ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வாஞ்சிநாதன் க்கு துப்பாக்கி பாரதிதாசன் கொடுத்தது சான்று நூல் புத்தகம் ஆதாரம்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 17 ஜூன், 2018, பிற்பகல் 1:11
பெறுநர்: நான்
வெள்ளி, 17 ஜூன், 2016
இடுகையிட்டது tamil ilango நேரம்
பிற்பகல் 10:49 வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி கொடுத்தது யார்?
----------------------------------------------------------------------------------
ஆஷ் துரையைச் சுடுவதற்காக வாஞ்சிநாதன்
பயன்படுத்திய துப்பாக்கி  அவருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா? அந்தத் துப்பாக்கியை அவருக்கு வாங்கிக்
கொடுத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்தத் தகவல்
தனித்தமிழ் மற்றும் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த
பேராசிரியர் இளவரசு அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தின் பெயர்
விடுதலைப்போரில் பாவேந்தரின் பங்கு என்பது.
**
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நூலின் வெளியீட்டு
விழா சென்னையில் நடந்த பொழுது, அதற்கு நான்
சென்றிருந்தேன். கூட்டத் தலைமை மறைந்த
தனித்தமிழ் இயக்கப் போராளி முனைவர் அரணமுறுவல்.
**
அண்ணன் டி.எஸ்.எஸ் மணி அவர்கள் தந்தி
தொலைக்காட்சியில் மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது,
வாஞ்சிநாதன் பற்றிப் பிரஸ்தாபித்தார். நான் அவருக்கு
இத்தகவலைக் கூறினேன். மேல் விவரங்கள்
வேண்டுமென்றால் அரணை முறுவல் அவர்களைக்
கேட்குமாறு கூறினேன். அதன்படியே மணி அண்ணனும்
அரணமுறுவலிடம் விளக்கம் கேட்டுப் பெற்றார்.
**
அந்த விளக்கத்தை மறுநாளன்று மெய்ப்பொருள்
காண்பது அறிவு நிகழ்ச்சியிலும் தெரிவித்தார்.
தாங்கள் மணி அண்ணனிடம் கேட்டு நான் கூறுவது
பற்றி உறுதிப் படுத்திக் கொள்ளலாம். (நான், மணி
அண்ணன், அரண முறுவல் ஆகியோர் 1980களில்
ஒரே குறிப்பிட்ட சூழலில் பணியாற்றினோம்
என்பதும் என் திருமணத்தை அரண முறுவல்
அவர்கள்தான் தலைமையேற்று நடத்தி வைத்தார்
என்பதும் தங்களின் தகவலுக்காக,
**
திருநெல்வேலிக்காரனான என்னால் பல தகவல்களை
பெற முடிந்தது என்பதால் உறுதிபடக் கூறுகிறேன்.
வெள்ளி, 17 ஜூன், 2016
இடுகையிட்டது tamil ilango
-----------
ஞாயிறு, 18 ஜூன், 2017
tamil ilango நேரம் முற்பகல் 12:12 ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற
வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி கொடுத்தது யார்?
-------------------------------------------------------------------------------------
மறைந்த பேராசிரியர் இளவரசு அவர்கள் சுமார்
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூல் எழுதினார்.
விடுதலைப்போரில் பாவேந்தர் என்பது
அந்நூலின் பெயர்.
சென்னையில் நடைபெற்ற அதன் வெளியீட்டு
விழாவுக்கு நான் சென்று இருந்தேன். மறைந்த
தமிழறிஞர் அரண முறுவல் அவர்கள்
இவ்விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்தான்
வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி வாங்கிக்
கொடுத்தார் என்ற அந்நூலில் ஆதாரத்துடன்
எழுதி இருந்தார் பேராசிரியர் இளவரசு.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும்
நெடிய வலைப்பின்னலில் பாவேந்தர் ஒரு
கண்ணியாக இருந்தார் என்பது வரலாறு.
வாஞ்சிநாதன் மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராளி என்பதே மார்க்சிய மதிப்பீடு.ஆனால்
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய தாசர்கள் முற்றிலும்
கற்பனையானதும் கீழ்மையானதுமான
அவதூறை வாஞ்சிநாதன் மீது வீசுவது
ஏற்கத் தக்கதன்று.
*******************************************************
paaventhar appothu pirenju
பாவேந்தர் அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு
உட்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்தவர். வாஞ்சியிடம்
பணம் ஏது? அவரால் சொந்தமாக ஒரு துப்பாக்கி
வாங்க இயலாது. எனவேதான் அவர் பாவேந்தரிடம்
இருந்து துப்பாக்கி பெற்றார். இது கட்டுக்கதை அல்ல.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற சங்கிலியில்
பாவேந்தரும் ஒரு கண்ணியாக இருந்தார்
என்பதை மறுக்க இயலாது.
**
பாவேந்தரை திராவிட இயக்கக் கவிஞர் என்று
மட்டுமே பார்ப்பதால் வரும் அவநம்பிக்கை இது.
அவரை பாரதியாரின் தொடர்ச்சியாகவும், பாரதியின்
தேசப்பற்றை சுவீகரித்துக் கொண்டவராகவும்
பார்க்க வேண்டும்..
துரதிருஷ்ட வசமாக அந்தப் புத்தகத்தை நான்
தொலைத்து விட்டேன். புத்தகம் எழுதிய
இளவரசு அவர்களும் அரணமுறுவல் அவர்களும்
இன்று உயிருடன் இல்லை. நமது வரலாறு
முழுமையாகவோ சரியாகவோ எழுதப் படவே
இல்லை என்ற உண்மையின் பின்னணியில் இதைப்
பார்க்க வேண்டும். மேலும் ஆதாரம் கிடைக்குமானால்
சொல்கிறேன்.
மேம்போக்கான குட்டி முதலாளித்துவ நுனிப்புல்
பார்வைக்கு அப்பால் பார்க்க இயலாதவர்கள்
வாஞ்சிநாதனை மதவெறியனாக மட்டுமே பார்க்க
இயலும். வாஞ்சி ஒரு மகத்தான ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராளி என்பது மார்க்சிய மதிப்பீடு.
ஒரு நூற்றாண்டுக்கு முந்திய சமூக இயக்கம்
எப்படியிருந்தது என்பது பற்றிய பார்வை இல்லாமல்,
இன்றைய 2017இன் சட்டகத்தில் வாஞ்சியைப்
பொருத்துவது பேதைமை.
ரத்தத்திலும் DNAவிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்
தாசானுதாசனாக இருப்பவர்களால் மட்டுமே,
ஆஷ் துரை மீது பரிவு காட்ட இயலும். கோபாலகிருஷ்ண
நாயுடுவை படுகொலை செய்த மார்க்சிஸ்ட்
லெனினிஸ்டுகள் அவர் இரவில் தனியே
வரும்போதுதான் கொலை செய்தார்கள்.
வாஞ்சிநாதனின் தியாகத்தை கொச்சைப்
படுத்த முடியும். பிரிட்டிஷ் ஆட்சி நீடிக்க வேண்டும்
என்ற நிலைப்பாட்டை
இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக
ஆஷ் படுகொலை நடந்தபோது, வாஞ்சிநாதன்
இளைஞர்.(இருபதுகளில் இருந்தார்). அதற்கு முன்பு
பள்ளியில் படிக்கும்போதே, வாத்தியாரை அவர்
ஏன் கொலை செய்யவில்லை, அவருக்கு முன் அனுபவம்
ஏன் இல்லை என்று கேள்வி கேட்டால் யாரிடமும்
பதில் .இருக்காது.
நக்சல்பாரி இயக்கத்தின் பிதாமகர் சாரு மஜூம்தார்
ஏகாதிபத்திய ஆதரவு ஏகாதிபத்திய எதிர்ப்பு
என்று இரண்டு முகாம்களாக சமூகம் பிளவுபட்டு
இருக்கும்போது, ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள்
மட்டுமே நம் கவனிப்புக்கும் மரியாதைக்கும்
உரியவர்கள். வாஞ்சிநாதனைப் பற்றி ஏகாதிபத்திய
சார்புநிலை எடுத்தவர்களின் அபிப்பிராயம்
கணக்கில் கொள்ளத் தக்கதல்ல.
வாஞ்சிநாதன் ஒரு கோட்பாட்டாளர் (Theoretician) அல்ல.
அவர் ஆயுதம் தாங்கிய ஒரு படைக்குழுவின்
உறுப்பினர். (member or commander of the armed squad)
மேற்கொண்ட செயலைச் சிறப்பாகச்
செய்து முடித்தவர். அதற்காக தம் உயிரையும்
இழக்கச் சித்தமாக இருந்தவர். சமூகம் பற்றிய
அவரின் கருத்துக்கள் என்னவாக இருந்தன என்று
ஆராய்ச்சி செய்தால், அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு
என்னும் கடமையில் அவர் உறுதியாக இருந்தாரா
இல்லையா என்பது மட்டுமே அவரை அளக்கும்
ஒரே காரணி.
ஹிட்லர் அதிகாரத்தில் இருந்தவர். வாஞ்சிநாதன்
அதிகாரத்தை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தவர்.
இருவரையும் ஒப்பிடுவது மனச்சிதைவுக்கு
இலக்கானால்தான் முடியும்.
இதெல்லாம் பொய்யான  கட்டுக்கதை என்பதை
ஆயிரம் முறை .நிரூபித்து இருக்கிறேன்.
கொலை என்பதில் எவ்வித இழிவும் இல்லை.
வாஞ்சிநாதன் ஆஸ்துரையைக் கொன்றதும்
கூலிக்காக ராஜீவைக் கொன்றதும் ஒப்பிடத்தக்கன அல்ல.
-----------

kashyapan
‹ › Home
View web version Monday, December 06, 2010
kashyapan at 6:05 PM "ஆஷ்" கொலை வழக்கும் பாரதிதாசனும்.......
"ஆஷ்"கொலைவழக்கும், பாரதி தாசனும்.....
மணியாச்சி சந்திப்பில் கலக்டர் ஆஷ் இருந்த பெட்டிக்குள் வாஞ்சி ஐயர் நுழைந்தபோது வெளியே சற்று தள்ளி வெள்ளை வெட்டி சட்டையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் என்று சென்ற இடுகையில்குறிப்பிட்டிருந்தேன். ஒரு வேளை வாஞ்சி யின் குறி தப்பிவிட்டல்,அசந்தர்ப்பமாக ஆஷ் கொல்லப்படவில்லையென்றால்,காரியத்தைக் கச்சிதமாக முடிக்க உதவிக்கு அனுப்பப் பட்டவந்தான் தள்ளி நின்றவன். ஆஷ்துரைசெத்தான் என்று தெரிந்ததும் அவன் தப்பிவிட்டான் தப்பிபயவன். பெயர் மாடசாமி.
இதெல்லாம் பிரிட்டிஷ் பொலீசுக்கு தெரிய ஒருமாதமாகியது. மூன்று பெரைப்பிடித்ததில் . சோமசுந்தரம் பிள்ளை அப்ரூவராக மாறி தகவல் கிடைத்தது. ஆஷை கொல்ல ஒருவர் அல்ல இருவர் அனுப்பப் பட்டிருந்தனர் என்பதே அதன் பிறகு தான் போலீசுக்குத்தெரியும். அதற்குள் மாடசாமி பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தப்பி பிரஞ்சு இந்தியாவுக்கு போய்விட்டான்.
அங்கு ஏற்கனவே பாரதி,வ.வெ.சு.ஐயர்,பி.பி.ஆசார்யா ஆகியொர் இருந்தனர்.ஆசார்யா கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ம்பித்த போதே உறுப்பினரானவர். வாஞ்சிகுழுவினருக்கு துப்பாக்கி வந்ததே இவர்கள் மூலம் தான் என்று ஒரு செய்தி உண்டு.கொல்லப்பட்டவன் பிரிட்டிஷ் கலக்டர். அரசுக்கு சவால். ஆகவே ஆங்கிலேயரின் நிர்ப்பந்தம் பிர்ஞ்சு அரசாங்கத்திற்கு இருந்த்தது. ஆங்கில பிரஞ்சு போலீசார் பாண்டிசேரி முழுவதும் மாடசமியைத்தேடி அலைந்தனர். பாரதி, வ.வே.சு ஐயர் ஆகியொர் கண்காணிக்கப்பட்டனர். மாடசாமி வந்தால் அடைகலம் கொடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் இருந்தன.
மாடசாமி பாண்டிச்சேரி வந்ததும் உடனடியாக அவனை வெளிநாடு அனுப்பவேண்டும்.பாண்டியில் இருப்பது ஆபத்து. ஐரோப்பாவுக்கு தமிழ் மட்டுமே தெரிந்த மாடசாமியை அனுப்புவது ஆபத்து. ஆகவே பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமின் தலைநகரமான சைகோன் அனுப்புவது என்று முடிவாகியது. மாடசாமியை சைகோன் அனுப்பும் ஏற்பாட்டைக் கவனிக்கும் பொறுப்பு பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்டது
பாண்டிச்செரியில் பெரியகப்பல் கள் வராது. நடுக்கடலில் நிற்கும். கரையிலிருந்து தோணிகள் மூலம் பயணிகள், சரக்குகள் எடுத்துச்செல்லப்பட்டு கப்பலில் எற்றப்படும். மாடசாமியை ஒரு இருட்டான நட்ட நடுநிசியில் தோணியில் கொண்டுசென்று ஏற்ற முடிவாகியது.தோணியில் பாரதிதாசனும் மற்றவர்களும் ஏறிக்கொண்டனர். கூடவே ஒரு மீன் படகும் சென்றது.
கப்பலை நெறுங்குக்போது போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர். உள்ளே பாரதிதாசன் இருந்தார்.ஆனால் மாடசாமி யில்லை .தோணியை போலீசார் விட்டுவிட்டனர். இதனை எதிர்பார்த்த பாரதிதாசன் மாடசாமியை தோணியில் ஏற்றாமல் மீன்படகில் ஏறச்சொல்லியிருந்தார். போலீசாரைப் பார்த்த மீன் படகு கப்பலருகில்செல்லாமல் நடுக்கடலை நோக்கிசென்றது மாடசாமி என்ன ஆனார்?
( திருநெல்வேலியில் அந்தக்காலத்தில் T.M.B.S என்றொரு பஸ் கம்பெனி இருந்தது. அவர்களுக் லாரியும் உண்டு. அதற்காக சென்னையில் ஒரு .கிட்டங்கி வைத்திருந்தனர். சைகோன் பொகமுடியாத மடசாமி மீன் படகுமூலம் சிலோன் சென்றதாக ஒருபேச்சு உண்டு 1950 வாக்கில் வயதான மாடசாமி தன் குடும்பத்தைத்தேடி நெல்லை வந்ததாகவும்
அவர்களைப் பர்ர்க்கமுடியாமல் சென்னை சென்றதாகவும் கூறுகிறார்கள். சென்னயில் TMBS கம்பெனி கிட்டங்கியில்
காவலாளியாக பணியாற்றுவதாக தெரிந்து கொண்டு அவருடைய உறவினர்கள் விசாரித்துள்ளனர். அ.வர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கம்பனி அவர்களிடம் கூறியிருக்கிற்து.இவை உறுதி செய்யப்படவில்லை.)

kashyapan December 10, 2010 7:25 PM
அன்புள்ள தோழர் திலீப் நாராயணன் அவர்களுக்கு! ஏன்னுடைய மடிக்கணிணி சரியாக வெலை செய்யாததால் பின்னுட்டங்களை இன்று தான் பார்த்தேன்."ன்' விகுதியை. தவிர்க்க வெண்டும் என்ற தங்கள் கருத்து சரியானதே..நெல்லைமாவட்டத்தில் பிறந்தவன் தான் நான்.பெராசிரியர் (எஸ்.எம்) மாடசாமி அவர்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன்.அவருடைய வீட்டு திருமணத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன்.பெராசிரியர் என்ற பெயரில் சிறுகதையும் எழுதியிருக்கிறேன்.அற்புதமான மனிதர்..மாடசாமி,இசக்கி, பலவெசம்,பாவநாசம் என்ற பெயர்கள் எல்லாரும் வத்துக்கொள்கிரார்கள்.மெல்வகுப்பச்செர்ந்தவற்களும் அதில் உண்டு. தஞ்சையில் பாவநாசம் என்று ஐயர்கள் உண்டு. நெல்லையில் மறவ்ர்களிடையே இத்தகைய பெயர்கள் உண்டு.வாஞ்சி யின் பையில் இருந்த கடிதத்தில் வாஞ்சி ஐயர் என்று குறிப்பிட்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர் கூறுகிறர். மாடசாமி T.M.B.S குடும்பத்திற்கு உறவினர் என்ற் பெச்சு உண்டு. .உறுதியாகத் தெரியாது.ஆஷ் கொலைக்கான காரணம் பற்றி புதிய த்கவலுக்கு நன்றி---காஸ்யபன்.
---------

டாக்டர் ச. சு. இளங்கோவன் வேறொரு தகவலைத் தருகிறார். வ. வே. சு. ஐயரும் பாரதியாரும் புதுவையில் மண்பொம்மைக் கலைஞர்களிடம் சொல்லி பாரத மாத பதுமையொன்று செய்யச் சொன்னார்கள். இந்தப் பதுமையின் படம் இளங்கோ அவர்களின் புத்தகத்திலும், ரா. அ. பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியிலும் வெளியாகி இருக்கிறது.
இந்திய விடுதலை வீரர்களுக்குப் பயன்படும் சிறு துப்பாக்கி முதலிய கருவிகளைப் பாரதமாதா பதுமைகளில் மறைத்துப் புதுச்சோ¢யிலிருந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு துப்பாக்கிகள் மறைக்கப்பட்ட பாரதமாத மண்பொம்மைகள் அடங்கிய ஒரு பெட்டியைச் சென்னைக்குக் கொண்டு சென்று, தமக்குத் தெரிந்த நண்பர்களிடம் சேர்ப்பிக்குமாறு பாரதியார், பாரதிதாசனுக்குப் பணித்தார். (பாரதிதாசன் பார்வையில் பாரதியார் - டாக்டர் ச. சு. இளங்கோவன் - பக்கம் 59) இதற்கு ஆதாரமாக அவர் குடும்ப விளக்கு நூலின் 54-55 பக்கங்களைக் காட்டுகிறார்.
-------

கலெக்டர் ஆஷ்துரையைக் கொலை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர் குழுவின் தலைவராயிருந்த நீலகண்ட பிரம்மசாரி, பாரதி விஜயா பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, துணையாசிரியராகப் பணியாற்றியவர். வாஞ்சிநாதனுக்குப் புதுச்சேரி கரடிக்குப்பத்தில் துப்பாக்கிப் பயிற்சி அளித்த வ.வே.சு. ஐயர், பாரதியின் நெருங்கிய நண்பர். ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1911-ல் சிறைத் தண்டனை அனுபவித்த திரு. கே. ஆர். அப்பாதுரை, பாரதியின் மைத்துனர்.
----------
கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.
கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.
புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.
இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920-ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக