|
மார். 5
![]() | ![]() ![]() | ||
வழக்கறிஞர் பா.குப்பன் திருத்தணி
தமிழ் , வபிமுமு சக்திவேல்ராசா மற்றும் 45 பேருடன் இருக்கிறார்.
!!!!!!!!!!!!!!ஈ.வெ.ரா.வின் இறுமாப்பு!!!!!!!!!!!!!
சுயமரியாதை இயக்கம் புது இயக்கமல்ல, பெரியாரால் 40 ஆண்டுகட்கு முன்பு துவக்கப்பட்ட இயக்கம், பிறகு இது மெள்ள நழுவவிடப்பட்டு நீதிக்கட்சியுடன் இரண்டறக் கலந்தது,
அதன் பிறகு ”திராவிடர் கழகம்” என்ற பெயர் பெற்றது,
தேர்தலில் முழு மூச்சாக ஈடுபட்டு முதலில் நீதிக் கட்சியையும், பிறகு கம்யுனிஸ்ட் கட்சியையும் அதன் பிறகு காங்கிரசு கட்சியையும் ஆதரித்து வந்தது.
இதன் பயனாக தீவிரமான பகுத்தறிவு அறிவியல்-பிரசாரம் நடக்க முடியாமல் போய் விட்டது.
இந்நிலையில்தான் திடீரென்று பெரியார் அவர்கள் பலமுறை சிறை சென்ற தோழர்களையும், இயக்க வளர்ச்சிகாக அவரவர் சொந்தப் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருந்த மயிலை லோகநாதன், மணச்சநல்லுார் அரங்கராசன், திருச்சி வேதாசலம், மன்னார்குடி கணபதி, கடலுார் கணேசன், புதுச்சேரி நோயேல், ஆத்துார் இசையழகன் போன்ற நுாற்றுக்கணக்கான இயக்க மாணிக்கங்களையும் ”துரோகிகள்” என்று கூறினார்
. ஆனால் என்னைப் பொறுத்தவரையைில் நானாக ”விடுதலை”யை விடு்டு வெளியேறினேனே யொழிய, யாரும் என்னை நீக்கவில்லை.
பெரியாருக்கு கொள்கை பாசத்தை விட ”இரத்தபாசம்” மிகுந்து விட்டதை உணர்ந்துதான் வெளியேறினேன்.
இன்று வரையில் பதிவு செய்யப்பட்ட எந்தக் கமிட்டியும் கிடையாது, திராவிடர் கழக மத்தியக் குழுக்கூட இல்லை,
மாவட்டக் கமிட்டிகளும் பல மாவட்டங்களில் கலைக்கப்பட்டு விட்டன என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும்.
மாவட்டக் கமிட்டிகளும் பல மாவட்டங்களில் கலைக்கப்பட்டு விட்டன என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும்.
ஏன் பெரியாரே கூறி விட்டார், ”எனக்குப் பிறகு திராவிடர் கழகம் இருக்காது” என்று, கழகம் இருக்காது என்றால், பத்திரிகை இருக்காது, நிர்வாகக் குழு இருக்காது சொத்து என்றுதானே பொருள்?
ஆதலால்தான் (பழைய) சுயமரியாதை இயக்கத்தைப் புதுப்பித்து அதற்கென ”அறிவுப் பாதை ” என்ற வார ஏட்டையும் துவக்கி இருக்கிறோம்.
”எனக்குப் பிறகு தகுதியுள்ள தலைவனே இருக்க மாட்டான்
என்று கூறுவது இறுமாப்பு மட்டுமல்ல, பகுத்தறிவுகள்
கொள்கைக்கே முரண்பாடல்லவா?”
(ஆசிரியர். குத்துாசி குருசாமி, ”அறிவுப் பாதை” -12.6.1964)
நூல் புத்தகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக