புதன், 30 செப்டம்பர், 2020

கோதண்டராம நடேசையர் வாழ்க்கை குறிப்பு பார்ப்பனத்தமிழர் ஈழம் மலையகம்

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 14 ஜன., 2019, பிற்பகல் 9:03
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
கோதண்டராம நடேசய்யர் -- பிறந்தநாள் இன்று ( 14 சனவரி 1887 - 7 நவம்பர் 1947)
# தமிழகத்தில் பிறந்து இலங்கையின் மலையகத்தில் குடியேறிய தமிழறிஞர்,
தமிழகத்தில் கோதண்டராம ஐயருக்கும் பகீரதம்மாளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார். தஞ்சை மண்ணிலேயே வளர்ந்த நடேசையர்,
1910-ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர்த்தகத்தில் தமிழர்களும் தடம் பதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1914-இல் வணிகர்களுக்காக வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையை மாதமிருமுறையும், பின்னர் வாரமொரு முறையும் நடத்தினார். ஒற்றன் என்ற புதினத்தையும் எழுதினார்.
தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்களை உருவாக்கினார். அச்சங்கத்தின் கிளை ஒன்றைத் தோற்றுவிக்க இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் சென்றவர், அங்கே மலைநாட்டில் இந்தியத் தமிழர்கள் அடிமைகளாகத் தேயிலைச் செடிகளோடு சேர்ந்து நடப்பட்டிருப்பத
ைக் கண்டு மனம் கொதித்து, இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கினார்.
யாருமே நுழைய முடியாத "மலையகத் தோட்டங்களில்" ஒரு புடவை வியாபாரியாக வேடமிட்டுச் சென்று, தோட்டப்புறத் தமிழர்களைச் சந்தித்தார். மலையகத் தமிழர்களின் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குக் காரணம், கல்வியறிவின்மையும், விழிப்புணர்வின்மையுமே என்பதைக் கண்கூடாக நடேசய்யர் கண்டார். தோட்டப்புறத் துரைமார்களிடமும், கங்காணிகளிடமும் சிக்குண்டு, துன்பத்தில் கிடந்த தமிழர்களின் அகக்கண்களைத் திறக்கவும் அவர் சூளுரைத்தார்.
தேசநேசன் இதழ் வெளியிடல் தொகு
1921-ஆம் ஆண்டு தேசநேசன் என்ற நாளிதழைத் தொடங்கினார். நடேசய்யரின் "தேசநேசன்" இதழே, இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்ட சிறப்பு தேசநேசன் இதழுக்கு உண்டு. தோட்டப்புறத் தமிழர்களின் துன்ப வாழ்க்கையையும், அவர்களை அடிமைப்படுத்திய கரங்களையும் தேசநேசன் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டிய நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காகவே, தி சிட்டிசன் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார். நடேசய்யரின் பத்திரிகை எழுத்துகளும், பேச்சுகளும் ஆங்கிலேய அரசைத் திணறடித்தன. இலங்கையில் இந்தியத் தொழிலாளர்களைக் காப்பாற்றும் விதமாகத் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடியும் நடேசய்யரே. இறக்குமதி செய்து வைத்திருந்த அடிமைகளை, சகமனிதர்களாக மாற்றி வந்த நடேசய்யரை நாடு கடத்திவிட அரசு பலமுறை முயற்சி செய்தது...
"தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நடேசையர், திரு.வி.க. வழியிலேயே 1924-ஆம் ஆண்டில், இலங்கையில், தேசபக்தன் என்ற இதழைத் தொடங்கினார். அரசியல் உலகில் மிகச் செல்வாக்குடன் இருந்த போதும், தேசபக்தனில் எழுத நடேசய்யர் தவறியதேயில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை உருவாக்குவதற்காகவே, 1930-இல் மலையகத்தின் தோட்டத்தின் அடிவாரத்தில் குடியமர்ந்தார். தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றி அம்மக்களை அடிமைத் தனத்திலிருந்து தட்டியெழுப்பினார். நடேசய்யரின் இப்பெரும் பணியில் தோள் கொடுத்த பெருமை, அவரின் மனைவி மீனாட்சி அம்மையையே சாரும். தோட்டத் தொழிலாளர்களை விழிக்கச் செய்ததோடு, தமிழையும் அவர்கள் செழிக்கச் செய்தனர்.
தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் தொழிலாளர்களின் இதயத்தில் மின்னலாகப் பதிந்து, அம்மலை முகடுகளில் எல்லாம் எதிரொலித்தன.
"தேசபக்தன்' இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை எழுதி நடேசய்யர் வெளியிட்டார். மகாகவி பாரதியின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்த பெருமை நடேசையரையே சாரும். தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் கங்காணிகளையும், துரைமார்களையும் கேள்விக்குள்ளாக்கிய நடேசய்யரின் பாடல்கள், அத்தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் தேசியகீதமாகத் திகழ்ந்தது.
# எமது புகழ் வணக்கம்... #நாம்_தமிழர் .
9 மணி நேரம்

ஐயர் பொதுவுடைமை தொழிலாளர் பத்திரிக்கை ஊடகம் இனப்பற்று ஈழம் தமிழகம் ஒற்றுமை பங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக