வெள்ளி, 20 ஏப்ரல், 2018

மதுரை அருகே கோதை எனும் பெயர் பொரித்த தங்கம் கட்டி தமிழி பட்டயம் அகழ்வாராய்ச்சி





aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 19





பெறுநர்: எனக்கு










மதுரை அருகே தேனூர் என்றோர் ஊர் உள்ளது. இலக்கியக் குறிப்பிலும் அவ்வூர் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பகுதியில் ஒரு பெரும் புயல் காற்று வந்தது. அந்த காற்றில் அவ்வூரின் மத்தியில் ஒய்யாரமாக நின்ற ஓர் ஆலமரம் முற்றாகச் சரிந்தது. ஒரு மரம் சரிந்தால் ஊரே கூடி நின்று பார்ப்பது வழக்கம். அப்படியே ஊர் கூடி கண்டுகழித்து ஓய்ந்தது ஐந்தாறு சிறுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அநிலொரு சிறுவன் எதையோ கூர்ந்து கவனித்தான் அந்த ஆலமர வேர் இடுக்கில் மண்ணோடு மண்ணாக ஒரு சிறிய மண் கலசமிருந்தது. அதை அவன் எடுத்தான் கலசம் முழுக்க மண்ணால் நிரம்பியிருந்தது. அந்த கலசத்தை இரண்டு மூன்று சிறுவர்கள் உருட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் அது இரண்டாக பிளந்தது. அதனுள்ளிருந்த மண் இலகுவாகி உள்ளேயிருந்த தங்கக்கட்டிகளு சில மின்னியது. விஷயம் ஊர் பெரியவர்களுக்கு கசிந்தது. யார் எவரெல்லாமோ அந்த கலசத்தை கைப்பற்றினார்கள். அந்த ஊரே கூடி சரிந்த ஆலமரத்தை சிதில் சிதிலாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
விஷயம் காவல்துறையினரின் காதுகளுக்கு எட்டியது அன்றிரவே அவ்வூரே காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த கிராம மக்களிடமிருந்து 7 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டாத காவல்துறையினர் அறிவித்தார்கள். நாமும் அதை நம்பித்தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை.

தகவல் அறிந்த அமர்நாத் அகழாய்வுக்குழு காவல் நிலையத்தில் போராடி பெற்று அதை கைப்பற்றினர். பார்த்த அவர்களுக்கே வியப்பு தாளவில்லை. காரணம் அந்த தங்கக்கட்டிகளில் அதே தமிழ் பிராமி எழுத்தில் கோதை என்று பதிக்கப்பட்டிருந்தது.
இங்கே ஆய்வாளர்களை புருவம் உயர்த்த வைத்தது இரண்டு. ஒன்று அது "கோதை" என்ற ஒரு பெண்ணின் பெயர். உலகில் பெண்ணை காலுக்கு கீழே போட்டு மிதித்த போது பெண்ணை பொக்கிஷமாக போற்றியவன் தமிழன். இரண்டாவது வியப்பு, உலகில் இதுவரை எழுத்து பதித்த தங்கக்கட்டிகளை கண்டெடுத்ததே இல்லை. நம் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பாக வாழ்ந்திருப்பார்கள் என்பதைதான் இது விளக்குகிறது.

வைகை நதிக்கரையில் சரியாக 290 ஊர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்கள் என்று சொல்கிறார்கள். வைகை நதி மொத்தமே 258 கிமீ நீளமுடைய ஒரு சிறிய நதி. அந்நதியின் வழித்தடங்களை ஆய்வு செய்த போது கூறினார்கள், இது 6000 ஆண்டுகளாக இவ்வழித்தடத்தில் ஓடுகிறது என்று.
இந்த ஆறாயிரம் ஆண்டுகளில் ஒரு ஆண்டு கூட நான்கு மாதத்திற்கு மேலாக இந்த நதி ஓடியதில்லை. அதிகபட்சம் நான்கு மாதங்கள்தான்.
இந்த நதியின் கரையில் இத்தனை செல்வச் சீமானைகளாய் நம் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனில் நம்மிடம் எத்தனை அற்புதம் வாய்ந்த நீர் மேலாண்மை இருந்திருக்க வேண்டுமென சிந்தியுங்கள். நிச்சயமாக அப்போதெல்லாம் தெர்மாகோலார்கள் மந்திரிகளாக இருந்திருக்க மாட்டார்கள் என்பதை இதிலிருந்து நாம் உணர்ந்துகொள்ளலாம்.

(எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் உரை ஒன்றை என்னாலியன்ற அளவு எழுதுகிறேன். இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.)
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக