திங்கள், 28 செப்டம்பர், 2020

கர்நாடகா புதிய அணை நடுவணரசு ஒப்புதல்

aathi1956 செவ்., 27 நவ., 2018, பிற்பகல் 6:59 பெறுநர்: எனக்கு மேகதாது அணை.. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்  Web Team  Published: 27 Nov, 2018 11:59 am காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 5000 கோடி திட்ட மதிப்பீட்டில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான வரைவு அறிக்கையை கர்நாடகா அரசு தாக்கல் செய்திருந்தது. அணை அமையும் இடம், அணையின் பரப்பளவு உள்ளிட்ட அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு அணை கட்ட இருப்பதாக கர்நாடகா சொல்லி வருகிறது. ஆனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடாக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரைவு அறிக்கையின் அடிப்படையில் காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதியதலைமுறை செய்தி நதிநீர் மத்திய அரசு காவிரி காவேரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக