செவ்வாய், 29 செப்டம்பர், 2020
திருவாதவூர் தமிழி கல்வெட்டு கிமு 2ஆம் நூற்றாண்டு பழமை
aathi1956
சனி, 15 டிச., 2018, பிற்பகல் 12:14
பெறுநர்: எனக்கு
திருச்சி பார்த்தி , 2 புதிய படங்களை ஆல்பத்தில் சேர்த்துள்ளார்: தமிழ் எழுத்து வளர்ச்சி .
திருவாதவூர் தமிழி
இந்திய கல்வெட்டு அறிக்கை 1965-1956 ல் வெளிவந்துள்ளது. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் 1996 ல் மீண்டும் மறுஆய்வு செய்தார்.
இரு கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கே பாறை ஓவியமும் உள்ளது.
கல்வெட்டு 1:
"பாங்காட அர்இதன் கொட்டுப்பிதோன்"
பாங்காடு என்ற ஊரை சார்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 2:
"உபசன் பர்அசு உறை கொட்டுப்பிதோன்"
பரசு என்ற உபசரால் இந்த குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். உபசன் என்றால் உபாத்யாசான், சமயஆசிரியர் என பொருள்படும்.
இவ்விரு கல்வெட்டுகளின் காலம் கி.மு இரண்டு என கணிக்கப்பட்டுள்
ளது.
பிராமி எழுத்துரு பொருள் சமணர் குளம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக