வியாழன், 26 ஜூலை, 2018

வாகனம் மறித்து அபராதம் சட்டவிரோதம் எதிர்த்து வழக்கு தள்ளுபடி ஆனது


aathi1956 aathi1956@gmail.com

மார். 19
பெறுநர்: எனக்கு
போக்குவரத்து விதி மீறுவோருக்கு உடனடி அபராதத்தை எதிர்த்து வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
2018-03-17@ 00:08:57
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகை செய்யும் அரசாணைகளை திரும்பப் பெற கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்சி திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாத சென்றவரின் இருசக்கர வாகனத்தை துரத்தி சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததில் உஷா என்ற பெண் மரணமடைந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தவறிழைக்கும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதிக்க எந்த சட்டமும் இல்லை. சட்டப்படி வாகன ஓட்டிக்கு முதலில் நோட்டீஸ் கொடுத்து அதற்கு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தையோ, தாங்கள் நிரபராதி என்பதையோ நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் உடனடி அபராதம் விதிப்பது சட்டவிரோதமானது.
எனவே, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகை செய்யும் அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும். இடைக்கால உத்தரவாக அந்த அரசாணையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், இது பொது நல வழக்கு அல்ல. உடனடி அபராதம் விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

போலீஸ் அராஜகம் உஷா திருவெறும்பூர் கர்ப்பிணி உதைத்து கொலை அரசாணை நீதிமன்றம் சட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக