திங்கள், 18 செப்டம்பர், 2017

திருக்குறள் 13 வடமொழி சொல் இந்திரன் அவி வேர்ச்சொல் பாவாணர் சொல்லாய்வு

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன், Bala Thangaraj மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
தலித்திய இழிவிலிருந்து விலகி
# சூத்திரராக மட்டுமே வாழ்வேன் என அடம்பிடிக்கும் இன்னால் தமிழ்
# பள்ளர் வருங்கால சமஸ்கிருத
# தேவேந்திர டுபாக்கூர்களுக்கு எனது வரவேற்பு பதிவு.....
++++++++++++++++++
எந்த ஒரு சொல்லும் வட மொழிச் சொல்லா? தமிழ்ச் சொல்லா என அறிய
உரையாசிரியரைப் பார்க்கக் கூடாது. ! அதோட வேர்ச் சொல்லைப் பார்க்கனும் !
யார் சொன்னாலும் நம்பக்கூடாது.
சொற் பிறப்பியல் அகராதியைப் பார்க்கனும், வேர்ச் சொல்லைத் தேடனும்..
பிறகு நமக்கே தெரியும். எளிதான வேலைதான்.
++++++++++++
திருக்குறளில் 12505 - மொத்தச் சொற்கள். 4310 - அடிப்படை வேர்ச் சொற்கள்.
அதில், 50 - வடமொழிச் சொற்கள்.
@அறிஞர் கா. சுப்பிரமணியனார் ..
++++++++++-
மொத்தம் 123 - திரு வையாபுரி கூறும் வடமொழிச் சொற்கள்.
++++++++++++
அதைத் திருத்தி ஐயன்
# தேநேயப்_பாவாணர் கூறும் வடமொழிச் சொற்கள் 17.
++++++++++
ப. அருளி அவர்கள் கூறும் வடமொழிச் சொற்கள் 13..
+++++++
ஆக குறைந்த பட்சம்,
குறளில் உள்ள 12 வட மொழிச் சொற்களை பார்ப்போம்...
1.இந்திரன்(வடசொல்)= அரசன்/வேந்தன்(தமிழ்),
(அனைத்து ஆய்வரிஞரும் முன்மொழிவது)
,
2.அந்தம்(வ.சொ) =ஒருதலை(தமிழ்)
,
3.அவி(வ.சொ)=யாகத்தில் இடும் பொருள் (தமிழ்)
,
4.ஆகுலம்(வ.சொ)=ஆரவாரம்(தமிழ்)
,
5.ஆசாரம்(வ.சொ)=ஒழுக்கம்(தமிழ்)
,
6.உல்கு(வ.சொ) - ஆயம்,தீர்வை(தமிழ்)
,
7.சலம(வ.சொ) - அல்வழி,வஞ்சனை(த
மிழ்)
,
8.நாமம்(வ.சொ) - பெயர்(தமிழ்)-
,
9.பாக்கியம்(வ.சொ)-நற்பேறு(தமிழ்)
,
10.பாவம்(வ.சொ)-கரிசு(தமிழ்)
,
11.பாவி(வ.சொ)-கரிசன்,அறங்க்கடை
யன்(தமிழ்)
,
12.வித்தகர்(வ.சொ)=மாதிறவோர்(தம
ிழ்)
,
12000 + சொற்களில் இந்த 12 ம் அனைத்து அறிஞர் பெருமக்களாலும் ஏற்கவும்,
பரிந்துரைக்கவும் பட்டுள்ள 100%
# வடமொழிச் சொற்கள்.
மற்றவை அனைத்தும் தூயத் தமிழ் மொழிச் சொற்களே !
(அறிஞர் தகுந்தார் போல் மாறுபடுகிறது)
ஐயன் தேவநேயப்பாவணர் 17 வடசொற்களை நிறுவுகிறார் அதிலும் # இந்திரன்
என்பதே முதல் சொல்....
நன்றி நன்றி....

திருமங்கை ஆழ்வார் பற்றி கள்ளர் வைணவம்

Perumal Ammavasi Thevan Vinayagam Narayanan உடன்.
ஆன்மீகத்தில் கள்ளர்.
1. திருமங்கையாழ்வார்
கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ
மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவர்க்கும் மனைவி வல்லித்திருவுக்
கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில்
பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று சோழ நாட்டில் திருவாலி
திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.
பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள்
இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்
சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது. நீலன் கல்வி கற்க்கும்போதே
இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும்
ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும்
நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு
பெயரையும் பெற்றார்.
இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின்
சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின்
எமன்) என்ற பெயர் பெற்றார்.
வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர்,
யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை
வென்று சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தார். சோழ மன்னர்
அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும்
ஊரை தலைநகராக தந்தான்.
வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுறைப் பயனே பேணினேன்...
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்
என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப்
பேணியதற்கு நாணினேன் என்று பல பாடல்கள் பாடியுள்ளார்.
நீலன்குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தை தொடங்கினார்.
தன் கையில்கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே
செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே
செலவழித்தமமையால் அரசு காவலில் சிறைவைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப்
பேரருளான்வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று
அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார்.
திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் ஓம் நமோ நாராயணா என்னும்
திருமந்திரத்தை உபதேசித்து அவரின் ஞானக்கண்ணைத் திறந்து திருவருள்
காட்டினார். நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட
ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொல்ல ஆழ்வார் ஆச்சரியத்துடன்
நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல்
தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. அப்போது அவர் பாடிய பாசுரம்:
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே
திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரின்
மகிமையைச் சொல்கின்றன.
நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார்,
காதலித்தார். முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப்
பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச்
செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட
திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க
வைக்கும்.
பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப்
பட்டியலிடுகிறார். 220ம் வரியிலிருந்து வரிசையாக ஒவ்வொரு ஊரையும் அழகாகச்
சொல்கிறார்.
அந்த ஊர்கள்:
திருவிண்ணகர்,
குடந்தை,
திருக்குறுங்குடி,
திருச்சேறை,
திருவாலி,
திரு எவ்வளூர்,
திருக்கண்ணமங்கை,
திருவெள்ளறை,
திருப்புட்குழி,
திருவரங்கம்,
திருவல்லவாழ்,
திருப்பேர்நகர்,
திருக்கோவிலூர்,
திருவழுந்தூர்,
தில்லைச் சித்திரக்கூடம்,
திருவேங்கடம்,
திருமாலிரும்சோலை,
திருக்கோட்டியூர்,
திருமையம்,
திரு இந்தளூர் கச்சி,
திருவேளுக்கை,
திருவெஃபா,
திருவிடவெந்தை,
கடல்மல்லை,
திருத்தண்கா,
ஊரகம்,
அட்டபுயகரம்,
திருவாதனூர்,
திருநீர்மலை,
திருப்புல்லாணி,
திருநாங்கூர்,
திருக்கண்ணபுரம்,
திருநறையூர் மணிமாடக் கோயில்
இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிட
ுகிறார்.
ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால்
பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம்.
ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச்
சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள்.
எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா
பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச்
சொத்து.
திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை
மங்களாசாசனம் செய்தார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி,
திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை,
சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும்
அருளிச்செய்துள்
ளார். திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மணைவியுடன்
திருக்குறுங்குடியில் கழித்தார்.
திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம்
கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை
வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.
கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும்
நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிர
ுக்கிறேன் என்று தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும்.
பிற்காலத்தில் அருணாகிரிநாதரிடம் இந்தப் போக்கைக் காண முடிகிறது. மற்றொரு
பாடலில் ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில்
தருகிறார்.
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
சின்ன வயசில் அறியாமையால் பல தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும்
மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ள யாருக்கு மனம்
வரும்?

சாரணர் ஒற்றர் ஸ்கௌட் வேர்ச்சொல் சொல்லாய்வு

Logan K Nathan
சாரணர்.
"சர சர" என்பது தமிழில் இரட்டைக் கிளவி. இது ஊர்தல்/ஏறுதல் இயக்கத்தைக் குறிக்கும்.
'சர்' னு ஏறியது என்று இப்போதும் பேச்சு வழக்கில் கூறப்படுகிறது.
சர - அசைவு. அசர - அசையாத.
அசர வைத்தல் - ஆடாமல், அசையாமல் வியக்க வைக்கும் செயல்.
அண்ட சராசரங்கள் என்றால் பிரபஞ்சத்தில் உள்ள அசையும், அசையா பொருட்கள்.
"சாரை" என்பது சர எனும் சொல்லிலிருந்து வந்தது. எ. கா. சாரைப் பாம்பு.
சாரை சாரையாக - வரிசையாக செல்லுதல்.
"கோள்சாரம்" (கோச்சாரம்) என்றால் கோள்களின் (கிரகங்களின்) இயக்கம்.
"சாரணர்" என்பதற்கு ஓரிடத்தில் தங்காமல் திரிந்து கொண்டிருப்பவர்கள்
(நாடோடி) என்பது நேரடி பொருள். அக்காலத்தில் ஒற்றர்கள் சாரணர்
எனப்பட்டனர்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

சிமெண்ட் ஆலை எதிர்ப்பு இயக்கம் முகிலன் கருத்துகேட்பு கூட்டம் ல் தாக்குதல் கார்ப்பரேட்

Mugilan Swamiyathal
09-09-2017 சனிக்கிழமை
அரியலூர் பெரிய திருகோணத்தில்
" தி இந்தியா சிமெண்ட்" ஆலையின் கருத்துக் கேட்பு கூட்டம்.
இக்கூட்டத்தில் நான்(முகிலன்) , சிமெண்ட் ஆலை எதிர்பியக்கம்
அருள்மொழிவர்மன், மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் இரமேசு கருப்பையா
உட்பட பலரும் பங்கேற்கிறோம்.
அரியலூர் சிமெண்ட் ஆலைகள் + அதிகாரிகள் கடந்த. காலத்தில் நான்(முகிலன்)
கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசி விடக் கூடாது என்பதற்காக ஆள் வைத்து
கூட்டத்தில் தகறாறு- தாக்க முயற்சி என்பதெல்லாம் நடந்துள்ளது.
சனிக்கிழமை என்ன நட.கிறது எனப் பபார்ப்போம்...

ஆந்திரா புதிதாக 7 அணை கட்டவுள்ளது பாலாறு நதிநீர்

=====================================
ஆந்திரத்தில் புதிய தடுப்பணைகள்
பாலைவனமாகும் வட தமிழ்நாடு!
=====================================
கட்டுரை : க. அருணபாரதி Arun Kaliamurthy
=====================================

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வேலூர்,
திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முகாமை யான
குடிநீர் மற்றும் வேளாண் சாகுபடிக்கான நீராதரமாக விளங்கும் பாலாறு
மற்றும் கொசஸ்தலை ஆறுகள்,  ஏற்கெனவே நீர் வறண்டு பாலைவனம்போல்
காட்சியளித்துக் கொண்டுள்ளன.

ஆந்திரத்தின் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் இவ்விரு ஆறுகளிலும், மழை
வெள்ளக் காலங்களில் வழிந்து வரும் உபரி நீர்கூட தமிழ்நாட்டுக்குக்
கிடைத்து விடக் கூடாது என்ற வன்மத்தோடு பாலாற்றிலும், கொசஸ்தலை
ஆற்றிலும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகள் போதாதென்று ஆந்திர அரசு மொத்தமாக 7
புதிய தடுப்பணைகளைக் கட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாற்றின் வழியாகவும், கொசஸ்தலை ஆற்றின் வழியாகவும் சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4.5 இலட்சம்
ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், தமிழ்நாட்டின்
தலைநகர் சென்னை உள்பட வட தமிழ்நாட்டின் முகாமையான குடிநீர் ஆதாரமும்
இவையே!

அதிலும் கொசஸ்தலை ஆறு, சென்னைக்கு ஓரளவு குடிநீர் வழங்கும் பூண்டி
ஏரிக்கு நீர் கொண்டு வரும் முகாமையான ஆறாகும். இதில் தடுப்பணை கட்டுவதன்
மூலம், சென்னையின் குடிநீர் சிக்கல் மேலும் பூதாகரமாகப் போகிறது!
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மட்டும் தற்போது 5 புதிய தடுப்பணைக் கட்டி
வருகிறது ஆந்திர அரசு!

 ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு, வேலூர்
மாவட்டம் காவேரிப் பாக்கம் வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது. திருவள்
ளூர் மாவட்டத்தின் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் சற்றொப்ப 5 ஆயிரம்
ஏக்கருக்கும் மேற் பட்ட நிலங்களில்  கொசஸ்தலை ஆற்று நீரை நம்பியே
வேளாண்மை செய்யப்படுகிறது.

மேலும், தாமரைப்பாக்கம் அணை, வள்ளூர் அணை, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி
ஆகியவற்றை நிரப்பும் முகாமையான நீராதாரம் கொசஸ் தலை ஆறுதான்! அதன்
பின்பே, சென்னை எண்ணூர் வழியே கடலில் கலக்கிறது, கொசஸ்தலை ஆறு!

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் -_ பள்ளிப் பட்டு அருகி லுள்ள ஆந்திர
மாநிலத்தின் எல்லை யான வெளியகரம் பகுதியில் கொசஸ் தலை ஆற்றிலும், அதன்
வரத்துக் கால்வாய்களிலும் என மொத்தம் 5 இடங்களில் ஆந்திர அரசு புதிய
தடுப்பணைகளை கட்டி வரு கின்றது. பருவமழை தொடங்குவதற்குள் இப் பணிகளை
நிறைவேற்றி முடிக்க ஆந்திர அரசு அதிகாரிகள் முனைப் புடன் செயல்பட்டு
வருகின்றனர்.

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேலே உள்ள தாமரைப்பாக்கம் அணைக் கட்டு,
மீஞ்சூர் அருகிலுள்ள  வள்ளூர் அணைக்கட்டு ஆகியவற்றின் மூலம் கொசஸ் தலை
ஆற்றின் வழியே பாசனம் பெறும் உழவர்கள், இதனைக் கண்டித்து தடுப்பணை
கட்டப்படும் பகுதிக்கேச் சென்று போராட்டம் நடத்தி, ஆந்திர அரசின் இந்த
புதிய தடுப்பணைகள் கட்டும் முயற்சியை வெளியுலகிற்குக் கொண்டு வந்தனர்.

இதற்கு முன்பே, இத்திட்டம் தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரிகளுக்கும்
தெரிவிக்கப்பட்டிருந்தும், அவர்கள் அதற்கு உரியவாறு எதிர்வினையாற்றவில்லை
என்றும் புகார் தெரிவிக்கின்றனர், அப்பகுதி மக்கள்!

இன்னொரு பேரிடியாக, கொசஸ்தலை ஆற்றில் மட்டுமின்றி, ஏற்கெனவே வறண்டு
கிடக்கும் பாலாற்றிலும் புதிய தடுப்பணைகளைக் கட்டி வருகிறது ஆந்திர அரசு!

கர்நாடகத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகி வரும் பாலாற்றின் குறுக்கே,
ஏற்கெனவே கர்நாடக அரசு கோலார் மாவட்டத்தின் பேத்தமங்கலம், இராம்சாகர்
ஆகிய பெரிய அணைகளைக்  கட்டியது. இவற்றைக் கடந்து, ஆந்திர மாநிலப்
பகுதியில் வெறும் 22 கிலோ மீட்டர் ஓடி வரும் பாலாற்றில், ஆந்திர அரசு
இதுவரை 32 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.

இந்நிலையில் பாலாற்றின் துணை ஆறுகளிலும், கால்வாய்களிலும் புதிய
தடுப்பணைகள் கட்டும் பணியிலும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை
அதிகரிக்கும் பணிகளிலும் ஆந்திர அரசு முழுவீச்சில் இறங்கி யுள்ளது.

கங்குந்தி என்ற இடத்தில் உள்ள தடுப்பணை உயரம் 21 அடியாகவும்,
கிடிமானிபெண்டா என்ற இடத்தில் உள்ள தடுப்பணை உயரம் 25 அடியாகவும்
உயர்த்தப் படவுள்ளது. பாலாறு கிராமத்திலுள்ள தடுப் பணை உயரத்தை 15
அடியாகவும், போகல்ரே என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை 8 அடி
யிலிருந்து 30 அடியாகவும் உயர்த்து வதற்கான பணிகள் நடைபெறு கின்றன.

குறிப்பாக, வாணியம்பாடி அருகி லுள்ள கங்குந்தி கிராமத்தில் “மேம் பாலம்
அமைக்கும் பணி“ என்ற பெயரில் புதிய தடுப்பணையைக் கட்டி வருகிறது ஆந்திர
அரசு! கங்குந்தி பகுதியில், 50 அடி உயரத்திற்கு புதிய மேம்பாலம் அமைவதால்
கீழே சுமார் 36 அடி உயரத்துக்கு பாலத்தின்கீழ் தடுப்பணை போல் அமைத்து
தண்ணீரை தேக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. தடுப்பணை அமைப்பதற்காக
கட்டுமான பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.

ஏற்கெனவே கடந்த 2006ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தின் குப்பம் பகுதியிலுள்ள
கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே “தடுப்பணை” என்ற பெயரில், 320 கோடி
ரூபாய் செலவில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க முயன்றது ஆந்திர அரசு!
தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்ததன் காரணமாக
அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது புதிதாக பல்வேறு தடுப்பணைகள் கட்டப் பட்டு வரும் நிலையில்,
தடுக்கப்பட்ட கணேசபுரம் தடுப்பணை அருகில், 7 அடி உயரத்தில் உள்ள தடுப்
பணையை 20 அடி வரையும் உயர்த்திக் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளது ஆந்திர
அரசு! ஆக, பாலாற்றின் துணை ஆறுகளில் தற்போது மொத்தமாக 7 புதிய
தடுப்பணைகளை கட்டி வருகிறது.

மேலும், பாலாற்றின் துணை ஆறான திப்ரே ஆற்றின் 6 இடங்களிலும்,
காட்டாற்றின் குறுக்கே ஓரிடத்திலும் புதிய தடுப்பணைகளைக் கட்டி வருகிறது
ஆந்திர அரசு! இருபது கிலோ மீட்டர் நீளம் கொண்ட திப்ரே ஆற்றின் குறுக்கே
புதிதாக 5 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. நாயனூர் என்ற இடத்தில் திப்ரே
ஆற்றில் 21 அடி உயரத்திற்கு ஆறாவது தடுப்பணை கட்டப்படவுள்ளது. இவை தவிர
பெத்தவெங்கா என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே 5 கோடியில் தடுப்பணை
என்ற பெயரில் நீர்த்தேக்கம் ஒன்று கட்டப்படவுள்ளது. இந்தத்
தடுப்பணைகளுக்காக, சற்றொப்ப 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள்
தீட்டப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு சூலை மாதம், வேலூர் - வாணியம்பாடி
அருகிலுள்ள புல்லூரில் நம் கண் முன்னேயே ஆந்திர அரசு தடுப்பணை
கட்டியதும், அதில் மழை நீர் தேங்கி நின்றபோது தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு
நீர் கூட வராமல் தடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அப்பகுதி உழவர்
சீனிவாசன் அதே தடுப்பணையில் தற்கொலை செய்து கொண்டதும் நாம் மறக்கக்கூடிய
நிகழ்வுகளல்ல!

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், 1892ஆம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர்
மாகாணங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கிடையே ஓடும்
காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில், கடை மடைப் பாசனப் பகுதியின் அனுமதியைப்
பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது.
ஆனால், அதை ஆந்திரமும்சரி கர்நாடகமும்சரி தொடர்ந்து மீறி வருகின்றன.
தமிழன் அழியட்டும் எனக் கருதுகின்ற இந்திய அரசும், இதைக் கண்டு கொள்வதே
கிடையாது!

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் (மார்ச்சு 2017), பாலாற்றில் ஆந்திர
அரசு கட்டி வரும் புதிய தடுப் பணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்
தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அவற்றை யெல்லாம்
பொருட்படுத்தாத ஆந்திர அரசு இப்போது புதிதாக மேலும் தடுப்பணைகளைக் கட்ட
முன் வந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிறிதளவும்
பொருட்படுத்தாமல், எவ்வித தயக்கமும் இன்றி இந்த புதிய தடுப்பணைகளைக்
கட்டி வருகிறது ஆந்திர அரசு! மேலும், பல இடங்களில் வனப்பகுதியில் புதிய
அணைகளை கட்ட இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முறையான அனுமதியைப்
பெறு வதற்குக் கூட ஆந்திர அரசு முயலவில்லை.

ஆந்திர அரசின் இந்தத் தடுப்பணைகள், ஒப்பந்தத் தையும் நீதிமன்றத்
தடைகளையும் மீறிய சட்ட விரோதக் கட்டுமானங்களாகும்! இந்திய அரசு இவற்றைக்
கண்டுகொள்ளாத நிலையில், தமிழ்நாட்டு உழவர்கள் ஒருங்கிணைந்து போராடி, இதனை
முறியடிக்க வேண்டும். மக்கள் போராட்டங்களின் வழியே இந்த சட்ட விரோதக்
கட்டுமானங்களை இடித்துத் தள்ள வேண்டும் இல்லையெனில் வட தமிழ் நாடு
பாலைவனமாகும்!

தூத்துக்குடி உப்பளம் தொழிற்சாலை மார்வாடி ஆதிக்கம் தமிழகம் எண்ணெய் கொள்வனவு கேரளா வை சார்ந்துள்ளது கோசல்ராம் டாடா வந்தேறி வடயிந்தியர் மாபியா

Kumarimainthan
1981 அல்லது 82இல் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் கப்பல்களிலிருந்து
கன்னெய்யத்தை (பெட்ரோலியத்தை) இறக்கும் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு
மாதங்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தமிழகத்தின் தென் மாவடங்களுக்கு
கன்னெய்யப் பொருட்கள் அங்கிருந்துதான் வரவேண்டும். இதனால் தமிழகத்தின்
ஊர்திப் போக்குவரத்து நிலைகுத்திப் போனது.
அன்று இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அனைத்திந்திய
சரக்கி(லாரி)ப் போக்குவரத்தில் நாமக்கல் வட்டாரத்துக்கு இணையாக
உச்சத்தில் இருந்தது. தமிழகச் சாலைகளில் ஓடிய அனைத்திந்திய உரிமம்
(National Permit) சரக்கிகளில் கோயில்பட்டி வட்டாரச் சரக்கிகளையே எங்கு
பார்த்தாலும் காண முடிந்தது. ஆனால் இந்த செயற்கைக் கன்னெய்யத்
தட்டுப்பாட்டுக் காலத்தில் வடக்கிலிருந்து புதிய அனைத்திந்திய உரிமம்
பெற்ற சரக்கிகள் வரத் தொடங்கின. நாளடைவில் கோயில்பட்டி அனைத்திந்திய
சரக்கிப் பேருந்து பட்டியலிலிருந்து முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டது.
இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பை நினைத்துப்
பாருங்கள்.
நம் பொதுமைக் கட்சியினர் பொதுவாக தமிழ், தமிழக வெறுப்பாளர்கள் மட்டுமல்ல,
பனியா – பார்சிகள்தாம் இந்தியாவின் தேசிய முதலாளிகள் என்று வெளிப்படையாக
அறிவித்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்படியானால்தான் கொச்சித் துறைமுகத்தில் நடைபெற்ற வெலைநிறுத்தத்தின்
உண்மையான பின்னணி பற்றியும் புரிந்துகொள்ள முடியும்.
தூத்துக்குடி நகராட்சித் தலைவராக இருந்த மீனவர் வகுப்பைச் சேர்ந்தவர்,
ஏதோ பெர்னாண்டோ என்று நினைவு, பெரும் செல்வந்தர். அவர் தூத்துக்குடியில்
கிடைக்கும் உப்பு, உப்பு சார்ந்த பொருட்களைக் கொண்டு ஒரு வேதிப்பொருள்
தொழிற்சாலை அமைக்க நடுவரசுக்கு வேண்டுகை வைத்திருந்தார். அது பொறுக்காத
கே.டி.கோசல்ராம் என்ற தமிழர்களின் கோடாலிக்கொம்பு, உடன்பிறந்தே கொல்லும்
நோய், கருங்காலி, அரசியல் பகையையும் சாதிக் காழ்ப்பையும் மனதில் வைத்து
அப்போதைய தலைமை அமைச்சர், மார்வாரிகளின் எடுபிடி நேருவிடம் கெஞ்சியது
மட்டுமின்றி இங்கு வருவதற்குத் தயக்கம் காட்டிய சாகு செயின் என்ற
மார்வாரியைப் பிடித்து உனக்கு நிறைய சலுகைகளை நேருவிடம் சொல்லி
வாங்கித்தருகிறேன் என்று தட்டித் தடவி தாரங்கதாரா வேதிப்பொருள்
தொழிற்சாலையைத் தொடங்கவைத்தான். இப்போது அந்த வட்டாரமே மார்வாரிகளின்
கைகளில். அது மட்டுமல்ல,
ஆசியாவிலேயே சிறந்த தரமுள்ள உப்பாகத் தூத்துக்குடி உப்பு கூறப்படுகிறது.
ஆனால் இவர்கள் இதை மார்வாரிகள் மூலமாகவே ஏற்றுமதி செய்ய முடியும் என்று
கூறப்படுகிறது.
தூத்துக்குடி உப்பளங்கள் அனைத்தும் அரசுப் புறம்போக்கில் உள்ளதாக
1990களில் ஒருமுறை தூத்துக்குடி உப்பள உரிமையாளர்கள் சங்கத் தலைவராக
இருந்த சுப்பிரமணியன் நாடார் என்பவரை தமிழக மக்கள் பொருளியல் உரிமைக்
கழகத்தின் சார்பாகச் சந்தித்த போது கூறினார். அதனால் உப்பளங்களை
விரிவுபடுத்திப் பெருந்தொழிலாக்க முடியாதிருப்பதையும் கூறினார்.
கே.டி.கோசல்ராமின் இரண்டகத்தையும் அவர்தான் கூறினார்.
இதே நேரத்தில் இராமநாதபுரம் வாலிநோக்கத்தில் ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு
முன் பார்சி டாட்டா வாங்கிப்போட்ட 20,000 ஏக்கர் நிலத்தில் உப்பு
விளைத்து அரசின் துணையோடு கடும் பரப்புரை செய்து மக்களின் உடல்
நலனுக்குத் தீங்குதரும் அயோடின் உப்பை வாணிகம் செய்து பெரும் ஆதாயம் பெற,
தமிழக அரசும் அதே போல் அயோடின் உப்பை விற்க, அயோடின் கலக்காத உப்பை,
மருந்துப் பொருள் என்ற பெயரில் பதுங்கிப் பதுங்கி கள்ளத்தனமாக விற்க
வேபண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
அந்தந்த வட்டாரத்திலுள்ள நண்பர்கள் இது போன்று உள்ளூர் மக்களின் தொழில்
வாணிக முனைவுகளைக் கருவறுக்கும் மார்வாரிகளின், இந்திய – மாநில அரசுகளின்
செயற்பாடுகளை எடுத்துக் கூறினால் அனைவரும் தெரிந்துகொள்ளலாம். இன்னும்
செய்திகள் உள்ளன. கொஞ்சம் காத்திருங்கள்.