|
மார். 16
| |||
Dhandapani S
தலைசிறந்த தன்னம்பிக்கை மணிதர்....
தன் நோயை வென்று வின்னை வென்றவர்.....
வானில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன.அவற்றில் நமது பூமிக்கு நெருக்கமாக இருப்பது ஆல்பா சென்டாரி.நெருக்கமாக என்றால்,அவ்வளவு நெருக்கமாக அல்ல.கொஞ்சம் தள்ளி நெருக்கமாக.அதாவது தற்சமயம் கைவசமுள்ள அதி நவீன சாதனங்களின் உதவியுடன்,ஒரு விண்கலத்தை அனுப்பினால்,அது ஆல்பா சென்டாரியைச் சென்றடைய 30,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.இது தான் இருப்பதிலேயே நம் சூரிய குடும்பத்திற்கு கொஞ்சம் அருகில் இருக்கும் விண்மீன்கள் கூட்டம்.அதாவது தூரத்து சொந்தம் மாதிரி.
இந்த ஆல்பா சென்டாரி தான்,பூமியைத் தாண்டி வேற எங்காவது எந்த கிரகத்திலாவது,எ
தாவது உயிர்கள் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில், அதாவது நமது மில்கி வே கேலக்ஸி மாதிரி எதாவது இருக்கிறதா,அதில் சூரியன் மாதிரி எதாவதும்,பூமி மாதிரியும் எதாவது இருக்கிறதா?அங்க
ே உயிர்கள் இருக்கிறதா?இருந்ததா?இருக்க முடியுமா? என்பன போன்ற உத்தேசங்கள் இருக்கக்கூடிய விண்மீன் கூட்டம்.
இந்த ஆல்பா சென்டாரி பூமியில் இருந்து 4.37 ஒளியாண்டுகள் தூரத்தில்,அதாவது 25 டிரில்லியன் மைல்கள் அல்லது 40.2 டிரில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கிறது.( ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி).இப்போது பூமியில் இருக்கின்ற அதி நவீன எரியன்கள் எனப்படும் ராக்கெட் ஏவுதளங்களால் செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்களைப் பயன்படுத்தினால் கூட,அங்கே போய்ச் சேரவே 30,000 ஆண்டுகளாகும்.
அதனால்,நமக்கும் ஒன்றும் பயனில்லை.
அதற்காக அந்த ஆய்வை அப்படியே விட்டுவிடலாமா? கூடாது.என்ன செய்யலாம்? என்ற யோசனை ஒருவருக்கு வந்தது.
அவரது பெயர் யூரி மில்னர்.ரஷ்யாவி
ல் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவர்.இயற்கையி
லேயே விண்வெளி ஆய்வில் ஆர்வம் கொண்டவர்.அவரிடம் பணம் இருக்கிறது,ஆர்வமும் இருக்கிறது.ஆனால் விண்வெளி அறிவு வேண்டுமே? டெக்னாலஜி வேண்டுமே?காஸ்மா
லஜியும்,ராக்கெட் சைன்ஸூம்,எலக்ட்
ரானிக்ஸூம்,மேத்தமேட்டிக்ஸூம் தெரிய வேண்டுமே?அல்லது
,இவற்றையெல்லாம் நன்றாகத் தெரிஞ்ச ஒருத்தர் வேண்டுமே? என்பன போன்ற கேள்விகளுக்கு ஒற்றை பதிலாக ஒரே ஒருவர் தான் இருந்தார்.
அவர் தான் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்.உலகின் ஒப்பற்ற வானியல் இயற்பியலாளர்,அற
ிவியல் எழுத்தாளர்,இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட அசாதாரண மனிதர்.
யூரி மில்னர் என்ற ரஷ்ய நாட்டுக் கோடீஸ்வரரும்-பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸூம் இணைந்து,ஆல்பா சென்டாரியைச் சென்றடையக் கூடிய ஒரு விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
எவ்வளவு ஆண்டுகளில் தெரியுமா?
வெறும் இருபது ஆண்டுகளில்!!!!!
40.2 இலட்சம் கோடி கிமீ தூரத்தில் உள்ள ஒரு விண்மீன் கூட்டத்தை இருபதே இருபது ஆண்டுகளில் அடைந்து விடும் விண்கலம்.
திரும்பவும் சொல்கிறேன்,இப்ப
ோதிருக்கும் அதி நவீன சாதனங்ளைக் கொண்டு ஒரு ராக்கெட்டை ஏவினாலும் அது ஆல்பா சென்டாரியை அடைய 30,000 ஆண்டுகள் ஆகும்.அந்த தூரத்தை இருபது ஆண்டுகளில் ஒரு விண்கலம் அடைய வேண்டுமென்றால் அதன் டிசைன் எப்பேற்பட்டதாக இருக்க வேண்டும்?
“வெறுமனே நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தால் போதுமா?அவற்றில் போய் இறங்கப் போகிறோம்.அதற்கான முயற்சியின் முதல் படி இது”என்று கடந்த 2017,ஏப்ரல் மாதம் 13-ம் நாள் நியூயார்க் நகரில் இருவரும் அறிவித்தார்கள்.அறிவித்த கையோடு தங்களது திட்டத்துக்கு "விண்மீன் பயணத்தின் சாதனைப் படி" என்று பெயரும் இட்டார்கள்.
சரி, அந்த விண்கலம் எப்படி இருக்கும்?
ஹாக்கிங்ஸூம்-மில்னரும் ஒளியின் உதவியுடன் நுண்ணிய விண்கலத்தை இயக்கத் திட்டமிடுகிறார்கள்.அது ஒரு தபால் தலையின் அளவே இருக்கும்.எடை கிட்டத்தட்ட ஒரு கிராம்தான்.ஆனால் அதில் ஒளிப்பதிவுக் கருவிகள்,ஃபோட்டான் ஆக்ஸிலரேட்டர்கள்,மின் ஆற்றல் வழங்க பவர் சோர்ஸ்கள்,வழி நடத்த ஜிபிஎஸ் கருவிகள்,தகவல் பரிமாற்றக் கருவிகள் என பல உறுப்புகள் அதில் திணித்து வைக்கப்பட்டுள்ளன.அந்த விண்கலத்துடன் ஒரு மீட்டர் அகல நீளமுள்ளதும்,ஓரிரு கிராம் அளவே எடையுள்ளதும்,ஒரு மீட்டரில் லட்சம் பங்கே தடிமனுள்ளதுமான இறக்கையும் இணைக்கப்பட்டுள்
ளது.அந்த இறக்கைகள் மேல சூரிய ஒளி படும்போது,அதன் ஃபோட்டான்கள் அதைத் தள்ளும்.விண்கலத்துக்குக் கூடுதலாக உந்துதலை தர பூமியிலிருந்து லேசர் கற்றைகளை,அந்த விண்கலத்தை நோக்கிச் செலுத்த ஹாக்கிங்கும் மில்னரும் திட்டமிட்டுள்ளனர்.100 கிகாவாட் லேசர் ஆற்றலைச் செலுத்தி,அந்த விண்கலத்தை மணிக்கு 160 மில்லியன் கி.மீ. வரையிலான வேகத்தில் செலுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இப்படியெல்லாம் செய்யும் போது,அந்த விண்கலம் 20 ஆண்டுகளில் ஆல்பா சென்டாரியைச் சென்றடைந்து விட முடியும் என்பது ஸ்டீவன் ஹாக்கின்ஸின் தியரி.இந்த விண்கலத்திற்கு "ஸ்டார் சிப்" என்ற பெயரைக் கூட வைத்துவிட்டார்கள்.
ஸ்டார் சிப் போன்ற பல நூறு நேனோ விண்கலங்களை விண்ணில் ஏவி விட்டால்,அவை நாலா திசைகளிலும் பரவிப் பயணம் செய்து,மிக அருகிலுள்ள விண்மீன்களைச் சுற்றி இருக்கக் கூடிய கோள் மண்டலங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அனுப்பும் என்று ஹாக்கிங் ஆய்வுக் குழுவினர் நம்புகிறார்கள்.
என்றாவது ஒரு நாள், அப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாதகமான கோளில் போய், மனிதர்களைக் குடியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கு இந்தத் தகவல்கள் உதவியாயிருக்கும் என்கிறார்கள்.
கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு? இது சாத்தியமா?
சாத்தியம் தான் என்கிறார் ஹாக்கிங்ஸ்.
திட்டம் பெரியது,ஆல்பா சென்டாரியின் அளவு பெரியது,அதன் தூரம் அனைத்திலுமோ பெரியது.இதற்குத் தேவைப்படும் செலவும்,விண்வெளி-வானியல் அறிவும்,கணக்கியலும் ஆல்பா சென்டாரியை விடப் பெரியது.
இவ்வளவு செலவை யாரை நம்பி செய்கிறார்கள்?யாரால் இந்தத் திட்டம் நம்பிக்கை பெறுகிறது?யார் இதற்கு வழிகாட்டுவார்கள்?அவ்வளவு புத்திசாலி விஞ்ஞானி யார் இருக்கிறார்?
எல்லா கேள்விகளுக்கும் மீண்டும் ஒற்றை பதிலாக ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் மட்டுமே இருக்கிறார்.ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் இந்த திட்டத்தில் இருப்பதை வைத்துப் பார்த்தால் இது நிச்சயம் சாத்தியப்படும்,ஹாக்கிங்ஸ் சாத்தியப்படுத்துவார் என்ற நம்பிக்கை உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகளால் பெரிதும் நம்புகிறார்கள்.
அப்பேற்பட்ட அந்த ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் என்ற விஞ்ஞானியால்,பேசவோ-எழுதவோ-நடக் கவோ முடியாது.இன்று நேற்றல்ல முப்பதாண்டுகளுக்கும் மேலாக.
மோட்டார் நியூரான் சின்ட்ரோம் என்ற மிக அரிய வகை மூளை நோயினால் பாதிக்கப்பட்டு,தன் 21 வது வயதில் இனி ஒரே ஒரு வருடம் மட்டுமே உங்களது ஆயுள் என்று மருத்துவ உலகத்தால் கைவிடப்பட்டவர் தான் ஹாக்கிங்ஸ்.ஆனால் அதன்பின் அவர் செய்தது எல்லாமே வியத்தகு சாதனைகள்.காஸ்மாலஜி எனப்படும் வானியல் இயற்பியிலிலும்,
கணிதத்திலும் 12 பட்டங்களையும்,பல ஆராய்ச்சி முனைவர் பட்டங்களையும் பெற்று,இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசியராகவும் இருக்கிறார்.இவரது ஐந்து நிமிட நேரத்திற்காக உலகம் முழுவதும் காத்துக் கிடக்கும் விஞ்ஞானிகள் ஏராளம்.
மோட்டார் நியூரான் சின்ட்ரோம் என்ற இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களது உடல் உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கும்.ஹா
க்கிங்ஸூக்கும் அவ்வாறே நடந்தது.முதலில் கால்கள் செயலிழந்தன.சக்கர நாற்காலியில் அமர்ந்து உழைத்தார்.பேசும் சக்தி இழந்து-நாக்கு தடுமாறியது.கைகள
ால் எழுதினார்.கொஞ்ச காலத்தில் கைகளின் இயக்கமும் தடைபட்டது.விரல்களைக் கொண்டு தந்தி கோடிங் போல தட்டிக் காண்பித்து எழுதினார்.அதுவும் நின்று போனது.தன் புருவங்களைப் பயன்படுத்தி,தன் மூளையில் தான் நினைப்பதை அசைவுகளாக வெளிப்படுத்தினார்.அந்த அசைவுகளை ஒரு கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட சிக்னல் சிந்தஸைசர் மொழி பெயர்த்தது.அப்படி அவர் எழுதியவை தான் உலகப் புகழ்பெற்ற புத்தகங்களான "The theory of everything" "Black hole" "Short story of time" போன்றவை.கொஞ்ச காலத்தில் அந்த புருவ அசைவுகளும் செயலிழந்தது.உடலின் அனைத்துப் பாகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து விட்டது.
கடைசியில் அவரது கன்னத்தில் ஒரேயொரு தசையை மாத்திரம் தான் அவரால் தன்னிச்சையாக இயக்க முடியும் என்ற நிலையில் அவரது உடலியக்கம் வந்து நின்றது.அவரது அந்த தசை செயலாக்கத்தை வைத்து,ஒரு நிமிடத்திற்கு ஒரு வார்த்தை என்றளவில் சிக்னல்களைப் போல ஹாக்கிங்ஸ் தருவார்.அந்த சிக்னல்களை-இதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமை வைத்து,அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை வார்த்தைகளுக்கு மாற்றுவார்கள்.அ
தை அவருக்குப் படித்துக் காட்டுவார்கள்.அவர் அதே தசையிக்க பாணியில் ஒப்புதலைத் தருவார்.இப்படித் தான் கடந்த பல வருடங்களாக இருக்கிறது இவரது கம்யூனிகேஷன்.இதை வைத்து அவர் செய்தது எல்லாமே சாகசங்கள்.ஆல்பா சென்டாரியை அடையப் போகும் அந்த அதிவேக ஸ்டார் சிப் விண்கலத்திற்கான திட்டங்களை-செயல
்பாட்டை தன் கன்னத்தின் தசைகளைக் கொண்டு தான் வடிவமைக்கப்போகி
றார்.
1979 தொடங்கி,2009 வரையில் முப்பது வருடங்களாக இங்கிலாந்தின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெருமைமிகு Lucasian chair for mathematics என்பதில் தலைமைப் பதவியை வகித்து வந்தார்.
33 வருடங்கள் சர்.ஜசக் நியூட்டனும், கம்ப்யூட்டரின் தந்தை எனப்படும் சார்லஸ் பாபேஜ் 11 வருடங்களும் நிர்வகித்த பதவி அது.....
நிற்க....
அந்த ஸ்டீவன் ஹாக்கின்ஸ் தான் இன்று அதிகாலை-மார்ச் 14,2018 ல் தன் 77 வது வயதில் காலமாகி விட்டார்.
அவரது மறைவு,விண்வெளித் துறையில் அசுர வேகத்தில் ஏறிக் கொண்டிருந்த மனித குலத்திற்கு மிகப் பெரும் சறுக்கல்.....
என் கதாநாயகர்களுள் ஒருவரான ஸ்டீவன் ஹாக்கின்ஸ்க்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.....
"Rest In Particles"
நன்றி. ______தகவல் பகிர்வு: செய்திக்கதிர்

அப்பேற்பட்ட அந்த ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் என்ற விஞ்ஞானியால்,பேசவோ-எழுதவோ-நடக்

அறிவியலாளர் விஞ்ஞானி வானியல் விண்வெளி அறிவியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக