aathi1956 <aathi1956@gmail.com>
மார். 18
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம் , 4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Perumal Ammavasi Thevan மற்றும் 20 பேர் உடன்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த நிதியாண்டின் (2018 - 19) இறுதியில் சுமார் ரூ 3,55,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த (மாநில) உள்நாட்டு உற்றபத்தியில் 22.29% ஆக இருக்கும், அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச அளவான 25% என்பதை விட குறைவானதாகவே இருக்கும்...
மற்ற மாநிலங்களை, மற்ற மாநிலங்களின் ஆட்சியாளர்களை, மற்ற மாநிலங்களின் அதிகாரிகளை ஒப்பிடும்போது,
தமிழ்நாட்டின் # நிதி_மேலாண்மை என்பது தமிழ்நாட்டால், தமிழ்நாடு ஆட்சியாளர்களால், தமிழ்நாடு அரசு அதிகாரிகளால் சிறப்பாகவே செய்யப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை....
கடந்த மூன்று ஆட்சிக்காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒட்டுமொத்த கடன்தொகை என்பது ஒட்டுமொத்த உற்பத்தியில்,
(# அதிமுக அரசு, முதலமைச்சர்
# ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்)
2001 = 21.7%
2002 = 24.3%
2003 = 26%
2004 = 27.3%
2005 = 25.6%
(# திமுக அரசு, முதலமைச்சர்
# கருணாநிதி ஆட்சிக்காலத்தில்)
2006 = 24.8%
2007 = 22.1%
2008 = 21.1%
2009 = 21.5%
2010 = 21.2%
(#அதிமுக அரசு, முதலமைச்சர் #ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்)
2011 = 19.6%
2012 = 19.6%
2013 = 20.5%
2014 = 20.1%
2015 = 20%
என்று சரியாகவே இருந்திருக்கிறத
ு...
இதே காலக்கட்டத்தில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது (படங்களைப் பாருங்கள்) தமிழ்நாட்டின் நிதி நிலைமையும், நிதி மேலாண்மையும் சிறப்பாகவே இருக்கிறது...
இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது,
ஒரு மாநிலம் கடனே வாங்கவில்லை என்றால், அது சிறந்த மாநிலம் என்றோ,
ஒரு மாநிலம் அதிகமாக கடன் வாங்கினால், அது மோசமான மாநிலம் என்றோ அர்த்தம் இல்லை...
இதில் முதலில் பார்க்க வேண்டியது,
ஒட்டுமொத்த (மாநில) உள்நாட்டு உற்பத்தித் தொகையில் 25% குறைவாகவே ஒட்டுமொத்த கடன்தொகை (Debt as a percentage of GsDP) இருக்கிறதா,
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு தேவையான # நிதி_வருவாய் (Debt repayment as a percentage of Revenue Income) போதுமான அளவில் இருக்கிறதா என்பதைத் தான்....
இந்த இரண்டு மதிப்பீடுகளிலும் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை....
அடுத்ததாக முக்கியமாக கவனிக்க வேண்டியது,
வாங்கப்படும் கடன்தொகை
# திட்டச்_செலவுகளுக்காக (Plan Expenditures) செலவிடப் படுகிறதா,
அல்லது,
# நிர்வாகச்_செலவுகளுக்காக (Non-Plan Expenditures) செலவு செய்யப்படுகிறதா என்பதைத் தான்...
மாநில அரசால் வாங்கப்படும் கடன்தொகையின் பெரும்பகுதி (above 90%) "திட்டச் செலவுகளுக்காக" பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பொதுவான நிதி மேலாண்மை விதி...
இதை தமிழ்நாடு அரசு சரியான முறையிலேயே கடைப்பிடித்து வருவதாகத் தெரிகிறது...
தமிழ்நாடு அரசின் கடன்தொகை #நிர்வாகச்_செலவுகளுக்காக வீண்டிக்கப் படுகிறது என்று இதுவரை # தலைமை_கணக்குத்_
தணிக்கைத்துறை (CAG) கண்டித்ததாக எந்தவொரு தகவலும் இல்லை...
எந்தவொரு அரசியல் கட்சிகளும் ஆட்சேபித்ததும் இல்லை....
https://swarajyamag.com/amp/story/insta%2Fthanks-to-gst-tamil-nadu-managed-to-lower-its-fiscal-deficit
http://niti.gov.in/content/debt-total-outstanding-liabilities-percenatge-gsdp
http://statisticstimes.com/economy/economy-of-tamil-nadu.php
http://www.indiaspend.com/cover-story/
maharashtra-most-indebted-tamil-nadu-gathering-debt-fastest-73343
பொருளாதாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக