செவ்வாய், 29 செப்டம்பர், 2020
கருணாநிதி துரோகம் பட்டியல் புலமைப்பித்தன் காவிரி முல்லைப்பெரியாறு கச்சத்தீவு 2009
aathi1956
திங்., 17 டிச., 2018, முற்பகல் 9:27
பெறுநர்: எனக்கு
செ பிரபாகரன்
கருணாநிதி செய்த #துரோகங்களின் வரலாறு ....
குட்டிமணி, ஜெகனில் இருந்து ஆரம்பித்த கருணாநிதியின் துரோகம்.
தன் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்
‘கச்சத் தீவு மட்டுமல்ல, கருணாநிதியின் ஆட்சியில் அவரது தன்னலப் போக்கினால் பறிபோன தமிழர் உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன’ என்கிறார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 22 ஆண்டு கால நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப் பித்தன்.
‘‘1974-ல் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்காவுக்கு இலங்கை ஆதரவளிக்க முன்வந்தது. அதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கையை தாஜா பண்ணவுமே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமிழரின் பூமியான கச்சத்தீவை இலங்கைக்குத் தானமாகக் கொடுத்தார்.
அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்திருந்தார். டெல்லி ஆதரவு கைநழுவிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்துக்காகவும் கச்சத்தீவை தாரை வார்க்கும் இந்திராகாந்தியின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதி காத்தார்.
மீனவர்கள் ஓய்வெடுக்கும், மீன்வலை உலர்த்தும், அந்தோணியார் கோயிலுக்குப் போய் வரும் தமிழர்களுக்கான உரிமைகளையும் 1976-ல் முற்றிலும் பறித்துவிட்டது இலங்கை அரசு. அதையும் முதல்வராக இருந்த கருணாநிதி வேடிக்கை பார்த்தார்.
அதே 1974-ல் தமிழ்நாடு-கர்நாடகா இடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு (1924) போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய நேரம் வந்தது. அப்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றிருந்தால் அதுவரை காவிரியில் நமக்கு இருந்த அதிகபட்ச உரிமையை தக்க வைத்திருக்க முடியும். ஆனால், அந்த நேரத்தில்கர்நாடகாவில் தேர்தல் நேரம் என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திரா காந்தி, காவிரி விவகாரத்தை கிடப்பில் போடும்படி கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டார். அதையேற்று அவரும் உச்ச நீதிமன்றத்துக்கு அந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவில்லை. இதனால், இன்று வரைக்கும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
அதே ஆண்டு (1974) இலங்கையில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த # குட்டிமணி,
# ஜெகன் ஆகிய இரு போராளிகள் தமிழகத்துக்கு வந்தார்கள். அவர்களை கருணாநிதி அரசு கைது செய்தது. பிரதமர் இந்திராகாந்தியிடம் உள்ள விசுவாசத்தை நிரூபிப்பதற்காக இருவரையும் #இலங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டார், கருணாநிதி.
இந்திய அரசு இவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டது. அதன்பின்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணிக்கும், ஜெகனுக்கும் நடத்தப்பட்ட மனிதப் பேரவலங்கள் என்னவென்று உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். இறுதியில் அந்த இருவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
2006-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ஈழத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்குத் துணைபோன மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தார். ‘போரை நிறுத்த இந்திய அரசிடம் வலியுறுத்துங்கள்’ என்று இலங்கையிலிருந்து வந்த அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கோரியபோது,
‘இந்தியா ஒரு பெரிய தேசம். பெரிய தலைவரை இழந்திருக்கிறது. அவரது குடும்பம் ஆட்சியிலிருக்கிறது. அவர்களின் உணர்ச்சியைத் தடுக்க முடியாது’ என்று கொஞ்சமும் மனிதாபிமானமின்றிச் சொன்னவர்தான் கருணாநிதி.
‘தமிழ் ஆண்கள் எல்லாம் கடலுக்கு. தமிழ்ப் பெண்கள் எல்லாம் சிங்கள ராணுவத்துக்கு’ என்று இந்திய அரசின் ஆதரவில் இலங்கை கூவியது. அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த கருணாநிதி,
‘’கடந்த 2007-ல் இலங்கையில் ஐந்து லட்சம் ஈழத்தமிழர்கள் பசியாலும் பட்டினியாலும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உணவு, மருந்துகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் சட்டபூர்வமான அனுமதி கோரப்பட்டது. ஆனால், 7 மாதங்களாகியும் அனுமதி கிடைக்கவில்லை. ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேரடியாகவே வலியுறுத்தினார். ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் வலியுறுத்தினர். ஆனாலும், எந்தப் பயனும் இல்லை.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இரு கப்பல்கள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பிவைத் தார். எம்.ஜி.ஆரின் அத்தகைய உள்ளம் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இல்லை.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006 பிப்ரவரி 27-ல் தீர்ப்பு வழங்கியது. அப்போது தேர்தல் நேரம் என்பதாலும், அணையில் தண்ணீர் அந்த அளவு இல்லை என்பதாலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வடிகால் மதகுகளை இறக்க உத்தரவிடவில்லை.
அதன்பிறகு 2006 மே மாதம் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, வடிகால் மதகுகளை இறக்கி இருக்க வேண்டும். அவர் செய்யவில்லை. விளைவு 10.11.2009 அன்று உச்ச நீதிமன்றம், இரு தரப்பும் நடப்பில் உள்ள மாமூல் நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இதன் பொருள் வடிகால் மதகுகள் பதின்மூன்றையும் தமிழக அரசு கீழே இறக்கக்கூடாது என்பதாகும். இதனால் இன்றுவரை முல்லைப் பெரியாறு சிக்கல் தீரவில்லை. பினனர் ஆட்சிக்கு வந்த அம்மா
2008-ல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்த கருணாநிதி, ‘கர்நாடகாவில் தற்போது தேர்தல் நடக்கிறது, அது முடிந்ததும் அத்திட்டம் தொடங்கப்படும்’ என்று அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த முதல்வர் எடியூரப்பா இன்றுவரை ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
கருணாநிதி மட்டும் கச்சதீவை கொடுக்காமல் இருந்திருந்தால் 867 மீனவர்கள் உயிர் போயிருக்காது...
கொஞ்சமா நஞ்சமா கருணாநிதி துரோகங்கள். எழுத யுகம் ஆகும்...
திமுக கருணாநிதி ஈழம் வந்தேறி தெலுங்கர் சின்னமேளம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக