திங்கள், 28 செப்டம்பர், 2020
1997 கோவை கலவரம் காவல்துறை திட்டமிட்டு இசுலாமியர் படுகொலை
aathi1956
சனி, 1 டிச., 2018, பிற்பகல் 6:28
பெறுநர்: எனக்கு
Tada J. Abdul Rahim
1997 - கோவையில் ஓடிய ரத்த ஆறு!
காக்கி உடையில் காவி பயங்கரவாதிகள்!
காவி அவதாரம் எடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக கோர தாண்டவமாடிய காக்கி பயங்கரவாதம்!
காவல்துறையினர் ஒட்டு மொத்த பொதுமக்களுக்கான பாதுகாவலர்கள் என்பதையும், முஸ்லிம்களும் பொதுமக்கள்தான் என்பதையும்
(மறந்து என்பதை விட ) மறுத்து -
ஒரு காவலர் (செல்வராஜ்) கொலையை வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிராக அணிதிரண்டு, இந்துத்துவ பயங்கரவாதிகளைக் கூட்டு சேர்த்து மிருகங்களை வேட்டையாடுவது போல் கோவையில் 23 அப்பாவி முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்தனர்!
1997 ம் வருடத்தின் கணக்கின்படியே 1000 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது!
உடையில் காக்கி! உள்ளத்தில் காவி!
1997 நவம்பர் 23 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் - AC மாசானமுத்து, இன்ஸ்பெக்டர் முரளி, SI சந்திரசேகர் உட்பட சில காக்கி பயங்கரவாத அதிகாரிகள்!
AC மாசானமுத்து, கோவை காவல்துறை ஆயுதப் படை வளாகத்தில் இருந்த முஸ்லிம் காவலர்களை மட்டும் வெளியேற்றிவிட்டு ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்திய பிறகுதான் கோவையில் காவல்துறையினர் ஒன்றிணைந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
(அந்த ரகசியக் கூட்டத்தில் இந்து முன்னணித் தலைவர் மதவெறி பிடித்த பயங்கரவாதி இராம கோபாலன் கலந்து கொண்டதாக ஒரு தகவலும் உண்டு)
AC மாசானமுத்து தலைமையில் காவல்துறையினர் நடத்திய ஊர்வலத்தில் அர்ஜுன் சம்பத், அதிரடி ஆனந்தன் சிவலிங்கம், முகாம்பிகை மணி உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி பயங்கரவாதிகளும் இருந்தனர்!
அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் முஸ்லிம் கடைகளிலும், வீடுகளிலும் புகுந்து வேண்டிய பொருட்களை அள்ளிச் செல்லுமாறு கூறினார்!
B1 காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் முஸ்லிம்களின் நடைபாதைக் கடைகளை தீ வைத்துக் கொளுத்தினார்!
ஷோபா சில்க்ஸ் துணிக் கடையை சூறையாடுவதற்காக ஷட்டரை உடைத்து இந்துத்துவ பயங்கரவாதிகளையும், கலவரக்காரர்களையும் உள்ளே விட்டது காவல்துறையினர்தான்!
ஒரு காவல்துறை அதிகாரி சாலையில் வந்து கொண்டிருந்த உபைதூர் ரஹ்மான் என்பவரை தலையில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார். நேரடி சாட்சியான முஸ்தபா என்பவர் தப்பி ஓடும்போது அவரையும் காலில் சுட்டார்!
ஷாகுல் ஹமீது என்பவரை இன்ஸ்பெக்டர் முரளி துப்பாக்கியால் சுட்ட பின்னரும் அவர் உயிரோடு இருந்தார், உயிரோடு இருந்தவருக்கு சிகிச்சையளிக்காமல் கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் போட்டு வைத்தனர் - பின்னர் அவரும் மரணித்துவிட்டார்!
காவல்துறையினரால் சுடப்பட்டும், காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டும் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களும் - மருத்துவமனை வளாகத்தில் வைத்து காயமடைந்தவர்களோடு சேர்த்து வெட்டப்பட்டும், தீ வைத்துக் கொலுத்தி எரிக்கப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்!
11 வயதே ஆன அபுபக்கர் என்ற பாலகனைக் கூட கொடூரமாக சுட்டுக் கொன்றனர், காவல்துறை பயங்கரவாதிகள்!
நவம்பர் 1997 ம் ஆண்டு 23 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலைகளின் போது சில மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறித்துக் கவலைப்படாமல் சில முஸ்லிம்களைக் காப்பாற்றியும் உள்ளனர்!
படுபாதகச் செயலில் ஈடுபட்டக் காவிக் காவலர்களைக் கண்டித்ததோடு, தடுக்கவும் முயற்சித்துள்ளனர் சில காவல்துறை அதிகாரிகள் என்பதையும் மறுக்க முடியாது! - ஆனால் காவல்துறை மற்றும் காவி பயங்கரவாதிகளால் அவர்களும் மிரட்டப்பட்டு முடக்கப்பட்டனர்!
போர்க்களமாக மாறியிருந்த கோவையில் இனி வாழ முடியாது என்று அச்சமடைந்து, ஏராளமான முஸ்லிம்கள் அகதிகளைப் போல் கோவையை விட்டு வெறியேறினார்கள்!
வெளிப்படையாகவே இவ்வளவு கொடூரமாக காவல்துறையினர் நடந்து கொண்ட போதும் - 23 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காவல்துறை பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை!
இந்துத்துவ இயக்கத் தலைவர்கள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை!
அர்ஜூன் சம்பத், ஆனந்தன், குமரன், மணிகண்டன் உட்பட கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் முறையாகப் பதியவில்லை!
இந்துத்துவ பயங்கரவாதிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்களுக்கு சாதகமாக குற்றப்பத்திரிகைகளும் தயாரிக்கப்பட்டன, அதனாலேயே 23 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் யாருக்கும் நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகவில்லை, அவர்களில் ஒருவர் கூட இன்று சிறையில் இல்லை!
இந்துத்துவ காவி பயங்கரவாதிகளும், காவல்துறையின் கரும்புள்ளி துரோகிகளும் இணைந்து 23 முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப்பட்ட பின்னர் - தமிழக ஆளுநரால் கோவை மாநகருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டதால் 23 கொடூரப் படுகொலைகளோடும், 1000 கோடி ரூபாய் இழப்புகளோடும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது!
கோவைக்கு அப்போது ராணுவம் வரவில்லையென்றால் இன்னும் படுகொலைகள் அதிகரித்திருக்கும், இன்னும் ஏராளமான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கும்!
இன்னும் எழுதிக் கொண்டே போகும் அளவுக்கு ஏராளமான இழப்புகளையும், கொடுமைகளையும், கோரங்களையும் அனுபவித்து பாதிக்கப்பட்டதால் கொதித்தெழுந்து, ஆத்திரமடைந்த முஸ்லிம்களின் எதிர்வினைதான் -
1998 பிப்ரவரி 14 ல் நடத்தப்பட்ட
கோவை குண்டுவெடிப்பு!
23 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்படவில்லையென்றால், முஸ்லிம்களின் சொத்துக்கள் பல நூறு கோடி சூறையாடப்படவில்
லையென்றால் கோவை குண்டு வெடிப்புச் சம்பவமே நடந்திருக்காது!
கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் உணர்ச்சிவசத்தால் நடந்தததுதான் என்று குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையிலும், தீர்ப்பிலும் பதிவாகியுள்ளது!
இவண்
கோவை ஹக்கீம்
Sent from my Samsung Galaxy smartphone.
aathi1956
இணைப்புகள்
சனி, 1 டிச., 2018, பிற்பகல் 6:30
பெறுநர்: எனக்கு
புகைப்படம் துப்பாக்கிச்சூடு போலீஸ் அராஜகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக