செவ்வாய், 5 ஜனவரி, 2021

தமிழகம் சாதி மொத்த பட்டியல் விபரம் பட்டம் உட்பிரிவு பரவல் வாழ்விடம்

 

“சாதிகள் இல்லையடி பாப்பா” எனும் பாரதியின் வரிகளை பொய் யாக்கும் தமிழ்நாடு சாதிகள் பட்டியல்..! உங்கள் பார்வைக்கு ……..

ஆதிதிராவிடர் பட்டியல்

1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல் வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல் வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

75. வெட்டியான்

76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. காடர்
6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)

7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

8. கணியர், காணியான், கணியன்
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொண்டகாப்புகள்
12. கொண்டாரெட்டிகள்
13. கொராகா
14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)

15. குடியா, மேலக்குடி
16. குறிச்சன்
17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலைப் பண்டாரம்
22. மலை வேடன்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)

26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)

36. உரளி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறு பாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29- 07- 2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05- 2009)

1. தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட அகமுடையார்
2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்

3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத் திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
5. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல் வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

6. அர்ச்சகர வேளாளர்

7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

8. ஆயிர வைசியர்
9. படகர்
10. பில்லவா
11. பொண்டில்
12. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட் டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை  நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ் சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெர ம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி,  திண்டுக்கல் மாவட்டங் கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம்,  திருவள்ளூர், இராம நாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல் வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவ ட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக் கல் மாவட்டம் நீங்கலாக)

13. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூ ர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப் பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)

14. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

15. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை வட்டத்திலும்)

16. சௌத்திரி

17. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப் பணி களின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற் காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.

18. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியா குமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

19. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப் பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)

20. தேவாங்கர், சேடர்

21. தொம்மார்கள்  (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ் சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)

22. ஏனாதி
23. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

24. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

25. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

26. கங்கவார்
27. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
28. கௌண்டர்
29. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
30. ஹெக்டே
31. இடிகா
32. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர்(ஈழவர்), எழுவர், இல்லத் தார்
33. ஜெட்டி
34. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டு க்கல், கடலூர்,  விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)

35. கப்போரா
36. கைக்கோளர், செங்குந்தர்
37. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல்,  தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, திருச்சிராப்பள்ளி,  கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்ட ங்கள் நீங்கலாக)

38. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்ட த்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
39. கலிங்கி
40. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோ ட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக் கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராம நாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை,  தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)

41. கள்ளர் குலத் தொண்டைமான்
42. கால்வேலிக் கௌண்டர்
43. கம்பர்
44. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)

45. கணி, கணிசு, கனியர், பணிக்கர்
46. கனியால வேளாளர்
47. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட ங்களில்)

48. கன்னடியநாயுடு
49. கற்பூர செட்டியார்
50. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீகருணீகர், சரடு கரூணீகர், கை கட்டிக்கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக்கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)

51. காசுக்கார செட்டியார்
52. கடேசர், பட்டம்கட்டி
53. கவுத்தியர்
54. கேரளமுதலி
55. கார்வி
56. கத்ரி
57. கொங்கு வைணவர்
58. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக்கௌண்டர், திருமுடி வேளாளர், தொ ண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர், படைத் தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)

59. கோப்பல வேலம்மா
60. கோட்டேயர்
61. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல் வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

62. குடிகார வேளாளர்
63. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

64. குக வேளாளர்
65. குஞ்சிடிகர்
66. லம்பாடி
67. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

68. லிங்காயத் (ஜங்கமா)
69.மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
70. மலயர்
71. மாலி
72. மானியகார்

73. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோ ட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங் கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருது நகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)

74. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள் ளாளர்கள்
75. மூப்பன்
76. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
77. நாடார்,சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)

78. நகரம்
79. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

80. நன்குடி வேளாளர்
81. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல் வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

82. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட் டம் செங்கோட்டை வட்டத்திலும்)

83. ஓதியா
84. ஊற்று வளநாட்டு வேளாளர்
85. ஓ.பி.எஸ்.வேளாளர்
86. உவச்சர்
87. பய்யூர் கோட்ட வேளாளர்
88. பாமுலு
89. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட் டை வட்டம் நீங்கலாக)

90. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
91. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
92. உத்தமச் செட்டியார் அல்லது பன்னிரண்டாம் செட்டியார் 
93. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
94. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)
95. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல் வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

96. பொடிகார வேளாளர்
97. பூலுவ கவுண்டர்
98. பொராயா
99. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
100. புள்ளுவர் அல்லது பூலூவர்
101. புசலா
102. ரெட்டி (கஞ்சம்)
103. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
104.[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

105. சாலிவாகனா
106. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
107. சவலக்காரர்
108. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
109. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
110. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக் காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)

111. ஸ்ரீசயர்
112. சுந்தரம் செட்டி
113. தொகட்டா வீரசத்திரியர்
114. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல் வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

115. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
116. தொரையர்
117. தோரியர்
118. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
119. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா

120. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும்  நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)

121. உரிக்கார நயக்கர்
122. வல்லம்பர்
123. வால்மீகி
124. வாணியர், வாணியச்செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)

125. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம்  நீங்கலாக)

126. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

127. [வேளர்]]
128. வெள்ளாஞ்செட்டியார்

129. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

130.வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்கா லிய கவுடா உட்பட)

131. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)

132. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப் படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)

133. யவன
134. ஏருகுலா

135. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவா ர் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர் மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.

136. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாக வோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.

*

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்)(பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை 

1. அன்சார்
2. தக்கானி முஸ்லீம்
3. துதிகுலா
4. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)

5. மாப்பிள்ளா
6. ஷேக்
7. சையத்

மிகவும் பிற்பட்ட வகுப்பினர்

1. ஆண்டிப்பண்டாரம்
2. பெஸ்தா, சீவியர்
3. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
4. போயர், ஒட்டர்
5. தாசரி
6. தொம்மரா

7. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)

8. இசை வேளாளர்
9. ஜம்புவானோடை
10. ஜங்கம்
11. ஜோகி
12. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
13. கொரச்சா
14. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)
15. குன்னுவர் மன்னாடி
16. குறும்பர்
17. குறு உறனி செட்டி
18. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக் கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி

19. மோண்ட் கொல்லா
20. மவுண்டாடன் செட்டி
21. மகேந்திரா, மேதரா
22. முட்டலகம்பட்டி
23. நரிக்குறவர்
24. நோக்கர்

25. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)

26. பரவர், பரதவர், பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பி னராக உள்ள  கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்தி ற்கு மாறியவர் உட்பட)

27. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
28. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
29. புன்னன், வேட்டுவ கௌண்டர்
30. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
31. சதாத ஸ்ரீவைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ் ணவ உட்பட)
32. சோழிய செட்டி
33. தெலுங்குப் பட்டி செட்டி
34. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)

35. தொண்டைமான்
36. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
37. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)

38. வேட்டைக்காரர்
39. வேட்டுவக் கௌண்டர்
40. யோகீஸ்வரர்

சீர்மரபினர் பட்டியல்

1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப் புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட ங்கள்)

2.ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்ட ங்கள்)

3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)

4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங் கள்)

5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட் டை, நீலகிரி,  சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)

7. பட்டுதுர்காஸ்
8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)

9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)

10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்கள்)

11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாத புரம் மாவட்டங்கள்)

12. தொம்பர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)

13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)

14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

15. தொங்கபோயர்
16. தொங்கஊர் கொறச்சார்கள்
17. தேவகுடி தலையாரிகள்

18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்ப லூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள் ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர்மற்றும் திருவண் ணாமலை மாவட்டங்கள்)

21. கொரில்லா தோட்ட போயர்
22. குடு தாசரிகள்

23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)

24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)

26.ஜோகிகள்(காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப் புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

27. ஜம்பவனோடை

28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச் சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ங்கள்)

29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவ கங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங் கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திரு வாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும்  நீலகிரி மாவட்டங்கள்)

31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவா ரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச் சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ங்கள்)

34. கலவதிலா போயர்கள்

35.கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சி ராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்

36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல் வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)

37. மொந்த குறவர்கள்

38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்கள்)
42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிரா ப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)

43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்று ம் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

44. பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராம நாத புரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)

46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம் பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)

48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்ப லூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

49. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக் கோட்டை மாவட்டங்கள்)
50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்கள்)

51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண் ணாமலை மாவட்டங்கள்)
53. சாரங்கபள்ளி குறவர்கள்
54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராம நாதபுரம் மாவட்டங்கள்)
56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்ப லூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாத புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திரு வாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண் ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)

59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப் பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

60.உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர்,
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டு க்கல், வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்

63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராம நாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

64. வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்ப லூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத் தூர் மாவட்டங் கள்)

65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

67. வரகநேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

இதர வகையினர்

மேற்கண்ட பட்டியலில் இல்லாத அனைத்து சாதியினரும் முற்ப ட்ட வகுப்பினராகவும், இதர வகையினராகவும் உள்ளனர்.

முற்பட்ட வகுப்பினர்

1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகு ப்பினர் என வகைப்படுத்த ப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.


முதலியார் ஜாதி: இந்த முதலியார் ஜாதியில் . . . துளுவவேளாளர், அகமுடையார், ஆற்காடு முதலியார், வேலூர் முதலியார், செங்குந்த முதலியார் எனத் தொடங்கி கிட்ட‍த்தட்ட‍ 154 பிரிவுகள் வரை செல்கிறது. (தெற்கு தமிழகத்தில் இந்த முதலியார், பிள்ளை என்றழைக்க‍ப்படுவதுண்டு)

பிராமணர்

பிராமண இடத்தில் சைவ மற்றும் வைணவ பிரிவுகள் உண்டு. இதில் ஒவ்வொன்றிலும் தனித்தனி பிரிவுகள் உண்டு. வைணவத்தில் வட களை தென் களை என்ற இருபெரும் பிரிவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

செட்டியார் ஜாதியில், உட்பிருவுகள் உண்டு.

அதேபோல் கவுண்டர், ஜாதியிலும் உட்பிரிவுகள் பல உண்டு.

நன்றி- ஈகரை & இன்று ஒரு தகவல்

இன்னும் சில ஜாதிகள் விடுபட்டுள்ள‍து. அவறையும் தேடிக்கண்டு பிடித்து உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் வெளியிடுகிறேன்.

தமிழ்நாட்டில் மட்டும் ஜாதிகளை கணக்கெடுத்துப்பார்க்கும் போதே இத்தனை ஜாதி கள் இருக்கே! இன்னும் இந்தியா முழுக்க‍ கணக்கெடுத்துப்பார்த்தா, நம்ம‍ ஆயுளே முடிந்துவிடும் போலிருக்கே!

https://www.vidhai2virutcham.com/2013/04/11/

2500 ஆண்டு பழமை தாழி யில் விளை நெல் பொருந்தல் அகழ்வாராய்ச்சி

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 15 ஆக., 2019, முற்பகல் 10:48
பெறுநர்: எனக்கு
Sadanandam Krishnakumar
பொருந்தல் அகழாய்வு நடந்த இடம்:
சேரநாட்டின் தலைநகர் வஞ்சிக்கு செல்லும் பெருவழியில் இவ்வூர் அமைந்துள்ளது. இலக்கியத்தில் "வைகாலி நாட்டு பொருந்தல்" என அழைக்கப்படுகிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பேகனின் ஆட்சிக்குட்பட்ட பகுதி இது. பொருந்தல் அகழாய்வு குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அவ்விடத்தில் அகழாய்வு நடத்திய திரு.கா.ராஜன் அவர்களின் பேட்டி கீழே உள்ளது.
மாலன்: கிறிஸ்துவிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்பது பெருமைக்குரிய செய்திதான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டுமல்லவா?
பேரா.ராஜன்: அறிவியல்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். அதற்கான வாய்ப்பு பழனிக்குப் பக்கத்தில் உள்ள பொருந்தலில் அகழாய்வு செய்தபோது கிடைத்தது. பொருந்தல் அகழ்வாய்வை 2010ல் செய்தோம். ஒரு கல்லறையை தோண்டும்போது வட்டமாக ஒரு தாங்கி (மட்பாண்டங்களை வைக்க ஸ்டாண்ட் போல் பயன்படும் மண் வளையம்) அந்த கல்லறையில் இருந்தது. அதற்கு வைரா என்று பெயர். அதில் பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் வைத்திருந்தார்கள். முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைக்கிறது.
அறிவியல்பூர்வமாக கால கணிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று செய்தோம். தானியங்களை காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவின முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கிமு 490 என்று வந்தது. உலகத்திலேயே பீட்டா அனலிட்டிக்கல் லேபாரட்டரி அமெரிக்காவில்தான் உள்ளது. அங்க அனுப்பியபோது இந்த காலக் கணிப்பு வந்தது..அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.
மாலன்: இது வேளாண்மை செய்து பெறப்பட்ட நெல்லா? அப்படி இருந்தால் அந்தக் காலத்திலேயே தமிழர்கள் வேளாண்முறைகளை அறிந்திருந்தார்கள் என்பது உறுதியாகுமல்லவா, அதனால் கேட்கிறேன். அப்படி இருந்தால் தமிழர்களின் காலம் இன்னும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாற சில நூறாண்டுகள் ஆகியிருக்குமல்லவா?
பேரா.ராஜன்: உண்மைதான் மூன்று வகையான நெல் இருக்கின்றன வேளாண்மை செய்து வளர்க்காமல் தானே விளையக்கூடிய காட்டு நெல் இதற்கு புழுதி நெல் என்ற பெயர்.இரண்டாவது விதைத்து வளர்க்கிற விளைச்சல் நெல் மற்றொன்று நாற்று விட்டுப் பறித்துநடுகின்ற ரீபிளான்டேஷன் நெல்.
காட்டு நெல்லாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். தவிர ஒரு ஆய்வுக் கூடத்தில் மட்டும் செய்யும்போது இந்தக் காலக் கணிப்பு அங்கு நடந்த சிறு தவறாக கூட இருக்கலாம். அப்படி என்றால் காட்டு நெல்லா, பயிர் செய்த நெல்லா என்று தெரிவதற்கு இதை உறுதி செய்ய இன்னொரு சோதனை வேண்டும். நம்முடைய அரசு சட்டப்படி நெல்லை வெளியில் அனுப்பக் கூடாது என்பதால், Indian institute of advance archeological study என்று இலங்கையில் உள்ள மையத்தில் இருந்து டாக்டர் பிரேம திலகர் என்பவரை இங்க வரச் சொன்னோம். அவரோடு பாண்டிச் சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி ஆய்வாளர்களும் சேர்ந்து இது விளைச்சல் நெல்தான். இதன் தாவரவியல் பெயர் ஒரைசா சட்டைவா இண்டிகா என்று உறுதி செய்தார்கள். இதேபோல 4 பெருங்கற்படை சின்னங்களை ஆய்வு செய்தோம். நான்கிலும் நெல் கிடைத்தது.
மாலன்: நான்கையும் ஆய்வு செய்தீர்களா?
ஒரு நெல்லை ஆய்வுக்கு அனுப்பியபோது அதன் காலம் கிமு 450 என்று வந்தது. நான்கையும் ஆய்வுக்கு யிருக்கலாம். ஒன்றை ஆய்வு செய்யவே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் முடியவில்லை.
பொருந்தல் அகழாய்வில் நெல் மட்டுமல்ல, கார்னேலியன் மணிகள், தங்கப் பொருட்கள்,இவையும் கிடைத்தன. இவற்றை வைத்து அந்தக் கல்லறைகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்காக எழுப்ப்ப்பட்டவை என்று நாங்கள நினைத்தோம். ‘பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி’ என்று புறநானுற்றில் வருகிறது அவர்கள் விவசாயத்தில் சிறந்த நிலையை அடைந்து அதன் மூலம் நிறையப் பொருட்களை வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருந்த வாங்கி இருக்கிறார்கள. விலை உயர்ந்த கல், மணிகள் எல்லாம் அவர்களிடம் இருந்தது.
இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது . நீங்கள செய்திருக்கும் ஆய்வுகள் எல்லாம் ஈமக்காட்டில் செய்யப்பட்டவை வாழ்விடத்திலிருந்து செய்தால்தான் இன்னும் உறுதிதயாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றார்கள்.
இதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் கொடுமணல் ஆய்விற்கு மிண்டும் இறங்கினோம் ஆய்வை தொடங்கும் முன்பே மாதிரி எடுக்கும்போதே மண் அடுக்கின் ஒவ்வொரு ஆழத்திலும் 10 செ.மீ, 20 செ.மீ. 50 செ,மீ., என்று தனித்தனியாக எடுக்க வேண்டும் என்ற முடிவு செய்து விட்டோம். அப்படி நாங்கள் எடுத்த மாதிரியின் காலத்தைஅறிவியல் பூர்வமாக ஆராய்ந்தோம். அவை கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை .சேர்ந்தவை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆய்வுக் கூடமும் ஒவ்வொரு வழிமுறையை பின்பற்றுமே அதனால் இந்த கால கணிப்பு சரியாக இருக்குமா என்று. இன்னொரு கேள்வியும் எழுந்தது.
அதற்காக நாங்கள 10 செ.மீ., ஆழத்தில் எடுத்ததை பீட் அனலிட்டிகல் சோதனைக் கூடத்திற்கும் 20 செ., ஆழத்தில் எடுத்த்தை அரிசோனா பல்கலை கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகிறதா என்ற பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்த்தது. அதனால் இதன் காலம் என்பது கி.மு 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம்.

மூத்தகுடி வேளாண்மை விவசாயம் நாகரீகம் 

24 மனை தெலுங்கு செட்டியார் பெயர்கள் உட்பிரிவு வந்தேறி தெலுங்கர்




24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள்
May 29, 2014 by V2V Admin


24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப்



பெயர்கள் :

1. மும்முடிவார்
2. மக்கடவாயவர்
3. கவலவார்
4. மம்மயவர்
5. கணத்திவார்
6. தில்லையவார்
7. பில்லிவங்கரவார்
8. கந்தவங்கரவார்
9. மரட்டியவார்
10. கப்பவார்
11. தரிசிவார்
12. வாஜ்ஜவார்
13. கெந்திவார்
14. நலிவிவார்
15. சுரியவார்
16. மாதளையவார்

17. தவலையவார்
18. கொரகவார்
19. கோலயவார்
20. சொப்பியவார்
21. ராஜபைரவார்
22. பலிவிரிவார்
23. சென்னவார்
24. பச்சைய கோட்டவார்.

முதல் 16 குலங்களும் தங்களுக்குள் பங்காளிகள், இறுதியில் உள்ள 8 குலங்களும் தமக்குள் பங்காளிகள்.

முதல் 16 குலங்கள் இறுதி 8 குலங்களுடன் “கொள்வினை” “கொடுப்பினை” வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் முறையாக வைத்துக்கொள்ளப்பட்டு வருகிறது

கொங்கு பகுதி நாடார் பற்றி மூப்பனார் பட்டம்







aathi tamil <aathi1956@gmail.com>

புத., 14 ஆக., 2019, பிற்பகல் 4:23





பெறுநர்: எனக்கு









Senthil Pandian Nadar
கொங்கு சாணார் படை
விஜயகுமார் தீபன்
இந்தபதிவு கொங்குமண்டலத்தின் பூர்வீக நாடார்களான # கொங்கன் நாடார் # மருதகுல நாடார் # கல்யாணி நாடார் # நாட்டுவன் நாடார் கவனத்திற்கு: கொங்கு பகுதியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தபட்சம் 30000 வாக்குகள் முதல் 100000 வாக்குகள் வரை நம் நாடார்கள் வாக்குகள் நிறைந்துள்ளது ஆனால் இதுவரை நாடார்கள் யாரும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக
# சோபிக்கமுடியவில்லை இந்த அவலநிலையை மாற்ற எந்த நாடார்
# கட்சியும் சரி எந்த நாடார் # சங்கமும் முயற்சி எடுக்கவில்லை இதை கருத்தில் கொண்டேஇரண்டு ஆண்டுகளுக்கு முன் # கொங்கு
# நாடு # சான்றோர்குல # நாடார்
# முன்னேற்ற # சங்கம் தொடங்கப்பட்டு பல பொதுக்கூட்டங்ள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நாடாசமூகத்திற்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என களத்தில் செயல்பட்டுவருகிறது தமிழ் நாடு முழுவதும் பல ஆயிரம் நாடார் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ஓர் அரசியல் விழிப்புணர்வு இயக்கமாக வளர்ந்து வருகிறது குறிப்பாக கொங்கு பகுதியின் நாடார் சமுதாய உறவுகளே! கொங்கு பகுதியில் நாடார்களின் # வீரக்குறீயீடாக நாடார் குல மாவீரன் குணாளன் நாடார் சென்னியப்ப நாடார் கருப்ப சேர்வை நாடார் ஆகியோரும் நாடார்களின்
# வரலாற்று குறியீடாக கருமாபுரம் அவல்பூந்துறை பெருந்துறை திருமுருகன்பூண்டி பாசூர் மடங்களும் # வாழ்வியல் குறீயீடாக ஊர்மூப்பன் பட்டங்களை கொண்ட எண்ணற்ற நிலசுவான்தார்களும்
# ஆன்மீககுறீயீடாக # ஆயிரத்திற்கு மேற்பட்ட குலதெய்வகோவில்களும் இப்படி நாடார்களின் பெருமையை பறைசாற்றும் ஆயிரம் அடையாளங்களும் வரலாற்று எச்சங்களும் மிச்சமாய் மிஞ்சி நிற்கும் வீரம் கொஞ்சி விளையாடும் புரட்சிகர புனிதபூமி தான் கொங்குமண்டலம் ஆகவே கொங்கு பகுதியின் நாடார் சமுதாய இளைஞர்களே! நமக்கான பெருமைகள் கொங்கு மண்டலம் எங்கும் தங்குதடையின்றி தாராளமாய் பரவிக்கிடக்கிறது தன்னம்பிக்கை கொள் தலைநிமிர்ந்து நில் வரலாற்றை மீட்போம் வரலாறு படைப்போம் கொங்கு பகுதியில் 20 நாடார்களை சட்டசபைக்கு அனுப்புவோம் சரித்திரம் படைப்போம் இவன் நிறுவனதலைவர் # உதயா பெ.
# வெங்கடேஷ் நாடார் பொதுசெயலாளர் # தேவராஜ் நாடார் தொடர்புக்கு :8667562734*
நேற்று, பிற்பகல் 3:27



நாடார்:
Posted on ஜூலை 18, 2016





======
இனம்: தமிழ்

மொழி: தமிழ், மலையாளம், துளு

பிரிவுகள்:
=========
1) நாடார் : தமிழகம், கேரளம்

2) சாணார்: தமிழகம், கேரளம்

3) கிராமணி (பிள்ளை- பட்டம்): தமிழகம்

4) ஈழவர் : கேரளம், தமிழகம்

5) தீயர்: கேரளம், தமிழகம்

6) வில்லவர்/பில்லவா: கேரளம், கர்நாடகம் (துளுவம்)

7) நளவர்: ஈழம் (தமிழ்)

8) மூப்பன்: தமிழகம்

நாடார், சாணார் ஆகியோர் தமிழகத்தின் தென் பகுதியிலும், மூப்பன் அல்லது கொங்கு நாடார் மேற்கு மாவட்டங்களிலும் கணிசமாக உள்ளனர். நாடார்கள், கேரளத்தின் தென்பகுதியான திருவிதாங்கூரில் கணிசமாக எண்ணிக்கையினர் ஆவர். இங்கு இவர்கள் மலையாளம் பேசுகிறார்கள்.

கிராமணிகள் பிள்ளை பட்டம் பூண்டு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையினராக வாழ்கிறார்கள்.

ஈழவர் திருவிதாங்கூரில் மலையாளமும், குமரி மாவட்டத்தில் தமிழும் பேசுகிறார்கள்.



தீயர் மலையாளம் மட்டுமே பேசி மலபார் பகுதியில் வாழ்பவர்கள், இவர்களுக்கு சாணார், சோவன் என்ற பெயர்களும் உண்டு.

நளவர் ஈழத்தில் வாழும் நாடார்களுக்கு இணையான சாதியினர் ஆவர். இங்கு இவர்களது மொழி தமிழ்.

வில்லவர் மலையாளம் பேசி காசர்கோடு பகுதியிலும் துளு மொழி பேசி தென் கன்னடம் பகுதியிலும் வாழ்பவர்கள்.

-Asa Sundar

கொங்கில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு காணி உரிமைகளையும்,ஏழு கொப்பரை நிறைய தங்கத்தையும் தந்த கொடை வள்ளல்கள் கொங்கு நாடார்கள் ,திங்களூர் செப்பு பட்டயம் அவிநாசி கோவில் பூமன் நடுகல் கல்வெட்டு செல்ல மூப்பன் 

நாம்தமிழர் வாக்கு தொகுதி க்கு ஐம்பதாயிரம் வரை







aathi tamil <aathi1956@gmail.com>

புத., 14 ஆக., 2019, பிற்பகல் 1:52





பெறுநர்: எனக்கு









//திருவள்ளூர் தொகுதியில் வெற்றிசெல்வி 57,840 வாக்குகள்,
வடசென்னையில் காளியம்மாள் 60,454 வாக்குகள், தென்சென்னையில் செரீன் 50,222 வாக்குகள்,
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரன் 53,027 வாக்குகள்,
காஞ்சிபுரம் தொகுதியில் சிவரஞ்சனி 62,721 வாக்குகள்,
கோவையில் கல்யாணசுந்தரம் 60,400 வாக்குகள்,
திண்டுக்கல்லில் மன்சூர்அலிகான் 54,851 வாக்குகள்,
திருச்சியில் வினோத் 65,286 வாக்குகள்.
பெரம்பலூரில் சாந்தி 53,545 வாக்குகள்,
நாகப்பட்டினத்தில் மாலதி 50,091 வாக்குகள்,
தஞ்சையில் கிருஷ்ணகுமார் 56,707 வாக்குகள்,
சிவகங்கையில் சக்திபிரியா 69,176 வாக்குகள்,
விருதுநகரில் அருள்மொழி தேவன் 52,591 வாக்குகள்,
தென்காசியில் மதிவாணன் 58,855 வாக்குகள் பெற்று பிரமிக்க வைத்து இருந்தனர்.//
//தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்றுள்ளார்.//


வேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்
பதிவு: ஆகஸ்ட் 10, 2019 12:25 IST
 அ- அ+    
வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவின் ஓட்டு வங்கியை சீமானின் நாம் தமிழர் கட்சி பதம் பார்த்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்த போது 39 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
சீமான் மிக துணிச்சலாக புதுமுகங்களை களத்தில் இறக்கினார். கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சீமான் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தனர்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டபோது நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீபலட்சுமியை சீமான் அறிவித்தார். கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒதுங்கிக் கொண்ட நிலையில் சீமான் மட்டும் தன்னம்பிக்கையுடன் தீபலட்சுமியை களம் இறக்கினார்.
தீபலட்சுமியை ஆதரித்து அவர் வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். தி.மு.க. - அ.தி.மு.க.வின் பிரமாண்ட பிரசாரத்திற்கு மத்தியில் அவரது பிரசாரம் எடுபடாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்றுள்ளார். அவரது இந்த வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் தீபலட்சுமி பிரித்த வாக்குகள் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
தீபலட்சுமிக்கு கிடைத்த வாக்குகள் அ.தி.மு.க.வை மட்டுமே பதம் பார்க்கவில்லை. தி.மு.க.வையும் சேர்த்து பதம் பார்த்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தி.மு.க.வின் வாக்கு வித்தியாசத்தை விட 3 மடங்கு அதிகமாக தீபலட்சுமி வாக்குகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் உணர்ச்சி பொங்க வைக்கும் பேச்சுகள் வழக்கமாக வாக்காளர்கள் மத்தியில் பேசப்படும். தமிழர், தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து அவரது தட்டி எழுப்பும் பேச்சுகள் நகர பகுதி மக்களை மட்டுமின்றி கிராமப் பகுதி மக்களையும் சென்று சேர்ந்துள்ளது.
குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சீமானின் பிரசாரமும், பேச்சும் எடுபட்டுள்ளது. இதனால்தான் நாம் தமிழர் கட்சிக்கு சுமார் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.
சீமானுக்கு என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வாக்கு வங்கி உருவாகி வருவதை இது காட்டுவதாக அரசியல் நிபுணர் காசிநாதன் கூறியுள்ளார். இந்த வாக்கு வங்கி, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.
வேலூர் தேர்தலில் தீபலட்சுமி பெற்ற 27 ஆயிரம் வாக்குகளும் அதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாலாற்றகங்கரையில் அமைந்துள்ள அம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தீபலட்சுமி வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே கிராமம் கிராமமாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் தமிழ் தேசியம் பற்றி மக்கள் மத்தியில் முழங்கியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதுபற்றி அவர் கூறுகையில், “வேலூர் தொகுதியில் வாக்களித்த மக்களின் 9,417 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். அந்த 9,417 பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால் அவர்கள் தடம் மாறி சென்று இருக்க மாட்டார்கள். எனக்கு வாக்களித்து இருப்பார்கள்” என்றார்.
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் நாம் தமிழர் கட்சியினர் வேலூருக்கு வந்து தீபலட்சுமிக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தனர். அது இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.
சீமான் 10 கூட்டங்களில் பேசினார். அந்த 10 கூட்டங்களிலும் அவர் இலவச கல்வி, இலவச மருத்துவம், சுத்தமான குடிநீர் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பேசினார். இதுவும் இளைஞர்களை கவர்ந்தது. இதனால்தான் தீபலட்சுமிக்கு 27 ஆயிரம் வாக்குகளை மக்கள் வழங்கி உள்ளனர்.
வேலூர் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரு தரப்பிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் ஒரு இடத்தில் கூட எந்த வாக்காளருக்கும் லஞ்சமாக பணம் கொடுக்கவில்லை.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் கொள்கையாக வைத்துள்ளனர். அவர்களது நேர்மைக்கு வேலூரில் 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்து உள்ளது.
இந்த 27 ஆயிரம் வாக்குகளும் அ.தி.மு.க, தி.மு.க.விடம் இருந்து பிரிக்கப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தொகுதியில் மட்டுமின்றி மற்ற 37 (நீலகிரியில் போட்டியிடவில்லை) பாராளுமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பிரித்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி பிரமிக்க வைத்தனர்.
திருவள்ளூர் தொகுதியில் வெற்றிசெல்வி 57,840 வாக்குகள், வடசென்னையில் காளியம்மாள் 60,454 வாக்குகள், தென்சென்னையில் செரீன் 50,222 வாக்குகள், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரன் 53,027 வாக்குகள், காஞ்சிபுரம் தொகுதியில் சிவரஞ்சனி 62,721 வாக்குகள், கோவையில் கல்யாணசுந்தரம் 60,400 வாக்குகள், திண்டுக்கல்லில் மன்சூர்அலிகான் 54,851 வாக்குகள், திருச்சியில் வினோத் 65,286 வாக்குகள்.
பெரம்பலூரில் சாந்தி 53,545 வாக்குகள், நாகப்பட்டினத்தில் மாலதி 50,091 வாக்குகள், தஞ்சையில் கிருஷ்ணகுமார் 56,707 வாக்குகள், சிவகங்கையில் சக்திபிரியா 69,176 வாக்குகள், விருதுநகரில் அருள்மொழி தேவன் 52,591 வாக்குகள், தென்காசியில் மதிவாணன் 58,855 வாக்குகள் பெற்று பிரமிக்க வைத்து இருந்தனர்.
இப்படி நாம் தமிழர் கட்சி யினர் பிரித்த வாக்குகள் அனைத்துமே தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளையும் பதம் பார்த்தன.
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பிரித்ததை விட சீமானின் நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loksabha elections | vellore constituency |
Seeman | Naam thamizhar katchi |
பாராளுமன்ற தேர்தல் |
வேலூர் தொகுதி | சீமான் |
நாம் தமிழர் கட்சி சீமான்







www.maalaimalar.com › news › election2019 › 2019/08







நாதக தேர்தல் வேட்பாளர்

தனிநாடு கோரிக்கை வரதராஜுலு நாயுடு சங்கரன் நாயர் முன்பே அயோத்தி தாசர்



From: aathi tamil <aathi1956@gmail.com>
Date: புத, 14 ஆக., 2019, 10:02
Subject: தனிநாடு கோரிக்கை வரதராஜுலு நாயுடு சங்கரன் நாயர் முன்பே அயோத்தி தாசர்
To: aathi tamil <aathi1956@gmail.com>



கந்தசாமி அதியமான்
தமிழருக்குத் தனிநாடு வேண்டும் என்று குரல் எழுப்பிய சங்கரன் நாயரும், வரதராசுலு நாயுடுவும்!
தமிழர்கள் ஒரு நாடாக உருப்பெற வேண்டுமென்னும் குரல் முதன்முதலில் எழுந்ததே தமிழரல்லாத சிலரிடம்தான் என்பதும் ஒரு புதிர்தான்! தமிழர் எதிர்ப்பையும் தெலுங்குதேசிய இனச் சார்பையும் மூடிமறைத்துக்கொண்டு பிராமணர் அல்லாதோர் ஒற்றுமை என்று புறத்தே பேசிவந்த நயன்மைக்கட்சியோ, சென்னை மாகாணத்திற்கு இந்திய அரசுக்குள்ளேயே மாநிலத் தன்னாட்சி மட்டுமே தந்தால் போதுமென்று கூறத் தொடங்கியது.
ஆனால், இப்பிராமனர் அல்லாதோர் இயக்கத்துடன் அவ்வளவு தொடர்பில்லாத பிராமணரல்லாத மலையாளியான சி.சங்கரன் நாயர் என்பவர்தான் தமிழர் யாவரும் ஒரு "தனிநாடாக" ( Separate Nation) இருப்பதை முதன்முதலில் வெளிப்படுத்தினார் என்பதும் இன்னொரு வரலாற்றுப் புதிராகும்! தில்லியில் கொழுவிருந்த மாநிலங்களின் மன்றத்தில்( Council of States) 1926 மார்ச் 15 அன்று பேசிய சி.சங்கரன் நாயர்:
" தமிழ்ப்பேசும் மரபினத்தவர் வாழும் பத்து மாவட்டங்களை முழுமையான தன்னாட்சியைக்கொண்ட ஒரு மாநிலமாகக் கட்டமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசு மாட்சிமை தங்கிய ( ஆங்கிலேயப்) பேரரசரின் அரசுக்கு அறிவுரைக்கவேண்டும்" என்று சொன்னார். அத்துடன்,
" இந்தியாவில் அடங்கிய வேறொரு தேசத்திலுள்ள அளவுக்குத் ' தமிழ்த் தேசம் ' அறிவாண்மையுடையது" என்றும் அடித்துக் கூறினார்.
சங்கரன் நாயருக்கு அடுத்து, டாக்டர்.பி.வரதராசுலு நாயுடு, 1926 அக்டோபர் 09 அன்று ' ஒன்றியத் தமிழ் இந்திய நாட்டைத் தோற்றுவிக்கவும் வளர்க்கவும் ' ஓர் அமைப்பைத் தொடங்கினார். ஆயினும், சங்கரன் நாயரும் வரதராசுலு நாயுடுவும் "தமிழருக்குத் தனிநாடு" வேண்டும் என்று எழுப்பிய குரலை யாரும் பொருட்படுத்தவில்லை.
இந்தியத்தேசியத்தில் வீழ்ந்துகிடந்த திரு.வி.கலியாணசுந்தரனார், 1920 சூலையில் தேசபக்தன் ஏட்டை விட்டு, நவசக்தி ஏட்டைத் தொடங்கினார். அப்போது அவர் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றெல்லாம் கூடுதலாக எழுதத் தொடங்கினார். இந்தப்போக்கு அவருடைய ' இந்தியத்தேசியத்தையே கருவறுக்கவல்ல எதிர்நீச்சலாக இருந்தது அவருக்கே புலப்படாதது ஒரு புதிர்தான். அந்தத் தமிழ்த்தேசிய உணர்ச்சியை ஆற்றுப்படுத்தித் தமிழருக்குத் தனி நாட்டுரிமை வேண்டுமென்றோ, தமிழர் ஒரு நாடாக வேண்டுமென்றோ, இயக்கவழியில் நெறிப்படுத்திய போங்கு திரு.வி.க. விடம் இருக்கவில்லை.
தென்னிந்தியச் சிவனியக் கொள்கையின் வழியாக வந்த கருத்துக்களே இவருடைய தமிழ் உணர்வுக்கு ஆற்றுக்கால் அமைத்துக் கொடுத்தன. அச் சிவனியக் கொள்கையின் வழியில் வந்த மறைமலையடிகள், தனித்தமிழை ஓர் இயக்கமாக்கினார். இந்தி எதிர்ப்புக்கு ஊக்கம் தந்தார். இராசாசி கொணர்ந்த இந்தித் திணிப்பை 1948 ஆம் ஆண்டில் சோமசுந்தரப் பாரதியாரும்கூட எதிர்த்தார். இவையாவும், தெளிவான தமிழரின விடுதலைக்குக் கருத்தியலாக மலரவில்லை.
மு.பெ.பாஸ்கரத்தேவர்,
மாநில அமைப்புச் செயலாளர்,
தமிழர் முன்னேற்றக் கழகம்.
( அறிஞர்.குணா எழுதிய தமிழின மீட்சி)
16 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
Kannan Mahalingam மற்றும் 18 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்


Aathimoola Perumal Prakash
1912 லேயே இவர்களின் முன்னோடி அயோத்தி தாசர் தனிநாடு கேட்டுள்ளார் http://vaettoli.blogspo
t.com/2014/07/blog-post_18.html?m=0
அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்


Aathimoola Perumal Prakash
இவர்கள் ஆங்கிலேய அடிமைகள்!
சுதந்திரம் வேண்டாம் என்பதே இவர்களது பிரதான கொள்கை.

அப்போது சுதந்திரம் கொடுப்பதை தள்ளிப்போட வெள்ளைக்காரன் எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்துள்ளனர்.

பறையர் தெலுங்கர் மலையாளி தனித்தமிழ்நாடு ஜஸ்டிஸ் திராவிடம் வந்தேறி

தொல்லியல்துறை வேலைவாய்ப்பு வடயிந்தியர் ஆக்கிரமிப்பு பட்டியல் அகழ்வாராய்ச்சி அகழ்வாய்வு குளறுபடி

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 12 ஆக., 2019, பிற்பகல் 5:42
பெறுநர்: எனக்கு
Paari Saalan
கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தமிழையும், தமிழர் வரலாற்றையும் அழிக்கும் இந்துத்வம் தமிழக வேலைவாய்ப்புகளில் வடவர்களைப் புகுத்தி நம் வேலைகளைப் பறிப்பது பொருளாதார இழப்பாக மட்டுமே இருக்கும். ( நீண்ட நோக்கில் அதுவும் ஒரு இன அழிப்பே).
ஆனால் தமிழக தொல்லியல் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய இடத்திலும் வடவர்களைப் புகுத்துவது தமிழர் வரலாற்றையே அழிப்பதாகும். ஏற்கெனவே அழித்தும், திரித்தும் எழுதப்பட்ட தமிழர் வரலாற்றை பல்வேறு சிரமங்களுக்கிடையில், நெடும் போராட்டங்களுக்கிடையில் மீட்டெடுத்து தமிழே தொன்மையான மொழி, தமிழரே மாந்த இனத்தில் முதல்குடி என நிரூபித்து வரும் நேரத்தில் அனைத்தையும் ஒழித்துக் கட்டவே தொல்லியியல் துறையில் வடவர் திணிப்பு.
ஒன்றுபட்டு எதிர்ப்போம்.
(படம்: நன்றி Ancient Tamil Civilisation)

செய்தி: தினகரன்

மத்திய அரசின் பிற துறைகளை போல் தொல்லியல்துறையில் ஊடுருவும் வடமாநிலத்தவர்கள்: விரட்டியடிக்கப்படும் தமிழக பணியாளர்கள்
வேலூர்: மத்திய தொல்லியல்துறையில் பல்நோக்கு பணியாளர்கள் என்ற பெயரில் வடமாநில இளைஞர்களை பணியமர்த்தும் போக்கு தொடரும் நிலையில், 20 ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்களை ஒப்பந்த பணியாளர் என்று கூறி விரட்டியடிக்கும் போக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1861ம் ஆண்டு இந்தியாவில் நிறைந்துள்ள தொன்மை சின்னங்களை பாதுகாக்கும் வகையில் ஆங்கிலேயரால் தொல்லியல்துறை ஏற்படுத்தப்பட்டது. இத்துறையால் வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. டெல்லியை தலைமையிடமாக கொண்டு தொல்லியல்துறை நாடு முழுவதும் 29 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை வட்டத்தில் சென்னை, செஞ்சி, காஞ்சிபுரம், மாமல்லபுரம், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருமயம், வேலூர் ஆகிய துணை வட்டங்கள் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு துணை வட்டத்திலும் 10க்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொல்லியல்துறையின் கிளாஸ்4 என்ற பணியாளர்களால் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு சென்னை வட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் வரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அந்தந்த நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதுடன், அதன் தூய்மை, சுற்றுலா பயணிகளுக்கு தொன்மை சின்னங்கள் தொடர்பான வரலாற்று தகவல்களை தெரிவித்தல் என பல பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் 32 தினப்படியாக வழங்கப்பட்டது. இது படிப்படியாக ₹500 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசின் இதர துறைகளை போன்றே தொல்லியல்துறையிலும் வடமாநிலத்தவர்களை நிரப்பும் வேலையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக முதலில் தொல்லியல் துறையில் அவுட்சோர்சிங் நடைமுறையை கொண்டு வந்தது.
அதன்படி அவர்களுக்கு ₹250 வரை தினசரி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தங்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும். முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் தொல்லியல்துறையின் இந்த நடவடிக்கை பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து வேலூர் உட்பட சில வட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்து வருகிறது. வழக்கு தொடர்ந்தவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கிளாஸ்4 பணியாளர் என்ற நிலையில் எம்டிஎஸ் என்ற ‘மல்டி பர்பஸ் டாஸ்கிங் ஸ்டாப்’ என்ற பல்நோக்கு பணியாளர் என்ற போர்வையில் தொல்லியல்துறையின் டெல்லி தலைமையகத்தில் பணியாணை வழங்கி அவர்கள் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொல்லியல்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளை மிரட்டும் புதிய பணியாளர்கள்
டெல்லியில் இருந்து பணியாணை பெற்று வந்தவர்கள் இங்குள்ள நினைவுச்சின்னங்கள் குறித்து ஏதும் அறியாதது மட்டுமின்றி, தாங்கள் பணியாற்ற வேண்டிய இடத்துக்கும் செல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவர்களை இங்குள்ள அதிகாரிகளும் கேள்வி கேட்க முடியாத சூழல் உள்ளதாகவும், அப்படியே கேட்டாலும், அவர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் சென்னை சர்க்கிளில் இவ்வாறு நியமனம் பெற்று வந்த ஒரு சிலர் வேலையை விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.
More தமிழகம்
Copyright © Dinakaran.
All rights reserved. Created by
Readwhere CMS முக்கிய செய்தி அரசியல்
03:42 am Aug 07, 2019 | dotcom@dinakaran.com

பழமை கல்வெட்டு சாந்தினி ஹிந்தியா ஹிந்தியர்