ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் காயம்பட்டதாக கூற மிரட்டல்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 10 ஜூன், 2018, முற்பகல் 10:05
பெறுநர்: நான்
தமிழக காவல்துறையின் காவாளித்தனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொது மக்கள் 13 பேர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள். அதனை தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் காவல்துறை சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு படிவங்கள் அவரவரின் மேஜைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஊழியர்களின் தகவல்கள் மற்றும் கலவரத்தில் காயப்பட்ட விவரங்களை விவரிக்கும்மாறும் கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவலை உடனடியாக வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த படிவத்தை யாரும் பூர்த்தி செய்யக் கூடாது என்று சங்கத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் யாரும் தாக்கப்படவில்லை என்றும் சொத்து சேதாரம் எதுவும் நிகழவும் இல்லை என்றும் அனைத்து நிகழ்வுகளும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் என்றும் மே 22ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை நியப்படுத்த வேண்டி, இப்படியான காவாளிதனத்தில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும், உடனடியாக இந்த தகவல்கள் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

நன்றி.

#Justice_for_Tuticorin_Massacre

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-distribute-forms-amongcollectorate-staff-raise-hackles/article24125335.ece/amp/

போலீஸ் காவல்துறை ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக