புதன், 30 செப்டம்பர், 2020

ஜனவரி யை தை என்று மொழிபெயர்ப்பர் கிறித்தவர் தமிழறிஞர் எனவே புத்தாண்டு கல்வெட்டு செல்லாது

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 21 ஜன., 2019, முற்பகல் 9:23
பெறுநர்: எனக்கு
Kathiwakkam Baskaran Magan Naveenan ,
சபரிநாதன் பூசுரன் மற்றும் 30 பேருடன் இருக்கிறார்.
தையே புத்தாண்டு!!!!
===================
ஐரோப்பிய-மிஷினரி காலங்களில் ஜனவரியை தை, பிப்ரவரியை மாசி என்பர். வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவனியில், ஏசு மார்கழி 25ல் பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். அதாவது திசம்பர் 25ல் பிறந்தார் என்பதனையே மார்கழி 25 என சொல்கிறார்.. தரங்கம்பாடியில் கண்டெடுக்கப்பட்ட டச்சு ஆவணங்களிலும் டச்சு மொழியில் ஜனவரி 15 என்று இருந்தால், தமிழிலும் தை 15 என்றே இருக்கிறது....
இதன்மூலம் ஐரோப்பியர் பனிக்காலத்தில் துவங்கும் ஜனவரி, பிப்ரவரிக்கு இணையாக தை,மாசி என ஆக்கியதை அறியலாம்....
இந்த தவறான வழக்கம் ஈழத்தில் இன்றும் பின்பற்றுவதைக் காணலாம்....
மாவீரர் நாளான நவம்பர் 27ஐ , கார்த்திகை 27 ஆம் நாள் என்றுக் குறிப்பிடுவதைக் காணலாம்.
200-300 ஆண்டுகளுக்கு முன் வெட்டியதாக சொல்லப்படும் (அதுவும் இன்னும் உண்மைத் தன்மையை நிருபிக்காத) ஐரோப்பியர் கால கல்வெட்டில் தை முதலாக இருப்பதைக் கொண்டு தை தான் புத்தாண்டு என்று குதிப்போரைக் கண்டால் நகைச்சுவையாக உள்ளது....
தை தான் புத்தாண்டு, யாருக்கு??? இன்னும் ஐரோப்பியர் அடிமைகளாக இருக்கும் திராவிட மற்றும் போலி தமிழ் தேசிய வாதிகளுக்கு!!!!!

நாட்காட்டி சித்திரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக