திங்கள், 23 ஜூலை, 2018

காவிரி பங்கீடு மத்திய அரசு தமிழகம் புறக்கணிப்பு வஞ்சகம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 12
பெறுநர்: எனக்கு

சீனி. மாணிக்கவாசகம்
# காவேரி_மேலாண்மை_வாரியம் குறித்து அண்ணன் # நல்லதுரை (
Ambalarajan Nalladurai )
-------------------------------------------------------------------------
இந்திய நடுவன் அரசும்,
காவேரி நதிநீர் உரிமைப் பறிப்பும்....
1924 ஒப்பந்தம் 1974 ல் மறுபரிசீலனை செய்ய வேண்டி இருந்ததாலும், 1970 வரை நடந்த பேச்சுவார்த்தைகள் பலன்ற்றுப் போனதாலும், 4.8.1971 ல் தமிழக அரசு உச்சநாதிமன்றத்தில் நடுவர்மன்றம் அமைக்கக் கோரியும், அன்று கட்டுமானத்தில் இருந்த கர்நாடக அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தக கோரியும் வழக்கு தொடர்ந்தது...
பின் இந்திரா அம்மையாரின் "" வேண்டுகோளை"" ஏற்று தி.மு.க.. அரசு 1972 ல் வழக்கை வாபஸ் வாங்கியது.
பின்னர் இந்திராவின் வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை...
பிறகு 1983 ல் ரங்கநாதன் தலைமையிலான காவிரி நீர்ப்பாசன விளைபொருள், விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் , நடுவர் மன்றம் கோரி வழக்கு தாக்கல் செய்தது.
அதில் தமிழக அரசு தன்னை சேர்த்துக் கொண்டது..
1990 ல் நடுவர்மன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 1991 ல் நடுவர்மன்றம் இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டது...
16 ஆண்டுகளுக்கு பிறகு 15.02.2007 ல் தனது இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி வழங்கியது நடுவர் மன்றம்..
இது குறித்து பிரிவு 6. மாநிலங்களுக்கிடையிலான நீர்த் தகராறு சட்டம் (Inter- State Water Disputes Act 1956). சொல்கிறது..
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப் படவேண்டும் . அப்படி வெளியிடப்பட்ட பின் அது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு இணையானதாகும். அதுவே இறுதியானதாகும். என்று கூறுகிறது.
ஆனால் பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 19.02. 2013 ல் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.. ஆனால் அதன் பிறகும் தீர்ப்பில் கண்டபடி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன் வரவில்லை..
இந்நிலையில் தான் கடந்த 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. தமிழகத்திற்கான நீரின் அளவை குறைத்தும், மேலாண்மை வாரியத்தினை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு உத்தரவுகளையும் வழங்கியது...
இந்த வழக்கின் தொடக்கம் முதலே இந்திய மத்திய அரசு " மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு "" தெரிவித்தே வந்துள்ளது......
அதனைத் தான் இன்றும் செய்கிறது மத்திய அரசு...
அரசியல் அழுத்தமும், மக்கள் போராட்டமுமே வாரியத்தைப் பெற்றுத் தரும்...
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் , மக்கள் நலன் , மாநில உரிமைகளை காக்கப் போராடுவதை விட ,அரசியல் லாபத்தையே அதிகம் கருதுபவர்களாக இருக்கிறார்கள்....
எனவே...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒருமித்து குரல் கொடுப்போம்.....
10 மார்ச், 07:38 A

நடுவணரசு ஹிந்தியா கர்நாடகா காவேரி நதிநீர் பங்கீடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக