செவ்வாய், 29 செப்டம்பர், 2020
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்த பிறகு தீவைப்பு கலவரம் போலீஸ் சதி
aathi1956
செவ்., 18 டிச., 2018, பிற்பகல் 9:47
பெறுநர்: எனக்கு
காவல்துறை போராடிய மக்கள் மீது எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கி சூடு நடத்திய பின்புதான் தீ வைப்பு சம்பவம் காவல்துறை பாதுகாப்போடு நடந்துள்ளது
*தூத்துக்குடியில் இயங்கி தற்போது தமிழக அரசின் அரசாணை மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஸ்டொ்லைட் நிறுவனம் எக்காலத்திலும் இயங்குவதற்கு தகுதியற்றது என்பதற்கான மிக முக்கிய ஆவணங்களை இன்று உங்கள் முன் வெளியிடுகிறோம்.
ஸ்டெர்லைட் தாமிர ஆலை துப்பாக்கி சூடு நிகழ்வில் உலகம் இதுவரை அறிந்திராத உண்மைகளை தற்போது உங்கள் முன் வெளியிடுகிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்கள் 22.05.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதனால்தான் 14பேர் இறந்தனர் என்பதுதான் அரசு தரப்பில் கூறப்பட்டு வரும் செய்தியாகும். அரசு கூறியதை வைத்துதான் பலரும், திரையுலக பிரபலங்களும் கூட "மக்கள் செய்தது தவறு, போலீசு வேறு வழியின்றி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது எனவும், மக்கள் கூட வேறு வழியின்றி எதிர்வினையாக கலவரத்தில் ஈடுபடுவது இயல்புதானே என்றும் கூறி வருவதை அனைவரும் அறிவோம். ஆனால் மே-22 இல் நடந்த உண்மை சம்பவம் வேறானது என்பதை உங்கள் முன் ஆதாரத்தோடு வெளியிடுகிறோம்.
முதலில் காவல்துறை போராடிய மக்கள் மீது எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கி சூடு நடத்திய பின்புதான் தீ வைப்பு சம்பவம் காவல்துறை பாதுகாப்போடு நடந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக முன் வைக்கிறோம்.
மே-22 அன்று பேரணியாக வந்த மக்கள் காலை 11.50மணிக்குதான் தூத்துக்குடி- நெல்லை 4 வழி சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைகின்றனர். காலை 11.55மணிக்கு தூத்துக்குடி மமாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக வந்து சேருகின்றனர்.
மக்கள் மீது எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் சரியாக காலை 11.56 மணிக்கு காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.
மக்கள் அச்சமடைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் கிழக்குப்பற சாலை வழியாக ஓடி வந்து தென்புறமாக ஓடி தூத்துக்குடி-நெ
ல்லை 4வழி நெடுஞ்சாலையை அடைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நிற்கின்னர். அப்போது நேரம் பகல் 11.59 மணி.
ஆனால் மக்கள் கூட்டத்தில் இருந்த சிலர் மட்டும் தென்புறமாக செல்லாமல் வடக்குபுறமாக ஓடி ஒரு மாற்றுதிறனாளிகள் படிப்பகம் அருகே நின்று கொள்கின்றனர்.
மக்கள் 4 வழி சாலையில் காவல்துறையால் தடுத்து நின்று கொண்டு இருக்கும் போதே சரியாக மதியம் 12.01 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேற்கு புறத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த போலீசு கண்ரோல் ரூமில் இருந்து நெல்லை சரக டி.அய்.ஜி தனது காரில் டெம்போ டிராவலர் வாகன பாதுகாப்போடு வெளியேறுகின்றார்.
இந்த நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்ற கந்தையா அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்புற பகுதியில் கிழக்கு புறமாக இருக்ம் இடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ளார்ர அவரை காட்சி ஊடகங்கள் படமெடுக்கின்றன. காவல்துறை போட்டோகிராபரும் அவர் அருகே இளஞ்சிவப்பு நிற ஸ்கூட்டியை நிறுத்தி வைத்து விட்டு படம் எடுக்கின்றார். கந்தையா அருகே சந்தோஷ் என்ற இளைஞரும் காவல்துறை தாக்குதலால் கடுமையாக காயமுற்று அமர்ந்து இருக்கின்றார். அவர் செய்தியாளர்களிடம் தான் இறந்தால் காவல்துறையே முழு பொறுப்பு என கூறுகிற இந்த சம்பவத்தின் போது, அங்கு இருந்த எந்த வாகனமும் தீக்கிரையாக்கப்படவில்லை என்பது காட்சி ஊடகம் பதிவுகள் மூலம் நாம் அறிய முடிகிறது.
பகல் 12.02 க்கு போலீசு போட்டோகிராபர் தனது இளஞ்சிவப்பு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு மாவட்ட. ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து தெற்கே சென்று மேற்குபுறமாக செல்லும் போதும் அங்கு எங்கும் தீவைப்பு நிகழ்வுகள் நடைபெற்று இருக்கவில்லை.
பகல் 12.04 மணிக்கு மாவட்ட. ஆட்சியர் அலுவலக தெற்கு பகுதியில் வெள்ளை சட்டை-கருப்பு பேண்ட் போட்ட அரசு அதிகாரிகள் யாருக்காவோ காத்துக் கொண்டு இருந்தனர். ஒருவர் மட்டும் கிழக்குபுற சாலையை பார்த்து விட்டு வேகமாக. ஓடி வருகிறார். உடனே அங்கிருந்த சீருடை அணிந்த-
சீருடை அணியாத காவல்துறையினரும் வேகமாக ஓடிவந்து சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புறத்தில் மேற்காக உள்ள போலிஸ் கன்டரோல் ரூமுக்கும் மற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டடத்திற்குள்ளும் ஓடிவந்துவிடுகின்றனர்.
சரியாக 12.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப்புறத்திலிருந்து சுமார் 40 பேர் சைக்கிள் ஸ்டாண்டுக்கு தீவைத்துவிட்டு , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிர
ுந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை தரையில் தள்ளிவிட்டு தீவைத்தனர். இதை காவல்துறையினர் யாரும் தடுத்து விரட்டவும் இல்லை, துப்பாக்கியால் சுடவும் இல்லை , கண்ணீர் புகைக்குண்டு எறிந்து கலைக்கவும் இல்லை.
அதேபோல், தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் நான்குவழிச்சாலய
ிலிருந்து வரவில்லை. இந்த துப்பாக்கிச்சூடும், தீவைப்பு சம்பவமும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கூட்டுச்சதியாகும்.
ஈழப்படுகொலைபோல் ஸ்டெர்லைட் நிர்வாகமும், அரசும் சேர்ந்து நடத்திய படுகொலையாகும்.
சுற்றுச்சூழல் சட்டங்களையும், விதிகளையும் மதிக்காத ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அடியாட்கள் மூலம் தீவைப்பு சம்பவத்தை நடத்தி குற்றநிருவனமாக மாறியுள்ளது.
ஸ்டெர்லைட் நிருவனம் தமிழகத்தில்மட்ட
ுமல்ல இந்தியாவிலும், உலகத்திலும் எங்கும் இயங்க தகுதியில்லாத, சட்டவிரோத கிரிமினல் நிருவனமாக மாறியுள்ளது. உடனடியாக இந்த படுகொலைக்கு காரணமாக உள்ள வேதாந்தா நிருவன உரிமையாளர் அனில் அகர்வாலை கைது செய்ய வேண்டும்.
இந்த நிருவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் நிருவனம் மற்றும் வேதாந்தா நிருவனத்தின் அனைத்து நிருவனங்களுக்கும் கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும்.
உலக அளவில் வேதாந்தா குழுமத்தை தடை செய்வதோடு மட்டுமன்றி அதன் குற்றப்பின்னணி நடவடிக்கைக்காக சர்வதேச சட்டப்படி தகுந்த தண்டணை கொடுக்க வேண்டும்.
இந்த பிரச்சினையை உலக அளவில் ஐ.நா.சபை வரை கொண்டு செல்வோமென தெரிவித்துக் கொள்கிறோம்.
முகிலன்,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்.
EMAIL:masvijayan@gmail.com
அலைபேசி: 9385804483
நேற்று, பிற்பகல் 6:53 ·
முகிலன் mugilan swamiyathal அறிக்கை விளக்கம் சான்று சாட்சி ஆதாரம் கார்ப்பரேட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக