வெள்ளி, 20 ஏப்ரல், 2018

மாடு திருடர் கொன்ற காவல்வீரன் நடுகல் 2200 ஆண்டுகள் பழமை மாவீரர்




athi tamil <aathi1956@gmail.com>

ஜன. 19





பெறுநர்: எனக்கு









Veeraa VK
1 மணி நேரம் ·



நித்யானந்தாவின் சிஸ்யைகளின் சிருஸ்டியில் சிக்குண்டுக்கிடக்கும் இத்தருணத்தில், இப்பதிவு பலரின் பார்வைக்குச் சென்று சேருமா என்பது தெரியவில்லை. இருப்பினும் கடமையைச் செய்வோம் பலன் முழுக்க பைந்தமிழுக்கே...

தஞ்சை கல்லூரி மாணவர்கள், மதுரை அருகேயுள்ள 'புள்ளிமான் கோம்பை' கிராமம் சென்ற போது அங்கொரு கருங்கல் தூண் ஒன்றை கண்டுபிடித்தார்கள்.
அதில் ஏதேதோ எழுதியிருந்தது. அவர்களுக்கு அவ்வெழுத்து புரியவில்லை அகழ்வாய்வாளர்களிடம் தெரிவிக்க, அவர்கள் ஆய்வு செய்த போது அது தமிழ் பிராமி எழுத்து என்று கண்டுபிடித்தார்கள்.
அதில் எழுதப்பட்ட வாக்கியங்கள்தான் வியப்பூட்டக் கூடியது.
"இவர் பெயர் அந்துவன், இந்த ஊரில் மாடு திருட வந்த திருடர்களிடம் மோதி தன்னுயிர் ஈந்தப் பெருமகனார் இவர்" என்பதாக பொருள் கொண்டிருந்தது அது.
தமிழ் பிராமி எழுத்துக்களின் புழக்கம் 2200 ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டு.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் அரசனுக்கும், அறிஞர்களுக்கும் மட்டுமே ஆவணங்களை விட்டுச்செல்வதுதான் உலக வழமை. ஆனால் சாமாணியனின் வீரத்தையும் கல்வெட்டுக்களாக பதித்துக் கடந்த ஒரே இனம் நம்மினம் மட்டுமே...

உலகெங்கும் இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள் ஏறத்தாழ ஒரு லட்சம். அதில் இந்தியாவில் கிடைத்தது மட்டுமே 65 ஆயிரம். அதில் தமிழகத்திலும் தமிழ் சார்ந்தும் கிடைத்தது 45 ஆயிரம்.
வரலாற்று ஆவணங்களை இலக்கியமாகவும், கல்வெட்டுச் சுவடுகளாகவும் இன்னபிற வடிவங்களாகவும் விட்டுச் சென்றோரில் இவ்வுலகில் நம் மூதாதையர்களுக்கு நிகர் எவருமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் எங்குமே பறைசாற்றப்படாத உண்மை என்பதுதான் வேதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக