ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

நாம்தமிழர் உறுப்பினர் தொடர்ந்து கைது பட்டியல்

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 ஜூன், 2018, முற்பகல் 10:31
பெறுநர்: நான்
வண்டாரி தமிழ்மணி
கட்டாயம் பழிதீர்ப்போம் தேர்தல் களத்தில்...
---------------
நாம் தமிழர் கட்சி மீதான தொடர் அடக்குமுறைகள்:
நாம் தமிழர் கட்சியின் மீதான அடக்குமுறைகள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது. கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி,காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் இதர சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர். அப்போது போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாகச் சீமான், பெ.மணியரசன், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் பங்கேற்ற 780 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அடைத்துவைக்கப்பட்டனர். நள்ளிரவு 01:30 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தின் விளைவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பெயர் இல்லாமல் 21 நாம் தமிழர் கட்சியினர் என்று குறிப்பிட்டும் கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் 3 வழக்குகள் பதியப்பட்டது. மேலும் ஐபில் போட்டியின் போது பார்வையாளராகச் சென்று மைதானத்திற்குள் காலணி வீசியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபில் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 1. பிரபாகரன், 2. ஐயனார்,3. பொன்னுவேல்,4. மகேந்திரன்,5. ராஜ்குமார்,6. பிரகாஷ் 7. வாகைவேந்தன்,8. சுகுமார்,9. ஆல்பர்ட்,10. ஏகாம்பரம்,11. மார்டின் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டங்களுக்குக் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
இது போக 10-04-2018 அன்று மாலை 04 மணியளவில் போராட்டத்தில் பங்கெடுக்கச் சேப்பாக்கம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய ஆவடி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த 1. ராஜேஷ்,2. ஜெரால்ட்,3. தனசேகர்,4. நந்தகுமார்,5. கார்த்திக்,6. சரத்குமார்,7. மணிகண்டன்,8. சிவா, 9. சரவணக்குமார்,10.பிரதீப்
ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டுப் போராட்டம் முடிந்து மற்றவர்களோடு இரவு விடுவிக்கப்படாமல் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு அடுத்த நாள் காலையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்குப் பதியப்பட்டது. அனைவரையும் 15 நாள் தடுப்புக்காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.
மேலும் 10-04-2018 அன்று மாலை கடலூரில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கர்நாடக பேருந்தை மறித்துப் போராடிய 1.கடல்தீபன்,2..
கு.சாமிரவி,3.சுரைன்குமார்,4.நா
ராயணசாமி, 5.நாராயணன், 6.தனசேகரன்,7.கடல்தீபன் ஆகியோரை கைதுசெய்தனர். அடுத்த 2 நாட்களில் சிறைப்படுத்தப்பட்டவர்களில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல்தீபன் மீது கடுஞ்சட்டமான குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பின்பு அறிவுரைக்கழகத்தின் முன் நிறுத்தப்பட்டுக் குண்டர்சட்டத்தின் கிழ் பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்று நிரூபித்துக் குண்டர் சட்டத்தை ரத்துச் செய்தார். இதனால் 7-05-2018 அன்று பிணையில் விடுதலைப் பெற்றிருக்க வேண்டிய கடல்தீபன் மீது திட்டமிட்டு நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காகத் தேச துரோக வழக்கு (124A) பதியப்பட்டு மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்.
12-04-2018 பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11-04-2018 அன்று நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியினர் 1. அன்புதென்னரசன்,
2. எஸ்.கே சிவக்குமார், 3. விக்னேஷ்,4.ராஜாராமகிருஷ்ணன், 5. கணேசன்,6. ராம்ராஜ்,7. சிவக்குமார்,8. ஞானசேகரன், 9. சத்தியமூர்த்தி,10. கோகுலகிருஷ்ணன்,11. ஜீவா,12. சீமான் சுரேஷ்,13. இராயப்பன் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக 15 நாள் தடுப்புக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவரின் மீதும் பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு உள்ளிட்ட பலர் பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது ஏற்கனவே பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கைது செய்யக் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. “சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாரேனும் 10 பேரை மட்டும் சிறைப்படுத்தவேண
்டும், மற்றவர்களை விடுவிக்கிறோம்” என்று காவல் அதிகாரிகள் கூறினார்கள். அதற்குத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னைக் கைது செய்யுங்கள் வழக்கில் சம்மந்தப்படாதவர்களைக் கைது செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். காவல்துறை சீமானுடன் சேர்த்துக் கட்டாயம் 10 பேரை கைதுசெய்வோம் என்றதனால் அப்பாவிகளைத் தண்டிக்க விடமாட்டோம் என்று மணியரசன், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் வெளியேற மறுத்து, கைதுசெய்வதேன்றல் “எங்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்புங்கள்!” என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் வேறு இடத்தில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் ஐயா பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பாகப் பங்கேற்ற இயக்குநர்கள் அமீர், கௌதமன், வெற்றிமாறன், ராம் போன்றோரும் சீமானை விடுவிக்கக்கோரி வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இரவு 09 மணியளவில் சீமான் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தனர்.
முன்னதாகச் சீமான், மணியரசன், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு உள்ளிட்டோர் மாலை 06 மணிக்குமேலாகவும் விடுவிக்கப்படாமல் இருந்த செய்தியறிந்து அங்கு வந்து முழக்கங்கள் எழுப்பிய மனிதநேய சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வலுக்கட்டாயமாகத் தடியடி நடத்தி கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதும் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டு 1. மன்சூர்அலிகான்,2. வீரபாண்டியன்,3. சரவணன்,4. ரூபன்,5. ஆகாஷ்,6. பாபுராசன்,7. ரங்கசாமி, 8. சீனிவாசன்,9. அருண்கண்ணன்,10. முரளி,11. பொன்குமார் ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் தடுப்புக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களின் பிணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வந்த பொழுது தமிழக அரசு வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துப் பிணை பெற முடியாமல் செய்தார். அது ஒரு திட்டமிட்ட செயலாக இருந்தது.
ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மைலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் 1.ஸ்டாலின் அவர்களை 14-04-2018 அன்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது. காவல்துறை அழைத்தால் கட்சி பொறுப்பாளர்கள் காவல் நிலையத்திற்கே வருவார்கள் என்று தலைமை அலுவலகச் செய்திக்குறிப்ப
ில் வெளியடப்பட்டது. இருப்பினும் இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டதாகத் திருவற்றியூரில் ரூபன்,வினோத், சென்னையில் சாரதி,சுபாகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அனைவரையும் 10-04-2018யில் போடப்பட்ட கொலைமுயற்சி முதல் தகவல் அறிக்கையில் இணைத்து சிறையிலடைத்தனர்.
18-05-2018 மே18 இனஎழுச்சி பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைப்பெற்றது.அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை மாநிலச்செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் நிகழ்ச்சி முடிந்து அலுவலகம் திரும்பும் வழியில் நள்ளிரவும் 12.30 மணிக்கு காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார். எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் காவல்துறையினர் கூப்பிட்டதும் சென்ற அவர் மீது கைது செய்யும் பொழுது காவல் அதிகாரிகளைத் தாக்கியதாகப் பொய்வழக்குகளைப் புனைந்து குண்டர்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார்.
19-05-2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாள் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சி விமான நிலையதில் இறங்குவதற்கு முன்பாகவே அதே விமானத்தில் வந்திருந்த வைகோ அவர்களை வரவேற்க வந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் அங்கே வரவேற்க காத்திருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களைத் தாங்கள் கொண்டுவந்திருந்த கொடி கம்புகளைக் கொண்டு தாக்கினார்கள். இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர் அங்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கதிராமங்கலம் போராட்டத்திற்குச் சென்றார். இருப்பினும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்டதாக 1.வினோத்(எ)அலச்
சண்டர்,2.மதியழகன்,3.நாகேந்திரன
்,4.சதிஷ்குமார், 5.மணிகண்டன்,6.ச
ஜில்,7.குணா ஆகியோர் மீது பொய்வழக்குகளைப் பதிவுசெய்து காவல்துறை சிறைப்படுத்தியது. மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 8 பேர் மேல் காவல் அதிகாரி வண்டியை சேதப்படுத்தியதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டது.
மேலும் கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்துகொண்டதக்காகச் சீமான் அண்ணன் உள்ளிட்ட 26 பேர் வழக்குப் பதியப்பட்டது. 21-5-18 அன்று 1.ராசா ஆனந்து, 2.தினேஷ்குமார், 3.பிரதிப் ஆகியோரை கைது செய்து இந்தப் பொய்வழக்கில் இணைத்து சிறைப்படுத்தப்பட்டனர். கதிராமங்கத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களைக் கைது செய்யவில்லை அதில் கலந்து கொண்ட மற்ற கட்சியினரை கைது செய்யவில்லை ஆனால் நாம் தமிழர் கட்சியினரை மட்டும் கைது செய்தனர். தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வீடுகளுக்குச் சென்று விசாரணை என்ற பெயரில் கடும் நெருக்கடியை தந்தனர்.
21-05-2018 அன்று சென்னை ஐபிஎல் வழக்கில் காவலரை தாக்கியதாக மேலும் ஒருவராக அம்பத்தூர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த கதிர்வேலனை காவல்துறை கைதுசெய்தது, கதிர்வேலன் கலைக்குழு ஒன்றின் கலைநிகழ்சியில் பறை இசைத்துக்கொண்டிருந்தவரை நிகழ்ச்சிக்கு நடுவில் காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
27-05-2018 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சேலம் பசுமைவழி சாலை அமைக்கக்கூடாது என்று அறவழியில் மனு கொடுக்கச் சென்ற 1.கந்தன்,2.மோகன்ராஜ், 3.ராமன்,4.பிரகா
ஷ், 5.சிவமுத்து,6.வெங்கடேசன், 7.மோகன்,8.சதிஸ்குமார்,9.தேசிகன
்,10.கேசவன்,11.ஜெயச்சந்திரன்,1
2.வடிவேல்,13.கெளதமன்,14.குரு,ச
ாய்குமார், 15.பெருமாள்,16.
துரைமுருகன், 17.ஐயப்பன்,18.ப
ிரபு,19.குமார்,20.பாலாஜி,21.அம
ீன்முகமது, 22.விஜயகுமார்,23.சார்லஸ், 24.தனபால், 25.மாணிக்கம்,26.பிரகலதா ஆகியவர்களைக் காவல்துறை கைதுசெய்து, அனுமதியின்றிப் பேரணி வந்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து 15 நாள் சிறையிலடைத்தனர். இதில் ஒரு பெண்ணும் அடக்கம், இவர்கள் ஆட்சியர் அலுவலகத்திக்கு ஐந்து வாகனத்தில் வரிசையாகச் சென்றதுதான் குற்றமாகப் பதிவு செய்யப்பட்டது.
22-05-2018 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அப்பேரணியில் வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் சந்திக்காமல் அமைதியான போராட்டத்தில் காவல்துறையினர் தடியடிநடத்தி போராடும் மக்களைக் கலைக்க முயன்றனர்.அதனை தொடர்ந்து பலரும் படுகாயம் அடைந்தனர் இறுதியாகத் துப்ப்பக்கிசூடு நடத்தி 13 பேரை கொல்லப்பட்டனர். பலநூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் தான் இப்போராட்டத்திற்கு மக்களைத் திரட்டியதாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டது. அதன் பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதான விசாரணை மற்றும் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. நிர்வாகிகளின் வீடுகள் தொழில் செய்யும் இடங்கள் என்று காவல்துறை விசாரணை என்ற பெயரால் பெரும் அடக்குமுறைக்கு ஆளாக்கி வருகின்றனர்.
கடந்த 30-05-2018 அன்று நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான வியனரசு அவர்கள் கைதுசெய்யப்பட்ட
ுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.அவர் மீதும் பத்திற்கும் மேற்ப்பட்ட பிரிவுகளின் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு அவர் தான் ஸ்டர்லைட் பணியாளர்கள் குடியிருப்பைக் கொளுத்தினார் என்று வழக்கு போடப்பட்டுள்ளது. எந்தத் தவறும் செய்யாத ஒருவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரே காரணத்திற்காகக் கைது செய்துள்ளது காவல்துறை.
31-05-2018 அன்று ஐபில் போராட்டத்தில் வன்முறையில் இடுபட்டதாகத் தேடப்பட்டுவந்த மதன்குமார் கைதுசெய்யப்பட்டார். சரணடைய வந்தவரை பிடித்ததாகக் கூறி அவர்மீது சங்கிலி பறித்ததாக வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்திக் கழிவறையில் வழுக்கி விழுந்து கை உடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.
8-06-2018 அன்று சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராகக் கூட்டத்திற்கு அனுமதி கேட்ட கட்சி பொறுப்பாளர் மாரி அவர்கள் போராட்டத்தைத் துண்டுகிறார், பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினார், அரசுக்கு எதிராகச் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறார் என்று பொய்யான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்ப
ட்டார்.
இரண்டு மாதத்திற்கு முன்னால் நடந்த ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 9-06-2018 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவராசன் கைது செய்யப்பட்டார்.
அவர்மீதும் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வேலூர் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த 1.விஜி,2.சிவா,3.விக்னேஷ் ஆகியவர்களைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அந்தச் சம்பவம் நடைபெறும் பொழுது அங்கே இல்லாத சிலரையும் அவ்வழக்கில் சேர்த்து கைது செய்ய
10-16-2018 அன்று துத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தூத்துக்குடி நாம் தமிழர் பொறுப்பாளர் இசக்கித்துரை கலவரத்தில் ஈடுபட்டதாகப் பொய்வழக்குகள் பதிவுசெய்து அதிகாலையில் மூன்று மணிக்குக் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.
இவ்வாறாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டுத் தொடர் அடக்குமுறைக்கு உள்ளக்கப்படுகிற
ார்கள். அதிகாரத்தின் இந்த அடக்குமுறைகளை நாம் தமிழர் கட்சி சட்டரீதியாக எதிர்கொண்டு தொடர்ச்சியாக மக்களுக்காக உண்மைக்காகப் போராடுவோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்ப

நாம் தமிழர் கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக