வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஷோபா சக்தி தமிழச்சி யிடம் தவறாக நடந்த கதை ஈவேரா பக்தர்கள்

சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை!!
விவரங்கள்
எழுத்தாளர்: தமிழச்சி
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2011
ஈழம்
பெண்ணுரிமை
பாலியல் அத்துமீறல்
ஷோபா சக்தி
புலி எதிர்ப்பு
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல்
தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே
நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை
உபயோகித்து திட்டியிருந்தேன்.
ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய
செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு
மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.
சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய
விவாதம் கீற்று தளத்தில் ' ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன
வித்தியாசம்? ' என்ற தலைப்பில் பிரசுரமானது. கடந்த 3 வருடங்களாக ஒரு
பெண், பாலியல் தாக்குதல் குறித்து எழுதியபோது பாராமுகமாய் இருந்த இந்த
சோபா சக்தி, பிரச்சினை கீற்று மூலமாக அதிகமான பேரைச் சென்றடைந்தபோது
மிரண்டு போய் விளக்கம் கொடுக்கிறார். "தமிழச்சியின் விருப்பத்தின்
பேரிலேயே உடல் சார்ந்த உறவாய் இருந்தது. இதைச் சொல்லுவதால் தமிழச்சி
பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும்
அவதூறாளர்களே என்னை பேச வைத்தார்கள்" என்கிறார்.
இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? இதையும் தாண்டி இக்கட்டுரை
வெளியிடப்பட்ட உடன் சோபாவின் நண்பர்கள் ‘இது எனக்கு முன்பே தெரியும்’
என்று பின்னூட்டமிடுகிறார்கள். ஓர் அயோக்கியனுக்கு உதவியாய் குழுவாய்
இணைந்து ஒரு கட்டுக்கதையின் உருவாக்கத்திற்கு இவ்வளவு ஆர்வமாய் மின்னல்
வேகத்தில் விழும் கருத்துக்களுக்கு பின் எந்த அரசியலும் இல்லையா? அல்லது
இவர்கள் என் படுக்கை அறைக்குள் நுழைந்து பார்த்தவர்களா?
'இதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசியதில்லை' என்று சோபா சக்தி சொல்வது
உண்மையென்றால், அவரது நண்பர்கள் முன்னமே எங்களுக்குத் தெரியும் என்று
சொல்வது எப்படி? பெண்களை எப்போதும் படுக்கையறைப் பொருளாக பார்க்கும்
புத்தி இருப்பதால் மட்டுமே, சோபாவால் அவரது நண்பர்களிடம் இப்படி பேச
முடிந்திருக்கிறது.
இந்த மாதிரி அசிங்கம் பிடித்த வேலைகளை 3 வருடங்களுக்கு முன்பு சோபா
செய்தார் என்றுதான் உதை கொடுத்து அனுப்பினேன்.
சோபாவுடன் எனக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது?
இலக்கியம், பெரியாரியம், கம்யூனிசம் என்று பொது நலன் சார்ந்து இயங்கும்
நபராக ஆனந்த விகடன் இதழில் சோபா சக்தியின் பேட்டி வந்தது. 'பிரான்ஸில்
பெரியாரியம் பேசும் ஆளா' என்ற மகிழ்ச்சியில் அவரைத் தொடர்பு கொண்டேன்.
அவரது தங்கைதான் எடுத்தார். சோபா அப்போது வீட்டில் இல்லை. மாலையில்
சோபாவிடம் இருந்து போன் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பேசுவதற்கே
ஆளில்லாமல் இருந்த எனக்கு, பெரியார் குறித்தும், பெண்விடுதலை குறித்தும்
சோபா பேசியது உற்சாகமளித்தது. ஏற்கனவே பழகியவரிடம் பேசுவது போல் அவரது
பேச்சு பகடி கலந்து இருந்தது. அரைமணி நேரம் பேசியிருப்போம்.
ஒரு வாரம் கழித்து சோபாவே மறுபடியும் பேசினார். 'அன்றைக்கு அவ்வளவு நேரம்
பேசினீர்கள். அதோடு மறந்து விட்டுட்டீங்களா?' என்றார். என்னை சந்திக்க
வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஒரு பெரியாரிஸ்ட் மற்றும் ஈழப்
போராளியாக இருந்தவரைச் சந்திக்கும் ஆவல் எனக்கும் இருந்ததால் வீட்டிற்கு
வரச் சொன்னேன்.
சோபா சக்தி பிரியாவிற்கு அளித்த பதிலில், அவரது பொய்க்கு வலு சேர்க்க
உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதியிருக்கிறார். எனக்கு கல்யாணமாகி
குழந்தைகள் இருக்கின்றனர். சிறுவயது முதல் என்னை நன்கு அறிந்த ஒரு
குடும்ப நண்பர்தான் எனக்கு கணவராக வாய்த்திருக்கிறார். சோபா எனது ஊருக்கு
வந்தபோது, ரயில்வே ஸ்டேஷன் சென்று அழைத்து வந்ததும் என் கணவர்தான்.
இதையெல்லாம் சோபா ஏன் சொல்லவில்லை? வீட்டிற்கு அழைத்தவளை, படுக்கையறைக்கு
அழைத்ததுபோல் ஏன் பேச வேண்டும்? அப்போதுதானே அவர் சொல்லும் 'மூன்றாவது
சந்திப்பு உறவுக்கு' வலு சேர்க்க முடியும்!!
நான் பிரான்சில் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும் பொதுவெளியில் தமிழ்
மக்களுடன் எனக்குத் தொடர்பே இருக்கவில்லை. உறவினர்கள், நண்பர்களைத் தவிர
பொதுவாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நபர் சோபா சக்திதான்.
என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம்
இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார்.
'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல்
ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப்
புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை
விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று
தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது. அரை மணி நேரம்தான் அந்த
சந்திப்பு நீடித்தது. பின்னர் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.
பெரும்பாலும் பெரியார், பெண்விடுதலை, சாதியொழிப்பு பற்றியே பேச்சு
இருக்கும்.
இரண்டாவது முறை எனது ஊருக்கு வந்தபோது, ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்தோம்.
நான் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். 'ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்'
என்று கேட்டார் சோபா. அதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை.
'அவர்களையும் வெளியே கூட்டி வந்த மாதிரி இருக்குமல்லவா?' என்றேன்.
'எப்போதும் குடும்பத்தை சுமந்து கொண்டு இருக்காதீர்கள்' என்று பகடி
செய்தார்.
சோபா சொன்ன பொய்களில் ஒன்று எனது வலைப்பக்கத்தை அவர்தான் ஆரம்பித்துக்
கொடுத்தார் என்பது. உண்மை என்னவென்றால், நான் ஏற்கனவே வலைப்பக்கம்
வைத்திருந்தேன். பெரியாரது கட்டுரைகளை தட்டச்சு செய்து இணையத்தில்
ஏற்றும் வேலையைச் செய்துவந்தேன். தட்டச்சு செய்வது, வலையேற்றுவது தவிர
இணையம் தொடர்பான தொழில்நுட்பங்கள் எனக்குத் தெரியாது. இரண்டாவது
சந்திப்பின்போது சோபா, எனது வலைப்பக்கத்தின் வடிவமைப்பு நன்றாக இல்லை,
அதை மாற்றித் தருவதாக சொன்னார். நானும் சரியென்றேன். அதன் விபரீதமும்
அப்போது எனக்குப் புரியவில்லை. 'நான் தனியாளாக டைப் செய்து பெரியார்
கட்டுரைகளைப் போட்டு வருகிறேன், பெரிய அளவில் வாசிக்கப்படுவதில்லை' என்று
சொன்னபோது, சோபா சக்தி 'தமிழ்மணம் என்ற ஒரு திரட்டி இருக்கிறது. அதில்
உங்கள் வலைப்பக்கத்தை இணைக்கலாம்' என்று சொன்னார். அதுபோல் இணைத்தும்
கொடுத்தார்.
‘பெரியாரின் பார்வையில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் அப்போது ஒரு புத்தகம்
எழுதிக் கொண்டிருந்தேன். அதை தொலைபேசியில் சோபாவிடம் சொன்னபோது, அந்த
எழுத்துப்பிரதியைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார். ‘வேறொரு
வேலையாக அந்தப் பக்கம் வர வேண்டியிருக்கிறது. அப்படி வந்தால், அந்தப்
பிரதியைத் தர முடியுமா’ என்று கேட்டார். அப்படித்தான் மூன்றாவது
சந்திப்பு நடைபெற்றது. அவர் என் ஊருக்கு வந்தபோது, இரயில்வே ஸ்டேஷன்
அருகில் இருந்த பார்க்கிங் பகுதியில் எனது காரை நிறுத்தி,
பேசிக்கொண்டிருந்தோம். எழுத்துப் பிரதியைப் படித்து விட்டு, ‘பெரியாரைத்
திரிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் மறுத்து, விவாதித்தேன்.
ஆனால் இப்போது 'இந்த சந்திப்பில்தான் எங்களிடையே உடல்ரீதியான உறவு
ஏற்பட்டது' என்கிறார். தெரியாமல்தான் கேட்கிறேன், பகற்பொழுதில் தெருவில்
காமம் கொள்ள அவர் என்ன நாய் ஜென்மமா? இல்லை என்னைப் போன்ற பெண்கள்தான்
அப்படித் திரிகிறோமோ?
2007 காலகட்டங்களில் சோபா சக்தி அடிக்கடி வெளிநாடு போய்வந்து
கொண்டிருப்பார். கியூபா, மலேஷியா, கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி
நாடுகளுக்குப் போய் வந்ததை சொல்வார்.
‘அரசு உதவிப் பணத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு வெளிநாடுகளுக்கு எப்படிப்
போய்வர முடிகிறது?’ என்று கேட்டபோது, சிரித்துச் சமாளித்தார். ‘நண்பர்கள்
கொடுத்து உதவுவார்கள்’என்று வேறொரு முறை சொன்னார்.
ஒரு முறை கடும்போதையில், பேச்சுவாக்கில் தோழர் சுகுணா திவாகருக்கு ஒரு
லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொன்னார். 'நீங்களே இங்கு காசில்லாமல்
நண்பர்களிடம் வாங்குவதாகச் சொல்லும்போது, சுகுணாவுக்கு எப்படி ஒரு லட்சம்
கொடுக்க முடிகிறது? உங்களிடம் ஏது இவ்வளவு பணம்? எந்நேரமும் குடிப்பதற்கு
எப்படி பணம் கிடைக்கிறது' என்று கேட்டேன். வழக்கம்போல் பகடியாக,
'பணம்காய்ச்சி மரம் வைத்திருக்கிறேன்' என்று சொல்லி எனது கேள்வியைக்
கடந்துபோய்விட்டார்.
எங்களுக்கு இடையே பல்வேறு முரண்கள் இருந்ததாக சோபா சொல்கிறார். ஆனால் அது
என்னவென்று சொல்லதாதில்தான் அவரது கள்ளத்தனம் இருக்கிறது.
ஈழப்போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து என்னிடம்
பேசிவந்தார். 'புலிகளுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய
வேண்டும்' என்றார். நான் கடுமையாக மறுத்தேன். 'மக்கள் அங்கு
கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள்
மனிதாபிமானமற்றவை. சமரசமில்லாமல் போராடி வருவது புலிகள் தான்' என்று
சொன்னேன். ஈழப்போராட்டத்திற்கு எதிராக சோபா சொல்வது எல்லாம் மிகத்
தவறானவை என்று கொள்கை ரீதியாக தொடர்ந்து மறுத்து வந்தேன்.
புலி எதிர்ப்பு அரசியலை என்மீது திணிப்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.
என்னுடன் பேசிய பொழுதுகளில் பெரும்பாலான நேரத்தை அதற்குச் செலவிட்டார்.
ஆனால் தொடர்ந்து கடுமையான வாதங்களால் மறுப்பு தெரிவித்து வந்தேன். ஈழப்
பிரச்சினையில் என்னிடம் எதிர்க்கருத்தை உருவாக்க முடியாது என்று தெரிந்த
பின்பு அது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு, பாலியல் சுதந்திரம்
தொடர்பாக தனது கருத்தைத் திணிக்கத் தொடங்கினர். ஆண், பெண் மட்டுமல்லாது
மூன்றாம் பாலினத்தவரோடும் தான் உறவு வைத்திருப்பது குறித்து பேசினார்.
நான் அறிந்தவரை மேலை நாடுகளில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள்
எதிர்பாலினருடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதை ஒரு ஒழுக்கமாகவே
அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எதிரான செயலுக்கு பாலியல்
சுதந்திரத்தை காரணமாக சோபா சொன்னார்.
'ஒரே கணவருடன் எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது.
பெண்ணிற்கு பாலியல் சுதந்திரம் வேண்டும்' என்றார். 'ஆண் இரண்டு
பொண்டாட்டிகள் வைத்துக்கொண்டால், பெண்ணும் இரண்டு புருஷன்கள் வைத்துக்
கொள்ள வேண்டும்' என்று பெரியார் பேசியதை சோபா குறிப்பிட்டபோது, அதை
மறுத்து, பெரியார் அதற்கு முன்னும் பின்னும் சொன்னதைச் சொல்லி, ‘பெரியார்
எதிர்ப்பது கற்பைத் தான், பாலியல் ஒழுக்கத்தை அல்ல’ என்று பதில்
கூறினேன். பல பெண்களை மணந்த கடவுளர்களையும், மன்னர்களையும் பெரியார்
கடுமையாக சாடியிருப்பதை எடுத்துக்காட்டிப் பேசினேன்.
அதன்பின்பு பெரியாரை விட்டுவிட்டு, பின்நவீனத்துவம் பேசத் தொடங்கினார்.
கட்டற்ற பாலியல் சுதந்திரம், கூட்டுக் கலவி பற்றியெல்லாம் பேசினார்.
தமிழகத்துப் பெண்கள் சிலரை உதாரணம் காட்டினார். 'பெண்கள் சந்திப்பில்
கலந்து கொள்ளும் பெண்கள் முற்போக்கானவர்கள்; நாங்கள் எல்லாம்
கூட்டுக்கலவி செய்வோம்; அவர்கள் போல மற்ற பெண்கள் இருக்க வேண்டும்,
அப்போதுதான் ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட முடியும்' என்றார்.
ஒழுக்கம் பற்றிய எனது கருத்துக்களை மாற்ற முயற்சித்தார். நான் கடுமையாக
மறுத்தேன்.
'பிற்போக்கான தமிழ்ச் சமூகத்திலிருந்து மக்களை முன்னேற்ற விரும்புவர்கள்,
பொதுவாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஒழுக்கத்துடன் இருக்க
வேண்டும். அப்போதுதான் மக்கள் அவர்கள் பின்னே அணி திரளுவார்கள். சொந்த
வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்வது மக்களுக்குத் தெரியவந்தால்,
அவர்கள் நம்மை மட்டுமல்ல, நமது சித்தாந்தங்களையும் சேர்த்தே
நிராகரிப்பார்கள்' என்று பதில் கூறினேன். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஒரு
தொலைபேசி பேச்சில் நடந்ததல்ல. வெவ்வேறு நாட்களில் எந்தத் தொடர்ச்சியும்
இல்லாமல் பேசியவை. ஆனால் பேசியதன் சாராம்சம் இதுதான்.
இவ்வளவு முரண்பாடுகளுக்கு இடையிலும் சோபாவுடன் நட்பைத் தொடர்வதற்கான
காரணங்களும் இருந்தன. பெரியார் எழுத்துக்களை இணையத்தில் பரப்புவதை
ஊக்கப்படுத்தினார். இணையத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செயல்பாடுகளில்
இறங்கி, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியபோது சோபா என்னை
அதிகமாக உற்சாகப்படுத்தினார். பாரீஸில் பகுத்தறிவுப் பிரச்சாரம்
செய்வதற்கு துண்டறிக்கை அச்சிட உதவினார். இவை அனைத்திற்கும் மேலாக சோபா
ஒரு ஈழப்போராளி, பெரியாரியவாதி என்பதும், தலித் என்று சொல்லியதும்
அவருடனான நட்பைத் தொடரச் செய்தது.
எனது வலைப்பக்கம் தமிழ்மணம் வாயிலாக அதிகமான பேர் வாசிக்கும் தளமாக
மாறியது. வலைப்பதிவர்களிடையே தமிழச்சி பெயர் பரிச்சயமாகி இருந்தது.
ஒரு நாள் சுவிஸிலிருந்து சோபா போன் செய்தார். வழக்கம்போல் போதை.
'தமிழச்சி எனக்கு நெருங்கிய தோழி என்று சொன்னால் எனது நண்பர்கள் நம்ப
மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் பேச முடியுமா?' என்று
கேட்டார்.
ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. அதன்பின்பு இந்த மாதிரி போன் செய்வது
அடிக்கடி நடந்தது. எதிர்முனையில் பலரின் சிரிப்புச் சத்தம் கேட்கும்போது
இதில் ஏதோ உள்விளையாட்டு இருக்கிறது என்று தெரிந்து, போனைத் துண்டிக்கத்
தொடங்கினேன்.
பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைப் பாராட்டி கி.வீரமணி எழுதிய
மின்னஞ்சல் நான் படிப்பதற்கு முன்பாகவே வேறு யாரோலோ படிக்கப்பட்டிருப்பதை
அறிந்து, சோபாவுக்கு போன் செய்தேன். ஏனென்றால் எனது வலைப்பக்கத்தின்
பாஸ்வேர்டும், மின்னஞ்சலின் பாஸ்வேர்டும் ஒன்றாகத்தான் இருந்தது.
வலைப்பக்கத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்காக சோபா என்னிடம் பாஸ்வேர்ட்
வாங்கியிருந்தார். 'வீரமணியின் மெயிலைப் படித்தீர்களா' என்று கோபமாகக்
கேட்டபோது, 'ஏன் படிக்கக்கூடாதா? நான் உனக்கு நெருங்கிய நண்பனல்லவா!
நமக்குள் என்ன ரகசியம்?' என்று கேட்டார். கடுமையாகத் திட்டி போனை
வைத்தேன்.
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது,
கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே
ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். போதையில் இருந்த சோபா, அத்தனை
அடிகளையும் வாங்கிக் கொண்டு, ஐ லவ் யூ என்றார். மேலும் கோபமடைந்து உடனே
அங்கிருந்து கிளம்பி, சோபாவின் நடத்தையையும், அவரை அடித்ததையும் எனது
வலைப்பக்கத்தில் பதிவாகப் போட்டேன். வலைப்பதிவர்களிடையே பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
சில நாட்களில் திடீரென எனது வலைப்பதிவுகள் முழுக்க அழிந்துபோனது. இணையத்
தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வைத்துப் பார்த்தபோது, பெரிய ராணுவக்
கேந்திர இணையதளங்களையே முடக்கும் வைரஸ் ஒன்று எனது வலைதளத்தில்
செலுத்தப்பட்டிருப்பதாக சொன்னார்கள். எனது நேரத்தையெல்லாம் உருப்படியாக
செலவழித்து இணையத்தில் ஏற்றி வைத்திருந்த சுமார் 1600 பெரியார்
கட்டுரைகளும் அதோடு அழிந்துபோனது. எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத
அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது.
இரண்டாவது முறையாக சோபா என்னிடம் அடிவாங்கியதும் நடந்தது. ஒரு நாள் இரவு
8 மணிக்கு சோபா எனக்குப் போன் செய்து, ‘தமிழச்சிக்கும் எனக்கும்
நெருங்கிய நட்பு இருக்கிறது என்று சொன்னால், எனது நண்பர்கள் நம்ப
மறுக்கிறார்கள். அவர்களிடம் பேச முடியுமா?’ என்று கேட்டார். ‘முன்பின்
தெரியாதவர்களை எல்லாம் என்னுடன் பேச வைக்க முயற்சிக்க வேண்டாம்’ என்று
சொல்லிவிட்டு தொலைப்பேசியைத் துண்டித்தேன்.
அன்று இரவு 11.45 மணிக்கு மீண்டும் சோபாவிடம் இருந்து போன். நான்
இருக்கும் ஊரில் இருப்பதாகவும், ஒரு நண்பனைப் பார்ப்பதற்கு காரில்
அழைத்துப் போக முடியுமா என்றும் கேட்டார். நான் முடியாது என்று
சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன். நான் இருக்கும் ஊரில்
உள்ள ஹோட்டலில் இருப்பதாகவும், உடல்நலம் சரியில்லை என்றும் சொன்னார்.
மனம் பொறுக்காமல் பார்க்கச் சென்றேன். அந்த காலை நேரத்திலும் போதையில்
இடுப்பில் ஒரு துண்டுடன் இருந்தார். குகன் என்பவர் சோபாவைத் தொலைபேசியில்
அழைக்க, சோபா அவரிடம் 'நான் தமிழச்சியுடன் ஹோட்டலில் இருக்கிறேன்'
என்றார். அடுத்து வந்த 3, 4 அழைப்புகளிலும் இதேதான் சொன்னார். எனக்கு
ஆத்திரமாகி ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இடுப்பில்
இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு, என் கைபிடித்து இழுத்தார். நான்
கோபத்தில் அவரை பலமாகத் தாக்கினேன். அடித்தும், உதைத்தும் அவரைக் கீழே
விழச் செய்தேன். சோபா அழத் தொடங்கிவிட்டார். அன்றோடு துண்டாகிப் போனது
சோபாவுடனான எனது நட்பு. அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது.
என்னை புலியெதிர்ப்பு அரசியல் பேச வைக்கவும், பாலியல் இச்சைகளுக்குப்
பயன்படுத்தவும் முயற்சித்து தோல்வி கண்ட சோபா, என்னை அவரது படுக்கையறைப்
பெண்களுள் ஒருவராக நண்பர்களிடம் சித்தரித்து அற்ப சுகம் கண்டார்.
சோபாவின் நண்பர்கள் சிலர் அண்ணி என்று அழைக்க ஆரம்பித்தது, தமிழ்மணத்தில்
என்னைப் பற்றி பலவாறு செய்திகள் வந்தது, இதிலெல்லாம் சோபாவின் கள்ளத்தனம்
இருந்ததை பின்னர்தான் நான் உணர முடிந்தது.
சோபாவை மொத்தம் 12 முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். புதுவை
எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்ஸ் வந்தபோது சந்தித்தது, பெண்கள்
சந்திப்பின்போது சந்தித்தது, பகுத்தறிவு பிரசுரங்களை அச்சடிக்க உதவியபோது
சந்தித்தது, பிரசுர விநியோகத்தின்போது ஒரு முறை, தலித் மாநாட்டில் இரண்டு
முறை, மாசிலாமணி வீட்டிற்கு கணவருடன் சென்றபோது ஒரு முறை, கடைசியாக
இரண்டு முறை அடி கொடுத்தது என மொத்தம் 12 முறைதான் சோபாவை
சந்தித்திருக்கிறேன். அதில் கடைசி இரண்டு சந்திப்புகளிலும் அவர் அடி
வாங்கினார். பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அப்படி பேசியது
எல்லாம் கருத்தியல் விவாதங்கள்தான். அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்தது.
அவரிடம் காதல் கொள்வதற்கான எந்த காரணமும், அவசியமும் எனக்கு ஏற்படவில்லை.
வரைமுறையற்ற பாலியல் உறவு, முழுநேரமும் போதை என இருக்கும் ஒருவர்,
ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு பெண்ணிடம் எந்த வகையிலேனும்
பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமா?
அவரது நட்பால் நான் இழந்ததுதான் அதிகம். நான் தட்டச்சு செய்திருந்த
பெரியார் கட்டுரைகள் முழுக்க அழிந்து போனது. ஆபாசப்படங்களில் எனது
முகத்தை ஒட்டி, நான் நிர்வாணமாக இருப்பதாகக் காட்டியது நடந்தது. எனது
கேரக்டரைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்த
மூன்றரை ஆண்டுகளாக எனது இணையதளத்தில் கடுமையாக திட்டி எழுதி
வந்திருக்கிறேன் (இணைப்புகளைப் பார்க்கவும்). அப்போதெல்லாம் கள்ள மௌனம்
சாதித்து வந்தார் சோபா சக்தி.
என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்பியதுபோல்தான், மற்றவர்களைப் பற்றியும்
என்னிடம் தவறான செய்தி சொல்லியிருந்தார். வளர்மதி, மாலதி மைத்ரி
ஆகியோர்களைப் பற்றி வேறுவிதமாக திரித்துப் பேசினார். இவர்களை எல்லாம்
நான் தவறாகப் விமர்சித்ததற்குக் காரணம் சோபாதான். ஆனால் எந்தக் கூச்சமும்
இல்லாமல் சோபா சக்தி தொடர்ந்து இப்போதும் பொய்களேயே சொல்லிக்
கொண்டிருக்கிறார்.
நட்பை காமமாகப் பார்ப்பதும் பெண்ணை ஆபாசமாய்ப் பேசுவதும், உண்மை
தெரியவரும்போது பாலியல் ரீதியாக தாக்குதல் தொடுக்கவும் தயாராய்
இருப்பவருக்கு சமூகப் பிரச்சனை குறித்துப் பேச என்ன யோக்கியதை
இருக்கிறது?
பெரியாரைப் படித்த நான் எப்போதும் மனவுளைச்சலுக்கு ஆளாக மாட்டேன்.
எதையும் துணிவுடன் சந்திக்கும் குணம் எனக்கு உண்டு. கீற்றுவில்
எழுதியதாலேயே நான் இவ்வளவு நாகரிகமாக எழுதியிருக்கிறேன். சோபா மேலும்
பொய்களையே பேசுவார் என்றால், தொடர்ந்து என்னிடம் நாசூக்கை
எதிர்பார்க்காதீர்கள். வழக்கமான பாணியில் என்னுடைய இணையதளத்தில் பதில்
சொல்ல வேண்டி வரும்.
இவரை பின்நவீனத்துவவாதி, முற்போக்காளர், நாகரிகமானவர் என்று சொல்லும்
பெண்களைப் பார்த்தால் சிரிப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. உங்களுக்குள்
எந்தப் பிரச்சினையும் வராத வரைக்கும்தான் சோபா உங்களுக்கு தேவகுமாரனாகவே
காட்சியளிப்பார். முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கினால், நான் சந்தித்த
யூதாஸையே நீங்களும் சந்திக்க நேரிடும்.
இணைப்புகள்:
ஆண்குறி அரசியல் வெறிக்குள் பெண்குறி!
(http://tamizachi.com/index.php?page=date&date=2010-01-14)
28-வது பெண்கள் சந்திப்பு: ´புலியெதிர்ப்பு பெண் தாதாக்களின் முகத்திரை
கிழிந்தது.´ (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1562)
"ரா" கூலிக் கூட்டத்தினரை அம்பலப்படுத்துவோம்!
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1009)
இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்! - தொடர்ச்சி:2
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482)
இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்..!
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=468)
பெண்கள் சந்திப்பு : உள்ளாடை புரட்சி பெண்களுக்கும், நளினி ஜமீலாவுக்கும்
உள்ள வித்தியாசங்கள்!
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426)
சோபா சகதியின் அரசியல் விபச்சாரம் - தொடர்ச்சி : 3
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=399)
பின்ஈனத்துவத்துக்கு வக்காலத்து வாங்கும் பொட்டை பொறுக்கி நாய்களை
செருப்பால் அடிக்க வேண்டும்!
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=364)
பிழையான புரிதலில் பெண்ணீயம்..!
(http://tamizachi.com/index.php?page=date&date=2008-09-20&article=2013)
பாரீசில் தாதாக்கள் நடத்திய 1983-2008 நெடுங்குருதி..!
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=258)
27- ஆம் வருட பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! - மீள்
ஆய்வு (http://tamizachi.com/index.php?page=date&date=2008-08-16)
"ங்கொய்யாலா" (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=297)
27 -ஆம் வருட பெண்கள் சந்திப்பும் - "Sho" காட்டுதலும்…!
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=290)
"sho" பா சக்தியின் டாவு?
(http://tamizachi.com/index.php?page=date&date=2008-07-18)
விவகாரமான "மாமா" பதிவர்!
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=945)
(சிறுகுறிப்பு: சோபா சக்தி என்னிடம் திரித்துப் பேசிய தகவல்களின்
அடிப்படையிலேயே தோழர் மாலதி மைத்ரியைத் தவறாகப் புரிந்து கொண்டு சில
கட்டுரைகளில் விமர்சிக்க நேர்ந்தது. அந்தப் பகுதிகளை விரைவில்
நீக்குவேன். தோழர் மாலதி மைத்ரியிடம் இப்போது வெளிப்படையாக மன்னிப்பு
கேட்கிறேன்)
- தமிழச்சி

கேரளா தமிழகம் ஐ நம்பி இல்லை வடக்கு கணவாய் வழி போக்குவரத்து கன்னடர் விவசாயம் மலையாளி வணிகம்

Kumarimainthan
முன்பு கேரளத்துக்கு எந்தப் பொருளும் தமிழகம் வழியாகத்தான் செல்ல
வேண்டும். அதனால் தஞ்சைப் படிகையில் கேரளத்துக்கான பருக்கன்(சம்பா)
நெல்லைத்தான் பயிரிட்டார்கள். கொங்கண் - கோவா தொடர்வண்டி வந்ததும் நிலைமை
மாறியது. இப்போது கேரளத்துக்கு வேண்டிய நெல் கர்நாடகத்திலிருந்தும் பிற
பொர்ருட்கள் வடக்கில் மார்வாரிகளிடமிருந்தும் சென்றுவிடுகின்றன. இந்தத்
திட்டத்துடன்தான் காவிரியின் குறுக்கே அணைகள் கட்டி அங்கு நெற்பயிர்ப்
பரப்பை விரிவுபடுத்தினர். இன்று அதே காரணத்தினால்தான் தமிழக எல்லையில்
தமிழகச் சரக்குகள் போகக் கேரளத்தார் கெடுபிடி செய்கிறார்கள். இந்த
உண்மைகள் தமிழகத்து மரமண்டைகளில் உறைக்கவில்லை. தமிழகத்தில் விளையும்
பண்டங்கள் தமிழகத்திக்காகவே இருக்கட்டும். நெல் கொள்முதல் நிலையங்களை
மூடவும் நாமே நாம் விரும்புவோர்க்கு நெல்லை விற்கவும் இயலுமாறு உரிமம்
பெற்ற வாணிகனைக் களத்திலிருந்தது அகற்றவும் நெல் அரிசி நடமாட்டத்துக்கு
இருக்கும தடைகளை உடைக்கவம் தமிழகத்தை ஒரு தற்சார்பு, தன்னிறைவு தன்னாட்சி
மாநிலமாக்கவும் போராடுவோம் என்று எமது இயக்கமான தமிழக மக்கள் பொருளியல்
உரிமைக் கழகம் அறைகூவல் விடுக்கிறது.

ஈவேரா பெண்ணடிமை கருத்துகள் பெண்ணுரிமை

//பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும்
பெண்கள் பொதுவாகஉண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்.//

// தவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது,
மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச் சிலர்
வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிட
வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?//

// பெண்கள் பிள்ளை பெறுவதில்லை
என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது
என்ப தோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக்
கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்
காரணாயிருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப்
பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றி யும் அவனுக்கு
அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.//

“குடி அரசு” - தலையங்கம் -
12-08-1928
-------
ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற
நூலிலே, ”ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா
போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம்
நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது
புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள்
எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் –
தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக்
கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார்.
--------
‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-
பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.
பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு
ஓய்வுகிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப்
போடுவதே வேலையாகும்)
--------
”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே
அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.
(குடியரசு21-09-1946)
--------
100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று
களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து
கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள்
எதுவும் செய்யாமல்//
// பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில்
உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெரா (விடுதலை 6.3.1962)
---------
‘‘ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று
ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை
சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே
இருக்காது’’
---------
 ‘‘திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை
அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக்
கேடாகவும் இருக்கிறது’’
--------

கல்கத்தா வில் நகரத்தார் வளர்ச்சி வீழ்ச்சி செட்டியார் வங்களாம் வங்கதேசம் புலத்தமிழர் புலம்பெயர்

Karupaiya Ramanathan
கல்கத்தாவில் நகரத்தார்கள் :
கல்கத்தா நம்நகரத்தார்களின் வணிகம் செய்தநகரங்களில் மிகவும் முக்கியமான
ஒருநகரம். 1800களில் நகரத்தார்கள் கொல்கத்தா துறைமுகநகரில்
வணிகம்செய்துவரத்துவங்கினர்
நகரத்தார்கள் வணிகம் சிறப்பாக அந்நிய நாட்டு வியாபாரிகளுடன் சுமுகமான
உறவால் ஏற்றுமதி தொழில் சிறப்பாக நிகழ்ந்ததால் கடைகளும் பெருகின.
கொல்கத்தாவில் மூர்கியாட்டாவில் வேல் ஒன்றை நிறுவி ஒற்றுமையாக 1840 வரை
ஒற்றுமையாக ஒரே வீட்டில் வணிகமும் பூசை செய்துவந்தனர். ஆட்கள்
பெருக்கமும் ஒற்றுமை குறைபாடு ஏற்பட்டு நகரத்தார்கள் காரைகுடியார்
தேவகோட்டையார் என்று இருபிரிவு வந்தது. திருவுளச்சீட்டு முறையில் இதில்
தேவகொட்டையார்க்கு வீடும் காரைக்குடியார்க்கு சாமி என்று வந்தது.
காரைக்குடியார் கன்னிங் தெருவில் 64ஆம் வீட்டுக்கு மாறினார்
தேவகோட்டையார் தங்கள் வீட்டிற்கு தங்கள் ஊரில் இருந்து வேலை உடனடியாக
கொண்டுவந்தார்கள். வேலுக்கும் சிங்காரமுருகேசர் என்று பெயர்வைத்து
அழைத்தனர் .அதோடு தேவகோட்டையார் வீட்டை பெரிய வீடுஎன்றும் காரைக்குடியார்
வீட்டை சின்னவீடு என்று ஆங்கிலேயர் அழைத்தனர் .
1861ல் சூயஸ் கால்வாய் திறந்ததன் விளைவாக பர்மா அருசிக்கு ஐரோப்பிய
சந்தையில் நல்ல விலை கிடைத்தது அதன் அதன்காரணமாக கல்கத்தா நகரத்தார் பலர்
பர்மாவிற்கு கடைகளை மாற்றினர். சிலர் அரவை ஆலைகளையும் அங்கு நிறுவினர்
இதன் காரணமாக கல்கத்தா நகரத்தார் வர்த்தகம் குறைந்து கடைகளும்
குறைந்தது.1883ல் நகரத்தார்கள் ஒன்றிணைந்து தொழிலை மேம்படுத்தினர்.
1886ல் கல்கத்தா நகரத்தார் சிங்காரமுருகேசருக்கு இருவீட்டாரும் விழா
எடுக்க எண்ணி கூட்டம் கூடி ஆண்டுக்கு ஒருவர் விழா எடுக்க முடிவுசெய்து
ஒப்புகொண்டனர். திருவுள்ளசீட்டு பெரியவீட்டார் முதலில் விழாஎடுக்க
சாதகமாக வந்ததால் அவர்களே விழாவை முதலில் துவங்கினர் .
சிங்காரமுருகேசருக்கு சித்திரை பௌர்ணமிநாளில் காளிகட் பகுதிக்கு சென்று
அங்கு 5நாள் பூசைகள் ஏற்று திரும்புவது வழக்கம். இந்த விழாவிற்காக
வெள்ளிதேர் புதிதாக செய்யப்பட்டது. அதோடு உற்சவருக்கு தங்கம் வைரம்
மற்றும் இரத்தினஆபரணங்கள் செய்யப்பட்டன. அதோடு விழாவின் பொது திருப்புகழ்
பாராயணம் மற்றும் தமிழ் கவிகள் பாடப்பட்டன. விழாவின் ஐந்து நாட்களும்
அன்னதானங்கள் பல செய்தனர் .இந்த விழாவின் பொது வெள்ளித்தேரில் முருகன்
பவனிவரும்போது வங்காளிகள் சொன்னார் கார்த்திக் என்று முருகனை அன்போடு
அழைப்பர். அதோடு பூசைகள் மற்றும் காணிக்கை செலுத்தி வழிபடுவர்.
1893ல் இந்த விழா பங்குனி உத்திரத்திற்கு மாற்றப்பட்டது.
விழாவின் சிறப்பு என்னவென்றால் அழகன் பவனிவரும்போது இடையூறுகள்
இல்லாதவாறு டிராம்கள் மற்றும் போக்குவரத்து இடையூரு இல்லாமல் சிறப்பாக
பார்த்துகொண்டனர். அதோடு கொல்கத்தா நகரில் வளம்வரும்போது கவர்னரின்
சார்பாக அழகனுக்கு மாலைமரியாதைகள் செய்தனர்.
காலங்கள் சென்றதும் மீண்டும் பிரிவினை வந்தது. விழாவின் பொது காளிகட்
விடுதியை சின்ன வீட்டார் பூட்டினர்.அப்போது பெரியவீட்டார் கல்கத்தா
நீதமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு பெரியவீட்டார் புறம் தீர்பானது.
பின் திருவிழா சிறப்பாக நிகழ்ந்தது. இருவீட்டாரும் ஒருவருக்கு ஒருவர்
செலவு தொகையை வாங்குவதில்லை என்று முடிவு செய்து வீம்புகள் செய்துகொண்டு
இருந்தார்கள்.
1907இன் போது பூசையின் ஒருவரின் மீது முருகன் இறங்கி இருவீட்டாரும்
இணைந்து பூசை நிகழ்த்தக்கூறி சொல்ல அதன் விளைவாக பூசையில் இருவீட்டாரும்
கலந்துகொண்டனர் .
1907ல் சின்னவீட்டார் கடைகள் நொடிக்க துவங்கிய பொது அங்கிருந்த வேல் ,
இடும்பன் , விநாயகர்விக்ரகம் எல்லாம் 1863இல் ஹிஸ்துஸ்தானி கோசாயி
சாதுக்கள் விடுதியை விலைக்கு வாங்கி புனரமைக்கப்பட்ட
ு நிறுவப்பட்ட காசி நகரவிடுதியில் கொண்டு வந்து பிரதேதிஷ்டைசெய்தனர்
நகைகளையும் ஒப்புவித்தனர். அதோடு கோவில் மகமைத் தொகையில் பெரும்பகுதியை
விடுதியை விரிவுபடுத்த கொடுத்தனர் பின் 1935ல்கொல்கத்தா பெரியவீட்டு
நகைகளும் ஒப்புவிக்கபட்டன.
1914ல் முதல் உலகபோரால் தொழில் மந்தம் ஏற்பட்டது அதன் காரணமாக
சின்னவீட்டார் கடைகளின் எண்ணிக்கை மிகவும் நொடித்துபோய்விட்டது. அதன்
காரணமாக சின்னவீட்டார் வெள்ளிரதத்திற்க
ு கொடுத்ததொகை மீண்டும் அவர்களுக்கே பெரியவீட்டார் கொடுத்தனர் .
1917ல் எஞ்சி இருந்த கடைகள் நொடித்து போக துவங்கியதன் காரணமாக வெள்ளிரதம்
திருப்பாபுலியூர் சிவாலயம் சில நகரத்தார்கள் புரமைக்கும்பொது
கல்கத்தாவில் உள்ள ரதம் விற்பனைக்கு உள்ளதை அறிந்து அதற்கான விலையை
கொடுத்து ரதத்தை கடலூருக்கு கப்பலில் கொண்டுவந்து திருப்பாபுலியூர்
இறைவனுக்கு அற்பணித்தனர்.
1918ல் கல்கத்தா நகரத்தார்களுக்க
ு30க்கும் குறைவான கடைகளே இருந்தன. தங்கள் கடைகளுக்கும் சொந்தமான இடம்
வேண்டும் என்றும் காசி , பிராயாகை , ஹரித்துவார் ,காயா , தாரகாநாத் போன்ற
இடங்களில் தாங்கள் துவங்கிய சிவபணி நிகழ வருமானம் அமையவேண்டும்
என்றநோக்கில் எஸ்ரோ தெருவில் வெள்ளையரிடம் ஒரு கட்டிடத்தை வாங்கி
அஸ்திவாரத்தை தவிர்த்து கட்டிடத்தின் பிறபகுதிகளை முழுவது இடித்து
செட்டிநாட்டு பாணியில் (கீழ்த்தளத்தை சேர்த்து ) மூன்றுமாடி கட்டிடம்
6120சதுர அடியில் சுமார் ரூபாய் 122396 செலவில் 1921ல் கட்டிமுடிக்கப்ப
ட்டது.
1930 பெரியவீட்டுக்கடைகளும் நொடிக்க துவங்கியது.அப்போது தங்கள் வீட்டில்
வைத்திருந்த வேலவர் , இடும்பன் , விநாயகர் மூர்த்திகளை கொண்டுசென்று
நகரத்தார்கள் ஸ்ட்ராண்ட் ரோடுடில் அரசமரத்தின் அடியில் இருந்த ஒரு
லிங்கத்திற்கு 80000செலவில் குடமுழுக்கு நிகழ்த்தி சிவனுக்கு நாகரேஸ்வரர்
என்ற பெயரும் அம்பாளுக்கு நகரேஸ்வரி என்ற பெயர் சூட்டி விழாவை நிகழ்த்திய
ஆலயத்தில் கொண்டுசென்று நிறுவினர்.இன்றும் இந்த மூர்த்திகளை அங்கு
காணலாம்

கபிலர் அகவல் சாதியெதிர்ப்பு இலக்கியம் பிராமணீயம்

Palani Deepan
கபிலர் அகவல்.
இந்திய அளவில், ஏன் உலக அளவிலும் கூட சாதிப் பிரிவினையை கடுமையாகத்
தாக்கும் நூல் பச்சைத் தமிழன் கபிலர் எழுதிய இந்த கபிலர் அகவலைத் தவிர
இணையான நூல் வேறு எதுவும் இல்லை.
நூலின் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.
இந்தநூலின் நடை மிக எளிய, தனித்தமிழ் நடை. ஆனால் அது செல்லும் வேகம் வேறு
எந்த நூலுக்கும் இல்லை.
ஆதியில் தமிழரிடையே சாதி வேற்றுமை இல்லை. பிராமணர்கள் இங்கு வந்தப் பிறகே
சாதி வேற்றுமையும் உயர்வு தாழ்வும் உண்டாகியது.
உலகின் பாரதத்தை தவிர சீனம், சிங்களம், யவனம் போன்ற நாடுகளில் இந்த சாதி
வேற்றுமை இல்லை. ஏனெனில் அங்கெல்லாம் பிராமணர்கள் இல்லை.
”முற்படைப்பு அதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதி இந்த நாட்டினில் நாடடினீர்...”
என்று பிராமணர்களைப் பார்த்து வேகமாகக் கேட்கிறார் கபிலர்.
இதற்கு மிக அழகான உவமையொன்றை கவிஞர் கையாள்கிறார்.
எங்காவது பசுவும் எருமையும் தம்முள் கலந்து மகவை ஈன்றெடுக்க முடியுமா...?
ஆனால் மனித குலத்தல் சாதி வேற்றுமை பாராமல் ஒரு பிராமணன் ஒரு புலைச்சியை
கூடினால் குழந்தை பிறக்காமல் போய்விடுமா...? அந்தக் குழந்தை பிராமணக்
குழந்தைதானே...?
அந்த பசுவும் எருமையும் பார்த்த அளவில் நமக்கு பேதம் தெரிகிறது. அது போல
மனிதரிடையே நம்மால் பேதத்தைக் காண முடியுமா...?
தென்நாடாம் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு புலையன் வடமாநிலத்திற்கு போவான்
ஆயின், வேதத்தை பழுதில்லாமல் ஓதி எளிதாக பிராமணன் ஆகிவிடுகிறான்.
அதுபோல, வடமாநில பார்ப்பான் தென்தமிழகம் வருவான் ஆயின், பிழைக்க
திக்கற்று ஒழுக்கம் கெட்டு புலையன் ஆகிவிடுகிறான்.
இதுதானே இயற்கை...?
”தென்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகின்
பழுதற ஓதிப் பார்ப்பான் ஆவான்
வடதிசைப் பார்ப்பான் தென்திசைக்கு ஏகின்
நடையது கோணிப் புலையன் ஆவான்”
என அடித்து விளையாடுகிறார் கவிஞர்.
அடுத்து பிராமண முனிவர்கள் வரலாற்றை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.
வசிட்ட முனிவர் யார்? பிரம்மனின் கூத்தி வயி்ற்றில் பிறந்தவன் தானே...?
சத்திய முனிவன் யார்? வசிட்டருக்கு சண்டாளியின் உறவில் பிறந்தவர் தானே?
வேதங்களை தொகுத்த வியாச முனி யார்? பராசரருக்கும் மீனவப் பெண்ணிற்கும்
பிறந்தர் தானே...?
ஆக இந்த நால்வரும் வேதங்கள் ஓதி பெரும் தவத்தினராக ஆனது எப்படி? என்று
விளாசுகிறார்.
சாதி வேற்றுமை இயற்கைக்கு உண்டா...? இயற்கைதானே இறைவன்.
மழை ஒரு குறிப்பிட்ட குலத்தவரை மட்டும் ஒதுக்கிவிட்டு பெய்கிறதா?
காற்று சிலரை நீக்கிவிட்டு வீசுகிறதா?
காயும் கதிரவன் சிலரை மட்டும் காயேன் என்கிறனா...?
நாம் வாழும் இந்த நிலம் யாரையாவது இருக்க பொறுக்க மாட்டேன் என்னுமோ...?
ஈர்ப்பு விதி யாவருக்கும் பொது தானே...?
“மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ?
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ”
என அழகு தமிழில் அழகாய் கோபிக்கிறார்.
கடைசியாய் தமிழர்களுக்கே உள்ள வள்ளல் தன்மைதான் மனிதத் தன்மை என்கிறார்.
”எந்நாள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டு...”
என மனித நேயத்தை வற்புறுத்துகிறார்.
கடைசியாக....
சாதி வெறியர்களையும், சாதி உணர்வைத் தூண்டி குளிர்காய்பவர்களையும்
முட்டாள்களே... என விளிம்பி,
”அழகான சிறப்பு மிக்க வாழ்வும் ஒழுக்கமுமே மனித குலத்திற்கு நலந்தரும்.
தான் பிறந்த பிறப்பு எந்த நலனையும் தராது” என முடிவுரை எழுதுகிறார் கபிலர்.
”சிறப்பும் சீலமும் அல்லது
பிறப்பு நலந் தருமோ பேதை யீரே...!”
தமிழன்தான் ஆதிமுதல் சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்து வருகிறான்.
அந்த ஏற்றத்தாழ்வு இன்றும் உள்ள ஒரே இடமான கோவில் கருவறைக்குள் யாவரும்
அர்ச்சகர் ஆகலாம் என துணிந்த பிராமணர் அல்லதவர்களை அர்ச்சகர்களாக
நியமித்த கேரளா அரசை பாராட்டி மகிழ்கிறோம்.

ஐ ஔ தொல்காப்பியம் விளக்கம்

ஐ

"அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் "

- தொல்காப்பியம்

இந்த தொல்காப்பியத்துக்கு குழறுபடியான உரைகளை பல இடங்களில் காணப்பெறுகிறது.

ஐயா முனைவர்.செளந்தரபாண்டியன் ஐயம் தெளிவுற இதை விளக்குகிறார்.

உரை பின்வருமாறு :

அகர இகர மைகார
மாகும்” (மொழி.21 )

‘அகரம் இகரம்’ - அ , இ என்ற இரு எழுத்துகளும் அருகருகே நின்றால்,
‘ஐகாரம் ஆகும்’ – ‘ஐ’ போல ஒலிக்கும் !

இளம்பூரணர் – “இது போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று ” என்றார்.

நம் காலத்து இலக்கண அறிஞர் எவரும் இந்த உரையை விளங்கிக் கொள்ளவில்லை !

‘போலி’ என இளம்பூரணர் சொன்னது இலக்கணப் போலியை அல்ல !
‘போல’ ஒலிப்பதால் ‘போலி’ என்றார் இளம்பூரணர்.

அஃதாவது –
அந்தக் காலத்தில் , ஆசான் நூற்பாவைச் சொல்ல மாணாக்கன் அதனை ஓலையில்
எழுத்தாணியால் எழுதிக்கொள்வான் .
அப்படி எழுதும்போது அவன் காதில் எப்படி ஒரு சொல்லானது விழுகிறதோ
அப்படித்தான் அவன் எழுதிக்கொளவான்.
இதனால் பல சுவடிப்பிழைகள் ஏற்படும்.எண்ணற்ற சுவடிப்பிழைகளை நான் பார்த்தவன்.
இப்படிப்பட்ட சூழலில்தான் தொல்காப்பியருக்கு மேற்கண்ட நூற்பாவை எழுதும்
தேவை ஏற்பட்டது !

தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -
‘அ’வையும் , ‘இ’யையும் அருகருகே நிறுத்தி , ‘அ இ ’ என்று உச்சரித்தால் ,
காதில் ‘ஐ’ என்றுகேட்கும் ! இதனை உணர்ந்துகொண்டு , ‘ஐ’ என நான்
உச்சரித்தால் நீ சுவடியில் ‘அ இ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஐவனம்’ என நான்
உச்சரித்தால் ‘அ இவனம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !
இதுதான் ‘அகரம் இகரம் ஐகரம் ஆகும்’ என்பதன் பொருள் !

இதே பொருளைத்தான் அடுத்த நூற்பாவுக்கும்
கொள்ளவேண்டும் !

“அகர உகரம் ஔகார மாகும் ” (மொழி . 22)

அஃதாவது , தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -
‘அ’வையும் , ‘உ’வையும் அருகருகே நிறுத்தி , ‘அ உ ’ என்று உச்சரித்தால் ,
காதில் ‘ஔ’ என்றுகேட்கும் ! இதனை உணர்ந்துகொண்டு , ‘ஔ’ என
நான் உச்சரித்தால் நீ சுவடியில் ‘அ உ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஔவியம்’ என
நான் உச்சரித்தால் ‘அஉவியம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !

இந்த நூற்பாவின் உரையில் இளம்பூரணர் ‘அது கொள்ளற்க’ என்ற தொடரை
எழுதியுள்ளது நம் கருத்துக்கு அரணாகும் !
அஃதாவது ‘ போல ஒலிக்கும் போலியைச் சுவடி எழுதும்போது எடுத்துக்
கொள்ளாதீர்கள்’ என்பதே
இளம்பூரணரின் ‘அது
கொள்ளற்க’ என்ற தொடரின் பொருளாகும் !
வேறு எப்பொருள் கொண்டாலும் அது பொருந்தாது !
வேறு பல உண்மைகள் இந்த நமது ஆய்வில் வெளிப்படுகின்றன.

ஆனால் ஆய்வாளர்கள் எவரும் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை !
ஓலைச் சுவடித் துறையில் அனுபவமின்மை இதற்குக் காரணமாக இருக்கலாம் !
‘ஐ’ என்று உச்சரித்தால் அது ‘அய்’ எனக் காதில் விழலாம் ! ஆனால் ஏமாந்துவிடாதே !
இதுபோன்றே ‘ ஔ’ என உச்சரித்தால் ‘அவ்’ என அதை எழுதிவிடாதே ! –
இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !

நூற்பாவைப் பாருங்கள் :

“அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”
(மொழி.23 )

நூற்பவை அடுத்து இளம்பூரணர் ‘இதுவுமது’ என்று எழுதியிருப்பதை ஒருவரும்
கவனிக்கவில்லை !

‘இதுவும் அது’ என்றால் , இந்த நூற்பாவும் முன்னிரு நூற்பாக்களைப் போன்றே
‘போல உச்சரிக்கப்படும் ’ எழுத்துகளைப் பற்றியது என்பது பொருள் !
‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்’ – ‘அ’ வும் , அதன் பக்கத்தே ‘ய்’ என்ற எழுத்தும்
‘ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ - சேர்ந்து ஒலிக்கும்போது ‘ஐ’
என்ற ஒலி எழலாம் !
இந்தக்கருத்தை முன் நூற்பாக்களோடு சேர்த்து எண்ணினால் , ‘ஐ’ , வேறு ,
‘அய்’ வேறு இரண்டு ஒன்றல்ல என்பது புலப்படும் !
மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வுதான் சரி என்பதை நீங்கள் உணரலாம் !
ஐ = 2 மாத்திரை
அய் = 1½ மாத்திரை
இரண்டும் எப்படி ஒன்றாகும் ?
இந்த நூற்பா உரையில் இளம்பூரணர் ‘வகரப் புள்ளியும் ஔகாரம் போல வரும் எனக்
கொள்க’ என்றார் !
இதற்குப் பொருள் – ‘ஔ என்பதைச் சரியாகக் காதில் வாங்கி எழுத வேண்டும் !
‘ஔ’ என்ற உச்சரிப்பைக் கேட்டு , அது ‘அவ்’ போலக் காதில் விழுமாதலால்
‘அவ்’ என எழுதிவிடாதே ’ என்பதுதான் !

மேலே சொன்னது போன்றே, மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வும்
சரிதான் என்பதை நீங்கள் உணரலாம் !
ஔ = 2 மாத்திரை
அவ் = 1½ மாத்திரை
இரண்டும் எப்படி ஒன்றாகும் ?
தொல்காப்பிய நூற்பாவில் ‘மெய்பெறத் தோன்றும்’ என்பதற்கு , ‘உண்மை போலத்
தோன்றும் ; அது தோற்றந்தான் ; உண்மையல்ல’ என எடுத்துக்கொள்ள வேண்டும் !
தொல்காப்பிய நடை என்பது இன்றியமையாதது !

எழுத்து சீர்திருத்தம் அய் அவ் தவறு

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நெல்லூர் சித்தூர் பிரகாசம் 70% தமிழர் ஆனால் பொதுஇடங்களில் அரசு வேலை தெலுங்கு ஓசூர் நிலை அவ்வாறே வந்தேறி ஆதிக்கம் மண்மீட்பு

ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில்
70%விழுக்காடுக்கு மேல் தமிழ் மக்கள் அதாவது தமிழ் சாதிகள் வாழ்ந்தாலும்,
அங்கே பொது இடங்களிலோ அரசு அலுவலகங்களிலோ தமிழ் எழுத்துக்களை பார்க்க
முடியாது அரசுப் பணியில் உள்ள அனைத்து மக்களும் தெலுங்கு சாதிக்காரர்கள்
(80%விழுக்காடுக்கு மேல் தெலுங்கு சாதிக்காரர்களே),
அப்படியே ஒசூர் பக்கம் வந்து பாருங்கள் 33%விழுக்காடு தெலுங்கு
சாதிக்காரர்கள், 28%விழுக்காடு கன்னட சாதிக்காரர்கள் பொது இடங்களில் ஏன்
அரசு அலுவலகங்களில் தெலுங்கு,
கன்னட பெயர் பலகை தான் கம்பீரமாக நம்மை பார்த்து சிரிக்கிறது,தளி தொகுதி
இன்னும் கேவலம் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி அங்கேயும் இதே நிலை தான்
இந்த இடத்தில் அதிகாரத்திலும்,
அரசுப் பணியில் தமிழ் சாதிக்காரர்கள் இல்லை,அவர்கள் எவ்வளவு அழகாக தம்
தாய் மொழியை வளர்க்கிறார்கள்,தமிழர்கள் இறையாண்மை நுரையாண்மை னு
திராவிடர்கள் சொல்வதை கேட்டு கொண்டு நேர்மையாக செயல்படுகிறார்கள்.
# prakasam.