|
மார். 5
| |||
கதிர் நிலவன்
||'தமிழ்த் தேசியக் கட்சி' ஈ.வெ.கி.சம்பத் பிறந்த நாள்| 5.3.1926||
இந்திய தேசமென காங்கிரசு பேசுகின்றது. திராவிட தேசியமென தி.மு.க. கூறுகின்றது. தமிழ்த் தேசியமென நாம் உரைக்கின்றோம். இந்தத் தேசியங்களில் எது மெய்? இந்தியத் தேசியமென்பது முழுப்பொய் என்பதை எல்லோரும் அறிவர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இந்தியத் துணைக் கண்டத்தில் எழுப்பிய வெள்ளை எதிர்ப்புணர்ச்சி இந்தியத் தேசியமாகாது. அந்தப் போலியான இந்தியத் தேசியத்தை எதிர்க்க அதைவிடப் போலியான, இல்லாத திராவிட தேசியத்தை எப்படி ஏற்க முடியும்? தமிழ் நாட்டில் நியாயமாக வளர்ந்தது தமிழ்த் தேசியமாகும். இல்லாத இந்திய தேசியத்தை எதிர்க்க அதை விட இல்லாத திராவிடத் தேசியத்தை நம்பினோம். பிரச்சாரம் செய்தது திராவிடத் தேசியம் தான். ஆனால் விளைந்த பலனோ தமிழ்த் தேசியமாகும். அந்த உண்மையான தமிழ்த் தேசியத்தை அனைத்துக் கொள்ளத் தயக்கமேன்? வெட்கமேன்?
திராவிடத் தேசியம் பேசிய நாம் ஆந்திர மன்னர்களின் மாண்புகளை விளக்கியதுண்டா? கர்நாடகத்தின் சிறப்புகளைக் கூறியது உண்டா? கேரளத்தின் பெருமைகளைக் கேளீர் எனச் சொன்னது உண்டா? சுற்றிச் சுற்றி தமிழ் மன்னர்களின் சிறப்புகளை, வீரங்களை, மாண்புகளையே கூறிவந்தோம். சேரன் செங்குட்டுவனில் இருந்து ராஜேந்திர சோழன் வரை கூறியிருந்தோம். கேரளத்து மார்த்தாண்ட வர்மன் தெரியாது. ஆந்திரத்து கிருஷ்ண தேவராயர் புரியாது. கர்நாடக ஹைதர் அலி விளங்காது. இவைகளைக் கூறாத காரணம் நம்முடைய உள்ளத்திலே படிந்திருந்தது தமிழ்த் தேசியமாகும். உதட்டிலேதான் திராவிடத் தேசியம் இருந்தது. இந்த உண்மைகளை தைரியமாய் உணர வேண்டும்.
-ஈ.வெ.கி.சம்பத்.
நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம். மார்ச் 1-15, 2013.
(ஈ.வெ.கி. சம்பத் தமிழ்த்தேசியத்தை கைவிட்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இறுதியில் போய் சேர்ந்தார். இதில் நமக்கு உடன்பாடில்லை. இல்லாத இந்திய தேசியத்திற்கும், திராவிட தேசியத்திற்கும் மாற்று தமிழ்த் தேசியமே என்பதை உணர்ந்து செயல்பட்டால் தமிழ்த் தேசியம் உறுதியாக வெல்லும்!)

ஆதி பேரொளி
இவர் ஈவேரா வின் உறவினர் தானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக