செவ்வாய், 29 செப்டம்பர், 2020

வீரப்பன் எதிரி கோபாலகிருஷ்ணன் சிலை போலீஸ் யாரும் வரவில்லை

aathi1956 வியா., 6 டிச., 2018, முற்பகல் 11:24 பெறுநர்: எனக்கு சந்தனக்காடு என்றால் எப்படி வீரப்பனை ஞாபகத்துக்கு வருகிறதோ அதேபோல ``அந்த வீரப்பனைப் பிடித்தே தீருவேன்'' என்று கங்கணம் கட்டி வாழ்ந்த வீரப்பன் தேடுதல் வேட்டையின் தமிழக அதிரடிப்படை தலைவர் கோபாலகிருஷ்ணனும் ஞாபகத்துக்கு வருவார். அவருடைய முழு உருவ வெண்கலச் சிலை சொந்த ஊரில் நிறுவப்பட்டது. காவல்துறையினர் யாரும் வராததால் கோபாலகிருஷணனின் உறவினர்கள் விரத்தி அடைந்தார்கள். சேலம் மாவட்டம், மேட்டூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழக அதிரடிப்படைத் தலைவராக பணியாற்றினார். 1989-ம் ஆண்டு ``வீரப்பனைப் பிடித்தே தீருவேன்'' என்று சவால்விட்டார். அதையடுத்து, கொளத்தூர் சந்தையில் வீரப்பன், ``நான் சொரக்கா மடுவில் முகாமிட்டிருக்கிறேன். ஆம்பளையாக இருந்தால் பிடித்துக் கொள்'' என்று பதிலுக்கு சவால் விட்டார். இதையடுத்து, தமிழக அதிரடிப்படை போலீஸார், வனத்துறையினர் மற்றும் வீரப்பனின் பற்றிய தகவல் கொடுப்பவர்கள் என அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றபோது சொரக்கா மடுவில் பதுங்கி இருந்த வீரப்பன் கண்ணி வெடி வைத்துத் தாக்கினார். இதில் 22 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தில் கோபாலகிருஷ்ணன் மயிரிழையில் உயிர் தப்பினார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா, கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பிறகு குணமாகி சேலம் மாநகர காவல்துறை கமிஷனராகவும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனராகவும், தூத்துக்குடி ஐ.ஜி-யாக இருந்து பணி ஓய்வு பெற்றார். வயது மூப்பு காரணமாக 2016-ல் உயிரிழந்தார். அவருடைய உடல் சேலம் கேம்ப் பகுதியில் அவருடைய தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தினர் கோபாலகிருஷ்ணனுக்கு 6 அடியில் வெண்கலச் சிலை நிறுவி அவருடைய பிறந்த தினமான இன்று சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குக் காவல்துறையினர் யாரும் வராததால் அவருடைய குடும்பத்தினர் விரக்தி அடைந்தார்கள். வீரப்பனார் தாக்குதல் காவல்துறை அவமானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக