வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பொங்கல் சங்ககால இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 15
பெறுநர்: எனக்கு
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
------
சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். மேலும், சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதிய அடியார் நல்லாரும், அரும்பத உரைகாரரும், பொங்கல் என்ற சொல்லுக்கு கள் என, எழுதியுள்ளனர். இன்றும், அம்மன் கோவில்களில், மதுப்பொங்கல் பொங்கும் வழிபாடு உள்ளதை இதனுடன் இணைத்துக் காணலாம். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' என, சுட்டுகிறார். திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, 'பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார' என்கிறது. ஆக, சங்ககாலத்திலும், பக்தி இயக்க காலத்திலும், புழுக்கல் என்பது தான், பொங்கலாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

நெடுநல்வாடை’யில் ஒரு சங்க இலக்கியப் பாடல். அதில் வரும் ஒரு தொடர் ‘பொங்கல் வெண்மழை’. அதற்குப் பொருள் ‘வெண்மேகங்கள்’. மழைக் காலக் கருமேகங்கள் பயணித்துக் கழிந்த பாதையிலேயே வான் நிறைத்துப் பொங்கும் நுரையாக, இவற்றை மார்கழியில் பார்க்கலாம்.
________
Logan K Nathan , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
தமிழ் நாட்காட்டியில் இன்று சூரியன் தை / மகர (மகர ராசி /மாஸம்) மாதத்திற்கு மாறுவதால் மகர சங்கராந்தி எனப்படுகிறது. எனவே, தமிழர்களுக்குத்தான் மகர சங்கராந்தி.
இந்திய துணைக்கண்டத்தில் ஆந்திரா, கர்ணாடகா மற்றும் வட இந்தியா என மற்றவர்களுக்கு மகர (புஷ்யம்) மாதம் பிறந்து 25 நாட்கள் கடந்துவிட்டது. ஆனால், தமிழர் நாட்காட்டியை ஒட்டி இன்று தான் மகர சங்கராந்தி கொண்டாடுகிறார்கள்.
நேபாள், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் பொங்கல் /மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.
----------
Kumaran Malli
TBCD,
நல்ல தொகுப்பு. இதோ பொருள்.
"வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூண் இருக்கையின்"
இந்தப் பகுதி நற்றிணை 22ம் பாடலில் வருகிறது. ஆனால் இங்கே தைத்திங்களைப் பற்றி பேசவில்லை. 'கை ஊண் இருக்கையின்' என்பதே சரி. 'தையூண்' என்பது எழுத்துப்பிழை.
தண்கயம் என்றால் குளிர்ந்த குளம் என்று பொருள். தை நீராட்டம் என்ற ஒரு நீராடு விழா சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. மார்கழி முழுநிலவன்று தொடங்கி தை மாதம் வரை செல்லும் இந்நீராடு விழாவை வைத்து பல இடங்களில் தையில் குளிர்ந்த குளத்தில் குளிப்பதைப் பற்றிய பேச்சு வருகிறது.
அவையே நற்றிணையில் வரும் 'தைஇத் திங்கள் தண்கயம் படியும்' - 'தைத் திங்களில் குளிர்ந்த குளத்தில் நீராடும்', ஐங்குறுநூற்றில் வரும் 'நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர் படிந்து' - 'நறுமணம் வீசும் பெண்கள் நீராடும் தை மாதத்துக் குளிர்ந்த குளம் போலப் பலரும் நீராடும்', கலித்தொகை சொல்லும் 'தையில் நீராடிய', 'தைஇத் திங்கள் தண்கயம் படியும்', குறுந்தொகை சொல்லும் 'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' - 'தைத் திங்கள் குளிர்ந்தது தரினும்', புறநானூறு சொல்லும் 'தைஇத் திங்கள் தண்கயம் போல்' போன்றவை.
அன்பன்,
குமரன்.

விழா பண்டிகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக