செவ்வாய், 10 ஜூலை, 2018

நாடார் ஆலயநுலைவு 1899 தீர்ப்பு பற்றி நூல் பிரவாகன் மதுரைக்கு தெற்கே தீண்டாமை

aathi1956 aathi1956@gmail.com

பிப். 26
பெறுநர்: எனக்கு
Raj Kumar
நாடார்கள் கோவிலில் அனுமதிக்கப்படவில்லையா?
 இதில் உண்மை இருக்கிறது. அதே வேளையில் முழு உண்மையன்று. அவர்களின் கோவில் நுழைவு எங்கே மறுக்கப்பட்டது? 
சிந்திக்கப்பதற்குரிய சில பல தகவல்கள் கிடைக்கின்றன. அவர்களின் கோவில் நுழைவு அனுமதி மறுப்பு எங்கெல்லாம் இருந்தது.
கொஞ்ச்ம முயன்று தேடினால் தெளிவான சித்திரம் கிடைக்கிறது. 
இது குறித்து ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதுகிறார். 

//பழைய நெல்லை மாவட்டத்தின் தென் பகுதியிலும்,கொங்கு மண் டலத்திலும்,சோழ மண்டலத்திலும் , கோயில் அறங்காவலர்களாகவும், கோயில்களில் தேர்த்திருவிழாவில் தேர் வடம் பிடுத்துக்கொடுப்பவர்களாகவும்,
 பழனி தண்டாயுதபாணி கோயிலில் சிருங்கேரி சங்கராச்சாரியார் கையினால் விபூதியும் பிரசாதமும் பெறுபவர்களாகவும் இருந்த சான்றார் சாதியினர் 
பொதுவாக மதுரை நாயக்கர் ஆட்ச்சிப்பகுதியிலும் குறிப்பாக இராமநாதபுரம் ஜமீந்தாரி பகுதியிலும் கால பதித்ததுமே கோயிலுக்குள் நுழையும் வழக்கம் இல்லாத சாதியாகிவிடுவதுதான் இந்த தீர்ப்பின் விசித்திரம்!//- ப்ரவாஹன் 
(கோயிலுக்குள் நுழையாதே! கமுதிக்கோயில் நுழைவு வழக்கு தீர்ப்பு 1899, தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)


எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக