செவ்வாய், 17 ஜூலை, 2018

கண்ணகி சிலை அகற்றம் ஈவேரா சிலை உடைப்பு ஒப்பீடு திராவிடம் எச்.ராஜா

aathi1956 aathi1956@gmail.com

மார். 9
பெறுநர்: எனக்கு
கதிர் நிலவன்
கண்ணகி சிலை அகற்றமும்
பெரியார் சிலை உடைப்பும்
தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு பரபரப்பாக பேசப்பட்டும், கண்டிக்கப்பட்டும் வருகிறது. இந்த நேரத்தில் ஒரு கடந்த கால நிகழ்வை சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
தமிழர் பண்பாட்டு அடையாளமாம் சென்னை மெரினாவில் நிறுவப்பட்ட கண்ணகி சிலையை 6.1. 2001 அன்று அன்றைய அ.தி.மு.க.அரசு அகற்றியது . இவ்லை, கடத்தி கொண்டு போய் ஒளித்து வைத்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் போக்குவரத்துக்கு இடையூறாக கண்ணகி சிலை இருக்கிறது என்பதாம்.1968ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் நிறுவப்பட்டதுதான் கண்ணகி சிலை. சிலை நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்து விட்டது. அதுநாள்வரைக்கும் எவரும் போக்குவரத்துக்கு இடையூறு என்று எவரும் கூறவில்லை. ஆனால் திட்டமிட்டு சிலையை அகற்றினார்கள்.
சிலை அகற்றியதற்கு பின்னால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஜெயா தொலைக்காட்சியில் ஆஸ்தான சோதிடராக இருக்கும் காழியூர் நாராயணன் என்பவர் பகிரங்கமாகவே உண்மையை போட்டுடைத்தார். என்னவென்றால், தலை விரி கோலத்தில் நிற்கும் கண்ணகி சிலை இருக்கும் வரை செயலலிதா ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும். இதை அகற்றுவது ஒன்றே பரிகாரம் என்றார்.
அப்போது, அ.திமு.க.அரசின் மூடநம்பிக்கையை கண்டித்தும், கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவக் கோரியும் தி.மு.க. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ் தமிழர் இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் முதலிய பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மேலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமையில் தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி, கண்ணகி மாதிரி சிலையை செய்து அதே இடத்தில் நிறுவ முயன்ற போது அ.தி.மு.க.வின் குண்டாந்தடி அரசு தமிழுணர்வாளர்கள
ை தாக்கியதோடு, கண்ணகி சிலையைப் பிடுங்கி கையை முறித்துப் போட்டனர்.
அப்போது அ.தி.மு.க. அரசுக்கு கையாளாக வேலை பார்த்து வந்தார் மானமிகு வீரமணி. தமிழர்களிடம் மூடநம்பிக்கை ஒழிப்பு பாடம் போதிக்கும் மானமிகு வீரமணி இதே பாடத்தை செயலலிதாவுக்கு நடத்த முன்வரவில்லை.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பெரியார் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் கண்ணகி மீதான "வன்மத்தை" பழி தீர்த்துக் கொண்டார். போக்குவரத்துக்க
ு இடையூறு என்பதால்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது, இதில் ஒன்றும் தவறில்லை என்று வாதிட்டார்.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்று சொன்ன சிலப்பதிகார காப்பியத்தை தேவடியாள் காப்பியம் என்று கொச்சைப் படுத்தியவர் பெரியார். அதன்வழியில் வீரமணியும் கண்ணகி சிலை அகற்றப்பட்டதில் அகம் மகிழ்ந்தார். பார்ப்பனீய கொடுந்தேளாக விளங்கும் துக்ளக் சோவும் சிலை அகற்றலை ஆதரித்தார். ஆரியத்தை எதிர்க்கும் வீரமணியும், திராவிடத்தை எதிர்க்கும் சோராமசாமியும் கண்ணகி எதிர்ப்பில் ஒன்று கலந்தனர்.
தற்போது பெரியார் சிலைக்கு எச்.இராஜாவால் ஆபத்து என்றதும், மானமிகு வீரமணி பெரியார் சிலையை உடைத்துப் பார், பாரதீய சனதாக் கட்சியினர் நடமாட முடியாது என்கிறார்.
வீரமணியை பொறுத்தவரை கண்ணகி சிலையில் வழிந்தால் அது தக்காளி என்பார். பெரியார் சிலையில் வழிந்தால் இரத்தம் என்பார்.
எந்த சிலை உடைப்புகளும் எமக்கு உடன்பாடானது அல்ல. அது பிள்ளையார் சிலை உடைப்பாகட்டும், அது பெரியார் சிலை உடைப்பாகட்டும்.
கருத்தை கருத்தால் வெல்ல முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் சிலைகளைத் தேடிப் போக மாட்டான். மக்களிடம்தான் போவான்.
எவர் கோட்பாடும் அவரவர்க்கு உயர்ந்தவையாகத் தோன்றாலாம். அக் கோட்பாட்டை மக்களிடம் கொண்டு செல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
நாம் கண்ணகி சிலை நிகழ்வை நினைவூட்டுவதற்குக் காரணம் கண்ணகி மீது மாற்று கருத்து இருந்தாலும், அச்சிலைக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன், கண்டிப்பதற்கான துணிவைக் கைக் கொள்ள வேண்டுமே தவிர, வன்மத்தை அல்ல என்பதை வீரமணி போன்றவர்கள் இனியாவது உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக