுத்தலாம் என்ற அரசின் கொள்கை ஆபத் தானது.

இதனால், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி டெல்டாவின் நில வளம், நீர் வளம் பாதிக்கப்படும். காவிரி நீர் வராதது, கடல் நீர் உட்புகு தல் போன்ற காரணங்களால் நிலத் தடி நீரும், நிலமும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளன. நீரியல் விரிசல் போன்ற ஆபத்தான நடைமுறைக ளால் அவை மேலும் பாழாகி, எதற்கும் பயனற்றதாகிவிடும். இதனால், தமிழகத்தின் உணவு உற்பத்தி, சமூக வாழ்நிலை பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீரியல் விரிசல் முறை என்பது..

பூமியில் மிக ஆழத்தில் தேங்கியிருக்கும் இயற்கை எரிவாயுவை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து முழுமையாக கொண்டுவர உருவாக்கப்பட்டதுதான் நீரியல் விரிசல் முறை.

இதன்படி 10 ஆயிரம் மீட்டருக்கும் அப்பால் வரை பூமிக்குள் ஆழமாக துளையிடப்படும். பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா திசைகளிலும் துளை போடப்படும். பின்பு பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண் துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே அடைபட்டு கிடந்த எரிவாயு நீரில் ஒன்றாகக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல்பரப்புக்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும். செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி எரிவாயு சேகரிப்பதுதான் நீரியல் விரிசல் முறை.

புதிய இடங்கள், வட்டாரங்கள்

1. ராஜஸ்தான் வடிநிலம் - 9

2. அசாம் மற்றும் அரக்கான் வடிநிலம் - 19

3. கிருஷ்ணா, கோதாவரி வடிநிலம் - 5

4. காம்பே வடிநிலம் - 11

5. மும்பை வடிநிலம் - 2

6. சவுராஷ்டிரா வடிநிலம் - 2

7. கட்ச் வடிநிலம் - 2

8. காவிரி வடிநிலம் - 3

9. கங்கை வடிநிலம் - 3

10. இமயமலை முன்நிலம் - 1

55 வட்டாரங்களில், மொத்தம் 59,282 சதுர கி.மீ. பரப்பளவில், முதல்கட்டமாக 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்க ஏலம் விடப்பட உள்ளது.

நடராஜன் ம.நடராசன் இனப்பற்று மொழிப்பற்று சசிகலா

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு

அறிக்கை: *மொழிப்போர் களத்தில் பங்காற்றிய பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு! - சீமான் இரங்கல்* | நாம் தமிழர் கட்சி https://goo.gl/bTDSsu

முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்கள் உடல்நலமில்லாது காலமானச் செய்திகேட்டு மனவேதனையும், பெருந்துயரமும் அடைந்தேன்.

ஐயா நடராசன் அவர்கள் அரசியல், இதழியல் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்களங்களில் பணியாற்றி தனி முத்திரைப் பதித்தவர். ‘புதிய பார்வை’, ‘தமிழரசி’ போன்றப் பத்திரிக்கைகளைத் திறம்பட நடத்தி இதழியல் உலகில் தனக்கெனப் பெருமைக்குரிய இடத்தை அடைந்தவர். மேலும், தமிழரசி அறக்கட்டளை என்றவொன்றினை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பலசெய்து, பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் ஐயா நடராசன் தஞ்சாவூரில் நடத்தும் ‘தைத்திருவிழா’ நிகழ்வு மிகச் சிறப்பான பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கிற பெருநிகழ்ச்சியாகும்.

தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான ஈழத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு நம் தொப்புள்கொடி உறவுகள் சிங்களப் பேரினவாதக் கரங்களால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார். முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போரின் வரலாற்று நாயகர்களாக திகழ்ந்த எம்மின மாவீரர்களை காலங்காலமாய் நினைவுகூறும்வகையில் ஈழப்போரின் அவலங்களை மறக்கவே கூடாத வரலாற்று ஆவணங்களாக பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தஞ்சை விளார் சாலையில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ அமைத்து தமிழின வரலாற்றில் பெருமைக்குரிய தடத்தை ஐயா நடராசன் பதித்தது எக்காலமும் நினைவுகூறத்தக்கப் பெருஞ்செயலாகும். எப்போதும் என் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டிருந்த ஐயா நடராசன் அவர்களின் இழப்பினை எனது தனிப்பட்ட இழப்புகளில் ஒன்றாகவே கருதுகிறேன். ஐயா ம.நடராசன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரோடு பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ச்சமூகத்தின் பேரிழப்பான ஐயா முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவின் துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கேற்று, ஐயாவுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்தேசியம் சிந்தனையாளர் நா.திருமலை பார்ப்பனர் மபொசி சீடர் மறைந்தார் இன்பாக்ஸ் x

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்
நா. திருமலை அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழ்த் தேசியச் சிந்தனையாளர் ஐயா நா.திருமலை அவர்கள் சென்னையில் 26.3.2018 அன்று இரவு 10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 82.

மதுரையில் நடைபெறும் தமிழ்மொழி மீட்சிக்கான போராட்டங்களில் தீவிரமாக பங்கு பெற்றவர் ஐயா திருமலை.  உடல் நிலை தளர்ச்சி அடைந்த போதிலும் கூட, சோர்வுறாது தமிழ்வழிக் கல்வி, உயர் நீதி மன்றத்தில் தமிழ் ஆகியவற்றுக்காக நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கு பெற்று உரையாடுவது மட்டுமின்றி, போராட்டங்களிலும் உற்சாகமாக கலந்து கொள்வது அவரின் வழமையாகும்.

பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது இரத்த அழுத்தம் காரணமாக மயக்கமுடைந்து கீழே விழுந்து விடுவார். அவரைத் தோழர்கள் நீர் தெளித்து, விழிப்படைய வைத்து வீட்டில் கொண்டு போய் விட்டு வருவார்கள். தமது உடல் நலக் குறைவு குறித்து கிஞ்சித்தும் கவலைப் படாது அடுத்தடுத்த சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வார். ஓய்வு எடுக்க வேண்டியது தானே என்று கேட்டால், தமிழுக்கு ஏற்பட்ட  பிணியை யார்  போக்குவது ? என்று கேள்வி எழுப்புவார்.

இவர் தூத்துக்குடியில் பிறந்தவர் என்ற போதிலும்,  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைதான் இவர் அதிக காலம் சுவாசித்த மண்ணாகும். ஆயுட் காப்பீடு கழகத்தில் பணி புரிந்து வந்த போது ம.பொ.சி.யின் தமிழ்த் தேசிய சிந்தனை இவரை ஆட் கொண்டது .  இளம் வயதிலேயே ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ம.பொ.சி. நடத்திய செங்கோல் இதழில்  1962 முதல்  'பொன்னன்' என்ற புனைப் பெயரில் முதன் முதலாக கட்டுரைகள் பல எழுதி வந்தார். மொழி வழி மாநில வரலாறு, தமிழ் வழிக் கல்வி, பொதுவுடைமைக்  கண்ணோட்டத்தில் தமிழ்த்தேசியம் , திராவிட கருத்தியல் மறுப்பு ஆகியவை விளக்கும் கட்டுரைகள் பலவற்றை தினமணி, தினகரன், மதுரை மணி, தீக்கதிர், ஜன சக்தி, எழு கதிர், தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.

இவர் பிறப்பால் பிராமணர் என்ற போதிலும்,  நால்வர்ணக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் பிராமணர்களுக்கு கடும் எதிர்ப்பு காட்டக் கூடியவர். அதே வேளையில், நால்வர்ணக் கொள்கையை எதிர்க்கும் பிராமணர்களை அணி சேர்ப்பதில் தவறில்லை என்றும் வாதிடுபவர்.

பொதுவுடைமைச் சிந்தனைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்ட  இவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நூலகத்தில் பதினான்கு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அண்மையில் தம்மையும், தமது துணைவியாரையும் பராமரிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள தமது மகன் வீட்டிற்கு இடம் பெயர்ந்தார்.

அங்கு நிகழ்ந்த துணைவியாரின் மரணம் அவரை மிகவும் வாட்டி வதைத்தது.  இறுதியாக அவர் சென்னையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய "வெளியாரை வெளியேற்றுவோம்" மாநாட்டில் பங்கு கொண்டதோடு, தாம் எழுதிய " தமிழ் தமிழர் வளர்ச்சிக்கான படைப்புகள்" நூலை மாநாட்டில் பங்கு பெற்றவர்களுக்கு  இலவயமாக அளித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும்,  வீட்டிலிருந்த படியே தொலைபேசி வாயிலாக தமிழிய உணர்வாளர்களிடம் உரையாடுவதை வழக்கமாக்கி கொண்டார். அந்தப் பேறு பெற்றவர்களில் அடியேனும் நானும் ஒருவன். அவரின் இறுதி உரையாடல் யாரிடம் இருந்ததோ தெரியவில்லை. ஆனால், நேற்றிலிருந்து அவர் உரையாடுவதை  நிறுத்திக் கொண்டார்.

-கதிர்நிலவன்

பார்ப்பனத்தமிழர் இனப்பற்று 


பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் கல்வெட்டு தஞ்சாவூர் சிற்றரசன்

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
யாஊயாகே , 10 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
# சிற்றரசர்_கல்வெட்டுகள் -3
முத்தரையர்
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்
ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அந்நாளில் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட செந்தலை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் முத்தரையர், முற்காலச்சோழர் மற்றும் பாண்டியர் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. நாம் இங்கே முத்தரையர் கல்வெட்டுகளின் செய்திகளைக் காண்போம். கோவில் குறித்து மற்றொரு பகுதியில் விரிவாகக் காண்போம்.
கோவிலின் முன்மண்டபத்திலுள்ள தூண்களில் நான்கு தூண்கள் இக்கோவிலுக்குரியவை அல்ல. அவை கல்லணை - திருக்காட்டுப்பள்ளி இடையேயுள்ள நியமம் என்ற ஊரிலிருந்த காளாபிடாரிக் கோவிலின் தூண்களாகும். முத்தரைய மன்னன் சுவரன்மாறன் என்னும் பெரும்பிடுகு முத்தரையன் ஆயிரத்தளி எனப்படும் நியமத்திலே காளாபிடாரிக்கு கோயிலொன்று எடுப்பித்தான். இன்று கன்னிமார் கோவிலென்றும் பிடாரிக் கோவிலென்றும் ஊர் மக்களால் வழிபடப்படும் வயல்களுக்கிடையே உள்ள சிறிய மேடு தான் அந்நாளில் காளாபிடாரி கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்று இங்கிருந்த கோவிலின் தூண்களைத்தான் இன்று செந்தலை சிவன் கோவில் முன்மண்டபத்திலே காண்கிறோம். இத்தூண்களில் காணப்படும் கல்வெட்டுகளில் சுவரன்மாறன் இப்பிடாரிக்கு கோவில் எழுப்பிய செய்தியும், அவரது வெற்றிகளும், அவரின் தந்தை மற்றும் பாட்டன் குறித்த தகவல்களையும் நாமறியலாம். மேலும் இத்தூண்களில் பெரும்பிடுகு முத்தரையனின் விருதுப்பெயரான, ஸ்ரீமாறன், ஸ்ரீசத்ருகேஸரி, ஸ்ரீகள்வர்கள்வன், ஸ்ரீஅதிஸாஹசன் போன்ற பெயர்களும் செய்யுள் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அச்செய்யுள் பாடல்களை,
1.பாச்சிள்வேள் நம்பன்
2.கோட்டாற்று இளம்பெருமானார்
3.கிழார் கூற்றத்து பவதாயமங்கலத்து அமருண்ணிலை ஆயின குவாவங்காஞ்சன்
4.ஆசாரியர் அநிருத்தர்
என்கின்ற நான்கு புலவர்கள் பாடுகின்றனர்.
கோட்டாறாற்றிளம் பெருமானார் பாடிய
"நிற்கின்ற தண்பணைந்தோன்று தஞ்சைத்திறம் பாடிநின்றார்
விற்கின்ற வீரர்கள் ஊர்கின்ற இப்பிணக்குன்றுகள்மேல்
நெற்குன்ற யானை ---------------------"
என்ற பாடலானது மிக ஓங்கிவளர்ந்த மூங்கில் தோன்றும் தஞ்சையின் சிறப்பைப் பாடி நின்ற புலவர்கள் பகைவருடைய பிணங்களை அடுக்கியதால் ஏற்பட்ட குன்றின்மேல், வில்லில் வல்ல வீரர்கள் ஊர்ந்துசெல்லும் நெற்போரைப்போல் காணப்படும் யானைகளை பரிசு பெறுவர் என்று பொருள் தருகின்றது.
"பாச்சிள்வேள் நம்பன்" பாடிய
"வஞ்சிப்பூச்சூடிய வாளமருள் வாகைப்பூக்
குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன்-தஞ்சைக்கோன்
கோளாளி மொய்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்
தோளால் உலகமளிக்கும் தோள்"
இரண்டாவது பாடலானது வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூசூடிய கோமாறனும், தஞ்சைஅரசனும், சிங்கம் போன்று கொடும்பாளூர் பகைவரை கோபித்து கொன்றளித்தவருமாகிய சுவரன்மாறனின் தோள்களே இவ்வுலகை காக்கும் தோல்கள் என்று பொருள் தருகின்றது. இப்பாடலில் சுவரன் மாறனை "தஞ்சைகோன்" என்று குறிப்பிடுவது, விஜயாலயர் முத்தரையரிடமிருந்து தான் தஞ்சையை கைப்பற்றினார் என்கிற அறிஞர்களின் வாதத்திற்கு வலுசேர்க்கிறது.
அதேபுலவர்,
"சொற்புகு தொண்டை கனிபுகு தூமதி போன்முகத்தாள்
பொற்புக வெற்புப் பகுதிகண்டாய்ப்ப
ுக ழிபொருநாதார்
கற்புக விற்புகக் கண்டவன் கள்வர்கள்வன் தஞ்சை
நற்புக ழான்கரம் போற்கொடைக் காலுங் கருமுகிலே"
என்ற பாடலையும் பாடியிருக்கிறார். தலைவியிடத்தே மழைகாலத்தில் திரும்பிவருவேன் என்று கூறிச்சென்ற தலைவன் தனக்கு முன்பாக தலைவியிடத்தே செல்லும் கார்மேகத்தைப் பார்த்து, புகழி என்ற ஊரில் பகையரசனை தன் வில்லாற்றலாள் ஓடிஒளியச்செய்த கள்வர்கள்வன் எனும் பட்டமுடையவனும் தஞ்சையை நல்லபடியாக ஆளும் மன்னனாகிய சுவரன்மாறன் கைகளைப்போல் கைமாறு கருதாமல் கொடுக்கும் கார்மேகமே சந்திரன் போல் பொலிவுடைய என் காதலி உன்வரவு கண்டு கார்காலம் வந்ததும் தலைவன் வரவில்லையே என்று ஏங்கும்படி செய்வது உனக்கு ஏற்றதன்று என்றுரைப்பதாக புலவர் பாடியுள்ளார். இதில் தஞ்சைஅரசன் என சுவரன்மாறனை சுட்டிகாட்டுகிற
ார்.
நான்காவது தூணில் ஆசாரியர் அநிருத்தர் இவ்வாறு பாடுகிறார்,
"மண்டீது கண்டான்தஞ் சைசெம் புலநாட்டு வெண்கொடல்
விண்டபோது கொண்டாயர் மலையப் புதுமணல்மீது செந்தீத்
தண்டுகண் டாலன்ன கோவங்க ளூர்கின்ற தாழ்புறவே"
பகைவர்களுடைய நாடுகளை அழித்த சுவரன்மாறனின் செம்பூமியாகிய தஞ்சை நாட்டிலே ஆயர்கள் வெண்காந்தள் சூடியதையும், ஆற்றுப்புதுமணலில் செந்நெருப்புபோல இந்திர கோபப்பூச்சிகள் ஊர்ந்து செல்கின்ற தாழ்ந்த முல்லைநிலப்பகுதியையும் காணலாம் என்பதிதன் பொருள். இப்பாடலில் தஞ்சையை செம்புலநாடென்றும் அது முல்லைநிலப்பகுதியெனவும் குறிக்கிறார். பாச்சிள்வேள் நம்பன் தான் பாடிய பாடலொன்றில் சுவரன்மாறனை "வல்லக்கோன்" என்கிறார்.
இத்தூண்களில் காணப்படுகின்ற கல்வெட்டுகளில்
1.பெரும்பிடுகு முத்தரையனான சுவரன்மாறனின் புகழ்பாடும் சாசனமும்
2.பாண்டியன் மாறஞ்சடையனின் 10 ம் ஆண்டு (பொயு775) சாசனமும்
3.தெள்ளாறு எறிந்த நந்திபோத்தரையரின் 12ம் ஆண்டு (பொயு838) சாசனமும்
4.ராஜகேசரியின் 18ம்ஆண்டு (பொயு889) சாசனமும்
உள்ளன. இதில் மாறஞ்சடையனின் 775ம் ஆண்டை குறிப்பதால் அக்காலத்திற்கு முன்பே கோவில் எழுப்பியிருக்க வேண்டும். ஒரு கல்வெட்டில் சுவரன்மாறனின் தந்தை, பாட்டனின் பெயர்கள் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளன.
1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்
2.அவனுடைய மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்
3.அவனுடைய மகன் பெரும்பிடுகு முத்தரையனாகிய சுவரன் மாறன்
மேலதிக தகவல்கள் :
1.தென்னிந்திய கல்வெட்டு சாசனம் தொகுதி:5
2.குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சாவூர்
https://yaaooyaakay.blogspot.in/2018/
03/3_24.html?m=1
25 மார்ச், 02:46 PM · Facebook for Android ·
பொது
சேமி
Krishna Raja மற்றும் 30 பேர்

சிங்கம் சசி தேவர்
இவர் கள்ளர் இனமா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · ஞாயிறு, 04:47 PM க்கு்

Muniraj Vanathirayar
ஸ்ரீகள்வர் கள்வன் என்பது சுவரன்மாறனின் மற்றொரு புகழ்பெயர்! -இதற்கு கள்ளர் தலைவன் என்பதே பொருளாகும்.

2009 மும்பை தமிழர் போராட்டம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
இலங்கை: மும்பை தமிழர்கள் மாபெரும் மனித சங்கிலி
Published:March 6 2009, 14:42 [IST]
மும்பை: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வலியுறுத்தி மும்பையில் நடந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டம் விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.
தமிழர்கள் அதிகம் உள்ள மாதுங்கா கிங் சர்க்கிளில் ஆரம்பித்த இந்த மனித சங்கிலில் சயான், குர்லா, காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முலுண்டு, தானே வரை நீண்டது.
அதில் பங்கேற்றவர்கள் 'கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே', 'இந்திய அரசே இந்திய அரசே சிங்களவனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்காதே', 'இலங்கையின் அதிபர் ராஜபக்சே வா ராட்சச பக்சேவா' போன்ற கோஷங்களை எழுப்பினர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மூன்று மணி நேரம் இந்த மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Published On March 6, 2009

புலம்பெயர் தமிழர் புலத்தமிழர் இனப்பற்று இனப்படுகொலை 2009

ஸ்டெர்லைட் வரலாறு முறைகேடு மாசு போராட்டம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
Rajmohan Thangaraj
ஸ்டெர்லைட் ஆலைக்கு 30-10-1994 அன்று ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
1996ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க கருணாநிதி அனுமதி அளித்தார்.
வரலாறு முக்கியம்.
# SterliteProtest
# BANSterliteமூடு ஸ்டெர்லைட் ஆலையை மூடு....
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள்போரும்
ஒரு கழுகுப் பார்வை
அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.
பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.
இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோட
ு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்
துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது. இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.
21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்ப
ட்டது.
தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.
2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.
உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.
7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட
்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.
மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர இருக்கிறது.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போத
ு சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்
றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.
1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியா
ர்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்ற
ன இந்திய அரசியல் கட்சிகள்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.
எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
- ஜெ.பிரபாகர் ( jprabakar@gmail.com)
(நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, பூவுலகின் நண்பர்கள்)
10 மணி நேரம் · Facebook for Android ·

வடமொழி இலக்கணம் பாணினி வகுத்தார் இலக்கியம் சான்று பாடல் சமஸ்கிருதம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை 

யாப்பெருங்கல விருத்தி panini பணினி