புதன், 11 ஏப்ரல், 2018

காதலும் திராவிடமும்

காதலும் திராவிடமும்

இன்று காதலுக்கு துணை நிற்கிறோம் என்ற பெயரில் ஈ.வே.ரா பக்தர்கள் செய்யும் அரசியல் சதிகளை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

எந்த கொலை நடந்தாலும் அது வெவ்வேறு சாதிய வன்முறை என்று உருவாக்க முயல்வதும்
அது ஒரே சாதிக்குள் நடந்தது என்றால் அப்படியே போட்டுவிட்டு நகர்வதும் வாடிக்கையாகிவிட்டது.

முதலில் இவர்களது வழிகாட்டி ஈ.வே.ரா காதல் பற்றி என்ன கூறியுள்ளார் என்று அறிவோம்.

அவர் எழுதியது வருமாறு,

உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி,
அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து,
மக்களுக்குள் புகுத்தி,
அநாவசியமாய் ஆண் - பெண் கூட்டுவாழ்க்கையின் பயனை மயங்கச்செய்து,
காதலுக்காக என்று இன்பமில்லாமல் திருப்தி இல்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்.

ஆனால் காதல் என்றால் என்ன?
அதற்குள்ள சக்தி என்ன?
அது எப்படி உண்டாகின்றது?
அது எதுவரையில் இருக்கின்றது?
அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது?
அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?
அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன?
என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்,
காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்
பொருளற்ற தன்மையும்
உண்மையற்ற தன்மையும்
நித்தியமற்ற தன்மையும்
அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும்
ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால், அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது?
உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது?
இவற்றிற்கு என்ன ஆதாரம் என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள்,

"காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல.
அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,
காதல் வேறு"
என்றும்,

"ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக்காரியத்திற்காக ஏற்படுவதாகும்"
என்றும்,

"அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்"
என்றும்,

"அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை" என்றும்,

‘‘அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்"
என்றும்,

"அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால்,
பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது''
என்றும்,

‘‘அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது.
அதை விபச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, அது ஒருக்காலும் காதலாகாது'' என்றும்

‘‘ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது''
என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே
ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.

குடி அரசு (18.1.1931) இதழில் மேற்படி ஈ.வெ.ரா எழுதியுள்ளார்.

அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தொல்லையென்றும்
அதற்கு அடிப்படையான காதல் என்பது உருவகப்படுத்தபட்ட போலி என்றும் ஈ.வே.ரா கூறுகிறார்.

சமீபத்தில் நடந்த உடுமலை சங்கர் கொலை உட்பட பல கொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் ஏழையாக வேலைவெட்டி இல்லாதவர்களாகவும் வசதியான பெண்களைக் காதலித்திருப்பதும் தெரிகிறது.

திருமாவளவன் போன்றவர்கள் திராவிடக் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் சதி திட்டம் தீட்டி வேலைவெட்டியில்லாத இளைஞர்களைத் தூண்டிவிட்டு வசதியான வேற்றுசாதி மாணவிகளைத் துரத்தச்சொல்லி

ஒருவேளை அந்த பெண் ஒத்துக்கொண்டால் தமது சாதி காவல்துறையினர் வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய கட்டப் பஞ்சாயத்து குழுவின் உதவியுடன் திருமணம் செய்துவைப்பதும்

அந்த பெண் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆசிட் வீசுவது, கொலைமிரட்டல் விடுவது, வன்கொடுமை செய்ததாக போலிப்புகார் அளிப்பது என பல அட்டூழியங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கும் வசதியான பெற்றோருக்குமான மோதல் இருசாதிகளுக்கு இடையான பிரச்சனையான வெளியே காட்டப்படுகின்றன.

மேற்படியான மோதல்கள் பெரும்பாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படுபவை.

இதே தன் பெண்ணை விரும்புபவன் நல்ல படித்த பையனாக வசதியான பையனாக இருந்திருந்தால் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு சம்பவங்கள் இளவரசன் மற்றும் உடுமலை சங்கர் கொலைகள்.

இதில் இளவரசன் தமக்கு அதிகம் உதவியது வன்னியர் சாதி நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

சங்கரின் கிராமமான கொமரலிங்கம் சாதி தாண்டி திருமணம் செய்த பல தம்பதிகளைக் கொண்டது.

ஆக இன்று கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சாதிதாண்டி காதல் செய்வதை ஊக்குவிக்கும் கூட்டத்தின் நோக்கம் காதலை வாழவைப்பதோ சாதியை ஒழிப்பதோ கிடையாது.

இவர்களின் நோக்கம் எதாவது ஒரு பிரச்சனையில் இருவேறு சாதியினர் சம்பந்தப்பட்டிருந்தால் அந்த தனிப்பட்ட பிரச்சனையை சாதி பிரச்சனை ஆக்கி இரு தமிழ்ச்சாதிகள் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதான்.

நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு, வேலாம்புதூர் சம்பவம் போன்றவற்றை சாதிக்கொடுமை என்று வதந்தி பரப்பியதும் அதற்காகத்தான்.

ஸ்வாதி படுகொலையை கண்டுகொள்ளாமல் நகர்வதும் அதற்காகத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக