வியாழன், 26 ஜூலை, 2018

பாவலேறு பெருஞ்சித்திரனார் RSS கூட்டத்தில் திருக்குறள் பேச்சு

aathi1956 aathi1956@gmail.com

மார். 18
பெறுநர்: எனக்கு

பொழிலன் தமிழ்நாடு
ஆர். எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்று இரா. மருதுபாண்டியன் என்பவர் முக நூலில் பதிவு செய்திருக்கிறார்.
அது குறித்த விளக்கம்...
மிசா கொடுஞ்சிறையில் 1976-77 - ஆம் ஆண்டில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருந்த போது, சிறைக்குள் இருந்த அரசியல் சிறையாளர்களுக்கெல்லாம் திருக்குறள் வகுப்பு நடத்தினார். அதில் பல்வேறுபட்ட கட்சியினரும் கலந்துகொண்டனர். ஆனந்த மாரக்கிகள்கூட கலந்து கொண்டதாக ஐயா குறிப்பிட்டிருக்கிறார். காந்திய இயக்கத் தலைவர் ஜெகநாதன் அவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் சிறப்பை அறிந்து ஐயா அவர்களுடன் நீண்ட நாள் பழகினார்.
மிசாவிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் சிறையில் திருக்குறள் பயின்ற கட்சியினர் பலர் தமிழ் தொடர்புடைய நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு அழைத்திட ஐயா அவர்களும் அந்நிகழ்ச்சிகளுக்குப் போய்வந்திருக்கிறார்.
அப்படியாகத்தான் சிறையில் இருந்த ஆர். எஸ்.எஸ். ஐச் சார்ந்த பேரா. அண்ணாமலை என்பவர் தமிழ் ஈடுபாட்டுடன் அவ்வியக்கத்தின் சார்பில் நடத்திய பொங்கல் விழாவில் வந்து கலந்துகொள்ள வலியுறுத்தி அழைத்ததன் அடிப்படையில் 14-1-1978 அன்று சென்னைக் கடற்கரையில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் ஐயா கலந்து கொண்டு தமிழரின் பொங்கல் விழாச் சிறப்பு குறித்து உரையாற்றி வந்தார்கள். அந்நிகழ்ச்சி தென்மொழியிலும் வந்திருக்கிறது.

இந்து மதவெறி இந்துத்துவம் ஹிந்துத்வா ஹிந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக