திங்கள், 30 ஜூலை, 2018

தமிழகம் எண்ணெய்வளம் சுரண்டல் பெட்ரோல் எரிபொருள் நரிமணம் கார்ப்பரேட்

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
உயிரைக் கொடுத்தாவது எங்கள் நிலத்தைக் காப்போம்!" - ஓ.என்.ஜி.சிக்கு எதிராக #நரிமணம் மக்கள் # ONGC

#நாம்_ஏமாற்றப்பட்ட_கதை

காவிரி டெல்டா கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு "தகவல் அறியும் சட்டத்தின்" கீழ் சில கேள்விகளை முன்வைக்கிறார். அது நெடுவாசல், கதிராமங்கலம் என டெல்டா மாவட்டங்களில்  ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயம்.

'சட்டவிரோதமாக' போராடிய மக்கள்மீது காவல்துறை மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்த சமயம். அன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கடந்த வாரம் பதிலளித்திருந்தது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். முதலில், தமிழகத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எத்தனை எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன? அதில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன? என்ற கேள்வி. அதன் பதில், ஓ.என்.ஜி.சி சொன்ன கணக்கிலிருந்து பெரும் வித்தியாசப்பட்டிருந்தது.

#மொத்தக்_கிணறுகள் : 700 (ஓ.என்.ஜி.சி) - 219 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

#செயல்பாட்டில்_இருப்பவை: 182 (ஓ.என்.ஜி.சி) - 71 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

அடுத்ததாக இதில் எத்தனை கிணறுகளுக்கு #தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் #அனுமதி அளித்துள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு,"0'' என்பது பதில். அதாவது, இன்று தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்  ஓ. என்.ஜி.சியின் ஒரு எண்ணெய்க் கிணற்றுக்குக்கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் #அனுமதி_கிடையாது. சட்டப்படி, ஓ.என்.ஜி.சி தமிழகத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவர்களுக்கு எதிராகப் போராடியதற்காகத்தான் 'சட்ட விரோதமாக' செயல்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவியது காவல் துறை.

#நம்_விவசாயம்_அழிக்கப்பட்ட_அழிக்கப்படும்_கதை:

ஒருகாலத்தில் செழிப்பான விவசாய பூமியாகத் திகழ்ந்த நரிமணம் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ? வாழ வழி இல்லாத பொட்டல் காடாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு செயல்பட்டுவரும் கச்சா எண்ணெய்- இயற்கை எரிவாயு கிணறுகளாலும் சுத்திகரிப்பு நிலையத்தாலும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் இங்கிருந்து எண்ணெய்க் கிணறுகளையும் சுத்திகரிப்பு நிலையத்தையும் வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி கடந்த சில ஆண்டுகளாக அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில்தான் வெந்தபுண்ணில் நெருப்பு வைக்கும் விதமாக, நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்கம் செய்ய 600 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.

24 ஆயிரத்து 460 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரும் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக 600 ஏக்கர் பரப்பளவில் இந்த விரிவாக்கம் நடைபெறவுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தத் தகவல் நரிமணம் மற்றும் இதன் சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரதராஜன் - நரிமணம்‘இந்த விரிவாகத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களைத் தர மாட்டார்கள் என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். தண்ணீர் கிடைக்காமல்  விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதனால்தான் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரை உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. நரிமணத்தில் இருப்பது இறுதிக்கட்ட  சுத்திகரிப்பு நிலையம். இது விரிவாக்கம் செய்யப்பட்டால், காவிரி டெல்டா மாவட்டங்களின் மற்ற பகுதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் ஆரம்பநிலை சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாவதற்கான ஆபத்துகளும் காத்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வெள்ளைக்குடி, கமலாபுரம் போன்ற பகுதிகளில் இதுபோல் ஏற்கெனவே உள்ளன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உயிரினங்கள் இங்கு வாழவே முடியாத நிலை உருவாகிவிடும். கடைசி உயிர் இருக்கும் வரை இதனை எதிர்த்து போராடிக்கொண்டே இருப்போம்” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த வரதராஜன்.

தங்களது விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் நரிமணப் பகுதி மக்கள். மேற்கு வங்கம் மாநிலம் சீங்கூர், நந்திகிராம் ஆகிய பகுதிகளில் நடந்ததுபோல், இங்கு அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்தாலும் உயிரைக் கொடுத்தாவது நிலங்களை காப்பாற்றிவிட வேண்டும். எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற மன உறுதியுடன் வீரியமிக்க போராட்டங்களை நடத்த இப்பகுதி மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ஏன் இவர்கள் இந்தளவுக்குப் பதறுகிறார்கள் ?

இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய்-எரிவாயு கிணறுகளால் நிலத்தடிநீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. நிலத்தடி நீரில் ரசாயனத்தன்மை கலந்துவிட்டதாகவும் ஆதங்கப்படுகிறார்கள் இங்குள்ள மக்கள். விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏராளமான குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டன. தேவையற்ற வாயுக்கள் எரிக்கப்படுவதால் காற்றும் நஞ்சாகி, சுவாச நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதய நோய்கள், தோல் வியாதிகளும் ஏற்படுவதாகக் கவலை தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

மழைக்காலங்களில் ரசாயன கழிவுகள், நீர்நிலைகளிலும் விவசாய நிலங்களிலும் கலப்பதால், வெப்பம் அதிகமாகி அம்மை போன்ற உஷ்ணகால நோய்கள் உருவாகுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் கமலாபுரம், வெள்ளக்குடி போன்ற பகுதிகளில் இதுபோன்ற பாதிப்புகள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உடல்களில் ஆறாத புண்கள் உருவாகி உயிரைக் குடித்துள்ளது. அம்மை நோய்க்கு பல குழந்தைகளும் பலியாகியுள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு கசிவினால் விளைநிலங்கள் மலடாக மாறுவதோடு உயிரிழப்புகளும் நேர்கின்றன.   பாரதிச் செல்வன் - நரிமணம்

''நரிமணம் நிலையத்தில் தற்பொழுது 1 கோடி டன் அளவுக்கு எண்ணெய்ச் செயல்பாடு நடைபெறுகிறது. இதை 10 கோடி டன்னாக உயர்த்துவதற்காகத்தான் புதிய விரிவாக்கம் நடைபெற உள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில்  நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகள் புதிதாக உருவாக்கப்படும். புதிய விரிவாக்கத்தினால் காவிரி  டெல்டா மக்கள் கடுமையான பாதிப்புகளைகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன்  

புதிய விரிவாக்கத்தினால் 600 ஏக்கர் நிலத்தில் நடைபெற வேண்டிய உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இதன் பக்க விளைவாகப் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கட்டாந்தாரையாக மாறக்கூடிய அபாயமும் காத்திருக்கிறது. இந்த விரிவாக்கத்தினால் சுற்றுவட்டார விவசாய நிலங்களின் நீர்வழிப்பாதை தடைப்படும். விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சொந்தமான விவசாயிகள் மட்டுமல்லாது, இவைகளின் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் எதிர்காலமும் இருண்டுபோகும்.

#நரிமணம் எண்ணெய்- சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று சொன்னால், கண்டிப்பாக பல நூறு எண்ணெய்க் கிணறுகள் புதிதாக உருவாக்கப்படும்.

ஒரு கிணறு அமைக்க குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இதன் சுற்றுவட்டார நிலத்தடி நீர் மற்றும் நீர்வழிப் பாதைகளும் பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், புதிய விரிவாக்க திட்டத்தினால் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது விரிவாக்கத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என உருக்கமாக சூளுரைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

இப்படிக்கு உங்கள் நண்பன்

HariBrothers'HARI

வாழ்க தமிழ் தமிழர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக