சனி, 26 செப்டம்பர், 2020

நியூட்ரினோ திட்டம் அனுமதி அதிமுக திமுக

 


aathi1956 aathi1956@gmail.com

செவ்., 6 நவ., 2018, பிற்பகல் 5:50
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
நியுட்ரினோ திட்டத்திற்கு தடை என்ற செய்தி தவறானதாகும். நியுட்ரினோ திட்டத்தை, தேசிய வனவிலங்கு வாரிய ஒப்பம் பெற்று நடத்த வேண்டும் என்ற நிபந்தனைதான் அளிக்கப்பட்டுள்
ளது.
அதாவது நியுட்ரினோ திட்டம் அனுமதி தரப்பட்டு விட்டது.
திமுக இந்திய அமைச்சரவையில் இருந்தபோது, 2016ல் நியுட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் துறை ஒப்பம் அளித்து விட்டது.
அதற்கு பின்னால் அங்கு மதிகெட்டான் சோலை என்ற தேசிய வனவிலங்கு பூங்கா வந்ததால், வனவிலங்கு வாரிய ஒப்பம் பெற வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்பம் வழங்க வேண்டும் என விதிமுறை கூறப்பட்டது.
2017 ஜூனில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இதற்கு அனுமதியோ அல்லது மறுப்போ சொல்லாமல், தனக்கு இத்திட்டத்தை பரிசீலிக்கும் தகுதி இல்லை என்றும், இந்திய சுற்றுச்சூழல் துறையே பரீசிலித்து கொள்ளலாம் என அநியாயமாக, மக்கள் விரோதமாக ஒதுங்கி கொண்டது.
தமிழ்நாட்டின் வள சுரண்டலை தடுக்காமல், தனக்கே பரிசீலிக்கும் தகுதி இல்லை என்றதும்,, நீதுமன்றமும் தமிழ்நாடு அரசு ஒதுங்கி கொண்டதால் இந்திய அரசே நியுட்ரினோவுக்கு அனுமதி தரலாம் என கூட்டு களவாணி தீர்ப்பு சொன்னது.
இந்திய அரசின் பினாமியாக, பொம்மையாக தமிழ்நாடு அதிமுக அரசு நழுவியதும், எதிர்க்கட்சியாக இன்னொரு இந்திய பினாமி எதிர்க்கட்சி திமுக கண்டு கொள்ளாமல் நழுவியதுமாக,
தமிழ்நாட்டின் மலை, காடு, விலங்கு, மக்கள் என தமிழனின் உரிமையில் நியுட்ரினோ திட்டம் என தேனி மலைகளை, காவு கொடுத்து விட்டது இந்திய அரசின் கைக்கூலி பொம்மைகளான திமுக, அதிமுக கட்சிகள்.
இந்திய அரசு, அதன் பொம்மை திமுக, அதிமுக கட்சிகள், இந்திய அரசின் தமிழ்நாட்டு வள சுரண்டலுக்கு சட்ட அனுமதி கொடுத்த நீதிமன்றம் என இவர்களின் கூட்டில், தமிழனுக்கு வரும் இன்னொரு அழிவு நியுட்ரினோ திட்டம்.
7 மணி நேரம் · பொது

மண்ணழிப்பு மலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக