திங்கள், 28 செப்டம்பர், 2020

கார்த்திகை இலக்கியம் குறிப்பு

aathi1956 வெள்., 23 நவ., 2018, பிற்பகல் 5:01 பெறுநர்: எனக்கு தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது 26. நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி சில மொழி தூதொடு வந்த மழை. (ப-ரை.) சிலமொழி - சிலவாகிய மொழியினையுடையாய், தோன்றி - தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை - நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் , நாட்டவர் இட்ட - நாட்டிலுள்ளோர் கொளுத்திவைத்த, தலைநாள் விளக்கின் - முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி - அழகுடையனவாகி, புலம் எலாம் - இடமெல்லாம், பூத்தன - மலர்ந்தன; மழை தூதொடு வந்த - மழையும் தூதுடனே வந்தது, எ-று. கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது; ‘குறுமுயன் மறுநிறங்கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடுநாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம' அகநானூற்றிலும், ‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு' எனக் களவழிநாற்பதிலும், ‘துளக்கில் கபாலீச்சுரத் தான்றொல் கார்த்தி கைநாள் ............ விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' எனத் தேவாரத்திலும் ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' எனச் சிந்தாமணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றுள்ளமை காண்க. தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத் திங்களிற் சிறந்த நாளாகிய பண்டிகை விழா விடுமுறை நாட்காட்டி விண்மீன் விளக்கீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக