திங்கள், 18 செப்டம்பர், 2017

கேரளா தமிழர் பகுதி வளர்ச்சி குறைவு நாகர்கோவில் விருதுநகர் வரை ரயில்வே மலையாளி ஆதிக்கம் மண்மீட்பு

குமரி மாவட்டம் கேரளாவோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் நபர்களுக்கு.
.
இந்திய ஒன்றியத்தில் 1949ல் சேர்ந்தது திருவிதாங்கூர்.
அன்று முதல் 1972ம் ஆண்டு வரை தென் திருவிதாங்கூரில் (குமரி மாவட்டம்)
இருப்புப்பாதையே
போடப்படவில்லை. அதனால் அந்த மாவட்டத்தில் தொடரூந்து போக்குவரத்தே
இல்லாமல் இருந்தது.
6-9-1972 ஆண்டு திருவனந்தபுரம் -நாகர்கோயில்- திருநெல்வேலி க்கு நாகர்கோயில் தடத்
தில் பாதைகள் அமைக்கும் திட்டத்தை அப்போதைய ஒன்றிய பிரதமர் 'இந்திரா
ப்ரிய தர்ஷினி ' தொடங்கி
வைத்தார்.
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 15-04-1979ம் ஆண்டு முதல் நாகர்கோயில்-
திருவனந்தபுரம் பாதையில் தொடர் வண்டி ஓடத்தொடங்கின. பாதை அமைத்தவுடன்
நாகர்கோயில்-விர
ுதுநகர் வரை தனது கோட்டத்தில் வைத்துக் கொண்டு இன்று வரை அதன் பலனை
திருவனந்தபுரம் கோட்டம் அனுபவித்து வருகிறது.
இப்போது திருவனந்தபுரம் கோட்டத்திலேயே அதிக வருவாய் பெற்று தரும் 2வது
மற்றும் 3 வது நிலையமாக நாகர்கோயில், திருநெல்வேலி உள்ளது.
ஆண்டுக்கு 20, 18 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது, இந்த வருவாயை வைத்து
நாகர்கோயில் தொடரூந்து நிலையத்துக்கு எந்த வசதிகளையும் திருவனந்தபுரம்
கோட்டம் செய்து கொடுக்கவில்லை.
இங்கிருந்து அதிக அளவு தொடர் வண்டிகளும் இயக்கப்படவில்லை.
எல்லா வண்டிகளும் திருவனந்தபுரத்தில் இருந்து தான் இயக்கப்படுகின்றன.
திருவனந்தபுரத்த
ுக்கும் நாகர்கோயிலுக்கும் இடையே உள்ள தூரம் 70KM தான். நாகர்கோயிலில்
இருந்து புறப்படும் வண்டிகளின் எண்ணிக்கை ரொம்ப குறைவு, திருவனந்தபுரம்
கோட்ட அதிகாரிகள் நாகர்கோயில் நிலையத்தை தங்களின் உபரி தொடரூந்து
பெட்டிகளை நிறுத்தி வைக்கும் இடமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு புதிய வண்டிகள் புறப்படுவதற்கோ,வருவதற்கோ இடவசதி இல்லாத
நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
பெரிய அளவில் பதிவு செய்யவேண்டுமானால் (group booking) நாகர்கோயிலில்
வசதி இல்லை, திருவனந்தபுரம் தான் செல்லவேண்டும். நாகர்கோயில் நிலையத்தில்
வழங்கப்படும் சீட்டுகளில் தமிழ் இருக்காது மலையாளத்தில் தான் இருக்கும்.
குமரியில் இருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு இப்போது ஒரே ஒரு வண்டி தான் உள்ளது.
இதனால் தான் நெல்லை,குமரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில்
இருக்கும் குமரி மாவட்ட பாதைகளை மதுரைகோட்டத்தில் இணைக்கவேண்டும் என்று
கோரி வருகிறார்கள்.

நவோதயா ஒரு பள்ளி 20 ஏக்கர் நிலம் பறிக்கப்படும் கல்வி நடுவணரசு பாஜக ஹிந்தியா

மாணிக்கம் மணி வன்னியன், சே.திருநா பாரதி மற்றும் 48 பேருடன் இருக்கிறார்.
கூர ஒழுகிற பள்ளி குடிநீர் வசதியில்லாத பள்ளி ஏன் வீட்டுத்தின்னை, கோயில்
மண்பத்துல படிச்சி மருத்துவர் பொறியாளர், ஆராய்ச்சிவரை படிச்சி சாதித்த
எம்மண்ணில் எதற்கு ஒரு பள்ளிக்கூடம் கட்ட 20 ஏக்கர் நிலம்..??
காவிங்க என்ன நினைச்சுக்குனு இருக்கானுவோ..?
இப்ப புதுவிதமா நிலத்தை புடுங்க அதிகாரத்தோட சட்டரீதியா வரானுங்க..
# நவோதயா மற்றுமொரு அடுத்த அபாயம்..!
விழித்துக்கொள் தமிழா..!

கர்நாடகா தமிழர் சாதிகள் பகுதி 1956 மண்மீட்பு கன்னடர்

Suresh Nataraj உடன் தமிழ்தேசிய அகமுடையார் கூட்டமைப்பு .
கர்நாடகாவில் 11/4 கோடி தமிழர்கள் என தகவல்.. சாதிவாரியாக யார் எவ்வளவு
என தகவல் இருக்கிறதா..? எந்த சாதியினர் அதிகம் உண்டு..?? Asa Sundar

Anbu Devendrar
பெங்களூரு என்ற மாநகரம் பிராமணர், முதலியார் பறையர்கள் பெரும்பான்மை

கடலூர் தனசெல்வன்
2.9 கோடி தமிழர்கள் என்பதை தவறென்று நினைக்கிறேன்...
பூர்விக தமிழர் 1.25 cr maybe...
kannadar 2 cr maximum...
karnataka total population 6 cr..
மாநிலம் பெற்ற பின்பு அனைத்து தேசிய இனங்களையும் அடக்கிஆள்கிறான்....
உபரி : கொல்டி 50 to 80 laks

Ganesan Manickam
நாடார்களும் உண்டு. பலர் நன்கு தொழிலில் முன்னேறி இருக்கிறார்கள் சகோ..

பாலா நத்தமன்
Rajaji nagar,solur palaya,bomnahalli, shivajinagara ,hsrlayout இந்த
பகுதிகளில் சிவகங்கை இராமநாதபுர பகுதி நத்தமன் உடையார் கனிசமான
எண்ணிகையில் உள்ளனர்

Anbu Devendrar
லிங்காயத், ஒக்கலிக கவுடர், பெரும்பான்மை..துளு பேசுபவர்கள், கொங்கணி
பேசுபவர்களும்கூட கணசமாக வாழ்கின்றனர்..அதே சமயம் மங்களூரில் (பெங்களூர்
அல்ல) கேரளா - கோவா எல்லையோரமாக இருப்பதால் அங்கு வசிக்கும் பலருக்கும்
கன்னடம் தவிர மலையாளம், கொங்கணி, துளு, நன்கு தெரியும்..அதேசமயம்
பெங்களூர் மாநாகரத்தில் ஸ்ரீராமபுரம் என்ற ஏரியாவில் பறையர்களும் -
படையாட்சிகளுமே பெரும்பான்மை..பக்கா லோக்கல் ஏரியா இது...சாரயம், கஞ்சா,
வட்டிக்கு கொடுக்கல் வாங்கல், பொம்பள சமாச்சாரம், ரவுடிகள் சாம்ராஜ்யம்,
சினிமா பைத்தியங்கள், என லோக்களுக்கே உரிய அத்தனையும் உண்டு..

Asa Sundar
வன்னியர், பறையர், அகமுடைய முதலியார், செங்குந்தர்/
கைக்கோளர் ஆகியோரே மிகுதி.... நத்தமர், நாடார், கொங்கு வெள்ளாளர்,
பள்ளர், தமிழ் செட்டியார்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்
உள்ளனர்.

Suresh Nataraj
நன்றி.. அகமுடையார் முதலியார் நட்புஒருவர் சொல்லிதான் தெரியும்,கணிசமான
அளவில் அங்கு உள்ளனர் என்பது...
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
4 மணிநேரம் முன்பு
Asa Sundar
5 லட்சம் அகமுடைய முதலியார்கள் உள்ளனர்

பிரபாகரன் பேட்டி அனிதா புலி சின்னம் ஏன் ஆயுதம்

Arul Natesan
அனிதா: உங்களைப் புலிகள் என்று ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள் ?
பிரபாகரன்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானத
ு ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப்
புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானத
ு தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன்
கொரில்லா யுத்த முறையைய்யும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.
அனிதா: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்டகால அனுபவமானது, வாழ்க்கை
பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த
அனுபவங்களின் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும்,
உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா?
அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில
கொள்கைகள், கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்துமற்றது என்பதனை
உணர்த்தும் அதேவேளையில் வேறு சில சரியானவைதாம் என்ற கருத்தினையும்
ஏற்படுத்தியிருக
்கலாம் அல்லவா ? அவற்றில் சிலவற்றைக் கூறுவீர்களா?
பிரபாகரன்: நாங்கள் வரித்துக்கொண்ட ஆயுதப் புரட்சிப் பாதை மிகவும்
சரியானது என்பதைக் கடந்த 12 வருடகால அனுபவங்கள் சந்தேகத்திற்கு
இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. எமது ஆயுத ரீதியிலான போராட்ட
வடிவத்தை ‘பயங்கரவாதம்’ என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்குள்
ஒடுக்கப்பட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான்
என்பதை இப்போது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் கைக்கொண்ட கொரில்லா
யுத்தமுறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமைமிக்க வடிவமாக
அமைந்திருக்கிறது.
எமது வெற்றிகரமான கொரில்லாத் தாக்குதல்கள், சிங்கள ஆயுதப் படைகளைத்
தோற்கடித்து, சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியுமென்ற நம்பிக்கையை
எமது மக்களுக்கு ஊட்டியிருக்கின்றன.
இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
அனிதா: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது
குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகரன்: பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ,
அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி என்று ஐரிஸ் தலைவர் ஒருவர்
குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில்
முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசிய போராளி
என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில்
பெருமைப்படுகிறேன்.

கீழடி பாண்டியர் ரோமானியர் ரோம் நாணயம் அகழ்வாராய்ச்சி பிராமி செங்கல் நாகரீகம் பழமை சான்று

சாரதா தேவி
தென் இந்தியாவிலேயே நாற்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்க பட்ட # கீழடி
நகரம் பாண்டியர்கள் வணிக நகரமாக இருந்து உள்ளது..
பாண்டியர்கள் காலத்து நாணயங்கள் தங்கத்தால் ஆனது, தமிழ் பிராமி
எழுத்துகள் பொறித்த பதினாறு பானைகள் ,மிக நேர்த்தியாக அமைக்க பட்ட
செங்கல் சுவர்கள், உரை கிணறுகள் , மருந்து சேகரித்து வைக்கும் கிடங்குகள்
மழைநீர் வடிகால்கள் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மூன்றரை
கிலோமீட்டர் சுற்றளவிற்கு இந்த நகரை பாண்டியர்கள் நேர்த்தியாக அமைத்து
வாழ்ந்ததற்கான இடமாக கீழடி இருந்து வந்துள்ளது,
ரோமானியர்களோடு வாணிக தொடர்பு கொண்டதற்கான ஆதாரமாக ரோமானிய அணி கலங்களும்
இங்கே கிடைத்து உள்ளது
வெள்ளம் வந்து ஊரை அடிக்கடி நாசம் செய்ததால் அங்கு வாழ்ந்த மக்கள் ஊரை
காலிசெய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து இருக்க வேண்டும் என்கிறார்கள்
ஆய்வறிஞர்கள்
# பாதுகாப்போம்_கீழடியை

கீழடி இந்து இந்தியா அல்லாத பழமை ஆங்கிலம் கட்டுரை அகழ்வாராய்ச்சி

Raj Kiran Raj
கீழடியில் கிடைத்த 5000 க்கும் மேற்பட்ட பொருட்களில் ஒன்றுகூட மதம்
தொடர்புடைய பொருட்கள் கிடையாது. பெருமதங்கள் உருவாவதற்கு முன்பே
செழித்திருந்தது தமிழர் நாகரீகம். அப்படியென்றால் தமிழர்கள்
இந்துவும் இல்லை
இசுலாமியர்களும் இல்லை
கிருத்துவர்களும் இல்லை
தமிழர்கள் தமிழர்களே
Was there a non-Hindu advanced Civilization in South-India? - Audrey Truschke
Audrey Truschke studied Sanskrit and majored in Religious Studies at
the University of Chicago, receiving her BA degree in 2004. She earned
her PhD in the Department of Middle Eastern, South Asian, and African
Studies at Columbia University in 2012.
During the 2012-2013 academic year, she was a postdoctoral research
fellow in History and Asian & Middle Eastern Studies at Gonville and
Caius College, University of Cambridge. From 2013 until 2016, she was
a Mellon postdoctoral fellow in Religious Studies at Stanford
University.
Audrey Truschke is currently Assistant Professor of South Asian
History at Rutgers University-Newark.
Audrey Truschke’s research focuses on early modern India, especially
the Mughal period and cross-cultural interactions therein. To date she
has written two books, Culture of Encounters: Sanskrit at the Mughal
Court (2016) and Aurangzeb (2017). More broadly she publishes on
historical memory, the politics of history, imperial power, and
cross-cultural interactions.
......
நன்றி, சகோதரர் பாவல்.

நீட் தேர்வு சமூக அநீதி டெல்லி பேராசிரியர் தமிழகம் புகழ்மாலை தாராளமயமாக்கல் தனியார் அந்நியமுதலீடு மருத்துவம் கல்வி

(23/05/2017)
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி
பேராசிரியர்

இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான
தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான
நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே
அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான்.
அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள்
எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித்
தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச்
செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது
என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன்
தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.”
என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள
நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில்
சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி
செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.
Advertisement
தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு
எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று
(22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை
ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.
''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்...
நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம்
இல்லையா...?''
''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை
எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை
ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச்
சட்டத்துக்கே எதிரானது.''
Advertisement
''எப்படிச் சொல்கிறீர்கள்...?''
''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும்,
சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு
நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது,
பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய
இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த
அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு
மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி
போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை
இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில்
வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான்
இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட்
தேர்வு.''
''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான்
தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய
கல்விக் கொள்கை வேண்டாமா...?''
''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம்
மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக்
கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன்
பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு
ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை
பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக
இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத்
தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை
வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு
மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்'
தேர்வு.''
''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக
மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''
''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு
அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும்
தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை
அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத்
துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''
''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''
இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில்
பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில்
அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட்
தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான்
புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல்
சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட
பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல்
பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''
''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''
''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி
சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண்
பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன்
மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர
முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு
மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக
ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல்,
மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து
மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு
பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள்
எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த
மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன்
போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல்
இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள்
உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''
''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''
"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு
நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி
தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான
கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும்
சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப்
பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை
வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில்
எடைபோடுவோம் என்கிறது.''
''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''
''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர்
 உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட
உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள்
கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள்
நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற
மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள்
வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள்.
இப்போது நீங்கள் நடத்தவேண்டியது
நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''