செவ்வாய், 3 ஜூலை, 2018

நாகசாமிக்கு மறுப்பு - முனைவர் சொ. சாந்தலிங்கம் (நூல்)




aathi tamil <aathi1956@gmail.com>

பிப். 25


















பெறுநர்: எனக்கு








நாகசாமியின் நாசவேலை" எனும் புத்தகத்தில் பேரா.க.நெடுஞ்செழியன் ஊகித்தது போலவே தமிழின் பழைமையை குறைத்து இரா. நாகசாமி எழுதிய "MIRROR OF TAMIL AND SANSKRIT "என்ற நூலுக்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. நாகசாமியின் நூலுக்கு அவரது மாணவர் சாந்தலிங்கம் அவர்களின் சான்றுகளுடன் கூடிய மறுப்பு நூல்.





14 இணைப்புகள்











பதிலளிக்க அல்லது முன்னனுப்ப, இங்கே கிளிக் செய்யவும்




15 ஜி.பை. இல் 1.28 ஜி.பை. (8%) ஐப் பயன்படுத்தியுள்ளீர்கள்
நிர்வகி
விதிமுறைகள் · தனியுரிமை · திட்டக் கொள்கைகள்
இறுதியாக கணக்கை இயக்கியது: 35 நிமிடத்திற்கு முன்விவரங்கள்







தமிழ் பழமை மோடி பேச்சு ஹிந்தியர் எதிர்ப்பு தஞ்சை பேராசிரியர் விளக்கம் ஆதாரம் சான்று கல்வெட்டு தமிழி பிராமி அசோகர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 25
பெறுநர்: எனக்கு
தமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
8.71K     Subscribe

புலிமான்கோம்பை நடுகல் பொ.ஆ.மு. 600. அசோகருக்கும் முற்பட்ட காலம்

Published :  22 Feb 2018   14:48 IST
Updated :  22 Feb 2018   16:37 IST
தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை


சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் 'வணக்கம்' மட்டுமே சொல்லத் தெரியும்: மோடி


தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து

இது குறித்து 'தி இந்து'விடம் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

மொழி என்பது பல்லாயிரம் காலம் மக்களால் பேசப்பட்டு வந்தாலும் அதற்கான சான்றுகள் கிடைத்தால் தான் அதன் காலத்தை அறிய முடியும். வட இந்தியாவில் கிடைத்த முதன்மையான கல்வெட்டுகளான அசோகன் கல்வெட்டுகளின் மொழி சமஸ்கிருதம் அல்ல. அவை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த 'பாகதம்' என்று சொல்லக்கூடிய 'பிராகிருத மொழி' ஆகும். இதை மகதப்பகுதி மொழி வழக்கு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.

வேதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் குடும்ப மொழியால் பாடல்களாகப் பாடப்பட்டவை. காலத்திற்கு ஏற்ப அவை திருத்தம் பெற்றவை. எனவே வேதங்கள் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றவை என்பது சான்றுகள் அற்ற வாதங்கள். இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருத வழக்கின் கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. அதில், அசோகர் காலத்தில் இருந்த நீர் அணையை அவருக்குப் பின் வந்த ருத்ரதாமன் என்பவர் புதுப்பித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜுனாகரில் இந்த நீர் அணை அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக பிராகிருத மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இருந்து அசோகர் காலத்து பிராகிருதம் அடுத்த 200 ஆண்டுகளில் ருத்ரதாமன் காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதத் தொடங்கி இருப்பதை உணரலாம்.

கி.மு.500-க்கு முற்பட்ட தமிழி

தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளிலும், இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களிலும் எழுதப்பட்டவை, 'தமிழி' எனப்படும் 'தமிழ்-பிராமி' எழுத்துகள் ஆகும். கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகளில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் காலக் கணிப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அசோகனுடைய காலத்திற்கும் 200 ஆண்டுகள் முற்பட்டது.

600 மட்கலன்களில் தமிழ் பிராமி

தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களில் தங்களின் பெயரை எழுதியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கீழடி அகழாய்விலும் கொற்கை கொடுமணல், அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர். கருவூர் போன்ற ஊர்களில் மட்கலன்களில் தமிழ் பிராமியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் மட்டுமே 600 மட்கலன்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உள்ளன.


கொடுமணல் அகழாய்வில் மக்கள் பயன்படுத்திய மட்கலத்தில் எழுத்துப் பொறிப்பு.

மட்கலப் பொறிப்புகளில் சமஸ்கிருதம் இல்லை

வட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.

தமிழில் உருவான சமஸ்கிருதம்

மக்கள் வழக்கில் இ

தமிழ்மொழி முதல்மொழி 

நீட் திணிப்பு பற்றி மருத்துவர் எழிலன் மருத்துவம் கல்வி ஹிந்தியா

aathi1956 aathi1956@gmail.com

பிப். 25
பெறுநர்: எனக்கு

கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படியுங்கள்.....

                        ""நீட் திணிப்பு"""

                   --மரு.நா.எழிலன்,எம்.டி--
                        Ezhilan Naganathan

பொதுப் பட்டியலில் கல்வியை இணைப்பதால் விரும்பத்தகாத அதிகாரக் குவியலும், சில நேரங்களில் பெரிய அளவில் விட்டுக் கொடுக்காத தன்மையும் ஏற்பட்டு சுதந்திரமாகவும்,  தேவைக்கேற்ப விட்டுக்கொடுக்கும் நிகழ்வுத்தன்மையும் இல்லாமல் போய்விடும் (D.S.Kothari Commission (1964-66), NCERT, 1970, p.829-830)

    இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தில் உருவான நாடு. ஒவ்வொரு மாநிலத்தின் கல்வி, சுகாதாரத் தேவைகள் அந்த மாநிலத்தின் பன்முகத்தன்மைக் கொண்டு வேறுபடும். எனவே, அந்த மாநிலத்திற்கு ஏற்படும் குறைகளைக் களைவதற்கு  அந்தந்த  மாநில அரசுகளுக்குத்தான் மிகுதியான வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, தருமபுரி மாவட்டத்தில் ஏற்படும் முடக்குவாத நோயைக் கண்டறிய, உரிய சிகிச்சையளிக்க அதற்கேற்றவாறு சுகாதாரக் கொள்கைகளை அமைக்க  தமிழக அரசுதான் முடிவு செய்ய முடியும்.  இதற்காக, புதுதில்லியில் மத்திய அரசின் கீழ் ஒரு துறை வல்லுநர் ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

இந்த பொதுஅறிவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள், இந்நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பவர்கள், அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு கல்வி, சுகாதாரத் துறைகளை எடுத்துச் சென்று மறுபடியும் மாநிலப் பட்டியலிலேயே  இணைக்கத் தடையாக இருப்பவர்கள்தான் நீட் தேர்வைத் தமிழ்நாட்டின் மீது திணிக்கிறார்கள்.

என்ன தயக்கம்?
    இந்தியா முழுவதும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) இடங்கள் இருக்கும் நிலையில்  தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2500 இடங்களுக்கு நீட் தேர்வு விலக்குக் கொடுக்க என்ன தயக்கம்?
    மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும்  AIIMS, JIPMER  போன்ற நிறுவனங்களுக்கு நீட் தேர்விலிருந்து  விலக்கு அளிக்கும் போது, தமிழ் நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்க என்ன தயக்கம்?
நாடாளுமன்றத் தனிச்சட்டம் வழியாக இந்நிறுவனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுபவர்கள், தமிழ்நாடு  சட்டசபையில் நிறைவேற்றி உயர், உச்ச நீதிமன்றங்களில் வென்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற தமிழ்நாடு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் 2007 அடிப்படையில் நீட் தேர்வு விலக்களிப்பதில் என்ன தயக்கம்?

நீட் குளறுபடிகள் 

    தேர்வு நாளில் கண்காணிப்பு என்ற பெயரில் மனிதநேயமற்ற முறையில் மாணவ மாணவியரைத் துன்புறுத்திய நிகழ்வுகள்.
    ஒரு நுழைவுத் தேர்விற்கு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள் அளித்த குளறுபடிகள்.
    இரட்டைக் குடியிருப்பு சான்றிதழ்  போலியாகப் பெற்று பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கான இடங்களைக் கைப்பற்றியக் குளறுபடிகள் (சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது)

நீட் தேர்வின் குறிக்கோள்கள் நிறைவேறியதா?

    மறைமுகமாக வசூலிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் இப்போது வெளிப்படையாக வசூலிக்கப்படுகிறது.

ஓர் ஆண்டிற்கான மருத்துவக் கல்விக் கட்டணம்  – தமிழ் நாடு

அரசு மருத்துவக் கல்லூரிகள்
தனியார் மருத்துவக் கல்லூரி
நிகர் நிலைப் பல்கலைக்கழகம்
அரசு ஒதுக்கீடு
நிர்வாக ஒதுக்கீடு  
50 ஆயிரம் வரை

12.6 – 13.5 இலட்சம்
67.5-87.8 இலட்சம் 
   21-23 இலட்சம்

      
         

தனியார் கல்வி நிறுவனங்கள் கறுப்புப் பணமாகப் பெற்ற கல்விக் கட்டணத்தை வெள்ளைப் பணமாகப் பெற்று அப்பணத்திற்காகச் செலுத்தும் வரியையும் மாணவர்கள் மீது சுமத்தியுள்ளனர். இதனால், கல்விக் கட்டணம் இரண்டிலிருந்து மூன்று மடங்காக உயர்ந்தள்ளது. இதுதான் நீட் தேர்வின் மாபெரும் சாதனை!
இந்திய மருத்துவக் கழகத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட  தேசிய மருத்துவ ஆணையம் 2018, தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய சாராம்சம் - தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தங்களின் கீழ் உள்ள 60 விழுக்காடு மருத்துவ இடங்களுக்குத் தாங்களாகவே கட்டண அளவை  நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதாகும்.
ஒரு முனையில் நீட், தனியார்  மருத்துவக் கல்லூரிகளின்  பகல் பணக்கொள்ளையைத்  தடுக்கும் என்று கூறிவிட்டு, மறுமுனையில் தனியார் கட்டண வசூலுக்கு வழிவகுக்கும் சட்டங்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு.

நீட் தேர்வு முறைகள் பொது மருத்துவ சேவைகளை  செம்மைப்படுத்துமா?
    தமிழ் நாடு சமூக நீதிக் கொள்கையின் முன்னோடி. இங்கு சமூக நீதிக் கொள்கை வாழ்வியலாக உள்ளது. கல்வி, பொதுச் சுகாதாரம், வேலைவாய்ப்பு அனைத்துமே சமூக நீதித்தளத்தில் இயங்கி வருகிறது. சமூக நீதியின் அடிப்படையில் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை, பொதுச் சுகாதாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. இதனால், தமிழ் நாடு, வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக மருத்துவக் குறியீடுகளிலும்; மனித வள மேம்பாட்டுக் அளவுகோல்களிலும் சிறப்பாக விளங்குகிறது.

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற  அமர்தியா சென் போன்ற வல்லுநர்கள் பிற மாநிலங்களின் இயைந்த வளர்ச்சிக்குத் தமிழ்நாடு சமூக நீதிக் கோட்பாடுகள் வழிகாட்டியாக அமைந்துள்ளன என்று பதிவிட்டு வருகின்றனர்.
மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் கொண்டு 69%  இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை.

முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கு 69%  இடஒதுக்கீட்டுடன் 50%  இடங்களை அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு.

மேற்கூறிய சமூக நீதிக் கொள்கைகளின்படித் தமிழக அரசு  செயல்பட்டதால், இந்திய நாட்டிலேயே மாவட்டத்திற்கு ஒன்று என 24  அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ள ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

இக்கொள்கையை மற்ற மாநிலங்களுக்கும் பின்பற்ற வழி செய்யாமல் தற்போதைய மத்திய அரசும், நீதிமன்றங்களும் தமிழ்நாட்டின் வெற்றிப் பாதையைத் தடுக்;கின்றன.

புதுதில்லியில் உள்ள AIIMS மருத்துவ நிறுவனத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மத்தி;ய அரசினால் நிறுவப்பட்ட  AIIMS நிறுவனங்கள் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவ மனைகளைவிட பின்தங்கிய நிலையில்தான் உள்ளன (டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, ரேமா ரங்கராஜன், 29, மே 2015).

உச்ச நீதிமன்றங்கள் உச்சத்தில் இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்தின் கல்வி, சுகாதாரம் கள நிலவரங்களை ஆராயாமல் நீட் விவகாரத்தில் அவசரத் தீர்ப்புகளை வழங்குகிறது. 

2017ஆம் வருடம் தமிழ்நாட்டில் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப சூழலில் அனிதா போன்று பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 462.

ஒவ்வொரு ஆண்டிற்கும் சமூக, பொருளாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய சூழலில் உள்ள ஏறக்குறைய 500 மாணவர்கள்  ஏணி ஏறும் முயற்சியை நீட் தேர்வு அழித்துவிட்டது.

அரசியலைமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கிய 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை மறைமுகமாக நீட் தாக்குகிறது.
விளக்கம்: ஒவ்வொரு பிரிவில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் உள்ள நடுத்தர பொருளாதாரப் பிரிவினர்களின், செல்வம் படைத்தவர்களின்   பிள்ளைகள்தான் இனித் தமிழ்நாட்டில்  மருத்துவக் கல்வி பயில்வார்கள். ஏனென்றால், ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மேல்தட்டு, நகர்ப்புற சூழலில் வளரும் மாணவர்கள் மட்டுமே ஓராண்டு, ஈராண்டு ஏன் மூன்றாண்டு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்திப் படிக்கும் வாய்ப்புள்ளது, வசதியுள்ளது.

அனிதா போன்று சமூக விளிம்பு நிலைகளில் உள்ள மண்ணின் மைந்தர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிப் பெற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவராகப் பணி செய்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மருத்துவர்களாகப் பயிற்சி பெற்று,  பிறகு அதே அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறைத் தலைவர்களாகவும், மருத்துவக் கல்லூரி முதல்வர்களாகவும் ஓய்வு பெறுவர்.

ஆனால், மேற்கூறிய பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவக் கல்லூரிகளில் சேர்பவர்களிடம், சமூகப் பொறுப்பு, பிறந்த மண்ணில் சேவை செய்யும் மனப்பான்மையை எதிர்பார்ப்பது கடினமே.
நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகளைத் தடுப்பது, கல்விக் கற்கும் முறைகளைச் சீர்திருத்தம் செய்வது இன்றியமையாததேயாகும். ஆனால், ஒரு நுழைவுத்தேர்வு ஒரு மாநிலத்தி;ன் கல்வித் தரத்தை உயர்த்தும் என்று நம்புவது அடிப்படை அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.

இப்போது, நீட் கோழிப்பண்ணை பயிற்சி மையங்கள் தமிழ்நாடு எங்கும் புற்றீசல் போல் பரவியுள்ளன. ரூபாய் ஒரு இலட்சம் முதல் 3 இலட்சம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

எந்தப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களாக இருந்தாலும் அவர்களை கொள்குறி வகை (Objective) கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், பள்ளிக் கூடங்களின்  முக்கியத்துவம் குறைந்து, மாணவர் ஆசிரியர்  தொடர்பு குறைந்து  Conception Textual  Learning  முறை அழிந்து  மருத்துவக் கல்லூரிகளுக்கு இயந்திர மனிதர்கள் போல மாணவர்களை நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்குகின்றன.
ஹார்வர்ட் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வை ரத்து செய்து பள்ளிப் பாடங்களின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்வதனால் அப்பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறன், கல்வி மேம்பாடு, சமூகத் தேவைக்கேற்ப உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன (Will the New SAT Promote Diversity?, Mar 10, 2014, www.theatlandic.com; ‘Harvard study says SATs should be Optional. Why? www.csmonitor.com; ‘Turning the Tide, https/.mcc.gseharvard.edu’)
ஆனால், சமூக நீதியினால் பயன்பெற்று துணைவேந்தர்களான நீட் ஆதரவு கல்வியாளர்களுக்கு இந்த ஆய்வுகள் எட்டுமா?

தீர்வு
கல்வியும், சுகாதாரமும் மாநிலப் பட்டியலுக்கே திரும்பப் பெற தமிழக மக்கள் சமூக அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்.
மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ள நீட் விலக்கு மசோதாவை தியானம் செய்யும் ஆட்சியாளர்கள் முறையாக அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற வழி வகுக்க வேண்டும்.
பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் இணைந்த cut-off    முறையை நிறுவி,  தமிழக அரசாங்க மருத்துவக் கல்லூரிகளுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை அமைய வேண்டும். 

நிறைவு
நீதிக்கட்சிக் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை 1955ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் விரிவுப்படுத்தியபோது, மத்திய அரசின் திட்டக்குழு, மத்திய அரசின் உயர் அலுவலர்கள் கேலிச் செய்தனர். தடைகளைத் தாண்டிப் பெருந்தலைவர் காமராசர் திட்டத்தை நிறைவேற்றினார்.
அதே மத்திய அரசு 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டத்தை நாடு முழமைக்கும் விரிவுபடுத்தி மத்திய அரசின் திட்டமாக அறிவித்தது.
தமிழ்நாடு மக்களே மத்திய அரசு நம்மைவிட 50 வருடம் பின்தங்கியுள்ளது.
நாம் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் சமூக நீதியின் அடிப்படையிலான மருத்துவக் கல்வி சேவை முறைகளை 50 வருடம் பின்னுக்குத் தள்ள வேண்டுமா?

தமிழகம் தண்ணீர் தரவில்லை என பொய்ப்பிரச்சாரம் ஆழியாறு அணை மலையாளி இனவெறி கிருஷ்ணன் குட்டி

aathi1956 aathi1956@gmail.com

பிப். 24
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan

கேரள அரசே! மலையாள இனவெறியன் கிருஷ்ணன் குட்டி மீது நடவடிக்கை எடு!

தமிழக அரசு தண்ணீர் தர மறுப்பதாக பொய்யான தகவலைக் கூறி,  கேரளாவைச் சேர்ந்த ஜனதாதளம் கட்சியைத் சார்ந்த சித்தூர் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் குட்டி என்பவர் சாலை மறியல் நடத்தி, தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி வருகிறார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து வருடம் தோறும் ஒப்பந்த அடிப்படையில் 7.25 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது.

தற்போது அப்பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் வருடம்தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விடுகிறது. இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீர் தான் வழங்க வேண்டும். இதற்கு மே மாதம் வரை கால அவகாசம் இருக்கிறது.

ஆனால் அந்த ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில், தமிழக வாகனங்களை மறித்து போராட்டம் நடத்துவேன் என்றும் கேரள மாநிலம் சித்தூர் தொகுதி ஜனதா தளம் எம்.எல்.ஏ.வான  கிருஷ்ணன் குட்டி அறிவித்தார்.

தற்போது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.

இவர் நேற்று நள்ளிரவு முதலே சனதாதளம் கட்சியினரையும், சில குண்டர்களையும்  திரட்டி தமிழக எல்லையை மறிக்க ஆரம்பித்தார்.

பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு செல்லும் சாலையிலும், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சி புரம் வழியாக திருச்சூர் செல்லும் கேரள எல்லை பகுதியிலும்  சாலையில் அமர்ந்து இவனது கட்சியினர் தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் நுழைய விடாமல் மறித்தனர்.

இதனால் கேரளாவுக்கு காய்கறி, பால் ஏற்றி சென்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவைகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

மேலும், இந்தப் போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த 4 வாகனங்களின் கண்ணாடிகளை சனதா தள குண்டர்களால்  உடைக்கப்பட்டன.  இரு மாநில காவல்துறையினரும்  எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். . தமிழக வாகனங்களை கேளராவுக்கு செல்ல விடாமல் தமிழக  காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

நேற்று இரவு விடிய, விடிய  நடைபெற்ற போராட்டம்  இன்று இரண்டாவது  நாளாக  நீடித்து வருகிறது. இதனால் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

தமிழர்களின் முல்லைப் பெரியாற்று அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும், கம்யூனிஸ்டு், காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அதனை ஏற்க மறுத்து வருகின்றன. அணை உடைந்து விடும் என்று கூறியே 30 ஆண்டுகளாக 136 அடிக்கு மேலே உயர்த்த மறுத்து வருகின்றன.

ஆனால் கேரளாவிற்குச் செல்லும் ஆழியாற்று நீரை எப்போதும் தமிழகம் மறுத்ததில்லை. மழை குறைவு காரணமாக  இந்த ஆண்டு 5.5  டி எம்.சி.  வரை நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 1.75 டி.எம்.சி. தான் நிலுவவையாக உள்ளது.

இந்த உண்மை தெரிந்திருந்தும் கிருஷ்ணன் குட்டி தமிழகம் நீர் தர மறுப்பதாகக் கூறி, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.  தமிழர்கள் மீது மிகப் பெரிய  கலவரத்தை தூண்டி விட  முயன்று வரும் கிருஷ்ணன் குட்டி மீது கேரள அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
.

கேரளா மலையாளி 
ஆறு நதிநீர் 

எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

பாத் என முடியும் ஊர்ப்பெயர் பதி வேர்ச்சொல்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 23
பெறுநர்: எனக்கு

Nakkeeran Balasubramanyam
'பதி' என்பதற்குத் தங்குதல், வதிதல் (வசித்தல்) (To settle down, to dwell) என்றும் பொருளிருக்கின்றன. இந்தப் பொருளிலேயே 'மதுரையம்பதி, தில்லையம்பதி, திருப்பதி' போன்று இன்னும் பலவுள. "பதியெழுவறியாப் பழங்குடிகள்" என்று சிலப்பதிகாரத்தி
ல் கூறப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத் தக்கதே.
Abode என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வதிவிடம், வசிப்பிடம்கூட இச்சொல்லினடியே பிறந்ததே. அவ்வளவு ஏன், நிசாமாபாத், நிசாபராபாத், ஐதராபாத், சிக்கந்தராபாத் (செகந்தராபாத்) அகமதாபாத், அபோதாபாத், ஔரங்காபாத், இசுலாமாபாத் போன்று 'பாத்' என முடியும் பெயர்களைக் கொண்ட எந்த நகரமும் இந்தப் 'பதி' எனும் சொல்லை இணைத்துப் பிறந்தவையே.
இதில் 'பாத்' என முடியும் இந்த நகரப் பெயர்களை, 'ஆபாத்' எனப் பிரித்து, அதாவது நிசாமாபாத் என்பதனை நிசாம் + ஆபாத் (பாரசீக மொழியில் ஆபாத் என்றால் 'நிறுவப்பட்ட' என்று பொருளுண்டு) என்று பிரித்து, நிசாமால் 'நிர்மாணிக்கப்ப
ட்ட' (நிறுவப்பட்ட) நகரம் எனப் பொருள் கூறுதல் பொருத்தமற்றதாகவ
ே படுகிறது. நிசாம் + பாத் (பதி) என்பதை இணைக்கையில் அஃது நிசாமாபாத் (நிசாம் + ஆ + பாத்) என நீட்டிக்கப் பெறுவது இயற்கையே! பதி எனும் சொல்லே நகரைக் குறிக்கையில் ஆபாத் எனக் கூறுவது, அதாவது 'நிசாமால் நிர்மாணிக்கப்பட்டது' எனும் பொருள் தரும் சொல், அவரால் நிறுவப்பட்ட எதையும் குறிக்கலாம்தானே? ஆக, வதிவிடம் எனும் பொருளுடைய 'பதி' எனுஞ் சொல்லே இங்கு பொருத்தமானதாகப் படுகிறது.
இசுலாமாபாத் எனும் நகரை இசுலாம் நிறுவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

துளிநசைப் புள்
ஐயா வைகுண்டர் வழிபாட்டில் அடங்கும் தாங்கல்கள் 'பதி' என்றே குறிக்கப்படுகிறது.
சுவாமித்தோப்பு பதி
அம்பலப்பதி
முட்டப்பதி
பூப்பதி....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 50 நிமிடங்களுக்கு முன்பு
Nakkeeran Balasubramanyam
பதி என்பதற்குப் பல பொருளுண்டு நண்பரே. பாதம் என்பதும் (பதித்தலால் பாதம் எனப்பட்டது) ஒரு பொருளே!
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 49 நிமிடங்களுக்கு முன்பு
Mathi Vanan
மக்கள் பதிந்து வாழும் இடம் பதி.
நகர்வது நகர்?
ஊர்ந்து நிலைப்பட்டது ஊர்?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 26 நிமிடங்களுக்கு முன்பு
Mathi Vanan
வகரம் வடக்கு செல்ல செல்ல பகரமாகிறது. அவர்கள் ஆதிக்கம் உருவாகும்போது, ஊர் புர் ஆகிறது.
காஞ்சிவரம் > காஞ்சிபுரம்
நாக்புர் கான்புர் இதெல்லாம்.நாக ஊர் கான ஊர் ஆக இருந்திருக்குமோ?
பட்டி எல்லாம்.பேட் பட் ஆக திரிந்திருக்குமோ?

வேலைவாய்ப்பு மண்ணின் மைந்தருக்கு பிற மாநிலங்கள்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 23
பெறுநர்: எனக்கு
=========================================
“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்!
மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு!”
=========================================
ஜூனியர் விகடன் ஏட்டில் தமிழ்த்தேசியப்
பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேட்டி!
=========================================

“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்!” என்ற தலைப்பில், ஜூனியர் விகடன்
வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்
அவர்களின் பேட்டியுடன், செய்திக் கட்டுரை வெளி வந்துள்ளது. அதில்
கூறப்பட்டுள்ளதாவது :

ரயில்வே உள்பட தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் துறைகளில் வெளி
மாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்படுவதும், தமிழ் இளைஞர்கள்
புறக்கணிக்கப்படுவதும் திட்டமிட்டு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம்
பேசினோம். “தமிழகத்தில் ரயில்வே, பெல், என்.எல்.சி., ராணுவத் தளவாட
நிறுவனங்கள், பெட்ரோலியத் துறை, வருமானவரித் துறை, சுங்கவரித் துறை,
துறைமுகங்கள் போன்ற இந்திய அரசு தொழிலகங்களில் பல லட்சம் பேர் வேலை
செய்கிறார்கள். சமீபகாலமாக, இந்தத் தொழிலகங்களில் திட்டமிட்டே வெளி
மாநிலத்தவர்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கிறார்கள். வேலைக்கான தேர்வுகளை
வெளி மாநிலத்தவருக்குச் சாதகமாக நடத்துகிறார்கள். இதனால், திறமைகள்
இருந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். இங்கு, வேலைக்கான
அனைத்துத் தேர்வுகளிலும் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு மோசடி
செய்துவருகிறது.

2016-ல், தமிழகத்தில் அஞ்சலகப் பணிக்காகத் தேர்வு நடந்தது. அதில்
அரியானா, மகாராஷ்ட்ரா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் தமிழில்
25-க்கு 25 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்வாகினர். ஆனால், தமிழகத்தில்
யாருமே 25 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. வினாத்தாள்களும், அதற்குரிய
பதில்களும் வெளி மாநிலத்தவருக்கு முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதான் தற்போது தமிழகத்தில் நடந்துகொண்டு வருகிறது. ‘மொழிவாரி மாநிலம்’
உருவாக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமே, அந்தந்த மாநில மக்கள்
வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெற
வேண்டும் என்பதற்காகத்தான். கர்நாடகாவில், அந்த மாநில மக்களுக்கு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்காக, 1983-ம் ஆண்டு, ‘சரோஜினி மகிசி’
என்ற குழுவைக் கர்நாடக அரசு அமைத்தது. தற்போதுகூட, இமாச்சலப்பிரதேச
சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இமாச்சலப் பிரதேசத்தின் மண்ணின் மக்களுக்கு
மாநில அரசுத்துறைகளில் 70 சதவிகிதம் பணி ஒதுக்கீடு தருவதாக
உறுதியளித்துள்ளது.

2015-ம் ஆண்டு, குஜராத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 116 பேர்
பணியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களில், வெறும் 15 பேர் மட்டுமே
குஜராத்தின் மைந்தர்கள். மற்ற 101 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதனை எதிர்த்து அம்மாநில இளைஞர்கள், ‘85 சதவிகிதம் பொறியாளர்கள் குஜராத்
மண்ணைச் சேர்ந்தவர்களாக மட்டும்தான் இருக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்குக்கு, குஜராத் அரசும் ஆதரவு தந்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில மக்கள் தங்களின் உரிமைகளை
விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனைத்து
விஷயங்களிலும் நம் உரிமையை விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்
கவலையுடன்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி,
“திருச்சி பெல் நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 52-ல்,
16 இடங்களில் தமிழர்களும், 36 இடங்களில் வெளி மாநிலத்தவர்களும்
பணியமர்த்தப்பட்டனர். 2011-ம் ஆண்டு, மொத்தப் பணியிடங்கள் 163 பேரில்,
118 பேர் வெளிமாநிலத்தவர். 45 பேர்தான் தமிழர்கள். ரயில்வே பணியாளர்
தேர்வாணையத்தின் மூலம் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 2010-11-ம்
ஆண்டில் 85 சதவிகிதமும் 2011-12-ல் 87 சதவிகிதமும் 2012-13-ல் 82
சதவிகிதமும் 2013-14-ல் 83 சதவிகிதமும் வெளி மாநிலத்தவர்கள்.

அதேபோல, வருமானவரித் துறையில், 2013-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 42.
அதில், தமிழர்கள் இருவர் மட்டும்தான். 2014-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள்
78. அதில், மூன்று பேர் தமிழர்கள்,  75 பேர் வெளி மாநிலத்தவர்கள்.
இப்படித்தான், தமிழகத்தில் மத்திய அரசுத் தொழிலகங்களில் தமிழர்கள்
பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டு தென்னக ரயில்வே மற்றும்
ஐ.சி.எஃப்-க்கான தேர்வை ஆர்.ஆர்.சி நடத்தியபோது, இந்தியா
முழுவதிலிருந்தும் 11 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.
அதில், சுமார் 2,27,000 தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன’’
என்றார் அருணபாரதி.

தமிழக அரசுத் துறைகளில் 100 சதவிகிதமும், தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய
அரசின் தொழிலகம் மற்றும் தனியார் துறைகளில் 90 சதவிகிதமும்
தமிழர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் கோரிக்கையாகத் தூக்கிப்
பிடிக்கிறார்கள்”.

இவ்வாறு அச்செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இணையத்தில் படிக்க:
http://www.vikatan.com/juniorvikatan/2017-nov-12/society/136015-ignorance-of-tamil-youths-employment.html

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannotam.com
=====================================
இணையம்: tamizhthesiyam.com
=====================================
பிரமாநிலத்தவர் மத்திய அரசு நடுவணரசு ஹிந்தியா ஹிந்தியர் 

குறவர் ஆயர் வேட்டுவர் லிருந்து உழவர் பிறகு மள்ளர் பிறகு மறவர் பிறகு கள்ளர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 23
பெறுநர்: எனக்கு
Madurai Devan Sundarapandi Nethai
நீங்கதான சொன்னீங்க கள்ளனும் மறவனும் ஒன்னுனு அப்ப பாண்டியன்னு சொன்னா மட்டும் ஏன் எரியுது?

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 6 பேருடன் இருக்கிறார்.
# கள்ளரின் கள்வர்_கள்வன் வழி பாண்டியரை ஆட்டைய போடும் டுபாக்கூறை தோலுரிக்கும் என் பதிவுகள் நிறைவடைகிறது...
+++
பதிவு கோஸ் To Madurai Devan Sundarapandi Nethai
அதான நியாயமான கேள்வி சுந்தரபாண்டி பங்காளி... அப்படியே இளையா செம்பியநாடு (மறவர்) என்பவர் குறவர்,வேட்டுவர்,ஆயர்,மறவர் ஆகியோரின் பிள்ளைதான் மருத நிலத்து உழவரில் உறுவான நிலத்தை முதலில் உழுத கருங்களமர்களான காராள உழவர்_பள்ளர் என்கிறார்..
# மறவர் பலரும் அதற்கு லைக் இட்டனர்... பின்ன ஏன் அவ்உழவன் தன்னை
# பாண்டியன்னா மறவனுக்கு பின்னாடி எரியுதுன்னு ஒரு பதிவும் நீங்க போடனும்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிற
ேன்...
சோறு சாப்பிடாம நாம வேற எதை இன்றுவரை சாப்பிடுறோம்னும் மறவனுக்கெல்லாம் அம்புட்டு அதப்பா என்றும் ஒரு ட்விஸ்டும் கேள்வியா வச்சு பதிவு போட்டு வெளும்யா.....
# களப்படை களமிரங்குனாதான் இதற்கு முடிவு பிறக்கும்...
+++
+++
மேலும்,
பெயரில் மட்டுமே பாண்டி என வைக்க உரிமையான சுந்தர பாண்டி பங்காளியாகிய நீங்க பழங்காலத்திலும் கூலிக்கு வேலை செய்த வேந்தரின் காட்டுப்படையாகிய நீங்க தற்போதும் ஹிந்திய அரசின் இராணுவ முரட்டு பிரிவு, அதனால தங்களுக்கு இன்னும் எளிமையா புரியரதுபோல சொல்லித்தாரேன்,
1.குறிஞ்சி குறவர்,வேட்டுவர்,
முல்லை ஆயர்,பாலை வேட்டுவரில் இருந்து உதித்து மருதத்தில் உருவான # மாபெரும் அரசில் காட்டுப்படையாக இருந்த பழங்குடிகளின் வழி # பலபட்டரை மறவன் தன்னை பாண்டியன் எனும்போது,
2.அதே போல குறிஞ்சி,முல்லை
,பாலை தினை மாந்தரில் உருவான காட்டுப்படை மறவரில் இருந்து பிற்காலத்தில் உருவான பல # பலபட்ரை இன்றைய # கள்ளர் தன்னையும் பாண்டியன் என கோரியும்,சோழன் என்று கூவியும் திரியும்போது,
3.அதே போல குறிஞ்சி,முல்லை
,பாலை, குடிகளில் தோன்றிய, மற்றும் பலபட்ரை சோழ காட்டுப்படை கள்ளருக்கு முன்பே உருவான மருதத்தின் முதல் நிலத்தை உழுத காராள மள்ளன் எனும் பள்ளமான இடத்து பள்ளன் ஏன் தன்னை
# பாண்டியன் எனக்கூடாது....
உங்க மூக்குக்கு கீழ உள்ளது மெய்யாலுமே முடிதான்னா..? எங்க இதை உங்க டைம் லைன்ல பதிவா போட்டு கதற விடுங்க பழங்குடிகளின் வழி # பலபட்ரை_மறவர்களை பார்ப்போம்...
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்ல அகம்படி # தேவன் ...
# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை ..
(பதிவை படிப்பவர்கள் ஒன்றை மறந்துடக்கூடாது,பிற்கால கள்ளர் பாண்டியராம். ஹிஹிஹி அதனால்தான் இப்பதிவு எழுதவேண்டியதாகுது)
நானும் எம்புட்டுநாள்தான் அடுத்த சாதியவே வம்பிலுக்குறதுங்குறேன் அதனால ஒரு ச்சேஞ்சிக்கு....
+++
+++
கள்ளர் ஆப்ரேசன் இனிதே நிறைவடைந்தது..
சிலநாள் கேப் விட முடிவு...
1 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் மற்றும் 3 பேர்
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
நாம் மள்ளர் அல்லது நாம் தமிழர் என சொல்லிட்டு யாரானும் பாண்டியன் எனலாம்....
அல்லது பிற்கால காட்டுப்படை சோழர் பிரிவு என்தோடு நிருத்திக்கனும்....
கள்ளர்குலகருப்பன் சுதாகர்
 Madurai Devan Sundarapandi Nethai