திங்கள், 28 செப்டம்பர், 2020
திருமணம் வாழ்த்து கவிதை தொகுப்பு
aathi1956
செவ்., 4 டிச., 2018, பிற்பகல் 11:39
பெறுநர்: எனக்கு
[4/12, 23:21] ஆதி பேரொளி: பொருந்தும் மனைபார்த்து
பெற்றவர் உற்றவர் தரம்பார்த்து
ஒன்பது கோளும் கூட
எண்திசை முரசறைந்து
ஏழ்பிறப்பும் தொடரும்
அறுசுவை விருந்தென
ஐம்புலன் சோர்வின்றி
நான்மறை வழிநின்று
மூன்று முடிச்சிட்டு
இருமணம் கலந்து
ஒன்றென மலர்ந்து
நன்றென கனிந்து
நடக்கும் இத்திருமணம்
வாழ்வாங்கு வாழ்ந்திருக்க
வாய்நிறைய வாழ்த்துகிறோம்
[4/12, 23:25] ஆதி பேரொளி: இல்லறமெனும்
இன்பச் சோலையிலே
இணைப் பறவைகளாய்
மெல்லிசை பாடி
மணமன்றலில் கூடும்
மணமக்களே..!
நல்லறம் பேணி
நலமுடன் வாழ்வீர்.!
மனையறம் துலங்கி
மாண்புடன் மகிழ்வீர்.!
பேறுகள் பல பெற்று
பெயர் நிலைக்க வாழ்வீர்.!
இன்ப துன்பத்தில்
இரண்டெனக் கலந்து
ஒன்றென ஆவீர்.!
அன்பு மிகுந்து
அக்கறை நயந்து
பண்பில் கனிந்து
பாசத்தில் இணைந்து
பாருலகம் வியந்து
போற்றிப் புகழ்ந்திட
பல்லாண்டு வாழ்க .! வாழ்கவே.!
[4/12, 23:33] ஆதி பேரொளி: அன்பின் இலக்கணமாய்
ஆருயிர்க் காதலோடு
இணை பிரியாமல்
ஈகையோடு வாழ்க!
உண்மை பேசி
ஊக்கத்தோடு வாழ்க!
எண்ணியபடியெல்லாம்
ஏற்றமாய் வாழ்க!
ஐயத்தை நீக்கி
ஒற்றுமையாய் வாழ்க!
ஓருயிர் என்றாகி
ஒளவை நெறிப்படி
பல்லாண்டு வாழ்க!
[4/12, 23:36] ஆதி பேரொளி: இல்வாழ்க்கை இன்று இனிதாய்த் தொடங்கி
நல்வாழ்வு அமைந்திடவே நல்லோர் ஆசியுடன்
மடையிலா வெள்ளம் போல்
மகிழ்ச்சி பொங்க
தடையிலா இன்பம் பெற்று
தரணியில் வாழ்கவே!
சங்கத் தமிழ்ப் பாடல்
சலிக்காத சந்தம் போல்
திங்கள் தரும் இதமான
தண்ணொளி போல்
கங்கையிலே பாய்கின்ற
கரைபுரண்ட வெள்ளம்போல்
மங்கலம் பொங்க என்றும்
மகிழ்வோடு வாழ்கவே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக