செவ்வாய், 3 ஜூலை, 2018

லெப்பை இசுலாமியர் தமிழ் பட்டம் சாதி திராவிட ஆதரவு கட்டுரை

aathi tamil aathi1956@gmail.com

பிப். 22
பெறுநர்: எனக்கு
Mohamed Imran Mohamed Arieef
தமிழர் அடையாள அரசியலில் இஸ்லாமியர்களின் புரிதல்களும் சிக்கல்களும்
---------------------------------------------------------------------------
-----------------
இத்தனை நூற்றாண்டுகளாக இங்கே “தமிழர் அடையாள அரசியல்” என்பது முழுமையாக
தமிழர்நாடு என்று ஒரு எல்லை வகுத்தோ அல்லது இவர்கள் எல்லாம் தமிழர்,
தமிழர் அல்லாதவர் என்று பிரித்தோ இங்கே நடக்கவில்லை. இங்கே
பாண்டியர்களாக, சேரர்களாக, சோழர்களாக தான் தன்னை உணர்ந்து தங்கள்
எல்லைகளை விரிவுப்படுத்த போர் புரிந்து இருக்கிறார்கள்.
தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்த மாற்றினத்தவர்களுடன் சண்டைகள்
உண்டானதே ஒழிய, நீ வேறு இனம் என்று எவரும் நினைத்து போரிடவில்லை. அதே போல
இங்கே, சாளுக்கிய சோழர்களின் ஆட்சி தொடர்ந்த போது மக்கள் அவர்களை
பிரித்து பார்க்கவில்லை, இயல்பாகவே தன் சமயத்தை பின்பற்றுகிறான் என்றே
எண்ணினார்கள்.
இங்கே சுல்தான்கள் ஆட்சி வீழ்த்தப்பட்டு விஜயநகர பேரரசு உருவான போதும்
இங்குள்ள மக்கள் அவர்களை நம்முடைய சமய வழிபாடு உடையவர்களாக தான்
பார்த்தார்கள்.
இன்றுவரை நாயக்கர்களுக்கும் தமிழ் குடிகளுக்கும் எந்த விதமான மோதல்
போக்குகளோ பிரிவினைகளோ, அவர்கள் தமிழர்கள் இல்லை என்ற தோற்றமோ வந்தது
இல்லை. அவர்களின் ஆட்சி நடந்த போதும் சரி, அதன் பிறகும் சரி அவர்களை
நம்மில் ஒருவராக தான் பார்த்தார்கள்.
தமிழர் என்று யோசிக்கவில்லை என்றாலும், காலம் காலமாக இங்கே தமிழ்
மொழியின் மீது பற்று கொண்டு தான் இருந்தார்கள். அது இங்கு இருப்பவர்களாக
இருந்தாலும் சரி, வெளியே இருந்து வந்த சாமானியர்களாக இருந்தாலும் சரி.
இந்த தமிழ் மொழிப்பற்று எல்லாம் ஹிந்தி திணிப்பின் போது தான்
இந்தியாவிற்கு தெரியவந்தது. அதுவரை நாம் இந்தியர்கள் என்று போராடி
வெள்ளையனை வெளியேற்றி இருந்தோம், ஆனால் ஹிந்தியர்களும் நமக்கு
அந்நியர்களே என்று விளங்க வைத்தார்கள்.
அன்று தான் தமிழ்நாட்டு மக்கள், பிராந்திய அரசியலை நோக்கி
திரும்பினார்கள். அந்த தமிழ் மொழிப்பற்றை சரியாக கையாண்ட திராவிட அடையாள
அரசியல், மொழிப்பற்றை பற்றி மேடை தோறும் பேசியது. அந்த மக்கள் புரட்சியை
தங்கள் வசப்படுத்தி ஆட்சியிலும் அமர்ந்து கொண்டது. அதுவரை பெரியாரின்
கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைந்தது போல,
பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் தங்கள் மொழி பற்றின் காரணமாக தேசிய
அரசியலான காங்கிரசில் இருந்து வெளியேறி திமுகவில் முழுவதுமாக தங்களை
ஈடுபடுத்தி கொண்டார்கள்.
அந்த மொழிப்போர் காலக்கட்டத்தில், மா.பொ.சிவஞானம் அவர்களோ அல்லது
சி.பா.ஆதித்தனார் அவர்களோ தமிழ்தேசிய அரசியலை தனியாக மக்கள் முன் எடுத்து
சென்றிருந்தால், இஸ்லாமியர்கள் தமிழர் அடையாள அரசியலில் தங்களை
ஈடுபடுத்தி கொண்டிருப்பார்கள், ஆனால் திராவிட அடையாள அரசியல் தான்
வெற்றிபெற்றது.
தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு “தமிழர் அடையாள அரசியல்”
என்பதில் வரும் புரிதல்களையும், சிக்கல்களையும் பற்றி விரிவாக பேசுவோம்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தாய்மொழியாக தமிழ், உருது, மலையாளம்
பேசுகிறார்கள். இங்கே இஸ்லாமியர்கள் வரலாறு என்று எடுத்து கொண்டால், சேர
கடற்கரையோரத்தில் தான் வரலாறு தொடங்குகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இங்கே
இஸ்லாமிய மார்க்கம் பரவ மிக முக்கிய காரணமே சூபி மதகுருமார்களும்,
அரபு-தமிழ் வணிக உறவு தான்.
அதன் பிறகு, பெரும்பான்மை இஸ்லாமியர்கள் தங்கள் தொழில்களாக கப்பல்
செய்வதையும், அதன் மூலம் குதிரை வணிகம் செய்யவும் ஆரம்பித்தார்கள். இதில்
கப்பல் செய்பவர்களை “மரைக்காயர்கள்” என்றும், குதிரை வணிகம்
செய்பவர்களும், குதிரை வீரர்களையும் “ராவுத்தர்கள்” என்றும் மக்கள்
அழைத்தார்கள். இஸ்லாமியர்களுக்கு இயல்பாக தமிழ் மொழிப்பற்று அதிகமாக
இருந்தது.
ஆகையால், தங்கள் மார்க்க வரலாறுகளை தமிழ் இலக்கிய நடையில் வடிக்க
எண்ணினார்கள். பதினாறாம் நூற்றாண்டில் தான் முதல் பெருங்காப்பியமான
“சீறாப்புராணம்” இயற்றப்படுகிறது. அதற்கு முன் பல இஸ்லாமிய
சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை
தமிழகத்தில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும்
தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய
மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் அதை தமிழ் மொழியின் “இருண்ட காலம்”
என அழைக்கிறார்கள். ஆனால் அந்த காலக்கட்டத்தில் தமிழ் மொழியில் பல புதிய
இலக்கியப் படைப்புகளையும் மற்றும் புதிய இலக்கிய வடிவங்களையும்
இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமியர்கள் தான் தமிழ் இலக்கிய சுடரை
அணையாமல் பாதுகாத்தார்கள். இதிலே அவர்கள் தங்களை தமிழர்கள் என்று
உணர்ந்து தான் தமிழ் மொழிக்கு பங்காற்றி இருக்கிறார்கள். இப்படி மொழி
பற்றிலே ஊறி திளைத்த இஸ்லாமியர்களில் உருது மொழியை தாய்மொழியாக
கொண்டவர்களும் உள்ளார்கள். இங்கே திராவிட அடையாள அரசியல் என்பது இங்கு
இருக்கும் இஸ்லாமியர்களிடையே மொழி பாகுபாடு காட்டவில்லை, அப்படி
பிரிக்கவும் இல்லை.
ஆனால், அது எங்களை சிறுபான்மை என்று ஓரங்கட்டியது. தமிழர் அரசியல் எங்களை
பெரும்பான்மை என்றும் மண்ணின் மைந்தர்கள் என்றும் எங்களை
பெருமைப்படுத்துகிறது.
ஆனால், இந்த அரசியல் பேசினால் இங்கே “யார் தமிழர்” என்ற கேள்வி இயல்பாகவே
எழும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் தமிழர் என்று தான் இங்குள்ள
பெரும்பான்மை மக்கள் தங்கள் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த தமிழ் சமூகமே காலம் காலமாக குடிகளாக, சாதிகளாக,
சமுதாயங்களாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் இயல்பாகவே
தமிழ் இனம் என்று யோசித்ததே இல்லை.
இங்கு தமிழர் என்ற அடையாளம் “தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கா?” இல்லை
“தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கா?” அல்லது “தமிழ் சாதிகள் என்று
வரையறுக்கும் சாதிக்காரர்களுக்கு மட்டுமா?” என்று கேள்வி எழுகிறது.
அதனால் தான் இந்த தமிழர் அடையாள அரசியல் என்பதில் “தமிழர் அடையாளம்” யார்
யாருக்கு உண்டு என்பதில் தான் இங்கே பல குழப்பங்கள், சலசலப்புகள்
ஏற்படும்.
இப்போது “தமிழ் சாதிகள் தான் தமிழர்கள்” என்றால் என்ன என்ன சிக்கல்கள்
வரும் என்று பார்ப்போம். வேலூர், சென்னை, திண்டுக்கல் மாவட்டத்தில்
இருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களில் பலர் சில நூறு வருடங்களுக்கு
முன் தமிழை தாய்மொழியாக மட்டும் தான் கொண்டு இருந்தனர். இவர்கள் எல்லாம்
ஹைதர் அலி, நவாப் மற்றும் நிஜாம் காலத்தில் அரசு பணிக்காகவும் மார்க்கப்
பணிக்காகவும் உருது மொழியை கற்றனர். அதன் பின்னால் தங்கள் பேசும் மொழியாக
உருது மற்றும் தமிழ் மொழியையும் இணைத்து கொண்டனர். இவர்கள் தான் லெப்பை
என்று அழைக்கப்படுபவர்கள் இவர்கள் உருதுவும் பேசுவார்கள், தமிழும்
பேசுவார்கள்.
இவர்கள் தமிழை தான் தாய்மொழியாக கொண்டிருந்தார்கள் என்பதற்கு உதாரணமாய்
அவர்கள் குடும்ப பெயர்கள் ஆதாரமாய் இருக்கிறது. இன்றும் உருது பேசும்
இஸ்லாமியர்கள் தங்கள் குடும்ப பெயர்களாக நாட்டாமைக்காரர், சின்ன பக்கிர்,
கந்திரிக்காரர்(கந்தக பொடிக்காரர்), ஜல்லடை காரர், ஊசி வீடு, கொட்லு
காரர், ஆணைக்கார், ஏழு பானை மற்றும் பல தமிழ் பெயர்களை தன்னகத்தே
வைத்துள்ளார்கள். மேலும், உருது மொழியே தெரியாத லெப்பை இஸ்லாமியர்களும்
உள்ளார்கள்.
ஆனால் இந்த உருது இஸ்லாமியர்களில் தங்களை தெக்காணி(தக்கினி), சேக்,
செய்யது மற்றும் பதான் என்று அழைத்து கொள்பவர்கள் மட்டுமே வடநாட்டில்
இருந்து இங்கே மார்க்க பணிக்காக இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால்
இந்த பெயர்களோ மொழியோ இஸ்லாமியர்களை பிரித்து விடவில்லை. இதில் எப்படி
நீங்கள் சாதியை வைத்து மொழியை வைத்து தமிழரை அடையாளம் காணப்போகிறீர்கள்.
இப்போது “தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்” தமிழர் அடையாளம் தரப்படுவார்கள்
என்று சொல்வார்கள் என்று எடுத்து கொள்வோம். அதில் வரும் சிக்கல்களை
இப்போது பார்ப்போம். இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் தான் இனப்பாகுபாடு
என்பது கிடையாது. இங்கே சென்னை, வேலூர் தவிர்த்து மற்ற இடங்களில் தமிழ்
இஸ்லாமியர்களும், உருது இஸ்லாமியர்களும் மிகவும் இயல்பாகவே திருமணம்
முடித்து கொள்கிறார்கள்.
கோவை, திருப்பூர் மற்றும் எல்லையோர மாவட்டங்களில் மலையாள இஸ்லாமியர்களும்
தமிழ் இஸ்லாமியர்களும் மணமுடித்து கொள்கிறார்கள். இப்படி இனக்கலப்பு
செய்வதால் ஒருவர் “தமிழர் இல்லாமல் போய் விடுவாரா” மற்றும் என்ன
அடையாளத்தில் அவர் சேர்த்து கொள்ளப்படுவார் என்ற கேள்வியும் முன்
வைக்கப்படுகிறது.
இதுவெல்லாம் “தமிழர் யார்?” என்பதில் வரும் சிக்கல்கள் மட்டுமே.
அதன்பிறகு, நாம் தமிழர்கள் என்று உணர்ந்து வரும்போது, இஸ்லாமியனிடம்
இருக்கும் வழிபாட்டு விழுமியங்களில் “தமிழர் அடையாளம்” என்ற அரசியல்
மூக்கை நுழைக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு இயல்பாகவே எழுகிறது. ஐம்பது
ஆண்டுகளாக சிறுபான்மையாக உணர்ந்தவர்களுக்கு எழும் இயல்பான அச்சம் தான்.
மலையாளிகளுக்கு இருக்கும் இன உணர்வு போல் இங்கே வரவேண்டும் என்றால்
அவர்களை போல் வழிபாட்டு விழுமியங்களில் கை வைக்காமல் தமிழர் அடையாள
அரசியலை மேம்படுத்துவது தான் ஒரே வழி.
ஏற்கனவே நசுக்கப்பட்டு, ஒடுக்கப்படுகிற சமூகமாக இஸ்லாமிய சமூகம்
இருக்கிறது. அது போதாது என, மார்க்க விவகாரங்களில் முரண்பாடு உடையவர்களாக
பல இயக்கங்களாக பிரிந்து கிடக்கிறோம். இதில் இனம் என்பது எங்கள்
அனைவரையும் ஒன்றிணைப்பதாக இருந்தால் தமிழர் அடையாள அரசியலை இஸ்லாமியர்கள்
முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த அரசியல் எங்களை மேலும் மூன்று
இனமாக பிரித்து வைத்து எங்களுக்குள்ளே கலவரம் உண்டாக்கும் என்றால் இந்த
அடையாள அரசியலை இஸ்லாமியர்கள் புறந்தள்ளிவிடுவார்கள்.
என்னுடைய கருத்து என்பது தமிழர் அடையாள அரசியல் நிச்சயம் தேவை என்பது
தான், ஆனால் அது சரியான நபரால், சரியான கருத்தியல்களால் கவனமாக
கையாளப்படவேண்டும். அது மற்றுமொரு சிவசேனாவிற்கு வழிவகுத்து விட கூடாது
என்பது மட்டுமே இஸ்லாமியர்களுடைய அச்சமாகும். இஸ்லாமியர்கள் எப்போதுமே
தங்களை தமிழர்களாக தான் காலங்காலமாக எண்ணி வருகிறார்கள், ஆனால் அது ஒரு
அரசியலாக விரிவடையும் என்றால் மேற்சொன்ன சிக்கல்கள் இயல்பாகவே எழும்
என்பது தான் சாமானியனாக என்னுடைய கருத்து.
-இறைதாசன் இம்ரான்

Hussain Jaseem
இங்கே பட்டான் முஸ்லிமும்
உருது தமிழ் இரண்டுமே பேசுகிறான்,
அவனும் லெப்பை லிஸ்டில் வருவானா???
உருதுன்னா என்னென்ன தெரியாத லெப்பையும் பட்டானும் ஒன்றா?????
ஏன்யா குழப்பி விடுர

Dharanidharan AP
அடடே...
தேசிய இனம் மதத்தவர மூன்றா பிரிக்குதுனு ரொம்ப கவலையோ...
ஆக, உள்ளுக்குள் மத அரசியலையும் நீட்டிக்க செய்யனும்னு முடிவோ...
சரி அது இருக்கட்டும்..
இயல்பா திருமண உறவு வச்சு இருக்கீங்க, மொழி கடந்து இயங்குறீங்க...
பின்ன எப்படி தமிழ், உருது, மலையாளம்னு தெளிவா தெரிஞ்சு வச்சிருக்கீங்க...
அதுலையும் எங்கங்க திருமணம் உறவு இல்லனு கூட சொல்னீங்க..
ஆக, தமிழர்களுக்கான வரையறையில உங்க மதம் சார்ந்து புதியதா ஒன்னா...

Mohamed Imran Mohamed Arieef
No this was my research taken in major urdu muslim areas.
One simple point from this post is:
*Lebbais are not urdu but they are usually only tamil or tamil-urdu.
But they are marrying casually tamil-urdu muslims.
*All urdu muslims are not tamils
No Debates. Just read again and again

Mohamed Imran Mohamed Arieef
பிரிக்க முடியாத அளவுக்கு அவர்கள் திருமண உறவுகள் இருக்கு தரணி.
அவர்கள் முழுவதும் தமிழ் என்பதால் தான் அப்படி உறவு செய்து கொள்கிறார்கள்.
தக்கினிகளோ பத்தான்களோ அவர்களுடன் திருமண உறவு வைத்து கொள்வது இல்லை,
இவர்கள் தான் உருது முஸ்லிம்கள்.
பதிவை நன்றாக படித்தால், உங்கள் வரையறை இங்கே பொருந்தாது என்பது தான் என் பதிவே..

Dharanidharan AP
இத்தனை காலம் தெளிவா பேசிகிட்டு இருந்தாரு...
இப்ப ஏன் குழப்பத்த தொடங்குறாரு...
-
கோவைல இருந்து திரும்பி வர்ரேன்னு ஒருத்தரு பதிவு போட்டு இருந்தாரு..
அந்த கோவை சந்திப்பு பின்னணியோ...

Dharanidharan AP
"மலையாள" இடத்தின் பெயரா "கேரளா" இடத்தின் பெயரா ??
நான் கேட்டதுக்கு பதில சொல்லுங்க சாரே..
மரைக்காயர் , ராவுத்தர்ல வராத பிரச்சனை இங்க ஏன் வருது...
அப்ப அத கூட்டு சாதினு சொல்றதுல என்ன பிரச்சனை..
கூட்டு சாதி பற்றி கேள்விபட்டதே இல்லையா..
பட்டம், குலம்னு சாதி ஒன்றிணைய பார்த்தது இல்லையா ?

Mohamed Imran Mohamed Arieef
இங்க தமிழ் உருது வை பிரிக்க ஒரு பட்டமும் உள் பிரிவும் இல்லையே??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக