ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பள்ளர் பறையர் கிராமங்கள் தெலுங்கர் கையில் நிலவுடைமை ராஜபாளையம் வளையக்காரன்பட்டி

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 15 ஜூன், 2018, பிற்பகல் 4:53
பெறுநர்: நான்
தமிழர்கள் நிலத்தை யார் பறித்தனர்?
வடவார்க்காடு மாவட்டம் ஆம்பூர் அருகே வளையக்காரன் பட்டி எனும் ஊர் உண்டு. அங்கு பறையர்கள் நீர்ப்பாய்ச்சல் உடைய நிலங்களை வைத்திருந்தனர். அங்கு வளையல்கார நாயுடுகள் எனும் தெலுங்கர்கள் குடியேறினர். அவர்கள் வளையல் விற்று வந்த பணத்தில் மிக மிக மலிவாக நிலங்களின் சொந்தக்காரர்களான பறையர்களை ஏமாற்றி விலைக்கு வாங்கினர். சொந்தக்காரர்களான தொல்குடிகள் பறையர்கள் தம் நிலத்திலேயே கூலிகள் ஆனர். அருகிலுள்ள தோல் கம்பெனிகளில் கூலிகள் ஆனர். திராவிட கட்சிகளில் இருந்து கொண்டு மதுக்குடித்து திரைப்பட போதையில் வீழ்ந்தனர்.
இராசபாளையம் எனும் ஊரின் உண்மையான பெயர் பள்ளர்பாளையம் ஆகும். அங்கு குடியேறிய கட்டபொம்மன் முன்னோரான கம்பளத்து நாய்க்கன் எனும் தெலுங்கர்கள், மெல்ல பறையர்களின் நிலத்தை சுருட்ட தொடங்கினர். ஆட்டுத்தலைக்கும், மாட்டுத்தலைக்கும், கேழ்வரகுக்கும் கள்ளு மொந்தைக்கும் தொல்தமிழர்களிடம் கைநாட்டு வாங்கி நிலங்களை பிடுங்கினர். பள்ளர்பாளையம் ராசபாளையம் ஆயிற்று. அதன் அருகே இருந்த காடு கரை தோட்டம் துரவு எல்லாம் தெலுங்கரிடம் குவிந்தன. தெலுங்கர் நிலவுடைமையாளர் ஆனர். அங்கு தோட்டங்களுக்குள் சென்ற தமிழ்ச்சிறார்களை சாவடிகளில் வைத்து சாட்டையால் அடித்தனர். தொல்தமிழரின் நாட்டான்மை வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே விடுவிப்பர். அந்த ராசபாளைய தெலுங்கனான குமாராசாமி ராசா சென்னை மாகாண முதல்வருமானான். தெலுங்கர்கள் மேலும் சுரண்டும் தெலுங்கர்களின் பொற்காலத்தை உருவாக்கினான்.
தொல்குடிகளான தமிழர்கள் தம்.நிலத்தையும் வளத்தையும் வந்தேறி திராவிடர்களிடம், குறிப்பாய் தெலுங்கர்களிடம் இழந்த போக்கின் சிறு உதாரணமே இதுவாகும்..
-அறிஞர் குணா
தமிழின மீட்சி..
@Mathivanan — Mathi Vanan

வந்தேறி நிலவுடைமை ராஜுஸ் நாயுடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக