வியாழன், 26 ஜூலை, 2018

சேரநாடு வடமேற்கு எல்லைகள் சேரர் இன்றைய குதிரைமலை gudramukh - 1

aathi1956 aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு
மேல்வானிலிருந்து பார்க்கும்போது குதிரை-முகம் போலத் தோற்றம் அளிக்கும் மலை. "ஊராக் குதிரை" (புறநானூறு 168)

குதிரைமலை, ஆனைமலை
தோட்டிமலை போன்ற மலைப்பெயர்கள் அவற்றின் உருவத்தால் பெயர் பெற்றவை.

பிட்டன் [1] 
பிட்டன் மகன்
பிட்டங்கொற்றன் [2] 
(அதியமான் நெடுமான்) அஞ்சி [3] 
அதியமான் மகன் பொகுட்டெழினி [4] ஆகியோர் இதனை ஆண்ட சங்ககால அரசர்கள்.

குதிரைமலை குதிரை போல் உருவம் கொண்டிருந்தது. [5] 
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்ல இந்த மலைப்பகுதியில் கணவாய்(கவாஅன்) ஒன்று இருந்தது. 
இதனைக் குதிரைக் கவான் என வழங்கினர். 
இங்குள்ள சுனையில் மக்கள் நீராடி மகிழ்வது வழக்கம். [6]
 இங்கு வாழ்ந்த மக்கள் மழவர் குடியினர்.
 இவர்கள் பழனி எனப்படும் பொதினி மலை அரசன் முருகனைத் தாக்கினர். 
ஆவியர் குடிமக்களின் அரசன் முருகன் இவர்களை விரட்டினான். [7]

குதிரைமலை கொங்குநாட்டில் உள்ள மலை .
கேரள மாநில ஏழங்குளம் கிராம பஞ்சாயத்து வார்டுகளில் ஒன்று
குதிரைமுகம் என்னும் வார்டு.

அடிக்குறிப்பு
1. ↑ வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாட் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் - அகம் 143

2. ↑ ஊராக் குதிரைக் கிழவ – புறம் 168

3. ↑ நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி – அகம் 372

4. ↑ ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினி - புறம் 158

5. ↑ தோட்டி போல் உருவம் கொண்ட மலை தொட்டபெட்டா

6. ↑ கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; (குறுந்தொகை 353)

7. ↑ உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி – அகம் 1

வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு •
கணினி பதிப்பு

dakshin Kannada மாவட்டம் kutremukha கடல் லிருந்து பார்த்தால் குதிரைமுகம் போன்ற தோற்றத்தால் ஏற்பட்ட பெயர் என்பது imp. Gezet. Mysore & coorg ல் p. 233 & 109 ல் பதிவாகியுள்ளது

  இலக்கியம் மண்மீட்பு 6215 அடி உயரம் 


நூல் : சேர மன்னர் வரலாறு 
ஔவை துரைசாமிப் பிள்ளை
பக் 35

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக