புதன், 30 செப்டம்பர், 2020
காமராசர் விமர்சனம் பார்ப்பனர் அடிமை என ஈவேரா
aathi1956
திங்., 24 டிச., 2018, பிற்பகல் 9:25
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
"பார்ப்பனர்கள் தேடிப் பிடித்த ஆட்களில் ஒருவர் காமராசர் " - தந்தை பெரியார்
1952 தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் நின்று காமராசர் வெற்றி பெற்றார். அப்போது அவர் தோற்க வேண்டும் என்பதற்காகப் பட்ட பாடு வீணானது கண்டு மனம் வெதும்பி விடுதலையில் எழுதியது, "எப்படிப் பட்ட ஆசாமி வெற்றி பெற்று விட்டார், ஐயோ! தமிழகமே! உன் கதி இதுவாகவா போக வேண்டும். இராவணீயம் தோற்று விட்டது. விபீஷணத்துவம் வெற்றி பெற்று விட்டது" என்றதோடு
"காமராசர் தோற்றார் என்ற செய்தியினால் இந்த மாகாணம் மட்டுமல்ல, இந்த நாடே எவ்வளவு கிடுகிடுத்துப் போயிருக்கும். நேருவுக்கு வலது கையாகவும், பார்ப்பனர்களுக்கு நீங்காத் துணையாகவும், முதலாளிகளுக்கு இரும்புத்தூணாகவும் இருக்கின்ற ஒருவரை தோற்கடிக்கக் கூடிய தலை சிறந்த வாய்ப்பை தமிழ் மக்கள் இழந்து விட்டார்களே ! தோழர் தங்கமணிக்குப் பயந்து கொண்டு விருதுநகரை விட்டு ஓடி, சென்னை ராஜ்ய சட்டசபையையும் விட்டு ஓடி, பார்லிமென்ட் அபேட்சகராக நின்ற ஒரு காங்கிரஸ் தலைவரைத் தோற்கடிக்கக் கூடிய தங்கமான வாய்ப்பை பாழாக்கி விட்டார்களே, படு மோசக்காரர்கள் " என்று விடுதலையில் எழுதப்பட்டது.
விடுதலை தலையங்கத்தில்,..
" காமராஜர் இன்றைய இந்த தமிழ் நாட்டில் தன்னை ஒரு சர்வாதிகாரி ஸ்டாலின் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். சர்க்கார் தன் காலடியில் இருப்பதாகவும், மந்திரிகள் தன்னுடைய அடிமைகள், வேலைக்காரர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்" என்று கூறிவிட்டு மேலும் எழுதுகிறது, " காமராஜர் யார்? அவரின் இயற்கை நிலை என்ன? என்ன காரணத்தால் இவர் பொது வாழ்வில் மதிக்க வேண்டியவரானார்? இன்றைய வாழ்வு இவருக்கு எப்படி வந்தது? இவருடைய பொருளாதாரம், கல்வி, பொது அறிவு, அரசியல் திறமை, தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், ஒழுக்கம் எவ்வளவு? என்பவைகளான விஷயங்களை இவரே சிந்தித்துப் பார்ப்பாரானால், இவர் இப்போது பேசும் பேச்சுகளுக்குத்தான் தகுதியுடையவரா?" என்று கூறிவிட்டு மேலும் எழுதுகிறது, "காங்கிரசானது முதல் தர மக்களிடமிருந்து பிடுங்கி மூன்றாந்தர மக்களிடம் ஒப்புவிக்கப்பட்
டாலொழிய தங்களால் இந்த நாட்டில் வாழ முடியாது என்கின்ற நிலை, பார்ப்பனருக்கு ஏற்படும்படியாக சுயமரியாதை இயக்கம் செய்து விட்டதன் பயனாய், பார்ப்பனர்கள் தேடிப் பிடித்த ஆள்களில் ஒருவராக காமராஜர் பார்ப்பனர்களுக்குத் கிடைத்தவரே தவிர, அதற்கேற்ற காமராஜரின் தகுதி என்ன என்று சிந்திக்கப் பொது மக்களை வேண்டுகிறோம்"
தொகுத்துச் சென்னால் காமராசருக்கு விடுதலை (பெரியார்) சூட்டிய புகழ் மாலைகள்:
நேருவின் வலது கரம்...
பார்ப்பனப் பாதுகாவலர்...
முதலாளிக்கு இரும்புத் தூண்...
அடிதடியாட்சிக் கர்த்தா...
கொலை பாதக ஆட்சிக்கு உடந்தையானவர்...
கல்வி,பொதுஅறிவு
,ஒழுக்கம்,அனுபவம்,நேர்மை,தகுதி
திறமை இல்லாதவர்....
என்று விடுதலை புகழ் மாலை சூட்டுகிறது.
ஆதாரம் : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.
கடிதம் 63
தலைப்பு : மிருக ஆட்சி
தேர்தலும் காங்கிரசும் - விடுதலையும் காமராசரும் - காங்கிரசாட்சியின் கொடுமை
நாள் : O2-09-1956
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக