திங்கள், 28 செப்டம்பர், 2020

இசுலாமியர் இனப்பற்று பட்டியல்

 Aathimoola Perumal Prakash

ஏன் நிறுத்திவிட்டீர்கள்.

பினாங்கு தீவுக்கு நாடுகடத்தப்பட்ட மருதுபாண்டியரின் தளபதி சேக் உசேன் ஒரு இசுலாமியத் தமிழர்.

தமிழை ஆட்சி மொழியாக்க வாக்கெடுப்பு நடத்திய காயிதே மில்லத் ஒரு இசுலாமியத் தமிழர்.

குமரியைத் தமிழகத்துடன் இணைத்த கிறித்தவர் நேசமணியாரின் தளபதி அப்துல் ரசாக் ஒரு இசுலாமியத் தமிழர்.

குமரி மீட்பு போராட்டத்தில் குண்டு வாங்கி இறந்த பீர் முகமது ஒரு இசுலாமியத் தமிழர்.

வடக்கெல்லை காவலன் மபொசி யின் தளபதி கா.மு.ஷெரீப் ஒரு இசுலாமியத் தமிழர்.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக சென்னை சீரணி அரங்கில் முதல் மாநாடு நடத்திய (அகமது அலி) பழனி பாபா ஒரு இசுலாமியத் தமிழர்.

ஈழத்தமிழருக்காக கூட்டம் நடத்தில் தடாவில் கைதான 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது ஒரு இசுலாமியத் தமிழர்.

ஈழத்தமிழருக்காக முதன்முலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப் ஒரு இசுலாமியர்.

முல்லைப் பெரியாறு காவலன் கே.எம்.அப்பாஸ் ஒரு இசுலாமியத் தமிழர்.

பாலாறு பாதுகாப்பு இயக்கம் நடத்தும் எம்.எம்.ஷெரீப் ஒரு இசுலாமியத் தமிழர்.

பெங்களூர் தமிழர் வழிகாட்டி எழுத்தாளர் மகிபை பாவிசைக்கோ (பீர் முகமது) ஒரு இசுலாமியத் தமிழர்.

ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய ஏ.ஆர்.ரகுமான் ஒரு இசுலாமியத் தமிழர்.

இது தமிழகத்தில்....
ஈழத்தில்....

புலித்தளபதி இம்ரான் ஒரு இசுலாமியத் தமிழர்.

புலிகளின் முதல் போரில் முதல் களப்பலி ஜுனைத்தீன் ஒரு இசுலாமியத் தமிழர்.

இவர்களெல்லாம் இனத்திற்காக உழைத்தவர்கள்.

மொழிக்கு தொண்டு செய்தோர் பட்டியல் இன்னும் நீளம்.

இசுலாமியத்தமிழர் மதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக