புதன், 20 செப்டம்பர், 2017

ஜப்பான் பெயர் கண்ணகி புனிதக்கன்னி சப்பான் வேர்ச்சொல் சொல்லாய்வு

Ingersol Selvaraj
கண்ணகி かんなぎ (Kannagi)
கண்ணகி என்ற சொல் ஜப்பானிய நாட்டில் இருக்கிறது அது புனித கன்னி என்ற
பொருளில் சில வழிபாட்டு முறைகளில் இன்றும் தொடர்ந்து வருகிறது. தமிழனின்
வரலாறு எங்கோ நமக்கே தெரியாமல் காக்கப்படுகிறது.
Japanese word Kannagi means diviner or Shrine maiden, Which refer
virgin who take various rites of purity and chastity, and undergo
various forms of physical and mental training. Also practice sealing
and purification rituals, which are highly form-based and symbolic,
and are used to bless, purify, or exorcise vengeful spirits.

வைகோ நாயுடு விடம் பாஸ்போட் உள்ளது சீமான் பழ.நெடுமாறன் கிடையாது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தோர் கடவுச்சீட்டு

மா.சாந்தகுமார் தமிழர்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளே போனால் முதலில் முடக்கப்படுவது
பாஸ்போட்தான் , வைகோவுக்கு மட்டும் எப்படி பாஸ்போட் கையிலே வைத்துள்ளார்
தெரிந்தவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்

கம்பம் நூற்றுக்கணக்கான ஏக்கர் மலையாளி ஆக்கிரமிப்பு எல்லை கம்பமெட்டு 6 இடங்களில் கேரளா

தமிழக-கேரள எல்லையான கம்பம் மெட்டு பகுதியில் இரு மாநில அதிகாரிகள்
இணைந்து புதன்கிழமை நடத்திய நில அளவீட்டின்போது (சர்வே) தமிழக வனப்
பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கேரளா
ஆக்கிரமித்திருந்தது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம்-கம்பம் மெட்டு பகுதியில் தமிழக வனத்துறைக்கு
சொந்தமான இடத்தில் கடந்த பிப்ரவரியில் திடீரென கேரள சுங்கத் துறையினர்
சோதனைச் சாவடி அமைக்க தாற்காலிக கன்டெய்னரை நிறுத்தினர். அதை தடுத்த
தமிழக வனத்துறையினர் தாக்கப்பட்டனர். இப்பிரச்னை தொடர்பாக தேனி, இடுக்கி
மாவட்ட உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், முறையான ஆவணங்களுடன்
தமிழக-கேரள எல்லைப் பகுதியை இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக நில அளவீடு
செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை தமிழக-கேரள
அதிகாரிகள் கூட்டாக நில அளவைப் பணியை தொடங்கினர்.
தமிழகத்தின் சார்பில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்
உள்ளிட்ட அதிகாரிகளும், கேரளத்தின் சார்பில், தேவிகுளம் துணை ஆட்சியர்
ஸ்ரீராம் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் இப்பணியில் கலந்து
கொண்டனர்.
முதல் கட்டமாக கம்பம் மெட்டு அருகே உள்ள மந்திப்பாறை நாவல் பள்ளம் என்ற
இடத்திலிருந்து பணி தொடங்கப்பட்டது. அப்போது, தமிழக வனத்துறையின் பல நூறு
ஏக்கர் நிலங்களை கேரளாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அரசு ஆக்கிரமித்து
குடியிருப்புகள் கட்டியும், ஏலக்காய், மிளகு விவசாயம் செய்து வருவதும்
தெரியவந்தது. மேலும் கேரள காவல்துறையும், வனத்துறையும் ஆக்கிரமிப்பு
செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் 6 இடங்களில் நில அளவை கல்லை
கேரளா ஆக்கிரமித்திருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து ராமக்கல் மெட்டு பகுதி வரை இரு மாநில எல்லை குறித்த நில அளவீடு
நடத்தப்படும் என்று இரு தரப்பு அதிகாரிகளும் கூட்டாக தெரிவித்தனர்.
இந்தப் பணியில் ஜி.பி.எஸ். போன்ற நவீன தொழில்நுட்பமும், பழமையான பட்டையம்
மற்றும் வரைபடங்களும் பயன்படுத்தப்பட்டன.
இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறியதாவது: கம்பம் மெட்டு பகுதியில் நீண்ட
காலத்துக்குப் பின் இரு மாநில அதிகாரிகள் தலைமையில் நில அளவீடு பணி
தொடங்கியுள்ளது. இப்பணியின்போது அடையாளம் தெரிவதற்காக அளவீடு கல் நட
நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதற்கு கேரள அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கு
பிரச்னையை சுட்டிக்காட்டி மறுத்துவிட்டனர். மேலும், இரு மாநில வரை
படங்களில் அசல் நில அளவீடு கல் புள்ளியை குறித்து வைத்து கொள்வது
என்றும், பின்னர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்துவிட்டு
அதன்பின் கல் நடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
கம்பம் மெட்டு பகுதியில் புதன்கிழமை நில அளவீடு பணியில் ஈடுபட்ட தமிழக-
கேரள அதிகாரிகள்.

சீமான் மாமியார் ஆசாரி மாமனார் மறவர் பொய்பிரச்சாரம் நாதக நாம்தமிழர்

# நாம்_தமிழர் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.....(கட்சியினர் அல்ல
ஆதரவாளர் மட்டும்)
நாம் தமிழர் கட்சியினர் சாதி ரீதியான விஷயங்களை வெளிப்படையாக பேசமாட்டார்கள்,
அது அவர்களது சமகால அரசியல் நிலைப்பாடு, அதற்கு காரணமிருக்கலாம்..
அது நமக்கு தேவையில்லை....
++++++++++++
ஆனாலும் அதிகம் இனையத்தில் இருக்கும் ஆதரவாளர்களாகிய நாம் செய்ய வேண்டிய
பல வேளைகளோடு இப்ப நான் சொல்லும் விஷயத்தை சேர்த்து செய்ய உதவுங்கள்....
# வன்னி_தமிழச்சி எனும் பேஜ்லயாகட்டும் பல போலி ஷத்திரிய பொறம்போக்குகளாக
ட்டும் அண்ணன் சீமானை சைமன் எனவும் மலையாளி எனவும் தொடர்ந்து அவதூறு
பரப்புவதோடு, மற்றும் மறவர் காளிமுத்து அவர்களுக்கும் அவர் துணைவியார்
கம்மாளர் குலத்தில் பிறந்தவரே இத்தம்பதிகளுக்கு பிறந்த அண்ணியார்
கயல்விழி அவர்களை தெலுங்கர் எனவும் பரப்பி வருகின்றனர்....
இதுபோன்றவர்களை இனைய வெளியில் கண்டால், சித்தூரை சேர்ந்த ஒரு சுத்த
தெலுங்கு ரெட்டியார் பேத்தியை திருமணம் செய்துள்ள # அரை_வடுகர்_அன்ப
ுமனியின் பாமக கட்சியிலிருப்பவ
னும்,தன் சாதி பெயரோடே சமஸ்கிருதத்தை சேர்த்துக்கொண்ட
ு பிறரை # சூத்திரர் என்றும் தலித் என்றும் உளரும்
# அரைவடுகருங்களுக்கும் அண்ணன் சீமானையும் அவர் குடும்பத்தையும் பேச என்ன
தகுதிடா இருக்கு எச்சைகளா என பச்சையா கேளுங்க....
அல்லது அங்கு என்னை மென்சன் செய்ங்க....

வடுகர் எதிர்த்த பாண்டியர் படைவீரர் மறவர் நடுகல் பூலித்தேவர் முன்னோர்

Arun Sethuram
நாயக்கர் பாண்டியரிடம் இருந்து மதுரைய கைபற்றினரா டெல்லி சுல்தானிடம்
இருந்து கை பற்றினரா இதுக்கு விடை தெரிந்தாலே போதும் பிற்கால பாண்டியர்
கல்வெட்டில் வடுக படைய எதிர்த்து இறந்த பத்து வீரர்க்கு எடுக்கபட்ட
நடுகல்லு இன்றும் தொல்லியில் வசம் உள்ளது அத்து பத்து வீரருமே கொண்டைய
கோட்டை மறவன்
பாண்டிய தளபதிகளில் ஒருவனான வரகுண சிந்தாமணி பூலித்தேவன் என்ற மன்னனுக்கு
பாண்டியன் கொடுத்த நாடுதான் பூழிநாடு இந்த வம்சாவழி கடைசி மன்னன்தான்
ஆங்கிலயரை எதிர்த்த காத்தப்ப பூலிதேவன் இது போல தான் மற்ற மறவ மன்னர்கள்
பாண்டியனால் நாடு பெற்றனர் இதை அப்புடி திரித்து நாயக்கனால் நாடு
பெற்றோம் கதை விடுறானுக

பாண்டியர் டெல்லி சுல்தான் போர் வாரிசுரிமை மாலிக்காபூர் உலுக்கான்

பாண்டியப் பேரரசை வீழ்த்தியது முகமதியர்களா? வடுகர்களா?
++++++++
பிற்கால பாண்டிய வேந்தனான குலசேகர பாண்டியனுக்கு சுந்தரபாண்டியன்,
வீரபாண்டியன் என்று இரண்டு புதல்வர்கள். தந்தை ஆட்சி புரியும் காலம்
தொட்டே இருவரும் இளவரசர்களாக ஆட்சி புரிந்தனர். வீரபாண்டியன் கி.பி. 1296
- 97 ல் இளவரசுப் பட்டம் எய்தினான். அதற்கு அய்ந்தாறு வருடங்களுக்குப்
பிறகு கி.பி. 1303 ல் சுந்தரபாண்டியன் பட்டம் ஏற்றான். அரசுரிமைக்காக
இவ்விருவருக்கும் மூண்ட பொறாமையும், பகையும் பாண்டிய நாட்டின்
வீழ்ச்சிக்கு அடிகோலியது.
"வீரபாண்டியனின் திறமையையும், வீரத்தையும் கண்டு அவனே தனக்குப் பின்
அரசனாக வேண்டும் என மன்னர் குலசேகரன் பணித்தான். இதனால் வெகுண்ட
சுந்தரபாண்டியன் தந்தையை கொலை செய்து விட்டு மதுரையில் முடிசூட்டிக்
கொண்டான். இது நடந்தது கி.பி.1310ல் . சகோதர யுத்தம் ஆரம்பமாயிற்று.
வீரபாண்டியனுக்க
ு ஆதரவாக குலசேகரத் தேவரின் மகள் வயிற்றுப் பேரனும் கருர் பகுதிக்குத்
தலைவனுமான "மானர் பெருமான் " உதவி புரிந்தான். சுந்தர பாண்டியனோ டில்லி
சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் தஞ்சம் புகுந்தான். வீரபாண்டியன்
பாண்டியர் அரியணை ஏறினான்.
சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூரின் உதவியை
நாடினான். அப்போது மாலிக்காபூர் போசள நாட்டை வென்று அதன் தலைநகரான துவார
சமுத்திரத்தை கைப்பற்றியிருந்
தான். பாண்டிய சகோதரர்களுக்குள் சண்டை மூண்டிருந்த விஷயங்களை அறிந்து
கொண்ட மாலிக்காபூர் மதுரையின் மீது படையெடுத்தான்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாண்டியப் பேரரசை வீழ்த்த அயலாரை
அழைத்து வந்தது சுந்தரபாண்டியனே. மாலிக்காபூர் படையெடுத்து வந்து மதுரையை
சூறையாடினான். மாலிக் கபூர் மதுரையில் நுழைந்தவுடன் பாண்டிய அரசன்
வீரபாண்டியன் தன் பரிவாரங்களோடு ஓடி விட்டான் என்று ஜியாவுதீன் பார்னி
குறிப்பிடுகிறார். வரலாற்றறிஞர் அமீர் குஸ்ரு எழுதுகிறார், "பாண்டிய
நாட்டிலிருந்து 512 யானைகள், 5000 குதிரைகள், 500 மணங்குப் பொன்,
முத்துகள், அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளையும் மாலிக்காபூர் கொள்ளையடித்து
சென்றான்" என்று பதிவு செய்கிறார்.
மாலிக்காபூர் சென்ற பிறகு மீண்டும் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும்
போட்டி போட்டுக் கொண்டு சிறிது காலம் ஆண்டனர். பாண்டிய நாட்டில் எங்கும்
குழப்பம் மலிந்திருந்தது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு
திருவாங்கூர் பகுதியை ஆண்டு வந்த சேரமன்னன் இரவிவர்மன் பாண்டிய நாட்டின்
மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினான். இது நடந்தது கி.பி.
1311-12 ல் .
இரவிவர்மன் தனது படைகளுடன் வடக்கே காஞ்சி வரை சென்றான். வேகவதி ஆற்றில்
இரண்டாம் முறையாக சேரன் முடிசூட்டு விழா நடத்தியதை வரதராஜ சுவாமி
கல்வெட்டு ஒன்று கூறுகிறது. தொண்டை மண்டலம் வரை பரவியிருந்த பாண்டியர்
ஆதிக்கம் சேரனால் ஒடுக்கப்பட்டது. சென்னைக்கருகிலுள்ள பூவிருந்தவல்லி
பெருமாள் கோவிலில் பாண்டியரது கயல்கள் மீது சேரனின் அங்குசம் பாய்வது
போன்ற சிற்பம் இன்றும் உள்ளது.
பிறகு சேரனை வீழ்த்தி இந்தப் பகுதியை காகதீய அரசன் பிரதாபருத்ரன்
கைப்பற்றினான். அடுத்தடுத்த வந்த தோல்விகளினால் பாண்டியர் ஆதிக்கம்
ஆட்டம் கண்டது. காஞ்சிப் பகுதியை பாண்டியர் இழந்தனர். ஆங்காங்கே
சிற்றரசர்கள் சுயத்தன்மை பெறத் தொடங்கினர். வட ஆர்க்காடு பகுதியில்
சம்புவராயர்களும், தென்னார்க்காடு பகுதியில் சேதிராயரும், பாண்டிய
நாட்டில் சில பகுதிகளில் வாணாதிராயர்களும் சிற்றரசர்களாக சுயேட்சையாக
இயங்கத் தொடங்கினர்.
இச் சூழ்நிலையில் தென்னிந்தியாவில் மேலும் இரு முகமதியப் படையெடுப்புகள்
நடந்தன. கி.பி. 1319 ல் குஸ்ரோ கான் படையெடுப்பு . கி.பி. 1323ல் முகமது
பின் துக்ளக் என்றழைக்கப்பட்ட உலுக்கான் படையெடுப்பு . உலுக்கான் மதுரையை
வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவன் தான் பாண்டிய அரசனை வென்று டில்லி
சுல்தான்களின் ஆட்சியை முதன் முதலில் 1323ல் நிறுவினான்.
பாண்டிய நாடு துக்ளக் இராச்சியத்தின் 23 மாகாணங்களில் ஒன்றாக
இணைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு டில்லி சுல்தான் தொடர்பை
அகற்றிவிட்டு ஜலாலுதீன் ஆசன்ஷா தன்னை மதுரை சுல்தானாக பிரகடனப்படுத்திக்
கொண்டான். மதுரையில் சுல்தான்கள் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1335 முதல்
1378 வரை மாபார் சுல்தான்கள் ஆண்டனர். ஜலாலுதீனுக்குப் பிறகு அலாவுதீன்
உடாஜி, குதுபுதீன், கியா சுதீன், நாசிருதீன், அடில்ஷா, பக்ருதீன்
முபாரக்ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா போன்றோர் மதுரை சுல்தான்களாக
அரசாண்டனர்.
தொகுப்பாக...
1. மாறவர்மன் குலசேகர பாண்டியன் தன் மகனான சுந்தரபாண்டியனால் கொலை செய்யப்படுகிறான்
2. சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் அரசரிமைப் போர் ஏற்படுகிறது.
3. வீரபாண்டியனின் ஆட்சிக்கெதிராக டில்லி சுல்தான் உதவியை நாடி பாண்டியப்
பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமானான் சுந்தரபாண்டியன்.
4. தொடர்ச்சியான முகமதியப் படையெடுப்புகளால் பாண்டியர் ஆட்சி
வீழ்த்தப்பட்டு மதுரையில் சுல்தான் ஆட்சி தொடங்கியது.
பாண்டியரை வீழ்த்தி,பாண்டியர் ஆட்சியை அழித்தது வடுகரான விசய நகரப்
பேரரசு என்பது வரலாற்று மோசடி .பின் எப்படி விசயநகரப் பேரரசு
உருவாயிற்று? எப்படி மதுரையை வடுகர்கள் ஆண்டனர்...?

கீழடி ஆய்வு ஸ்ரீராம் தலைமை இருட்டிப்பு மந்தம் அகழ்வாராய்ச்சி நாகரீகம்

கீழடியில் நடந்த மூன்றாம் கட்ட அகழ்வில் நகர நாகரீகம் தொடர்பாக எதுவுமே
கிடைக்கவில்லை என்று தற்போது அகழ்வை தலைமைதாங்கி நடத்தும் ஸ்ரீராம்
தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை எப்படி தவறானது, எவ்வாறும் மத்திய அரசின்
எண்ணங்களை செய்ய துடித்து கொண்டிருக்கிறார் என்பதை சு.வே வின் கேள்வி
பதில் அற்புதமாக தோலுரித்து காட்டுகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய
கேள்வி-பதில்.
கீழடி; மூன்றாம் கட்ட ஆய்வும், முடித்துவைக்கும் ஏற்பாடும்.
கேள்வி; கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வின் முடிவுகளை அதன் பொறுப்பாளர்
பு.சு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமான தங்களின் கருத்தென்ன?
மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டவுடன் கீழடி அகழாய்வு மையம் ஒரு
இராணுவமுகாம் போல மாற்றப்பட்டது. அங்கு என்ன நடக்கிறது என்று எந்தவிதமான
தகவலும் ஊடகத்துக்கும், பார்வையாளருக்கும் எந்தக்கட்டத்திலும்
வெளியிடப்படவில்லை. ஒளிப்பதிவு கருவிகள் எதுவும் அகழாய்வுக்குழிகளை
நெருங்காமல் அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் பார்த்துக் கொண்டார். இப்பணியில்
ஈடுபட்டுள்ள கடை நிலை ஊழியர்கூட பார்வையாளர்களிடம் பேச அவர் அனுமதிக்க
வில்லை. சரி, என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று தான் நாங்களும்
காத்திருந்தோம். இப்பொழுது முழு உண்மையும் வெளிவந்து விட்டது.
இந்த ஆண்டின் ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். எஎன்ன
நோக்கத்துக்காக அமர்நாத் இராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு இவர் அப்பணிக்கு
அமர்த்தப்பட்டாரோ அந்த நோக்கத்தைதெளிவாக நிறைவேற்றியுள்ளார்.
“இவ்விடத்தில் (கீழடியில்) கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ
கட்டப்பெறவில்லை என்று தெரியவருகிறது” என்ற முடிவினை அறிவித்துள்ளார்.
மத்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது போல கீழடி அகழாய்வை
இழுத்துமூடவேண்டிய வாசகத்தை ஸ்ரீராமன் எழுதிமுடித்துள்
ளார். அவரை கொண்டுவந்ததன் நோக்கம் நிறைவடைந்தது.
இந்த ஆண்டு நடந்த ஆய்வினைப்பற்றிய உங்களின் கருத்தென்ன?
மூன்றாம் ஆண்டு அகழாய்வுக்கு அனுமதி மறுப்பு, பின்னர் ஆய்வின் தலைவர்
அமர்நாத் இராமகிருஷ்ணன் இடமாற்றம், ஸ்ரீராமன் நியமனம், ஆய்வினை
துவக்கவைக்க வந்த மத்திய அமைச்சர்களின் பேச்சு எல்லாமே பட்டவர்த்தனமான
அரசியலாக அமைந்ததை நாம் பார்த்தோம்.
இதன் தொடர்ச்சியைத் தான் இந்த ஆண்டு ஆய்வின் செயல்பாடு அமைந்துள்ளது
என்பதையே ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது.
இந்த ஆண்டு அகழாய்வு பணி நடந்த தன்மையை எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு
ஆண்டுகளில் 2500 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு நடந்தது. ஆனால்
இந்தாஅண்டு ஆய்வு நடத்தப்பட்டதென்னவோ வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவு
மட்டுமே.
இதற்கு ஸ்ரீராமன் சொல்லும் காரணம் ஆய்வு துவங்கியதே ஐந்து மாத தாமதத்தில்
தான் என்பது. முதலாமாண்டு ஆய்வு மூன்று மாத தாமதத்தில் தான் துவங்கியது.
(மார்சு;2-1015) ஆனால் அப்படியிருந்தும் அமர்நாத் இராமகிருஷ்ணனால் 43
அகழாய்வுக் குழிகளை தோண்ட முடிந்தது. ஆனால் ஐந்துமாத தாமதத்தில் துவங்கிய
ஸ்ரீராமன் வெறும் 10 குழியை மட்டுமே தோண்டியுள்ளார்.
இங்கு தான் நாம் முக்கியமாக கவணிக்க வேண்டிய செய்தியே உள்ளது. கடந்த
ஆண்டு அகழாய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது
சராசரியாக 80 க்கும் மேல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை
என்பது 25க்கும் மேல் இல்லை. எந்த ஒரு நாளும் 80க்கும் மேற்பட்டோர்
பணியில் அமர்த்தப்படவில்லை. இது தற்செயலல்ல, இதுதான் அவர்களின் நோக்கமே.
இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த ஆண்டுக்கான அனுமதி
வழங்கப்பட பின்னும், நிதி ஒதுக்காமல் இருந்ததால், நாடாளுமன்றத்தில் தமிழக
உறுப்பினர்கள் குரல் கொடுத்ததன் விளைவாக மிக அதிக நிதி இவ்வாண்டு தான்
ஒதுக்கப்பட்டுள்
ளது. 25 லடசம் நிதி ஒதுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டில் 43 குழிகள்
தோண்டப்பட்டுள்ளது. ஆனால் 40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு 10
குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது.
மழையின் குறுக்கீடு அகழாய்வுக்கு இடையூறாக இருந்ததாக ஸ்ரீராமன் தெரிவித்துள்ளாரே?
இதைவிட அபத்தமான ஒரு காரணத்தை யாரும் சொல்லிவிட முடியாது. அமர்நாத் ஆய்வு
மேற்கொண்ட இரண்டும் ஆண்டும் கீழடியில் மழையே பெயவில்லையா? இதே செப்டம்பர்
மாதத்தில் தானே அவரும் ஆய்வினை முடித்தார். இந்த ஆண்டு மட்டும் மழையை
எப்படி காரனம் சொல்லமுடியும். முதலில் கூறியதைப்போல உரிய பணியாளர்களை
வேலைக்கு அமர்த்தாமல் திட்டமிட்டே வேலையை மந்தப்படுத்தும் செயல் முதல்
நாள் இருந்து நடைமுறையானதை கீழடியில் உள்ள அனைவரும் அறிவர்.
இதில் மிகுந்த கவலைக்குறிய விசயம் என்னவென்றாள் இவ்வாண்டு அகழாய்வு
செய்யப்பட்ட ஒரு குழிகூட இயற்கை மண்படிவம் (கன்னி மண் – Virgin soil) வரை
தோண்டப்படவில்லை. அதாவது எந்த ஒரு அகழாய்வு குழியும் முழுமையடைவில்லை
என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.
ஒரு குழியைக்கூட முழுமையாக தோண்டாமல் தான் பல முடிவுகளை ஸ்ரீராமன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இயற்கை மண் அடுக்குகளுக்கு கீழே மணல் அடுக்குகளும்
கண்டறியப்பட்டது. அதைவைத்துதான் வைகை நதி முதலில் இப்பகுதியில்
ஓடியுள்ளது. பின்னர் நதியின் போக்கு மாறியவுடன் வளமிக்க வண்டல் மண்
படிவம் தோன்றியுள்ளது. அந்த வளமிக்க மண்ணின் பரப்பில் தான் இந்நகரம்
உருவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறினார்.
இவ்வாண்டு ஆய்வினில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகளை கரிம
பகுப்பாய்விக்கு உட்படுத்தி காலநிர்ணயம் செய்யப்படும் என்று ஸ்ரீராமன்
கூறியுள்ளது பற்றி தங்களின் கருத்தென்ன?
ஒரு குழி கூட இயற்கை மண்படிவம் வரை தோண்டப்படவில்லை என்பதை அவரே
தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இவர் அகழாய்வுக்குழியின் எந்த நிலையில்
எடுக்கப்பட்ட கரிமத்துகளை மாதிரிக்கு அனுப்பப் போகிறார் என்ற கேள்வி
எழுகிறது.
குழியின் மேற்புரத்தில் இருக்கிற மாதிரிகளை அனுப்பி கால நிரணயத்தை மிக
அருகாமையில் கொண்டுவருதற்கான வாய்ப்பும் இதில் உள்ளதாகவே நான்
கருதுகிறேன்.
கடந்த ஆண்டு அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு 20 மாதிரிகளை சேகரித்து
ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மத்திய அரசு
கொடுத்ததோ இரண்டு மாதிரிகளை ஆய்வு செய்வதற்கான அனுமதிதான். மீதமுள்ள
பதினெட்டு மாதிரிகள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் இருக்கிரது.
அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்த ஆண்டு ஸ்ரீராமன் குழு சேகரித்துள்ள
மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பக்கூடாது. தவறான கால நிர்ணயத்தை
உருவாக்குவதற்கான வாய்ப்பை அனுமதிக்க முடியாது.
கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ அல்லது அதனுடன்
தொடர்புடைய எவ்வித கூறுகளோ இவ்வாண்டு ஆய்வு செய்த குழிகளில்
கிடைக்கவில்லை. எனவே இவ்விடத்தில் கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது
பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று ஸ்ரீராமன் தெரிவித்துள்ளாரே?
இவர்களின் நோக்கம் முழுமையாக வெளிப்பட்டு நிற்கும் இடம் இதுதான். கடந்த
ஆண்டு மிக விரிந்த கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது. அது
குடியிருப்பல்ல, தொழிற்கூடம். ஈனுலைகள், மூன்று விதமான வடிகால்கள்.
சதுரவடிவ தொட்டிகள், வட்டவடிவ தொட்டிகள் என பலவும் இருந்ததை பார்த்தோம்.
அந்த கட்டுமானத்தின் தொடர்ச்சி தென்திசை நோக்கி பூமிக்குள் போயிருந்தது.
அதன் தொடர்சியை கண்டறிய வேண்டும் என்றால் தென்திசையில் குழி அமைத்திருக்க
வேண்டும். ஆனால் தென் திசையில் ஒரு குழி கூட அமைக்கப்படவில்லை. அதற்க்கு
நேர் எதிராக வடதிசையில் தான் இவ்வாண்டின் அனைத்து குழிகளும்
தோண்டப்பட்டுள்ள
து.
கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட கட்டுமானத்தின் பிற மூன்று பகுதியில்
தோண்டாமல், கட்டுமானப்பகுதியின் தொடர்ச்சியிருக்கும் தென்திசையில்
தோண்டாமல், கட்டுமானப் பகுதியின் தொடர்சியில்லாத பகுதியில் மட்டும்
தோண்டியது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வி.
அது மட்டுமல்ல, முதலாண்டு ஆய்வு மூன்று இடங்களில் தோண்டப்பட்டது,
இரண்டாமாண்டு ஆய்வு ஆறு இடங்களில் தோண்டப்பட்டது. ஆனால் இவ்விரு
ஆண்டிலும் கிடைத்த நிதியை விட இவ்வாண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டும் ஒரே
ஒரு இடத்தில் மட்டும் தோண்டப்பட்டது ஏன்?
100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மேட்டில் எவ்வளவோ இடங்களிருந்தும்
இவர்கள் தோண்டவில்லை. கட்டிடத்தின் தொடர்சியற்ற அந்த குறிப்பிட்ட
இடத்தில் மட்டுமே தோண்டியுள்ளனர். அங்கும் முழுமையாக இயற்கை மண்படிவம்
வரை தோண்டவில்லை.
அப்படியிருக்க, இவ்விடத்தில் கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ
கட்டப்பெறவில்லை என்று ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளதென்பது என்ன
நோக்கத்துக்காக இவர் நியமிக்கப்பட்டோரோ அந்த நோக்கத்தை
நிறைவேற்றியுள்ளார் என்பதை தெளிவாக அறியமுடிகிறது.
அருங்காட்சியம் அமைத்தல் மேலும் கட்டுமானங்களை பொதுப்பார்வைக்க
ு கொண்டுவருதல் ஆகியப்பணிகள் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி
மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளாரே?
கள அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் மே மாதமே மாவட்ட
நிர்வாகத்தால் தரப்பட்டுவிட்டது. ஆனால் இன்று வரை அதனை ஏற்றுக்கொண்ட
நிர்வாக நடவடிக்கையைக் கூட இன்று வரை மத்திய அரசு செய்யவில்லை. அப்புறம்
எங்கே இருந்து அருங்காட்சியம் அமைக்கப்படும்.
மூன்றாம் கட்ட அகழாய்வின் விபரங்களை ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ள
பின்னனியில் அடுத்த என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
திராவிட நாகரீகத்தின் மிகமுக்கிய அடையாளம் கீழடி. உலகின் மிக
சிறப்புமிக்க இலக்கிய தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித
வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதாரம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்
கண்டறியப்பட்டுள்ள இத்தொல்லியல் மேடு என்பது நமது வரலாற்றுக்கு மிகமிக
முக்கியமான இடம்.
இந்துத்துவா அரசியல் முழுவிசையோடு வரலாற்றின் கட்டமைப்புகளை குழைத்துப்
போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கீழடியை பாதுகாப்பது, அதன்
ஆய்வினை அறிவியல் பூர்வமாக முன்னெடுத்து செல்வது மிகமுக்கியம்.
தமிழகத்தில் உள்ள பலரும் சந்தேகப்பட்டது போலவே இவ்வாண்டு அகழாய்வு என்பது
அவர்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் பகுதியாக அமைந்துள்ளதைப்
பார்க்கிறோம். ஒரு அகழாய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்று நிரூபிக்க
என்னனென்ன வழிகளுண்டோ அத்தனையும் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளனர்.
எனவே மிகுந்த விழிப்புணர்வோடு இதனை அணுகவேண்டும். அகழாய்வு தொடரவேண்டும்
என்பதைவிட திசைதிருப்பப்படுவிடக் கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். ஸ்ரீராமன் போன்ற ஆய்வாளர்கள் ஆய்வினை திசைதிருப்பும்
வேலையை செய்து முடிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது
Venkatesan Su.