திங்கள், 28 செப்டம்பர், 2020
சென்டினல் தீவு பழங்குடி கற்காலம் போல இன்றும்
aathi1956
வியா., 22 நவ., 2018, முற்பகல் 8:55
பெறுநர்: எனக்கு
Vasanthan D ▶ பகுத்தறிவாதிகள் *VS* மதவாதிகள் (RATIONALIST *VS* THEIST)
# சமகால_இனப்படுகொலை
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சென்டினல் (Sentinel) என்ற 60 கி.மீ. பரப்பளவுள்ள தீவு உள்ளது...அதில் சுமார் 100 பேர், குறைந்தது 8,000 முதல் 35,000 ஆண்டுகளாக உலக மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தனித்து கற்கால மனித நாகரிகமாக (Paleolithic civilization) இன்னமும் வாழ்கின்றனர்...
அவர்கள் (Negroid) நீக்ராய்ட் எனும் கருப்பர் இனத்தை சேர்ந்தவர்கள்... ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் பல கண்டங்களுக்கு புலம்பெயரும் பொழுது கடைசியாக சென்டினல் தீவை அடைந்த கடைசி பிரிவாக இருக்கலாம் என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.. அவர்கள் பேசும் மொழிதான் உலகிலேயே பழமையான மொழியாக உள்ளது என்று மொழி ஆய்வாலர்களும் கூறுகிறார்கள்...
இங்கிலாந்து நாட்டவர் இந்த தீவிற்கு வந்தபொழுது இவர்கள் தீவில் எந்த வளமும் இல்லை என்றும் மக்களும் மிக மிருக தன்மை வாய்ந்தவர்களாகவும் பழங்கால நாகரிகமாக உள்ளனர் என்று கண்டு இந்த தீவை ஒதுக்கியே வைத்தனர்
நெருப்பபை கூட இவர்கள் பழக்கபடுத்தவில்லை..அடிப்படை விவசாயமும் அறியாதவர்களாக உள்ளனர்..
ஆனால் கரை ஒதுங்கும் பொருட்களை வைத்து மீன் பிடிக்க வலை வில் அம்பு ஈட்டி செய்ய பழகியுள்ளனர் என்றும் இவர்களை இதுனால் வரை செய்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது
சுனாமியிற்கு பிறகு அனைவரும் இறந்திருக்கலாம் என கருதி ஒரு இந்திய கப்பல் படை ஹெலிகாப்டர் அந்த தீவை வட்டமிட உடனே சிலர் ஈட்டி வீச ஆரம்பித்தனர்..
கல்வி , பணம், உடை, வியாபாரம், நெருப்பு, விவசாயம், போக்குவரத்து என நம்மிடையே உள்ள எந்த பழக்கமும் இவர்களிடம் இல்லை...
கடவுள் என்றால் என்ன வென்றே தெரியாத இந்த மக்களிடம் ஜான் ஆலன் சௌ (John Allen Chau) என்ற ஒரு அமெரிக்க கிறிஸ்துவ மிஷனரி இந்த மாதம் நவம்பர் 2018 இல் ஏசுவை பற்றி கூறி மதப்பணி செய்ய கள்ள தோணியில் சென்றார்
ஆனால் அத்தீவை அவர் நெருங்கியதும் அவரை அம்மக்கள் வில் ஏய்து கொன்று விட்டனர்.. கரை ஒதுங்கிய
அவரின் சடலத்தை மீட்டு அந்தமான் சென்று அவரின் நண்பருக்கு தகவல் தெரிவித்தார் கள்ள தோணி ஓட்டிய இந்திய மீனவர்...இந்திய அரசு உடனே 'வெளி நாட்டவரை சென்டினல் தீவிற்கு அழைத்து சென்ற குற்றத்திற்காக' அந்த மீனவரை கைது செய்துள்ளது...
இது நிச்சயமாக வரவேற்கத்தக்கது...
ஏனென்றால் நம் உலக மக்கள் உடம்பில் பல நோய் கிருமிகள் இருக்கும்...ஆனால் நமக்கெல்லாம் ஏற்கனவே நோய் எதிர்ப்பு (Immunity) இருப்பதால் நமக்கு திடீரென தொற்று நோய்கள் வராது... ஆனால் அம்மக்களிடமோ எதிர்ப்பு திறன் இருக்காது...இதனால் அந்த கிருமிகள் எளிதாக அவர்களை தொற்றி அந்த இன மக்களை கொடும் நோய்களால் ஒரு மாதத்திலேயே பூண்டோடு அழித்து விடும் ...அமேசான் காடுகளிலும் பாப்புவா நீ கினி (Papua New Guinea) காடுகளிலும் இப்படி நவநாகரிக மக்களை சந்தித்து சடாலென இறந்த கற்கால மக்கள் அநேகம்...
அது மட்டுமல்ல 'ஏசு' 'இறைமகன்' 'பாவம்' 'தேவவசனம்' 'சிலுவை' 'தீர்ப்பு நாள்' 'ஆத்துமா' 'பரலோகம்' 'நரகம்' என்று எதுவுமே
தங்கள் கற்பனைகளில் கூட விளங்காத இந்த மக்களிடம் இறைப்பணி செய்ய என்ன உள்ளது?
இயற்கையோடு இயற்கையாக ஏசு பிறப்பதற்கு முன்பிலிருந்தே தனித்து வாழும் இம்மக்களின் சிந்தனைகளையும் குழப்பி, உடலுக்கு தொற்று கிருமிகளையும் பரப்பி அநியாயமாக கொல்வானேன்?
இந்த அமெரிக்க மிஷனெரி இறந்த செய்தி வெளிநாட்டு பத்திரிக்கைகளில் காட்டு தீயாக பரவுகிறது...நிச்சயமாக மேலும் பல வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் மிஷனெரிகளும் இரகசியமாக இம்மக்களை சந்திக்க கள்ளதோணியில் வரக்கூடும்...
மேலும்
" இப்படிப்பட்ட அப்பாவி மக்களுக்கு சுவிஷேசத்தை அறிவிப்பது யார்?" என உசுப்பிவிடும் சபை போதகர்களிடமும் "ஏசுவுக்காக மரிப்பேன்" என புற்றீசல்களாக கிளம்பும் மிஷனரிகளுக்கும் நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று...
"ஏசு தன் 3 வருட வாழ்வில் மதம்(மார்கம்) மாற்றிய ஒரு யூதரல்லாத நபரை பைபிலிளிருந்து காட்டுங்கள்" என்பதே !!
யூத இரபை ஏசுவின் பன்னிரெண்டு சீடர்களுமே யூதர்கள் தாம்..!! சிலை வழிபாடு செய்யும் ஒரு ரோமரையோ, கிரேக்கரையோ, கானானியரோ ஏசு 'உங்கள் மதத்தை விட்டு என் மதத்திற்கு வாருங்கள்' என்று அழைத்ததே கிடையாது
ஏசு இறந்து மூன்றாம் நாள் உயிரோடு வந்த பிறகு 'என்னை பற்றி உலகமெங்கும் கூறுங்கள் 'என்று கூறினார் என்றால் 'இயேசு வை பற்றியே கேள்விபடாதவர்கள
ுக்கெல்லாம் அப்பொ வெறும் நரகமா? இப்படி ஒரு கொடுமையான கடவுள் உலகில் உண்டா? ' என்ற கேள்வியும் கூடவே எழுகிறது...
ஆக மதங்களை கடந்த மனித நேயத்தை விரும்புவோம்... சென்டினல் தீவிற்கு நம் சமகால மனிதர் செல்வது இனப்படுகொலைக்கு நிகரானது என்பதை வெளி நாட்டவர்களுக்கும் சுற்றுலா பயணிகளிக்கும் கூறுவோம்...!!
https://www.thetimes.co.uk/article/american-john-chau-killed-by-isolated-andaman-tribe-was-a-missionary-59bzl39gb
# சென்டினல்_தீவு_மக்களை_காப்போம்
ஆதிவாசி அந்தமான் காட்டுமிராண்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக