|
ஏப். 4
| |||
ரிக் வேதம், வியாச பாரதம், தைத்திரீய ஆரண்யகம் ஆகிய நூல்கள் சேரர் என்றே குறிக்கின்றன.
(P.T.S. Iyengar's History of Tamils p.29,328)
மகாபாரதம் யுதிட்டிரன் (தர்மர்) இராஜசூய யாகம் செய்த போது சோழ, சேர, பாண்டியர்கள் வந்திருந்ததாக கூறுகிறது
(வியாச, பாரதம் ii, 34:127 ; v.22:656)
பரசுராமன் மலையாள நாட்டை உருவாக்கினார் என்பது புராணக்கதை.
சேக்கிழார் பரசுராமன் நாடு 'பெற்றதை' " பரசுபெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறுநாடு" என்று கூறுகிறார்
(விறன்மிண்டர், 1.)
சேரநாடு கேரளம் என்ற பெயர்பெற காரணம் என்று கேரளோற்பத்தி மற்றும் கேரள மான்மியம் கூறும் கதை எவ்வாறென்றால்,
மலையாள நாட்டுக்கு அரசன் இல்லாத போது அந்நாட்டு பிராமணர் சோழ மண்டலம் சென்று கேரளன் என்ற பெயருடைய வேந்தனை கொண்டுவந்து ஆட்சியில் அமர்த்தி அவன் சிறப்பாக செய்த ஆட்சியில் அவனது பெயரே மலையாள நாட்டுக்கு நிலைத்துவிட்டதாக கூறுகின்றன
இதை பொய்யென்றும் புனைக்கதையுன்றும் கூறியுள்ள (William Logan's Malabar Manual. p.246) வில்லியம் லோகன் எனும் ஆய்வாளர்
அசோகர் கல்வெட்டு ' சோள பளய சத்தியபுத்திர கேரளபுத்திர தம்ப்பானி' என்று குறிப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
(இதை சேரள புத்திர என்றும் படிக்கலாம்)
கிமு 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் எனும் கிரேக்கப் பயணி சந்திரகுப்த மௌரியர் ஆட்சிக்கு வருகை தந்தபோது எழுதிய குறிப்புகளில் chermae என்று சேரரை குறித்துள்ளார்.
சேரநாட்டின் வட பகுதியான குடநாட்டு நறுவூர் அவரால் narae என்று குறிக்கப்பட்டுள்ளது (W.Woodburn Hyde's Ancient Greek Mariners. p.206)
கி.பி. முதல் நூற்றாண்டில் நீரோ மன்னன் ரோமை ஆண்ட காலத்தில் சேரநாடு ரோமாபுரியுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தது.
அக்காலத்து துறைமுக நகரான தொண்டி பற்றி periplus குறித்துள்ளார்.
எகிப்து நாட்டின் ocelis துறைமுகத்திலிருந்து கப்பல் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது புறப்பட்டால் நாற்பது நாட்களில் முசிறி துறைமுகம் வந்தடையும் என்று பிளினி (Pliny) குறிப்பு கூறுகிறது.
சேர மன்னனை (caelobothras) என்று என்று பிளினி குறிப்பிட்டுள்ளார்.
(இதை சேரளபோத்ரா என்றும் கேரளபோத்ரா என்றும் படிக்கலாம்).
(மேலும் பாண்டியன் pandion என்றும் மதுரை modora என்றும் குறிக்கப்பட்டுள்ளது)
கிபி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலாமி சேர்ரை carelobothras என்றே குறித்துள்ளார்.
தலைநகர் கருவூரை karoura என்றும் குறித்துள்ளார் (M.Crindler's Translation of the Periplus of the Erythraen sea 53-56).
திருஞானசம்பந்தர் கூட சேரலர் என்றே குறித்துள்ளார்.
கிபி ஏழாம் நூற்றாண்டு வரை கூட கேரளம் என்ற வார்த்தை தோன்றவில்லை.
திருச்சூர் க்கு தெற்கே 30கி.மீ தூரத்தில் உள்ள இரிஞ்ஞாலக்குடா எனுமிடத்தில் கிடைத்த கல்வெட்டு அப்பகுதியை இருஞாலக்கூடல் என்று குறிக்கிறது (M. EP, A.R. No 358 of 1927).
பரோலா பகுதி கல்வெட்டு அப்பகுதியை புலவேர் வாயில் எனவும்
(South Indian inscriptions Vol. 5. 788)
திருவன்னூர் பகுதி கல்வெட்டு அப்பகுதியை திருமுன்னூர் எனவும்
(South Indian inscriptions Vol. 5. 784)
கடலுண்டி பகுதி கல்வெட்டு அப்பகுதியை திருமண்ணூர் எனவும் குறிக்கின்றன
(South Indian inscriptions Vol. 5. 782).
மேற்கண்டவை தமிழ் கல்வெட்டுகள் ஆகும்
வடகன்னடம் மாவட்ட பாட்கல் பகுதி கல்வெட்டு அப்பகுதியை பாழிக்கல் என்றும்
Joag பகுதி கல்வெட்டு அப்பகுதியை தோக்கா எனவும் குறிக்கின்றன.
இது தோகைக்கா என்பதன் திரிபு
(தோகைக்காவின் துளுநாடு என்று அகநானூறு 15 குறிக்கிறது).
கேரளோற்பத்தி மற்றும் கேரளமான்மியம் ஆகியன காலத்தால் மிகவும் பிந்தைய விஜயநகர அரசர்கள் பற்றியும் கூறுவதால் அவை பழமையான சான்றுகள் இல்லை என்று கூறமுடியும்.
கோவா பழம்பெயர் கூபகம்.
சேர்ரில் இருந்து பிரிந்த மரபான நன்னர் கொங்காண நாட்டையும்
மற்றோரு பிரிவினர் (அதியமான் உட்பட) தகடூரையும் ஆண்டனர்.
எல்லைகள் கேரளா மண்மீட்பு கர்நாடகா கொங்காணம் பயணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக